22 ஜூலை 2011

கொசு விரட்டி மருந்துகள்-ஆபத்து

      கொசுத் தொல்லை



    கொசுக்களைத் தடுக்க ஒரே எளிய வழி, பாதுகாப்பானது, சிக்கனமானது கொசுவலை மட்டுமே!

கொசு விரட்டிகளின் ஆபத்து?
     கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்கவும் இரவு நன்கு தூங்கவும் கொசுவர்த்தி சுருள், மேட், கிரீம் முதலியவற்றை உபயோகப் படுத்துகிறோம்.     

        இவற்றால் நம் ஆரோக்கியத்திற்கும், பணத்திற்கும் கேடு என்கின்றனர் விஞ்ஞானிகள்.
    கொசுவர்த்திச் சுருள்களிலும் மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அலெத்ரின், டாலத்ரின் டி டிரான்ஸாலத்ரின் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
       இந்த இரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் காலம், அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நமக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
   மக்கள் கொசுக்களுக்குப் பயந்து மாலை ஆறு மணிக்கே ஜன்னல் கதவுகளை எல்லாம் அடைத்துவிட்டு புதிய காற்று வீட்டுக்குள் வருவதை தடை செய்து விடுகின்றனர்
      இவ்வாறு அடைபட்டக் காற்றுக்குள்ளேயே விளக்கு எரிப்பது, சமைப்பது, குடும்பத்தார் அனைவரும் சுவாசிப்பது போன்ற செயல்களாலேயே பிராண வாயு மிகவும் குறைந்துவிடுகிறது
        இதோடு புகையும், கேடு விளைவிக்கும் வாயுக்களும் வீட்டினுள் நிறைந்து விடுகின்றன.    
    போதாக்குறைக்கு இருட்டியதுமே கொசு விரட்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.
    இதனால் வீட்டில் இருந்த சிறிதான பிராணவாயுவும் கெட்டு விடுகிறது
       ஆக, இரவு முழுவதையும் மாசுக்காற்று உள்ள சூழ்நிலையிலேயே கழிக்கிறார்கள்
        கொசு விரட்டிகளால் உடலில் சேர்ந்த விஷத்தை வெளியேற்ற சளிபிடித்தல், காய்ச்சல் ஆகியவை ஏற்படுகின்றன.  
      சுத்திகரிப்பு நடக்காததால் மருந்து சாப்பிட்டும் குணம் பெற முடிவதில்லை.
மூன்று நாட்களில் இவை குறையாததால் அலர்ஜி என்று பெயர் சூட்டி, அந்தச் செயலை முடக்க ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மருந்துகளையும் ஆரோக்கியமான உடல் தாக்குப் பிடிக்காமல் திணறுகிறது
       அதே நேரத்தில் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை வெளியேற்றும் செயல்முறைகளை  படிப்படியாக இழந்து விடுகிறது.  
      இதன் மூலம் படை வீரர்களை இழந்த கோட்டையைப் போல நோய், எதிர்ப்பு சக்தியை இழந்த உடலைப் பெற்று விடுகிறது
      பிறகு நோய்களின் வருகைக்குக் கேட்க வேண்டுமா?
   தொடர்ந்து கொசு விரட்டி உபயோகித்து வருகிறவர்களுக்கு நுரையீரல் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு 
      முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவுக்குண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விடுவதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.  
      மும்பையின் நுகர்வோர் வழிகாட்டும் கழகத்தின் முடிவுப்படி கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் இரசாயனம் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள்.
கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உருவாக்கக் கூடியது. ‘அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல இழக்கச் செய்யவல்லது’.
மேட்புகையை பிஞ்சுக்குழந்தைகள் இரவு முழுவதும் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படலாம் என்கிறது லக்னோ கிஸ் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகம் 


கொசுவை ழிக்க பல ழிகளைக் கையாண்டாலும் கொசுக்கள் ட்டும் ழிவதில்லை ன்று பெரும்பாலும் ல்லோரும் புலம்புவதுதான்.

கொசுவை ழிக்க ன்னல்களில் கொசுவலையை மாட்டிவிடுங்கள்.

அதுவும் குழந்தைகள் இருக்கும்வீடுகளாக இருந்தால்நிச்சயமாக மாலை நேரத்தில் ன்னல் ற்றும் கதவுகளை மூடி வையுங்கள்.

பொதுவாக கொசுவைவிரட்டும்திரவங்களும், புகை ண்டாக்கிகளும் நமக்குத்தான் பகையாக அமையும் ன்பதைநினைவில் கொள்ளுங்கள்.

ற்கனவே ங்கள்வீட்டில் இருக்கும் கொசுவலையில் சிறிய துளைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை அடையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...