23 ஜூலை 2011

சோற்றுக்கற்றாழை


               சோற்றுக்கற்றாழை
   சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை .அழகுதரும் மூலிகை .
           
         கற்றாழையில், சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை ,பெரும்    கற்றாழை ,பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை  மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.
     நம்ம ஏரியாவில் சாதாரணமாக எங்கும் காணக்கூடிய ‘சோற்றுக்கற்றாழைஏகப்பட்ட சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஓர் இயற்கை மூலிகை.     நம்ம ஊரில் பயிரிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்   இது போன்ற மருத்துவ செல்வத்தை  முதலில் நாம் பயன்படுத்த வேண்டும்.
 இந்த சோற்றுக்கற்றாழை நோய்களை விரட்ட உதவும் பல மருந்துகளுடன் சேர்க்கப் பயன்படும் மூலிகை, கிராமங்களின் மருந்தகம்.

    சித்த மருத்துவர்களால்குமரிஎன்றழைக்கப்படும் இத்தாவரம் நம்மை இளமையுடன் வைத்திருக்கும், ஆதலால் குமரி என்றழைக்கப்படுகிறது. இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.

    எப்பொழுதும் வாடாத  வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்கூடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்கது.  சதைப்பற்றுடன்  கூடிய  தடிப்பான  அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள்    முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும்,  பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.
    இலை மற்றும்  வேர்,  இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல்.  ஒடித்தால் வரும்  மஞ்சள் நிற திரவம் வரும்.     கற்றாழையிலிருந்து  வடிக்கப்படும்   மஞ்சள் நிற திரவம்  ‘மூசாம்பரம்எனப்படுகிறது.

தளிர்பச்சை, இளம்பச்சை,  கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான்  மருத்துவத்தன்மை  மிகுந்து காணப்படுகின்றன. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், இரெசின்கள்,  பாலிசக்கரைடு மற்றும்ஆலோக்டின்பிஎனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது

வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை,  கன்னி,  தாழை,  குமரி
 
தாவரப்பெயர்-  AloebarbadensisLinn,  Liliaceae, Aloevera, Aloeferox, Aloeafricana, Aloe,   spicata,  Aloe perji.

       
    ஏழு  முறை  கழுவுவதுஅதை சுத்தி செய்யும் முறையாக சித்தர்களால் கூறப்படுகிறது . சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து
அதனுள்  உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையைக்  கையால்  தொட்டால்  வாய் கசக்கும்  என்பார்கள்.  கழுவிச்  சுத்தம்  செய்தால், கற்றாழையின் குமட்டல் குணமும், கசப்பும்  குறைந்துவிடும்.

    மருத்துவ உலகின் ராணி சோற்றுக்கற்றாழை!.


        மருத்துவக் குணங்கள்
1.       கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து,
    தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.
2.             உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
3.         கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
4.          இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
5.         கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்   
6.          .காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்; உடல் பருக்காமலே.பலகீனம் மறையும்   தாதுவிருத்தி ஏற்படும். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட இதை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்;

7.      சோற்றுக்கற்றாழை+வெள்ளைப்பூண்டு+பனங்கற்கண்டு+எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து [தோராயமான அளவுகளில்] காய்ச்சி வடித்து எண்ணெயை குடல்; வயிறு தொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும் .

.
8.     கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
9.     வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும்.
10.       இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.
11.    . சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
12.   சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.
13.  . வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக் கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
14.  சோற்றுக் கற்றாழையின் சோறு 7முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச்சாறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறுந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும். நீடித்த மலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது.
15.    செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.



16.  இதுமட்டும் ல்லாமல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.
17.  இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
18.  எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும். வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.
19.  வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.



மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க்' உதவும்.

     இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மனித உடலில் மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.

     20)  இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின்      தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்  சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.

21) முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழைச் சாற்றைத் தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதன் சாற்றை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து  காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

   22)தீக்காயங்களுக்கும்உடனடி டாக்டர்கற்றாழைச் சாறுதான்.
  23) நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
      மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.
சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்து, இதில் சிறிது படிக்காரத்தூளைத் தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும். இதில் வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத் தூள் சேர்த்து, சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம், மேக நோயால் ஏற்பட்ட வெட்ட நோய் நீங்கிவிடும்.கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை ஒரு கப் சேகரம் செய்து  கொண்டு, இதில் சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கிச் சேர்த்து விளக்கெண்ணெய் 300 கிராம், பனங்கற்கண்டு 300 கிராம் இவை யாவையும் ஒன்று சேர்த்து  அடுப்பில் வைத்து சிறு தீயாக லேகிய பதம் வரும் வரை எரித்து எடுத்துக்கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான வயிற்று வலியும், வயிற்றுப் புண்களும் குணமாகும்.சிறுநீர் எளிதில் வெளியேற....கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத் துண்டுகளை நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும். மடல் துண்டுகள் ஐந்து தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை, காலையில் ஒருவேளை சாப்பிட வேண்டும். மூன்று நாள் உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்று விடும். இதே முறையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கழுவிச் சுத்தம் செய்த கற்றாழைத் துண்டு ஒரு கப் எடுததுக் கொண்டு, இதில் சின்ன வெங்காயம் சுட்டுப்பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்குக் குறையாமல் சேர்த்துக் கொண்டு, இந்த கற்றாழைச் சோற்றில் கலந்து, கடுக்காய் பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து, எல்லாவற்றையும் ஒன்றாக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடி வத்தால், கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும். இந்தத் தண்ணீரை வடிகட்டிச் சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் சிறுநீர்க்கட்டு நீங்கிவிடும். தாராளமாக சிறுநீர் வெளியேறிவிடும்.


புண்கள் ஆற....கழுவி எடுத்த கற்றாழைச்சோறு 25 - 50 கிராம் பசும் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பத்து தினங்களில் மூலச் சூடு தணியும். சொறி, அரிப்பு நீங்கும். விந்து உற்பத்தி அதிகரிக்கும்
பெண்களின் வெள்ளை நோய் குணமாக....பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டியளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரவு கூரைமேல் வைத்து எடுத்தால், மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளை நோய் குணமாகும்.

கூந்தல் வளர....சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்
..கண்களில் அடிபட்டால்....கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். குளிர்ச்சி தரும் குளியலுக்கு....மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோ தயாரித்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.



ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கருப்பிடவும்  கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும்  கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை  நீக்குகிறது. தோல்  இறுக்கத்திற்கு  சுகமளிக்கும் மருந்தாகிறது.     சோற்றுக்  கற்றாழை  சோற்றை  எடுத்து  எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி  வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.



தாம்பத்திய உறவு மேம்பட....சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்க்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்
அழகு சாதனப் பொருளில் கற்றாழை முக்கியப் பொருளாகச் சேர்த்து தயாரிக்கப்படும் ஜெல் சருமத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. சருமத்தின் ஈரப் பசையைப் பாதுகாக்கிறது .சரும நோய்களுக்குச் சிறந்த மருந்தாகிறது.


3 கருத்துகள்:

  1. ஐயா தங்களது தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    தங்களது தளத்தில் இமெயில் மூலம் தங்களது இடுகைகளை பெறும் வசதி இருந்தால் மிகவும் பயனாக இருக்கும். அதற்கான விட்ஜெட்டை இணைத்தால் நிச்சயம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி
    www.kganand.blogspot.in

    பதிலளிநீக்கு
  2. Ayya payanulla karuthukalai sonneergal.nan soththu kaththalai valarthu veli nattukku anuppa ninaikiren eppadi anuppuvavathu yarai contact pannuvathu patri sonnal migavum uthaviyaga irukkum.

    பதிலளிநீக்கு

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...