வயிற்றுப்புண் (Ulcer) என்று சொல்லப்படும் நோய் மக்களிடையே மிகவும் பரவலாக காணப்படும் ஒன்று. மக்களின் தரம், பலவகை வேறுபாடுகள், செய்யும் தொழில், வசிக்கும் சூழ்நிலை பழக்கவழக்க வேறுபாடுகள், ஆண், பெண் பகுப்பு உணர்ச்சி நிலைகள் போன்றவற்றால் பல தரப்பினருக்கும் சூலை நோய் (வயிற்றுப்புண்) வரும். அடிவயிறு, முன் சிறுகுடல் இவற்றில் தோன்றும் புண் பற்றிய நோய் தமிழில் நீண்ட காலமாக சூலை நோய் என்று வழங்கி வருகிறது. வடமொழியில் குன்மம் எனப்படும். வயிற்றுப்புண்ணின் (அல்சர்) வகைகள் 1. வாயிலிருந்து இரைப்பைக்கு செல்லுகிற வழியில் உணவுக்குழாயில் தோன்றும் ஒரு விதமானது. 2. இரைப்பை கீழ்ப்பகுதி மேற்பகுதி என இரண்டாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இரைப்பைக்குச் செல்லும் உணவை செரிந்து, செரிந்த பகுதியையும் முன் சிறுகுடலுக்கு அனுப்பும் தொழிலில் ஈடுபட்டிருப்பது இரைப்பையின் கீழ்ப்பகுதிதான். இது கீழ்வயிறு என்று குறிக்கப்படும். கீழ்வயிற்றில் தோன்றும் புண் ‘காஸ்டிரிக் அல்சர்’ எனப்படும். 3. இரைப்பை ஏதேனும் ஒரு காரணத்தில் சேதமடைவதுண்டு. அது சேதமடைந்தால் இரைப்பையின் மேற்பகுதியில் புண் தோன்றுவதுண்டு. ஆங்கிலத்தில் இது ஸ்டமக் அல்சர் எனப்படும் உணவுப் பாதையில் தோன்றும். மூன்றாவது (அல்சர்) புண் இது. கீழ் வயிற்றுப் புண் வேறு. மேல் வயிற்றுப்புண் வேறு. இரண்டும் வேறு வேறு காரணங்களால் தோன்றுகிறது. 4. சிறு குடல் மிக நீளமானது. வளைந்து வளைந்து இருப்பதனால் அது மிகச்சிறிய இடத்தில் அடங்கி இருக்கின்றது. சிறுகுடலின் முன்பகுதி வயிற்றை அடுத்து இருக்கிறது. இது வடிவில் ஆங்கில எழுத்து யூ (U) போன்றது. இந்த முன்பகுதி ஆங்கிலத்தில டுயோடனம் எனப்படும். இங்கு ஏற்படும் புண்ணைத்தான் முன் சிறுகுடல் புண் என்கிறோம். இரைப்பையில் சுரக்கும் காஸ்ட்ரிஜூஸ் என்னும் புளிப்புள்ள ஒரு செரிப்பு நீரின் கோளாறினால் கீழ் வயிற்றுப் புண்ணும், முன் சிறுகுடல் புண்ணும் தோன்றுகின்றன. இந்த ஒற்றுமை பற்றி இரண்டும் பெப்டிக் அல்சர் என வழங்கப்படுகிறது. புளிப்புள்ள திரவம் அல்லது நீ¢ர் பொருள் அமிலம் (Acid) பெப்டிக் என்ற ஆங்கில சொல்லுக்கு ஜீரணிக்கின்ற என்பது பொருள். பெப்ஸிஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு ஜீரணம் என்பது பொருள். அந்தச் சொல்லில் இருந்து திரிந்ததே பெப்டிக் என்ற சொல். ஜீரணமாகாத கோளாறினால் ஏற்படும் ஆறாத புண்ணையே அல்சர் (சூலை நோய்) என்கிறோம். வாய், வயிறு அல்லது இரைப்பை முன்சிறுகுடல், பெருங்குடல் இவையெல்லாம் உணவுப் பாதையில் உள்ள ஜீரண உறுப் புக்கள், உணவை வாயில் போட்டு மெல்லும்போது உமிழ்நீர் என்ற செரிப்புநீர் வாயில் தோன்றி ஸ்டார்ச் என்னும் மாவுப்பொருளையும் சர்க்கரையையும் ஜீரணமாகாத வேறுஉணவுப் பொருட்களுடன் இரைப் பைக்கு செல்கின்றன. இரைப்பையில் காஸ்டிரிக் அமிலம் என்ற புளிப்பு நீர் சுரந்து சில சத்துக்களை இங்கே சேகரிக்கும் நிலைக்குகொண்டு வருகின்றன. பொருட்களைச் செரிக்கச் செய்யக் காரணம் சுரப்பு நீ¢ர்களுக்கு என்ஸைம் (Enzyme) என்னும் ஒரு வேதிப் பொருளாகும். காஸ்டிரிக் சுரப்பு நீருக்கு உதவுவன பெப்ஸின், ரெனின் என்ற இரு என்ஸைமினால் புரோட்டீன்கள் என்ற ஊண்சத்துப் பொருட்கள் பெப்டோன் (Peptone) என்னும் எரிபொருளாக, இரைப்பையில் மாற்றப்படுகின்றன. இரைப்பையில் சேர்ந்துள்ள எல்லா பொருட்களும் பாகுபோலாகி முன் சிறுகுடலுக்கு சிறிது சிறிதாக செல்லுகின்றன, காஸ்டிரிக் அமிலம் சில காரணங்களால் சுரக்க வேண்டிய அளவுக்கு அதிகமாக சுரக்கிறது. மிகுதியாக உள்ள இந்த அமில நீர் இரைப்பையிலிருந்து முன் சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கு ஏதேனும் ஒரு காரணத்தால் சிறிய புண் ஒன்று தோன்றி இருந்தால் அதனை இந்த நீர் ஆறவொட்டாமல் இரணமாக இருக்கும். இதுதான் குடல் புண் எனப்படும். | |
நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.
24 ஜூலை 2011
குடல் புண்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முத்தமிழ் என்றால் என்ன?
முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...
-
வாசிப்பை நேசிப்போம்.... வீட்டிற்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே.... அறிவிற்கு வெளிச்சம் வாசிக்கும் நூலே!!!! வாசிக்காமல் யார்க்கும் வ...
-
திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -09 ----------------------------------...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக