மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கையெழுத்தின் தலையெழுத்து என்ன?
மரியா கொன்னிகோவா
கல்விப் பயிற்சிக்கும் கையெழுத்துக்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது...

கையால் எழுதுவது இன்னமும் அவசியமா? அப்படியொன்றும் அவசியமில்லை என்றே பல
கல்வியாளர்கள் கருதுகின்றனர். கையால் எழுதுவது அந்தக் கால வழக்கம் என்று
அந்தப் பழக்கத்தைப் பரணில் தூக்கிப்போட காலம் இன்னும் வந்துவிடவில்லை என்று
உளவியலாளர்களும் நரம்பியல் நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். கையெ
ழுத்துக்கும் கல்விப் பயிற்சிக்கும் ஆழ்ந்த தொடர்பு இருப்பதை விளக்கும்
சான்றுகள் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன.
முதலில் கையால் எழுதப் பழகுவதன் மூலம் குழந்தைகள் பாடங்களை வேகமாகக் கற்றுக்கொள் வதுடன், புதிய கருத்துகளைச் சிந்திக்கவும் ஏற்கெனவே கற்றுத்தரப்பட்டவற்றை மனதில் இருத்திக்கொள்ளவும் நன்கு பயிற்சி பெறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாம் என்ன எழுதுகிறோம் என்பதல்ல - எப்படி எழுதுகிறோம் என்பதே முக்கியம்.
எழுத்தும் மூளையும்
நாம் எழுதும்போது, மூளையுடன் தொடர்புள்ள நரம்புமண்டலத் தொடர் தானாகவே செயல்படத் தொடங்குகிறது என்கிறார் பாரீஸ் நகரில் உள்ள பிரெஞ்சுக் கல்லூரியைச் சேர்ந்த உளவியலாளர் ஸ்தானிஸ்லாஸ் தெஹானே. “எழுதப்பட்ட சொல்லில் இருக்கும் அசைவோட்டத்தின் அடிப் படையை மூளை இனம்கண்டுகொள்கிறது. ஒரு வகையான பாவனை ஒத்திகையினை மூளை அடையாளம் கண்டுகொள்கிறது. மூளையில் இருக்கும் இந்த நரம்புத் தொகுப்பு நம்மால் உணர முடியாத வகையில் தனித்துவமான முறையில் பங்களிக்கிறது. கற்றல் என்பது இதனால் எளிமையாகிறது” என்கிறார் அவர்.
இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கரின் ஜேம்ஸ் என்ற உளவியலாளர் 2012-ல் நடத்திய ஆய்வு இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது. இதுவரை எழுதவோ, படிக்கவோ கற்றிராத குழந்தைகளிடம் சிறு அட்டையில் எழுத்து உருவோ, ஒரு வடிவமோ கொடுக்கப்பட்டது. அதைப் போலவே ஓர் உருவத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு மூன்று வழிகள் கொடுக்கப்பட்டன. அந்த மூன்றில் ஒன்றை அவர்கள் பின்பற்ற வேண்டும். அந்த எழுத்து அல்லது உரு மீது டிரேஸ் பேப்பர் என்ற மெல்லிய காகிதத்தை வைத்து, கீழே உள்ளதைப்போல அப்படியே புள்ளிபுள்ளியாகச் சேர்க்குமாறு முதலில் கூறப்பட்டது. அடுத்ததாக, வெள்ளைத் தாளில் அந்த உருக்களை அப்படியே பார்த்து வரையுமாறு கூறப்பட்டது. அதற்கும் அடுத்தபடியாக ஒரு கணினி விசைப்பலகையில் தட்டுமாறு வாய்ப்பு தரப்பட்டது. பிறகு அவர்களுடைய மூளை எப்படி இயங்குகிறது என்பதைக் கண்காணிக்க ஸ்கேனர் கருவியுடன் இணைப்பு தரப்பட்டது.
வெள்ளைத் தாளில் அப்படியே பார்த்து எழுதுமாறு கூறப்பட்டபோது மூளைப் பகுதியில் செயலூக்கம் மிகுந்தது. பெரிய பையன்கள் படிக்கும்போதும் எழுதும்போதும் மூளை எப்படிச் சுறுசுறுப்பாக, விரிவாக வேலை செய்யுமோ அதே வகையில் மூளையின் மூன்று பகுதிகளில் செயல்கள் நிகழ்ந்தன. டிரேஸ் பேப்பர் வைத்து வரைந்தபோதும் கணினியில் விசைப்பலகையைத் தட்டியபோதும் வெகு பலவீனமாகத்தான் மூளை யின் செயல்பாடு இருந்தது.
சுதந்திரமும் சிந்தனையும் அதிகம்
சுயமாக எழுதும்போது எழுத்தின் வடிவத்தை மனதில் வாங்கிக்கொண்டு அதை எங்கே ஆரம்பிப்பது, எப்படி வளைப்பது, எங்கே கொண்டுபோய் முடிப்பது என்பதையெல்லாம் சுயமாகத் தீர்மானிப்பதால் சுதந்திரமும் அதிகம், சிந்தனையும் அதிகம், செயலும் அதிகம். முதல்முறையாகப் பார்த்து எழுதும்போதோ, வரையும்
போதோ அப்படியே அச்சுஅசலாக இருக்காது. சில வேறுபாடுகள் இருக்கும். அந்த வேறுபாடுகள்தான் கற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும். எழுத்தைச் சரியாக வரைய முடியவில்லையே என்று தோன்றி யதும் எழுத்தின் வடிவத்தைக் கூர்ந்து கவனிக்கவும் எழுதும் முறையைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். இது கவனித்தல், கற்றல், நினைவில் வைத்தல் ஆகிய பயிற்சிகளை ஒருங்கே அளிக்கிறது என்கிறார் டாக்டர் ஜேம்ஸ். டிரேஸ் பேப்பர் வைத்து வரையும்போதும் கணினி விசைப்பலகையில் பார்த்துத் தட்டும்போதும் இந்தச் செயல்களுக்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு.
