18 மார்ச் 2012

பச்சைமலை-கோபி


 
அன்பு நண்பர்களே,
    வணக்கம். கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.


பச்சைமலையில் விநாயகர் திருத்தேர் வெள்ளோட்டம்

கொங்கு நாட்டில் மலைவளம் மிகுதி. குன்றுகள் அதிகம் என்பதால் குன்றுதோறாடும் குறிஞ்சி நிலக் கடவுள் முருகப் பெருமானுக்கு மலைக் கோவில்கள் மிகுதியாக உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நகரின் தெற்குப்புறத்தில் அமைந்துள்ளது பச்சைமலை. பசுமையான அழகிய சிறு குன்று. இந்தக் குன்றின் மீது அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்.
குன்றுக் கோயிலில் மேற்கு நோக்கிய நிலையில் முருகப்பெருமான் அழகிய தோற்றத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறார். கோவிலின் வடகிழக்கு மூலையில் ஆறுமுகங்களுடனும், தென் கிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடனும் தனிச் சன்னதிகளில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.
இங்கே முருகப்பெருமானுக்கு மரத்தாலான தேரும், தங்கத் தேரும் உள்ளன. பங்குனி உத்திரப் பெருவிழா ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தின்போது தேரோட்டம் நடைபெறுகிறது.
தங்கத்தேர் பக்தர்களிடம் கட்டணம் பெற்று ஓட்டப்படுகிறது. சஷ்டி, கிருத்திகை, விசாகம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. பச்சை மலையில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்குத் திருத்தேர் ஒன்று இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது அருளுள்ளம் கொண்ட பெருமக்களின் நன்கொடையால் அருள்மிகு விநாயகப் பெருமானுக்குத் திருத்தேர் ஒன்று புதிதாகச் செய்யப்பட்டது.
விநாயகப் பெருமானின் புதிய திருத்தேர் வெள்ளோட்ட விழாவும், கோவிலில் பாதுகாப்புப் பெட்டக அறைத் திறப்பு விழாவும் சென்ற டிசம்பர் 4 ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.வி. ராமலிங்கம் அவர்கள் கோவிலில் பாதுகாப்புப் பெட்டக அறையைத் திறந்து வைத்தார்.
பின்னர் திருத்தேர் வெள்ளோட்ட விழாத் தொடங்கியது. அமைச்சர்கள் தேர் வடத்தைப் பிடித்து வெள்ளோட்டத்தைத் தொடங்கி வைக்க, பக்தர்கள் தேரை இழுத்தனர்.
விழாவில் சட்டமன்ற, ஊராட்சிமன்றப் பிரதிநிதிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


பரமேஸ் டிரைவர் சத்தி தாளவாடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...