06 மார்ச் 2012

பிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு

      அன்பு நண்பர்களே
, வணக்கம். KONGU THENDRAL.BLOGSPOT.COM வலைப்பக்கத்திற்கு தங்களை வணங்கி வரவேற்கிறோம். பிளாஸ்டிக்-சுற்றுப்புற சீர்கேடு பற்றி இங்கு காண்போம்.


       குப்பைகள் மேலாண்மையில் ஏற்படும் குறைபாடுகளே, பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதால் உண்டாகும் பிரச்சனைக்கு முதன்மை காரணமாகும். கட்டுப்பாடில்லாத வேதிப்பொருட்களை உபயோகிப்பதால் திறந்த சாக்கடைகள் அடைப்பு, நிலத்தடி நீர் அசுத்தம் போன்ற சுற்றுப்புற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பிளாஸ்டிக் என்றால் என்ன?
பிளாஸ்டிக் எனப்படுவது பலபடியாக்கல் வேதிவினையினால் பெறப்படுவதாகும் (பாலிமர்ஸ்). தனித்தனியாக இருக்கும் மூலக்கூறுகளை (மோனோமர்ஸ்) பலமுறை ஒன்றிணைத்து பெரிய மூலக்கூறுகள் (பாலிமர்ஸ்) பெறப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள் எத்திலீன் மூலக்கூறுகள் பலபடியாக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. எத்திலீன் மூலக்கூறுகள் பலபடியாக்கப்பட்டு பாலிஎத்திலீன் உருவாக்கப்படும்போது, அதில் நீண்ட சங்கிலிகளாக கார்பன் அணுக்கள் இருக்கும். நீண்ட சங்கிலியிலுள்ள இக்கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்திருக்கும்.


பிளாஸ்டிக் பைகள் எதனால் ஆனவை?
பிளாஸ்டிக் பைகள் கீழ்க்கண்ட எதாவதொரு மூன்று அடிப்படை பலபடியாக்கப்பட்ட பாலிஎத்திலீன் மூலக்கூறுகளால் ஆனவை. அதிக அடர்த்தியுள்ள பாலிஎத்திலீன், குறைந்த அடர்த்தியுள்ள பாலிஎத்தீலீன், நீண்ட குறைந்த அடர்த்தியுள்ள பாலிஎத்திலீன். மளிகை சாமான்களை வைக்க அதிக அடர்த்தியுள்ள பாலிஎத்திலீன் பைகளும், சலவைத்துணிகளை வைக்க குறைந்த அடர்த்தியுள்ள பாலிஎத்திலீன் பைகளும் பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன. இந்த வெவ்வேறு அடர்த்தியுள்ள பாலித்தீன் பொருட்களுக்கும் முக்கியமான வித்தியாசம் அதன் பலபடியாக்கல் சங்கிலிகளிலுள்ள கிளைகளாகும். அதிக அடர்த்தியுள்ள மற்றும் நீண்ட குறைந்த அடர்த்தியுள்ள பாலித்தீனில் நீண்ட கிளையற்ற கார்பன் சங்கிலிகளாகவும், குறைந்த அடர்த்தியுள்ள பாலித்தீனில் கிளைகளையுடைய கார்பன் சங்கிலிகளுமிருக்கும்.


பிளாஸ்டிக் உடல்நலத்துக்கு தீங்கானதா?
பிளாஸ்டிக் அதன் உள்ளமைப்பின்படி கெடுதல் விளைவிக்கக்கூடியவையல்ல. பிளாஸ்டிக் பைகள் கனிம மற்றும் கரிமமல்லாத பொருட்களான நிறமிகள், ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ், தாதுக்கள், பிளாஸ்டிசைசர்ஸ், சாயங்கள் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும்.
நிறமிக்கள் மற்றும் சாயங்கள் போன்றவை தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் சாயங்கள். பிளாஸ்டிக் பைகளுக்கு நிறம் கவர்ச்சியான நிறம் கொடுப்பதற்காக பயன்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் நிறமிகள் புற்றுநோய் உருவாக்கக்கூடியவை. உணவுப்பொருட்களை இத்தகைய பிளாஸ்டிக்பைகளில் எடுத்துச்செல்லும்போது இந்நிறமிகள் உணவுப்பொருட்களில் கலந்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். நிறமிகளிலுள்ள அதிக எடையுள்ள கனிமங்களான காட்மியம் அவற்றில் இருந்து வெளிவந்து உணவுப்பொருளுடன் கலந்து உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது.
பிளாஸ்டிசைசர்ஸ் எனப்படுபவை குறைவான ஆவியாகும் தன்மையுடைய கரிம எஸ்டர்களாகும். உணவுப்பொருட்கள் இப்பைகளில் எடுத்துச்செல்லும்போது, உணவுப்பொருட்களில் கலந்துவிடுகின்றன. இவைகளும் புற்றுநோயினை உருவாக்கக்கூடும்.
ஆண்டி ஆக்ஸடென்ட்ஸ் மற்றும் ஸ்டெபிலைசர்கள் கரிம மற்றும் கனிம மற்றும் கரிம வேதிப்பொருட்களாகும். இவை வெப்பம் அதிகரிக்கும்போது இவைகளும் பிளாஸ்டிக் பைகளிலிருந்து வெளியேறி அதில் எடுத்துச்செல்லும் உணவுப்பொருட்களில் கலந்து உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.
விஷத்தன்மையுடைய காட்மியம் மற்றும் காரியம் போன்ற தனிமங்கள் பிளாஸ்டிக்பைகளை உற்பத்தி செய்யும் போது உபயோகப்படுத்தப்படுகின்றன. இத்தனிமங்களும் பிளாஸ்டிக் பைகளிலிருந்து கரைந்து அதிலிருக்கும் உணவுப்பொருட்களை மாசுபடுத்துகின்றன. காட்மியம் சிறிதளவு உடலில் உறிஞ்சப்படும்போது இருதய வீக்கம், வாந்தி போன்ற உபாதைகளை ஏற்படுத்துகிறது. காரியம் நீண்ட நாட்களுக்கு உடலில் எடுத்துக்கொள்ளப்பட்டால் அது மூளைத்திசுக்களின் அழிவை ஏற்படுத்தும்.


பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் சிரமங்கள்
பிளாஸ்டிக் பைகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் சாக்கடைகளை அடைத்து, அதனால் சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தினை ஏற்படுத்தும். இதனால் தண்ணீர் மூலமாக மனிதர்களுக்குப் பரவும் நோய்களும் அதிகரிக்கும். மறுசுழற்சி அல்லது நிறமேற்றப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் சில வித வேதிப்பொருட்கள் இருக்கும். இவை நிலத்தில் கலந்து மண்ணை மாசுபடுத்துவதுடன் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும். இவ்வாறு பிளாஸ்டிக் பைகளை முறையாக மறுசுழற்சி செய்யும் தொழில் நுட்பங்கள் இல்லாவிட்டால், இவை மறுசுழற்சி செய்யப்படும்போது நச்சு வாயுக்கள் வெளியேறி அது சுற்றுப்புற சீர்கேட்டினை உண்டாக்குகிறது. சில பிளாஸ்டிக் பைகளில் மீதமுள்ள உணவுப்பொருட்கள், கழிவுப்பொருட்களுடன் கலந்து பின் அதனை விலங்குகள் உட்கொள்ளும்போது தீயவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கின் தானாகவே சிதைவடையும் தன்மையில்லாததாலும், தண்ணீர் உட்கிரகிக்கும் திறன் இல்லாததாலும், அவை மண்ணில் எறியப்பட்டால் மண்ணின் தண்ணீர் உறியும் தன்மையினை குறைத்து அதனால் நிலத்தடி நீரின் அளவினையும் குறைக்கின்றன.
இதனால் பிளாஸ்டிக் பொருட்களின் தன்மையினை அதிகரித்து அவற்றின் சிதைவடையும் வினைகளை குறைக்க அதனுடன் சேர்க்கப்படும் பிளாஸ்டிசைசர்ஸ், ஃபில்லர்ஸ், பிளேம் ரிடார்டன்ட்ஸ், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுவதால் பிளாஸ்டிக் உபயோகத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் அதிகரிக்கின்றன.


பிளாஸ்டிக்கழிவு மேலாண்மை முறைகள்
மெல்லிய பிளாஸ்டிக் பைகள் குறைந்த மதிப்பு உடையவை. இது மட்டுமன்றி அவற்றை பிரித்தெடுப்பது கடினம். பிளாஸ்டிக் பைகளின் தடிமனை அதிகரிக்கும்போது அவற்றின் விலையும் அதிகரிப்பதுடன், அதன் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே உதவுகிறது. பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கமும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அவற்றை அப்புறப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிளாஸ்டிக்கினால் ஆன பைகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவை நகர்ப்புற கழிவு மேலாண்மைக்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன. மலைப்பிரதேச மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், சிக்கிம், மேற்கு வங்கம் போன்றவை பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களின் உபயோகத்தினை சுற்றுலாப்பிரதேசங்களில் தடை செய்துள்ளன. ஹிமாசலப்பிரதேச அமைச்சரவை அம்மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தினை எச்.பி உயிர் முறையில் சிதைவடையாத கழிவுக்கட்டுப்பாட்டு சட்டம், 1985ன் கீழ் 15.8.2009 முதல் தடைசெய்துள்ளது.
மத்திய அரசும் பிளாஸ்டிக்கழிவினால் சுற்றுப்புற சீர்கேடு உண்டாவதை மதிப்பிட ஒரு குழுவையும், செயற்குழுவையும் உருவாக்கி அதன் பரிந்துரைகளை பின்பற்ற முடிவு செய்துள்ளது.
பிளாஸ்டிக் பைகள் மற்றும் டப்பாக்களின் மேலாண்மை மற்றும் கட்டுபாட்டுக்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் உபயோகம் என்ற 1999ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தினை 2003ம் ஆண்டு சுற்றுப்புற பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ் மாற்றியமைத்துள்ளது. இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையமும் உயிர்முறையில் சிதைவடையும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு 10 தரக்கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் உபயோகத்திற்கு மாற்று
சணல் மற்றும் துணிப்பைகளுக்கு, மானியம் வழங்கி பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பிரபலப்படுத்துதல். எனினும் காகிதப்பைகளை தயாரிக்க அதிக அளவு மரங்கள் வெட்டப்படுவதால், அவற்றின் உபயோகம் கட்டுக்குள் வைக்கப்படவேண்டும். உயிர் முறையில் சிதைவடையும் பிளாஸ்டிக் பைகள் மட்டுமே உபயோகப்படுத்தப்படவேண்டும. இதுமட்டுமன்றி உயிர்முறையில் சிதைவடையும் பிளாஸ்டிக் பைகளை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும்.
                     PARAMES DRIVER // 
    KONGU THENDRAL. BLOGSPOT.COM // 
        THALAVADY-ERODE DISTRICT.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...