02 ஜூன் 2014

பேருந்து பயணத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு?

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.பேருந்து பயணத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு பற்றி ஆராய்வோம்.அவரவர் கருத்துக்களை பகிர்வோம்.பொதுவான தீர்வினை அடைந்து அரசுக்கு தெரிவிப்போம்.பேருந்துவில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உரிய பொறுப்பும்,கடமையும் என்னென்ன?  அரசுப் பேருந்துவாக இருந்தாலும் தனியார் பேருந்துவாக இருந்தாலும் அதன் உரிமையாளர்களுக்கு ,அதிகாரிகளுக்கு உள்ள பொறுப்பு என்ன? நீண்டதூர வழித்தடப் பேருந்துகளுக்கு கண்காணிப்பு கேமரா ஏன் பொருத்தக்கூடாது? பொது தகவல் அலுவலரின் தொடர்பு எண் மற்றும் காவல் துறை தொடர்பு எண் ஏன் பயணிகள் பார்வையில் தெளிவாகத்தெரியும்படி எழுதி பராமரித்து பாதுகாக்கக்கூடாது? என்று போக்குவரத்து துறை உட்பட அரசாங்கத்திடமும் கேட்டுப் பெறுவோம்.அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரிகளிடமும் கேட்டுப் பெறுவோம்.குறிப்பாக நீண்டதூர வழித்தடப் பேருந்துவில் தனியாக பயணிக்கும் பெண் பயணிக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு பற்றியும்,முன்பதிவு செய்யப்பட்ட பிறகு அந்த சீட்டுக்கு அடுத்த பயணிக்கு அனுமதிக்கலாமா?என்பது பற்றியும் அலசுவோம்.இதற்கு சட்டம் என்ன சொல்கிறது? அரசாங்கம் கூறும் கருத்து என்ன? என்பன பற்றியும் வெளிக்கொணர்வோம்.ஏனென்றால் , தீ கொடியது என்று வாயால் சொல்லிக் கேட்டால் அதன் கொடூரம் புரியாது.அவ்வாறு கேட்பவர்களுக்கு சிறிதளவாவது தீ பட்டால்தான் தெரியும் அதன் கொடுமை என்னவென்று என்ற வாய்மொழிக்கூற்றுக்கேற்ப அனுபவித்த பிறகே தெரிகிறது.பெண்கள் பாதுகாப்பு மற்றும் பணியிலிருக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் அணுகுமுறைகளும் பயணிகளின் அணுகுமுறைகளும் பற்றி நாமே சட்டப்படியான தகவல்களையும்,உரிமைகளையும் அரசாங்கத்திடம் கேட்டுப்பெற்று தகவல் கையேடு வடிவில் வெளியிடுவோம்.அந்த சிறுகையேட்டில் கூடுதலாக தொடர்பு எண்கள் மற்றும் முகவரிகள் மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரிகள் விவரங்களை பதிவு செய்து வெளியிடுவோம்.பயணிகளே மொபைல் போனில்  காணொளியாக படமெடுக்க நினைவூட்டுவோம்.தேவைப்பட்டால் அப்போதே சம்பந்த அதிகாரிகளுக்கு அல்லது இணையதளதிற்கு அனுப்பிவைக்க கூறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக