அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
ஓரெழுத்து ஒருமொழி ...
(1) அ - எட்டு, சிவன்,திருமால், நான்முகன், அசை, சேய்மை,திப்பிலி,
(2) ஆ - பசு,வியப்பு, சொல்,விடை, துன்பம்,
(3)இ - இங்கே, இவன்,அண்மைச்சுட்டு,
(4) ஈ - அழிவு,கொடு, ஈ ,
(5) உ- சுட்டு , இருக்கும்,உமையவள்,
(6) ஊ - இறைச்சி, தசை,உண்ணல்,
(7) எ- குறி, வினா எழுத்து,
(8) ஏ - அம்பு,விளித்தல், மேல்நோக்குதல்,
(9) ஐ - ஐந்து, தலைவன், வியப்பு, அழகு,
(10) ஓ - நீர்தாங்கும் பலகை, மதகு, வினா,
(11) ஔ - அழைத்தல்,தடை,பாம்பு,
(12) க - ஒன்று, உடல்,ஆன்மா,
(13) கா- காத்தல், அசைச்சொல், காவல், சோலை,
(14) கீ - தடை,தொனி,
(15) - கூ - கூவுதல், பூமி,
(16) - கை - கரம்,இடம்,ஆற்றல், உடலுறுப்பு,
(17) கோ - அரசன்,குயவன், தலைமை, இறைவன், தலைவன்,
(18) கௌ - வாயில் பிடித்தல், தீங்கு,
(19) சா - சாதல், மரணம்,
(20) சீ - இகழ்ச்சி,சீழ்,
(21) சு- சுகம்,விரட்டுதல்,
(22) சூ - வானவகை,
(23) சே - எருது, உயர்வு,
(24) சோ - மதில்,நகர்,
(25) ஞா. பொருத்து,
(26) த - குபேரன்,,
(27) தா - கொடு,தருக, கேட்பது,
(28) தீ - நெருப்பு,
(29) து - அனுபவம், கெடு, பிரிவு, இறகு,
(30) தூ - தூய்மை,சீ, வெண்மை,
(31) தே - தெய்வம்,மாடு, நாயகன்,
(32) தை - தமிழ் மாதம்,தைப்பது,
(33) ந- மிகுதி,நகைத்தல்,
(34) நா - நாக்கு, சொல், மணி,
(34) நீ - உன்னை ,முன்னிலை,
(35) நே - நேயம்,அன்பு,
(36) நை - நைதல்,வருந்துதல்,
(37) நொ - நொண்டி, துன்பம்,
(38) நோ - நோய்,
(39) பா - பாட்டு, நிழல், அழகு,
(40) பூ - மலர்,
(41) பே - மேகம், நேர,
(42) பை - உறை, பசுமை,
(43) போ - செல்க,
(44) மா - பெரிய விலங்கு, மா மரம்,
(45) மீ - மேலே,உயரம்,ஆகாயம்,
(46) மூ - மூன்று,மூப்பு,
(47) மே - மே மாதம், மேன்மை,மேல்,
(48) மை - கண்மை, அஞ்சனம்,இருட்டு,
(49) - மோ - மோதல், முகர்தல்,
(50) யா- மரம், அகலம்,
(51) வா - அழைப்பது,
(52) வீ - பூ, அழகு, பறவை,
(53) வை. - வைத்தல்,கூர்மை,
(54) வௌ- கௌவுதல்,கொள்ளை அடித்தல்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக