அனைவருக்கும்
வணக்கம்.
உலகின் மிக மூத்த மொழியான தமிழ் எண்களை அனைவரும் பயன்படுத்தத்தொடங்கலாமே...
தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன்படுத்தப்படவில்லை.
10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் எழுதப்பட்டிருக்கின்றன.
தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே (Abbreviational System) பயன்படுத்தப்பட்டதாக அறியமுடிகிறது
சுழியம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.
உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி,
௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது.
அதாவது,
இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று
௨-௲-௪-௱-௫-௰-௩
தற்கால புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகிறது .
தமிழ் எண்கள்..
௧ - ஒன்று,
௨ - இரண்டு,
௩ - மூன்று,
௪ - நான்கு,
௫ - ஐந்து ,
௬ - ஆறு,
௭ - ஏழு,
௮ - எட்டு,
௯ - ஒன்பது,
௧௦ - பத்து.
பழங்காலத்தில் தமிழ் எண்கள் இடம்சார்ந்து அதாவது தசம ஸ்தானத்தில் எழுதப்படாமல் தனித்தனிக் குறியீட்டுமுறையில் எழுதி வந்துள்ளனர்.
சுழியம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரேமேற்குறிப்பிட்டவாறு இடமதிப்புமுறையில் எழுதப் பழகியுள்ளனர்.
பழைய குறியீட்டுமுறைப்படி எழுதப்பட்ட தமிழ் எண்கள்
- ௧ = 1
- ௨ = 2
- ௩ = 3
- ௪ = 4
- ௫ = 5
- ௬ = 6
- ௭ = 7
- ௮ = 8
- ௯ = 9
- ௰ = 10
- ௰௧ = 11
- ௰௨ = 12
- ௰௩ = 13
- ௰௪ = 14
- ௰௫ = 15
- ௰௬ = 16
- ௰௭ = 17
- ௰௮ = 18
- ௰௯ = 19
- ௨௰ = 20
- ௱ = 100
- ௱௫௰௬ = 156
- ௨௱ = 200
- ௩௱ = 300
- ௲ = 1000
- ௲௧ = 1001
- ௲௪௰ = 1040
- ௮௲ = 8000
- ௰௲ = 10,000
- ௭௰௲ = 70,000
- ௯௰௲ = 90,000
- ௱௲ = 100,000 (lakh)
- ௮௱௲ = 800,000
- ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
- ௯௰௱௲ = 9,000,000
- ௱௱௲ = 10,000,000 (crore)
- ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
- ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
- ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
- ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
- ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
- ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
- நன்றி : விக்கிப்பீடியா தமிழ்த்தளத்திற்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக