05 ஜூன் 2017

இதுதான் வாழ்க்கை?


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
   வாழ்வின் எந்தக் கணம் நம்முடைய வாழ்நாள் முழுமைக்குமான அனுபவத்தையும் பயத்தையும் கொடுக்கும் என்று தெரிவதேயில்லை. மிக இயல்பாகக் கடந்திருக்க வேண்டிய தினமாக இருந்திருக்க வேண்டியது. இனி அந்த முகமும் கணமும் அப்படியே நினைவுகளில் உறைந்து கிடக்கும். ஞாபகப் புதையலிலிருந்து எப்பொழுது வெளியே வந்து பயமூட்டும் என்று தெரியாது. கடுமையாக உழைக்க மட்டுமே தெரிந்தவர்.குடிபோதையில் தாறுமாறாக பேசினாலும் தக்க அறிவுரை சொன்னால் ஏற்கும் மனப்பக்குவம் உடையவர்.01.06.2017 வியாழக்கிழமை இன்று எங்களை எல்லோரையுமே பதறி நடுங்க வைத்துவிட்டார். மனித உயிரைப் போன்று பற்றுக் கோல் இல்லாதது எதுவுமேயில்லை. இல்லையா? நொறுங்கிய கண்ணாடிகளை அடுக்கி வைத்திருப்பது போலத்தான் அது- எந்தக் கணமும் சுக்கு நூறாகிவிடக் கூடும். அந்த நிரந்தரமின்மையோடுதான் ஒவ்வொரு காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். ஏதோ பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்து கழிப்பது போல...
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?  
(வீடுவரை உறவு)
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?  (வீடுவரை உறவு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! 
(வீடுவரை உறவு)
 

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! 
(வீடுவரை உறவு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு...
(வீடுவரை உறவு)

1 கருத்து:

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...