24 ஜூலை 2011

சித்த மருத்துவம்

            பருவகாலங்களில் மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தி தன்மை குறையும் சூழலைப் பொருத்து குறிப்பிட்ட நோய்கள் பரவுகின்றன.​ 
        மழை,​​ குளிர்,​​ பனி,​​ வெயில் காலங்களுக்குத் தகுந்தபடி குறிப்பிட்ட சில நோய்கள் மொத்தமாக பெரும்பாலான பகுதிகளில் பரவுகின்றன.​


         சித்த மருத்துவக் கூற்றுப்படி கார்காலத்தில் நீர்மூலம் பரவும் நோய்களும்,​​    பனிக் காலத்தில் கொசுக்கள்,​​ பூச்சிகள் மூலம் பரவும் நோய்களும்,​​ 
     வெயில் காலத்தில் தொற்று நோய்களும் அதிகம் காணப்படும்.​                                   பருவகாலத்தில் பூச்சி,​​கொசுக்களின் மூலமாக பரவக்கூடிய நோய்களே அதிகளவில் பரவுகின்றன.​ சிக்குன்-குனியா,​​ டெங்கு,​​ மலேரியா,​​ ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகியவை கொசுக்கள் மூலம் பரவுகின்றன.​ சுற்றுப் புறத்தை சுகாதாரமாக பேணிக்காத்து வந்தாலே இத்தகைய நோய் பரவாமல் தடுக்கலாம்.
      கொசுக்கள் மற்றும் பூச்சிகளை அழிக்க வேப்பிலை,​​ நொச்சி,​​ தும்பை ஆகியவற்றை பயன்படுத்தி புகை போடுதல்,​​ நீரில் கற்பூரம் போட்டு வைத்தல்,​​ கொசு வலை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை தடுக்க முடியும்.​ 
     கார்காலம்,​​ கூதிர்காலம்,​​ முன்பனிக்காலம்,​​ பின்பனிக்காலம்,​​ இளவேனில்காலம்,​​ முதுவேனில்காலம் என அந்தந்த காலங்களுக்கேற்ற உணவு,​​ உடை பழக்கங்களை பின்பற்றிவந்தாலும் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க முடியும்.

     இந்திய மருத்துவத்தில் ஆயுஷ் என அழைக்கப்படும் ஆயுர்வேதம்,​​ இயற்கை மருத்துவம்,​​ யுனானி,​​ சித்தா,​​ ஹோமியோபதி என்ற 5 மருத்துவமுறைகள் உள்ளன.​ 
    ஆங்கில மருத்துவத்தில் செய்யக் கூடிய அறுவை சிகிச்சை தவிர- இதர அனைத்து வகையான சிகிச்சைகளும் இந்திய மருத்துவத்தில் மேற்கொள்ள முடியும்.​

இந்தியாவிலேயே சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழகம் மட்டுமே.​ 
     நாட்டில் 3 சித்த மருத்துவ கல்லூரிகளில் 2 தமிழகத்தில் உள்ளது.​ மற்றொன்று திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.​
     இவைத்தவிர தேசிய சித்தா ஆராய்ச்சிமையம் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது.​ ​
        ஆயுர்வேத சிகிச்சை முறை குறித்த நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.​ 
      சித்தா குறித்த மொழிபெயர்ப்புகள் இல்லை.​
     இந்த மருத்துவமுறை குறித்து பொதுமக்களிடையே அனைத்து தரப்பினரும் பிரபலப்படுத்த வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...