08 அக்டோபர் 2012

தமிழில் சுருக்கெழுத்துப் பயிற்சி-01

மரியாதைக்குரிய நண்பர்களே, 
                                               வணக்கம்.




            உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - தரமணி - சென்னை
              


    
           நான் சமீபத்தில் (03-10-2012அன்று)  சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வீரமாமுனிவர் மொழிப்பயிற்சி மையம்-தாளவாடி சார்பாக தமிழ்ச்சொல்லாக்கம்-தேசிய கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள சென்றபொழுது  அங்கு விற்பனையில் இருந்த தமிழ்ச்சுருக்கெழுத்துபுத்தகத்தைக்காண நேர்ந்தது.

உடனே  இரு புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்றை ஒரு தட்டச்சுப்பயிலகத்திற்கு அன்பளிப்பாகக்கொடுத்தேன்.இன்னொன்றை நான் படித்தறிய    தமிழில் சுருக்கெழுத்துக்கள்  எளிமையாகவும்,விளக்கமாகவும் இருந்ததைக்கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன். இனி வரும் காலங்களில் தமிழ்ச்சுருக்கெழுத்து கற்பது பற்றி பதிவிடுகிறேன்.முடிந்தால் காணொளியாக YOU TUBE-இல் பதிவிட முயற்சிக்கிறேன். காரணம் மிக எளிமையாக உள்ளது.மற்றும் இதனைக்கற்றுக்கொண்டால் உரையாடல் சம்பவங்கள் மற்றும் கருத்தரங்கங்கள்,பட்டிமன்றங்கள்,போன்ற அரங்குகளில் நடக்கும் பேச்சுக்களை உடனடியாக சுருக்கெழுத்தில் எழுதி பதிவிட முடியும்.தாங்களும் இந்தப்புத்தகத்தை தபால் மூலமாகவோ,நேரிலோ சென்று வாங்கிக்கொள்ளலாம்.ஒரு புத்தகத்தின் விலை எழுபத்தைந்து ரூபாய் மட்டுமே! அதுவும் இருபது சதம் தள்ளுபடி செய்து அறுபது ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தொடர்ச்சியான பதிவுகளைக்காணுங்கள்! பயனடையுங்கள் .
                  என PARAMES DRIVER // THALAVADY - ERODE Dt.

4 கருத்துகள்:

  1. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றிங்க! அடுத்து தாங்கள் ஏற்கனவே கருத்துரை உள்ளீடு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தீர்.எனக்கு அதைப்பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாதுங்க!.நான் பதிவிடுகிறேன்.தங்களைப்போன்ற சிலருக்குப் பயனுள்ளதாக இருந்தால் அதுவே மிக்க மகிழ்ச்சிங்க! நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  3. அந்த புத்தகத்தில் உள்ள தொடர்பு முகவரி , அலுவலக தொலைபேசி எண்ணை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.....

    பதிலளிநீக்கு
  4. அந்த புத்தகத்தை தொடர்பு கொண்டுவாங்க கூடிய முகவரி, தொலைபேசி எண்ணை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்

    பதிலளிநீக்கு

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...