A என்ற ஆங்கில எழுத்தை முதல்முறையிலேயே அப்படியே எழுத வராது என்பதால் குழந்தைகள் அதைத் திரும்பத் திரும்ப எழுதிப்பார்த்து அதன் வடிவத்தை அப்படியே கொண்டுவர மூளையின் உதவி நாடப்படுகிறது. இப்படி, பயிற்சி மூலம் மூளையில் பதிந்ததை எழுத்தில் கொண்டுவருவதற்கு கையெழுத்துப் பழக்கம் மிகவும் உதவுகிறது என்று சுட்டிக்காட்டுகிறார் ஜேம்ஸ்.
தாங்களாகவே எழுத்தை அமைக்கும் குழந்தை களுக்கும் அதை வெறுமனே வேடிக்கை பார்க்கும் குழந்தைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று மூளையின் செயல்பாட்டைக் கவனித்ததில், தாங்களாகவே எழுத்தை அமைக்கும் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் சிந்தனை கைவழியே எழுத்துருவாக வருவதைக் கண்டார். இந்த முயற்சியானது எழுத்துகளை அடையாளம் காண்பதோடு மட்டும் நிற்பதல்ல.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வர்ஜீனியா பெர்னிங்கர் என்ற உளவியலாளர் கையெழுத்துப் பழக்கம் தொடர்பாக ஓர் ஆய்வு மேற்கொண்டார். அச்சில் வார்த்து எழுதும்போதும் கையால் சேர்த்தெழுதும்போதும் கணினி விசைப் பலகை மூலம் திரையில் எழுதும்போதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் செயல்கள் நடப்பதைக் கண்டார். ஒவ்வொரு செயலுக்குமான விளைவு தனித்துவத்துடன் திகழ்வதைப் பதிவுசெய்துள்ளார்.
குழந்தைகள் கையால் எழுதியபோது அதிக வார்த்தைகளை அதிக வேகத்தில் எழுதியதுடன் அதிக அளவு கற்பனையையும் வெளிப்படுத்தினர். அவர்களுடைய மூளையைக் கருவி கொண்டு பார்த்து வந்ததில், எழுதுவதற்கும் கற்பனைக்கும் ஆழ்ந்த, நெருக்கமான உறவு இருப்பது தெரிய வந்தது.
சேர்த்தெழுதுதல்
சொந்தமாக ஒரு கட்டுரை எழுதிவாருங்கள் என்று அவர்களுக்கு வேலை கொடுத்தபோது, நல்ல கையெழுத்து உள்ள மாணவர்கள் சுவை யான கட்டுரைகளை எழுதிக் காட்டினார்கள். இப்போதெல்லாம் காப்பி நோட்டுகளில் (இரட்டை வரி, நாலு வரி) சேர்த்தெழுதச் சொல்லும் பழக்கம் குறைந்துவருகிறது.
கற்பதில் குறைபாடு உள்ள சிலருக்கு அச்சில் உள்ள எழுத்துகளைப் படிப்பதில் சிரமமும், கையெழுத்தில் உள்ளதை எளிதில் படிக்கும் ஆற்றலும் காணப்படுகிறது. வேறு சிலருக்கு, இதில் நேர்மாறான தன்மையும் இருக்கிறது. நினைவுக்கும் எழுத்துக்கும் உள்ள ஆழ்ந்த தொடர்பையே இவை யெல்லாம் உணர்த்துகின்றன.
சேர்த்தெழுதும் பழக்கமானது சுயக்கட்டுப் பாட்டை வளர்ப்பதுடன் நினைவிழத்தல் நோய் போன்றவற்றிலிருந்தும் தடுக்கக்கூடிய வாய்ப் பிருக்கிறது என்று டாக்டர் பெர்னிங்கர் கருதுகிறார். கையால் எழுதுவதன் பலன் குழந்தைப் பருவம் தாண்டியும் நமக்குத் துணைக்கு வருகிறது. பெரிய வர்களானதும் விசைப்பலகையில் தட்டுவதில் வேகமும் தேர்ச்சியும் ஏற்படலாம். ஆனால், புதிய தகவல்களைப் பெறும் ஆற்றலும் எழுத்தாற்றலும் குறையக்கூடும்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் கலிபோர் னியா பல்கலைக்கழகத்திலும் சில மாணவர்களை வெவ்வேறு விதமான எழுத்துப் பயிற்சிகளில் ஆழ்த்தி சோதனை மேற்கொண்டனர். கையால் எழுதிய மாணவர்களே கற்றதை நன்கு பதிவு செய்தனர். கையால் எழுதும் மாணவர்கள் வகுப்பறை
களில் ஆசிரியர் கூறுவதை வரிசை மாற்றியும், தங்களுடைய நினைவேற்றத்துக்கு ஏற்ற வகையிலும் எழுதிக்கொள்வது தெரியவந்தது. அதனால், அவர்கள் அந்தப் பாடத்தை நன்கு புரிந்துகொள்வதுடன் எளிதாகவும் மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்கள். கையால் எழுதுவதன் சிறப்பைப் பலர் வலியுறுத்தினாலும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் அறிஞர் பால் புளூம் ஒப்புக்கொள்ள வில்லை. “கையால் எழுதுவதன் மூலம், முக்கியம் என்று நீங்கள் கருதுவதன் மீது மட்டும் கவனம் செலுத்துகிறீர்கள், அதனால்தான் நன்றாகச் சிந்திக் கிறீர்கள் என்று கூறலாம்” என்கிறார்.
- நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக