மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். லுங்கி அணிவதை தவிர்த்து வேட்டி அணியுங்க, லுங்கி அணிவதால் அனுபவிக்கும் தொல்லைகளும்,வேட்டி அணிவதால் அனுபவிக்கும் நன்மைகளும் இதோ...
நீங்களே முடிவு செய்யுங்கள்.விலை குறைவாகவும், இயற்கையை பாதிக்காததும், மரியாதையான பார்வை தரக்கூடியதும், உடலுக்கும் நன்மை தரக்கூடிய வேட்டியை பயன்படுத்துவதா..?அல்லது மூன்று மடங்கு விலை கொடுத்து, பலர் குடிக்கும் நீரில் விஷம் கலந்து, ஆரோக்கியம் இல்லாத வெளிநாட்டு உடையாம் லுங்கியை உடுத்துவதா..?
ஒரு லுங்கி தயாரிக்க சுமார் 4,000 லிட்டர் குடிநீர் சாய விஷம் கலக்கப்பட்டு நாசமாகிறது.லுங்கி என்பது இந்திய - தமிழ் கலாச்சாரமன்று. நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு லுங்கி சரியான உடை கிடையாது. மூட்டப்படுவதால் அதாவது முனைகள் இணைத்து தைக்கப்படுவதால், காற்றோட்டம் தடைபடுகிறது. அதில் பாரம்பரியமோ, ஆரோக்கியமோ, மரியாதையோ கிடையாது.
மாறாக வெள்ளை வேட்டி, அதுவும் கைத்தறி வேட்டி சாயமிடாமல் கிடைக்கும். வீட்டில் இருக்கும்போது கட்டிக்கொள்ள பயன்படுத்தலாம். மிகவும் வசதியாக இருக்கும். நம் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. கைத்தறி வேட்டியில் நூல் இடைவெளிகளால் காற்றோட்டம் மிக நன்றாக இருக்கும். மூட்டுதலும் இல்லையென்பது இன்னொரு நன்மைங்க. வீட்டில் தான் என்பதால் அனைவரும் நிச்சயம் செயல்படுத்தலாம். செலவும் மிக குறைவு. மிக நல்ல வேட்டி நூறு ரூபாய் விலைதான் இருக்கும். ஆனால் ஒரு நல்ல லுங்கி வாங்க முன்னூறு ரூபாய் செலவு செய்ய வேண்டும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக