09 ஜூன் 2014

கோபம் குறைய எளிய வழி

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 
கோபம் குறைய எளிய வழி (அக்குபிரஷர்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சமகால வாழ்க்கை முறையில் கோபம் என்பது தவிர்க்கவே முடியாத விஷயமாகி விட்டது.. ஒரு மனிதனுக்கு கோபமே வரவில்லை என்றால் அவன் எக்காலத்தை பற்றியும் யோசிக்கும் திறனில்லாத மனநிலை தவறியவராக இருக்க வேண்டும்.. (அ) முக்காலமும் உணர்ந்த ஞானியாக இருக்க வேண்டும்.. ஆனால் நம்மில் யாரும் இங்கே மனநிலை தவறியவரும் இல்லை.... ஞானியும் இல்லை... ஆகவே சராசரி வாழ்க்கை வாழும் எல்லோருமே கோபப்படாமல் இருக்க முடிவதில்லை...

உடலில் நோய்கள் குடியேறுவதற்கான நுழைவாயிலே கோபம் தான். கோபத்தை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழலாம். எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான். எளிமையான எதிர்பார்ப்புகளுடனும், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைக் குறைத்தாலும் போதும் மன அழுத்தம் பெருமளவில் குறைந்தும் போகும். ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக கவனம், குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணங்கள்.
மனிதராய் பிறந்த நாம் முடிந்த வரை கோபத்தை குறைத்து கொள்வதும், மற்றவர் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்வதும் நல்லது. மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவனும், ஒரு காரியம் தன்னால் முடியாது என்று நினைப்பவனும் தான் அதிகக் கோபப்படுகிறான். கோபம் அவனை தன்னிலை இழக்க செய்வதுடன் எந்தவொரு செயலையும் ஒழுங்காக செய்து முடிக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது.
அதிகமாக கோபப்படும் ஒரு மனிதனால் எதையும் சாதிக்க முடிவதில்லை. நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல் பாடுகள், வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் கோபம் ஒருவருக்கு வருகிறது. பிறரைப் புரிந்து கொள்ள முயலாமல் எப்போதும் ஒரு முணுமுணுப்பு, தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்ற ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை (inferiority complex), தமக்குத்தான் எல்லாமே தெரியும்.. மற்ற எல்லோருமே முட்டாள்கள் என்ற உயர்வு மனப்பான்மை (superiority complex) என்று இது போன்ற பல விஷயங்கள் மனிதனின் மனதை பரிதவிக்க வைத்து எரிச்சல் மற்றும் கோபத்துடன், இயலாமையும் சேர்ந்துக் கொண்டு மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.
கோபம் வர எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்... நம் பேச்சை கணவன்/மனைவி கேட்கவில்லை என்பது தொடங்கி அலுவலகத்தில் யார் பேச்சையோ நாம் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் வரை கோபம் வர பல காரணங்கள்... சாலையில் நடக்கும் போது யாராவது நம் மீது மோதிவிட்டு "சாரி" கேட்காமல் சென்றால் கோபம்... தாறுமாறாக வாகனம் ஓட்டினால் கோபம், பக்கத்து வீட்டில் சத்தமாக பாட்டு வைத்தால் கோபம், தெருவில் குழந்தைகள் கூச்சல் போட்டால் கோபம்.. இப்படி பல்வேறு காரணங்கள்...
அந்த கோபங்கள் சில இடங்களில் மட்டுமே சம்பந்தப்பட்டவர் மீது வெளிப்படும் ... பல இடங்களில் எங்கேயோ இருக்கும் கோபங்கள் வீட்டில் இருப்பவர்கள் மீதோ, பணியிடங்களில் நமக்கு கீழாக வேலை செய்பவர்கள் மீதோ வெடிக்கும்... ஆனால் அந்த வாய்ப்பு கூட இன்று பலருக்கு கிடைப்பதில்லை...அப்படி வெளிப்படுத்த முடியாத கோபங்கள் தான் மனதிற்குள்ளேயே தங்கி மன அழுத்தமாக உருவாகிறது...வாழ்க்கையில் மனிதனுக்கு வரும் நோய்களில் 90% நோய்கள் இந்த மன அழுத்தத்தால் மட்டுமே வருகிறது என்று எத்தனையோ ஆராய்ச்சிகள் ஆதாரங்கள் வந்துக் கொண்டே தான் இருக்கிறது.
ஒன்றின் மீது நாம் ஏற்படுத்திக்கொள்கிற அதீத ஆவலே நமக்கு டென்ஷன் ஆகி தலைவலியில் முடிவடைகிறது. ஓர் எண்ணத்தைச் செயல்படுத்த விடாமல் சில எண்ணங்கள் (அ) சூழல் நெருக்கும்போது அது கோபாமாக, எரிச்சலாக வெளிப்பட்டு மனஅழுத்தம் உண்டாகிறது. 'ஒரே டென்ஷனா இருக்கு' என்று பத்து வயது பிள்ளைகள் கூட அடிக்கடிச் சொல்லக் கேட்டு இருக்கிறோம். டென்ஷன் - நவீனம் வளர்த்தெடுத்த மிக கொடிய நோய்களில் ஒன்று.
டென்ஷன் ஒருவரை மட்டும் பாதிப்பதில்லை அவர்களை சார்ந்த அனைவரையும் தொற்றிக்கொள்ளும். கோபம் கொண்ட ஒருவரால் அந்த குடும்பமே நிம்மதியை தொலைக்கும். மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட நெருக்கடி தான் இது என்றாலும் மனிதனால் முற்றிலும் இதிலிருந்து விடுபட முடியாவிட்டாலும் அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கலாம் இல்லையா?..
நாம் ஒவ்வொரு மனிதனுடைய இயல்புகளையும் மாற்ற முயற்சிக்காமல் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொண்டோமானால் கோபமே நம் மீது கோபப்பட்டு நம்மை விட்டு ஒடி விடும்.
சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழ்ந்தாலே போதும்.
அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
தேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும்.

ஒற்றைக் குறிக்கோள் என்றால் மனம் இறுகத்தான் வேண்டும். ஆனால் எல்லாவற்றிக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மிகுதியால் தவிக்கும் போது தான் தேவையில்லாத இறுக்கம் உண்டாகிறது. பல சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை என்ற முடிவுடன் மனதைத் தளர்த்தி இறுக்கமாக இருப்பதை தவிர்க்கலாம்.
மனதிற்கு பிடித்த இசையுடன் கூடிய ஓய்வு எடுக்கலாம். உடலிற்கு தேவையான ஓய்வும், தூக்கமுமே மன அமைதியை கொடுக்கும். இரவில் சரியாக தூங்காமல் இருப்பவர்கள் அடுத்த நாள் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாமல், தன் கோபத்தை பார்க்கும் அனைவரின் மீதும் வெளிப்படுத்தி, இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் இழப்பார்கள்.
ஆத்திரம் அறிவுக்கு சத்துருவோ இல்லையோ முகத்திற்கும் தான். கோபத்தின் போது நம் முகத்தை நம்மாலே பார்க்க முடியாத அளவு விகாரமாகி போவதை கண்ணாடி பார்த்தால் உணர்ந்து கொள்ளலாம். கோபம் போக எளிய உபாயம்.. உடனே நம் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது தான்.
சிலர் ஏதாவது கோபம், டென்ஷன் என்றால் ஓடிப்போய் ஒரு சிகரெட்டை பற்றவைத்து நுரையீரலை புகையில் குளிப்பாட்டுவார்கள்... அப்படி செய்தால் கோபம், டென்ஷன் குறையும் என்ற ஒரு மாயையை அவர்களே கற்பித்துக்கொண்டு அதை செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள்..மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கத் தான் செய்யுமே தவிர குறைக்கும் என்று நினைப்பது முட்டாள்தனமான நம்பிக்கை.
கோபம் மன அழுத்தம், கவலை உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் கல்லீரல், இதயம், சிறுநீரகங்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அல்சர், மலசிக்கல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். ஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலத்தையும், உடல் நலத்தையும் கெடுத்து மேலும் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும்.
கோபத்தை கட்டுப்படுத்த தியானங்கள், ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுவது, எளிய உடற்பயிற்சிகள், எட்டு நடைப் பயிற்சி (எட்டு நடை பயிற்சி பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் பார்க்கவும்... www.nalam-acu.blogspot.com), நல்ல பலன் அளிக்கும். தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் மிகச் சிறந்த வழிமுறைகள். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் கோபத்தை விரட்ட முடியும்.
இத்தனை பெரிய கோபம் மன அழுத்தம், கவலை அக்குபிரஷரில் போக்க எளிய வழி இருக்கிறது. எப்போது எல்லாம் கோபம் வரும் சூழ்நிலை உணடாகிறதோ அப்போதே அந்த இடத்தை விட்டு அகல வேண்டும். முடியாத பட்சத்தில் உடனே நம் கையின் நடு விரல் முழுவதும் மெதுவாக 3 நிமிடங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பின் அந்த விரலின் நகக்கண்ணின் இருபுறமும் லேசாக அழுத்தம் கொடுத்தால் போதும். கோபம் உடனே அகலும்...மனம் தெளிவாகும்...இந்த முறையை எப்போது எல்லாம் கோபம் வருகிறதோ அப்போது எல்லாம் பின்பற்றாலம்.
இதற்கு முந்தைய பதிவில் சொல்லி இருப்பது போன்ற வளையம் கையில் இருக்கும் பட்ச்சத்தில் அந்த வளையத்தை உடனடியாக நடு விரலில் முன்னும் பின்னும் உருட்டலாம்.. அது இன்னும் கூடுதல் நலம் பயக்கும்....இன்றே முயற்சி செய்து பாருங்கள். கை மேல் பலன் என்று இதை தான் சொல்லி சென்று இருப்பார்களோ நம் முன்னோர்கள்.
இன்றைய நிலையில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளில் சுமார் 80% பேர் இப்படியான கோபத்தால் குற்றமிழைத்துவிட்டு இப்போது வாழ்க்கையை தவணை முறையில் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. அதே போல தற்கொலை செய்துகொள்பவர்களில் 90% சதவிகிதம் பேர் இப்படி யார் மீதாவது உள்ள கோபத்தில் வாழ்க்கையை மொத்தமாய் தொலைத்து விடுகிறார்கள்...
அக்குபிரஷர் முறையில் செலவே இல்லாத, யாருடைய துணையும் தேவை இல்லாத 3 நிமிட பயிற்சியை செய்வதன் மூலம் கோபத்தை வென்று ஆனந்தமாக வாழலாமே.
மரியாதைக்குரிய ஈஸ்வரி ரகு அம்மையார் அவர்களுக்கு நன்றி...

1 கருத்து:

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...