19 செப்டம்பர் 2012

நூல்களுடன் புத்தக அலமாரி இலவசம் நம்ம ஈரோட்டில்

அன்பு நண்பர்களே,வணக்கம். 
             கடந்த 17-9-2012 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் திருமிகு.சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள்  அருமையான யோசனை ஒன்று தெரிவித்தார். 
             அதாவது எந்தப்பகுதியைச்சேர்ந்தவர்களானாலும் சரிங்க! புத்தக அலமாரி மற்றும் அறிவியல் உட்பட நல்ல தரமானபுத்தகங்களை வழங்கலாம். அதாவதுங்க!  பள்ளிகளுக்கோ,பொது இடங்களுக்கோ,விழாக்களுக்கோ,அனாதை இல்லங்களுக்கோ,பயிற்சி நிலையங்களுக்கோ,பெரிய பெரிய கம்பெனிகளுக்கோ,தொழிற்சாலைகளுக்கோ,மருத்துவமனைகளுக்கோ,முதியோர் இல்லங்களுக்கோ,தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கோ,அறிவுச்செல்வங்களைப்பெருக்க விருப்பமும் ஆர்வமும் உள்ள நன்கொடையாளர்கள் அன்பளிப்பாக கொடுக்கவோ அல்லது விருப்பமுள்ளவர்கள் விலைக்கு பெற்றுக்கொள்ளவோ தாங்கள் செய்ய வேண்டியது ரூபாய் ஐந்தாயிரம் மட்டும் கொடுத்தால் போதும். ஐந்தாயிரத்திற்கு உண்டான நல்ல தரமான புத்தகங்களுடன் இலவசமாக அந்த புத்தகங்களை அடுக்கி வைக்க கண்ணாடிபொருத்திய புத்தக அலமாரி கொடுக்கப்படும்.இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் விளம்பரப்படுத்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...