மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
பதிவிட்ட திரு.Arun Kumar ஃபேஸ்புக் நண்பர் அவர்களுக்கு நன்றிங்க.

உயிருள்ளவரை தமிழுக்கு குரல் கொடுப்பேன் : மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் !
"திருவள்ளுவர் தினத்தை அனைத்து இந்திய மொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும்; உலகின் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்பை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் தமிழைப் பயிற்றுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் (58) வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் தமிழ் மொழிக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்கூட இதுபோன்ற கோரிக்கையை இதுவரை முன்வைத்ததில்லை. இந்த நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில் பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பேசியதாவது: "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய மொழிகள் தனித் தன்மையும், சிறப்பு வாய்ந்தவையுமாகும். அந்த வகையில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு மொழியை விருப்ப மொழியாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
உதாரணமாக, தமிழ் மொழியில் எழுதப்பட்ட தொல்காப்பியம் 5,000 ஆண்டுகளுக்கும் பழைமையானது. அதேபோல, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி போன்றவை தமிழ் இலக்கியம் நமக்களித்த மாபெரும் காப்பியங்களாகும்.
தமிழ் இலக்கியத்தின் பெருமையை சந்தேகத்துக்கு இடமின்றி உலகுக்கு பறைசாற்றுவது கம்பரின் "ராமாயணம்' ஆகும். அதேபோல, இன்றைய காலகட்டத்துக்கும் உரித்தாகும் வகையில் அமைந்த சிறந்த படைப்பு, திருவள்ளுவரின் "திருக்குறள்' ஆகும். திருக்குறளின் சுவடுகள் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
நம் நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உலக அளவில் கொண்டிருந்த செல்வாக்கும், அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய நற்சேவையும் நம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும்? அசோகரும், விக்ரமாதித்யர் போன்ற மாபெரும் சக்கரவர்த்திகளும் மட்டும்தான் இந்தியா எனக் கருதிக் கொள்ளக் கூடாது. சோழர்கள், கிருஷ்ணதேவராயர், பாண்டியர்கள் போன்ற மரியாதைக்குரிய மன்னர்களையும் நமது வரலாறு கண்டுள்ளது.அதேபோல, வங்கம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்கும் பெருமைமிகு வரலாறுகள் உள்ளன.இந்த நிலையில், இந்திய மொழிகளுக்கு எல்லாம் மரியாதை அளிக்கும் வகையில், திருவள்ளுவர் பிறந்த தினத்தை "இந்திய மொழிகள் தினம்' எனக் கடைப்பிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதேபோல, தேசிய ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் வட மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப் பாடமாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்' என்று தருண் விஜய் குறிப்பிட்டார்.
பாராட்டு: மேற்கண்ட கோரிக்கையைப் படித்து முடிக்கும்போது "பழைமையான தமிழ் மொழியை வணங்குகிறேன்' என்று தருண் விஜய் கூறினார். அவரது பேச்சைக் கேட்ட அவையில் இருந்த அதிமுக, திமுக உறுப்பினர்கள் தருண் விஜய் அருகே வந்து அவரை கட்டித் தழுவி வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்தனர். காங்கிரûஸச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.எஸ். கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் ரூபா பக்சி ஆகியோர் தருண் விஜய் இருந்த இடத்துக்கு வந்து அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
யார் தருண் விஜய் ?
தருண் விஜய் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் பிறந்தவர். அடிப்படையில் பத்திரிகையாளராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு முழு நேர அரசியலுக்கு வந்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி அறக்கட்டளையின் இயக்குநராக இருக்கும் அவர், 2010-இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
" உயிருள்ளவரை தமிழுக்கு குரல் கொடுப்பேன் " :
தமிழ் மொழி குறித்து மாநிலங்களவையில் பேசியது குறித்து அவரிடம் நிருபர் கேட்டதற்கு, "உலகின் தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பை இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதை எனது வாழ்வின் சிறந்த தவமாகக் கருதுகிறேன். அந்த அளவுக்கு தமிழையும், தமிழ் படைப்புகளையும் நான் காதலிக்கிறேன். நான் தமிழ் மீது கொண்டுள்ள ஈர்ப்பு, நான் வாழும் காலத்தில் அதற்கு ஏதேனும் தொண்டு செய்ய வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனது விருப்பத்துக்கு எந்தத் தடையும் யாரும் விதித்ததில்லை. அதனால், உயிருள்ளவரை தமிழுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்' என்றார்.

- நீங்கள், கொங்கு சந்திரசேகர், மேலும் வேறு 33 பேர்கள் பேரும் இதனை விரும்புகிறீர்கள்.
- 6 shares
- Dina Kumar பெருமை2 மணிகள் · பிடிக்கவில்லை · 2
- Vijaya Kumar Sumathi பெருமதிப்பிற்குரிய வணக்கங்கள் மத்திய அமைச்சர் திரு.தருண் விஜய் அவர்களுக்கு...
Great Salute To MP Mr.Therun Vijay1 மணி · பிடிக்கவில்லை · 3 - Selvakumar Ponnusamy Tharun Vijay, M.P., ayya unkal paatham thottu vanankukinrom.1 மணி · பிடிக்கவில்லை · 2
- Durai Kathiravan Enna solvathu. Perumaiya erukku.1 மணி · பிடிக்கவில்லை · 2
- Appu Samy hearly welcome sir1 மணி · பிடிக்கவில்லை · 2
- Paulrasaiya Rasaiya இந்த விஷயம் நம்மூர்ல தூக்கத்திலயும் இங்கிலீஸ்ல பீத்திக்கிறவங்களுக்கு தெரியுமா47 நிமி. · பிடிக்கவில்லை · 3
- தெனாலி தெனாலி தமிழும் தமிழகமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது36 நிமி. · Like · 1
- Parameswaran Driver மரியாதைக்குரிய அமைச்சர் மாண்புமிகு.தருண்விஜய் அவர்களுக்கு ஆயுட்கால வாழ்த்துக்கள் பல.
2 நிமி. · Like