11 அக்டோபர் 2012

தாளவாடியில் சாலைப் பயன்பாட்டிற்கு ஆர்ப்பாட்டம்-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,
      வணக்கம். 


   ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம்  வட்டத்திற்குட்பட்டது தாளவாடி ஊராட்சி ஒன்றியம். அது கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மலைப்பிரதேசம் ஆகும். 
    தாளவாடி போக்குவரத்திற்கு 
          (1) சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி திம்பம்,ஆசனூர்,காரப்பள்ளம் செக்போஸ்ட், அதன்பிறகு கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரத்திற்குட்பட்ட வனப்பகுதிக்குள் சென்று புளிஞ்சூர் செக்போஸ்ட்,கோழிப்பாளையம்,கும்பாரக்குண்டி,பிறகு தமிழ்நாடு எல்லைக்குள் இரண்டு கிலோமீட்டர் நெடுஞ்சாலைப்பகுதி.அதன்பிறகு கர்நாடகா மாநிலத்திற்குட்பட்ட நான்கு கிலோமீட்டர் நெடுஞ்சாலைப்பகுதி அதன்பிறகு தமிழ்நாட்டிற்குட்பட்ட பகுதியான கும்டாபுரம், தாளவாடி என எசகுபிசகாக  வழித்தடம் செல்கிறது.அடுத்து
                
   (2) சத்தியமங்கலம்,பண்ணாரி,திம்பம் மலைப்பாதை,திம்பம் சென்று இடதுபுறமாகத்திரும்பி முழுக்க வனத்துறைக் கட்டுப்பாட்டிலிருக்கும்  வனப்பாதையில் காளிதிம்பம்,மாவநத்தம்,பெஜலட்டி,ராமரணை,வழியாக தலைமலை,தொட்டபுரம்,முதியனூர்,நெய்த்தாளபுரம்,சிக்கள்ளி,தாளவாடி செல்கிறது.இந்தப்பாதை முழுக்க வனவிலங்குகள் நிறைந்த  குறுகிய சாலை மற்றும் கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் மிகக்குறுகிய வளைவுகள் நிறைந்த அதிக ஏற்ற,இறக்கமுள்ளஆபத்தான பாதையாகும் மற்றும் இருபது கிலோமீட்டர் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கெடுபிடி அதிகமுள்ள பாதையாகும்.
        
     
   (3)ஆசனூரை அடுத்துதேசிய நெடுஞ்சாலை209-இல்  சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இடது புறமாக வனப்பகுதிக்குள் செல்லும் பாதை இந்தப்பாதை நான்கு கிலோமீட்டர் மட்டும் வனப்பகுதிக்குள் சென்று பாளப்படுகை ஊர் சேர்கிறது.அங்கிருந்து இக்கலூர்,சிக்கள்ளி,தாளவாடி மிக எளிதாகச்செல்ல மிகப் பயனுள்ள பாதையாகும்.குறைந்த தூரத்தில் பாதுகாப்பாக தாளவாடி செல்ல ஏற்றதான பாதையாகும்.இதுவும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
     

(4) அடுத்து முக்கியமான பாதை என்றால் அது இசுலாமிய மன்னர் திப்புசுல்தான் சாலையாகும்.இந்த சாலைதான் முன்னர் திப்புசுல்தான் ஆட்சிகாலத்தில் அவரது ஆளுகைக்குட்பட்ட சத்தியமங்கலம்,பவானிசாகர் போன்ற நகரங்களில் கோட்டை அமைத்து வரிவசூல் உட்பட ஆட்சிக் கண்காணிப்பிற்காகவும் திப்புசுல்தான் கோவைக்கு  பெண் கொடுத்து அதன் காரணமாக சம்பந்த உறவுமுறைக்காகவும் போக்குவரத்துக்காக அவர்தம் படை சூழ சென்றுவர திப்புசுல்தான் அமைத்த பாதையாகும்.இந்தப்பாதை தாளவாடி வழியாக தலைமலை சென்று அங்கிருந்து வலதுபுறமாக வனத்துறை அலுவலகங்கள் ஒட்டியவாறு நேராக கராச்சிக்கொரை சென்று அங்கிருந்து சத்திக்கும்,பவானிசாகருக்கும் செல்கிறது.சுமார் நூறு அடி அகலத்திற்கும் சற்று அதிகமான இரு புறமும் ஆல மரங்கள் நடப்பட்டுள்ள அகலமான பாதையாகும்.(இந்தப்பாதை வழியாகத்தான் ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டு அது பல காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளது.)இந்தப்பாதை இரு வளைவுகள் மட்டுமே கொண்டது.அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்கிறது.வனத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ளது.பயண தூரமும் குறைவு.




      
     
   மற்ற சாலைகள் என்றால் கூடலூர்,கர்நாடகா மாநிலம் குண்டல்பேட்டை வழியாக தமிழக எல்லைக்குள் வந்து அருளவாடி,மெட்டல்வாடி,சூசையாபுரம்,தொட்டகாஜனூர்,தாளவாடி வரலாம்.அல்லது குண்டல்பேட்டை,சாம்ராஜநகர்,சிக்கொலே டேம்,எல்லக்கட்டை வழியாக தாளவாடி வரலாம்.  
  

      தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோழிப்பாளையம்,புளிஞ்சூர்,ஆசனூர் வழி சாலை பல காரணங்களுக்காக அடிக்கடி  தடுக்கப்படுவதால் தமிழத்தைச் சேர்ந்த தாளவாடிப்பகுதி தனித்தீவாகத் தத்தளிக்கிறது.அங்குள்ள மக்கள் போக்குவரத்துக்கும்,விவசாயிகள் விளைபொருட்ளை சந்தைப்படுத்தக் கொண்டு செல்லவும்,அனைத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச்செல்லவும் என தமிழகம் செல்ல முடியமல் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.அந்த நேரங்களில் அருகில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் செல்ல முடியாமல் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.இதனால் தாளவாடியில் உள்ள விவசாயிகள் உட்பட அனைத்து மக்களும் பொருள்விரயம்,நேர விரயம் என மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
அதற்காகத்தான்தற்போது எளிதாக அனுமதிக்கும் வகையில் உள்ள ஆசனூர்- பாளப்படுகை-தாளவாடி சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டு அதன்படி  வருகிற 15-10-2012 அன்று தாளவாடியில் மரியாதைக்குரிய நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்-தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் தலைமையில் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்களும்,மக்கள் பிரதிநிதிகளும்,பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.  இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக (1)மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள்,(2)மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள்,(3) மாண்புமிகு  முதலமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(4)மேதகு ஆளுநர் அவர்கள்-தமிழ்நாடு,(5)மாண்புமிகு  வனத்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(6)மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(7)மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு, (8)மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(9)உயர்திரு வனத்துறைச் செயலாளர் அவர்கள் -சென்னை(10)உயர்திரு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அவர்கள்(நிர்வாகம்) சென்னை       (11)உயர்திரு  மாவட்ட ஆட்சியர் அவர்கள்-ஈரோடு மாவட்டம்,(12) உயர்திரு  கோட்டாட்சியர் அவர்கள்-கோபி செட்டிபாளையம்,(13) உயர்திரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்-ஈரோடு மாவட்டம்,(14) உயர்திரு  துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள்-சத்தியமங்கலம்  , (15) உயர்திரு மாவட்ட வனஅலுவலர் அவர்கள்,சத்தியமங்கலம்,(16) உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்.சத்தியமங்கலம், ஆகிய அனைத்து அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., அவர்களது வாழ்க்கைக்குறிப்பு... (Dr.R.K.Manikkam, professor,Writer)

                                                                                                        முனைவர். இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phi...