மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
இங்கு பாருங்க! கேரளா மண்ணின் மகத்துவம்.சிவகாசி வெடி விபத்தில் காயமுற்ற நம்மவருக்கு உடனடி மருந்துப்பொருட்கள் (ரூபாய் நாற்பது இலட்சம் மதிப்புள்ளவை) வழங்கியதோடு நில்லாமல் இன்னமும் தேவைப்பட்டால் இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள் என மனிதாபத்தோடு கூறிய அந்த மாமனிதரை நாமும் வாழ்த்தி வணங்குவோம்.
Saturday, September 8, 2012
'மாமனிதன்' மம்முட்டி
சமீபத்தில் சிவகாசியில் 38 பேரை பலி
கொண்ட கொடிய பட்டாசு தொழிற்சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ 35
லட்சம் மதிப்புள்ள அக்னிஜித் என்ற மருந்தை இலவசமாக அளித்து உதவியுள்ளார்
நடிகர் மம்முட்டி.
சிவகாசி விபத்து குறித்து தமிழ் ஹீரோக்களோ?, அரசியல்வாதிகளோ கூட கண்டுகொள்ளாத நிலையில், தாமாக முன்வந்து மம்முட்டி செய்துள்ள இந்த மாபெரும் உதவி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
தீக்காயங்களுக்கான மருந்து தயாரிப்பதில் மம்முட்டிக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை புகழ்பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் 'அக்னிஜித்' என்ற மருந்து ரொம்ப பிரபலம். இந்த மருந்துக் கம்பெனிக்கு சிவகாசி மருத்துவமனை அக்ஜினித் மருந்து கேட்டு 35 லட்சம் ரூபாய்கு ஆர்டர் கொடுத்தது. இதைக் கேள்விப்பட்ட மம்முட்டி சிவாகாசிக்கு தேவையான அனைத்து தீக்காய மருந்துகளையும் இலவசமாக அனுப்பி வைக்கும்படியும். இன்னும் மருந்துகள் எவ்வளவு தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, பிரபல நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். கேரளா, கொச்சியில், நடிகர் மம்முட்டி நிர்வகித்து வரும், "பதஞ்சலி ஹெர்பல்ஸ்'' என்ற நிறுவனத்தின் சார்பில், காயமடைந்தவர்களுக்கு, அக்னி ஜித்து என்ற, மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிகிச்சைக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும்.
இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர் மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி கூறுகையில், ""நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன்", என்றார்.
இவரல்லவோ நிஜமான சூப்பர் ஸ்டார்.

உண்மை தான் சார்...
பதிலளிநீக்குநடிகர் மம்முட்டி... தவறு... தவறு... மனிதர் மம்முட்டி அவர்களை வாழ்த்துவோம்...
பகிர்வுக்கு நன்றி...
மரியாதைக்குரிய ஐயா,வணக்கம். தங்களது வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறதுங்க! மனித நேய பண்பாளரான திரு.மம்முட்டி ஐயா அவர்களை எமது வலைப்பக்கத்தில் பாராட்டியமைக்காக தங்களுக்கு நான்தான் நன்றி செலுத்த வேண்டும்! என -parames driver - Thalavady-Erode Dt.
நீக்கு