05 ஆகஸ்ட் 2013

Tamil'99 முறை தட்டச்ச எளிமையானது.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                 FACEBOOK என்னும் முகநூல் நண்பர்களுக்காக நமது தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பு,எளிமை,தெளிவு,முழுமை மற்றும் தமிழில் எளிதாகத்  தட்டச்சு செய்வது , மற்றும்  பலமொழி கற்றுத்தேர்ந்த மேலைநாட்டறிஞர்கள் தமிழின் சிறப்பினை உணர்ந்து தமிழுக்கு ஆற்றிய தொண்டு   ஆகியன இங்கு பதிவிடுகிறேன்.
       முதலாவதாக தமிழின் சிறப்பு பற்றி காண்போம்;-
                ஓர் எழுத்தினை உச்சரிக்கும்போது எழுகின்ற ஓசை நயத்திற்கேற்ப  அந்த எழுத்தின் வரிவடிமும் அமைந்திருப்பது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பு.இத்தகைய சிறப்பு  மற்ற திராவிட மொழிகள் உட்படஉலகில் எந்த மொழிக்கும் இல்லை என்பதை பலமொழி கற்ற ''செக்கோஸ்லோவாகியா'' நாட்டின் அறிஞர்  ''கமில்ஸ் சுலபில்'' அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உலகுக்கு எடுத்து உரைத்துள்ளார்.
 உதாரணமாக நாம் ''கிருஷ்ணா'' என்று எழுத வேண்டுமானால் தமிழில் தனித்தனி எழுத்தாக உச்சரிக்கும் ''கி- ரு -ஷ்- ணா' என்ற அதே எழுத்தை (கட்டடம் கட்ட செங்கல் அடுக்குவது போல்) சேர்த்தால் மட்டும் போதும்.ஆனால் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,இந்தி,உட்பட அனைத்து மொழிகளிலும் தனித்தனியாக உச்சரித்த எழுத்துக்களை சேர்க்கும்போது ''கிருஷ்'' ஆகிய மூன்றெழுத்துக்களும்- சம்யுக்தாக்ஷரங்கள் என்னும் ஒத்தெழுத்து வடிவில் பாதிபாதியாக வெட்டி ஒட்டப்பட்டுத்தான் எழுத முடியும்.(நான் மொழிப்பற்று காரணமாக ஆய்வுக்காக மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,இந்தி ஆகிய மொழிகளையும் அரபு மொழியினையும் கற்க துணிந்து ஓரளவு கற்றுள்ளேன்.எழுத படிக்க தெரியும்.ஆனால் அர்த்தம் புரியாது?அதன் விவரம் பின்னொரு பதிவில் புகைப்படமாக எடுத்து தருகிறேன்.)
இரண்டாவது தமிழில் தட்டச்சு செய்வது எளிது.;-
   கணினியுகத்தில் ஆங்கிலம் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தமையால் அனைத்து கணினி பயன்பாடுகளுக்கும் ஆங்கிலமே பயன்பாட்டில் அதுவும் பொதுக்குறியீட்டு முறை என்ற பொதுவான ஒரே முறை பயன்படுத்தப்பட்டு வந்தது..
                    ஆனால் தமிழ் போன்ற பிற மொழிகளின் பயன்பாடு மிக சமீபத்திய காலத்தில்தான் கணினியில் பயன்படுத்தப்பட்டது.அதிலும் வியாபாரத் தந்திரம் காரணமாக வணிகர்களின் சில சுயநலத்தின் காரணமாக ஒவ்வொருவரும் அவரவரின் வெளியீடுகளை மட்டுமே விற்பனையில் இருக்க வேண்டும்.எழுத்தின் ஒருமுறையை கற்றவர்கள் மீண்டும் அதே முறை எழுத்துக்குறியீடுகளை மட்டும் வாங்க வேண்டும்.வேறு நிறுவனத்தின் எழுத்துருக்களை வாங்கக்கூடாது என்ற நோக்கில் பலரும் பல குறியீட்டுமுறை எழுத்துருக்களை  வெளியிட்டு  நம்மை குழப்பிவிட்டனர்.
                          தட்டச்சு முறையும் சற்று கடினமாக தோன்றியதால் தட்டச்சு பயின்றவர்களும் பாமினி என்னும்அந்த முறையை விட்டு வெளியே வர பயந்துவிட்டனர்.
                            ஆனால் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டின்போது தமிழுக்காக தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களின் சீரிய முயற்சியால் தமிழ்99 தட்டச்சு முறை மிக எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுவெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசும் அங்கீகாரம் வழங்கி  Tamil'99 எழுத்து முறை பயன்பாட்டிற்கு  வந்துள்ளது.
                          ஆங்கிலத்தை விட எளிமையானது.இந்த தமிழ்99 முறை . அதைப்பற்றி பார்ப்போம்;-
   தட்டச்சுப்பொறியில் தட்டிய எழுத்துத்தான் பதிவாகும்.கணினியில் கட்டளை கொடுத்து தட்டச்சு செய்வதால் அதற்கேற்ப எழுத்து மாறிப்பதிவாகும்..இதுவே நமக்கு கிடைத்த வசதியாகும்.

                      தமிழ் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் ஆக முப்பது எழுத்துக்களும் சேர்ந்து அத்தனை தமிழ் எழுத்துக்களையும் உருவாக்குகின்றன.அதே முறையில்தான் தமிழ்'99 முறையும் செய்கிறது.
                            எனவே, முப்பது தமிழ் எழுத்துக்கள் எந்த எந்த விசைப்பொத்தானில் உள்ளது என்று மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.அதற்கு NHMWriter என்னும் சாப்ட்வேர் நமக்கு இலவசமாகக் கிடைத்துள்ள பரிசு ஆகும்.
              நான் பயன்படுத்துவது இந்த NHMWriter Tamil'99 தாங்க.இந்த என் எச் எம் ரைட்டரை இன்ஸ்டால் செய்வதும் எளிதானது.(NHMWriter மென்பொருளிலும் தமிழ்'99 முறை,பாமினி முறை,தட்டச்சு முறை,தமிங்கில முறை என அனைத்து (அதாவது) பலமுறைகளும் உள்ளன.நமக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
                 ஆனால் தமிழ்'99 முறைதான் எளிமையானது,விரைவானது.இனி எந்த தமிழ் எழுத்துக்கள் எந்த விசைப்பொத்தானில் என்பதைக் காண்போம்.இதனை மட்டும் மனதில் வைப்போம்.
     முதல் விசை அழுத்தத்தில்  அ-a., ஆ-q ., இ- s ., ஈ- w ., உ-d., ஊ-e ., எ-g., ஏ- t ., ஐ-r ., ஒ-c ., ஓ-x ., ஔ - z ., ஃ - f .,  க-h ., ங-b .,  ச -[ ., ஞ-] ., ட - O., ண-p ., த-l ., ந-; ., ப-j ., ம-k., ய - ' ., ர-m ., ல-n ., வ-v ., ழ -?., ள-y ., ற -u ., ன -i .,  ஆகிய எழுத்துக்கள் கிடைக்கும்.
     ஷிப்ட் அழுத்தியவாறு பின்வரும் ஆங்கில எழுத்து விசை அழுத்தினால்   ஸ-Q., ஷ-W., ஜ-E., ஹ-R., க்ஷ-T.,  ஸ்ரீ-Y., என வடமொழி எழுத்துக்கள் கிடைக்கும்.இவ்வளவுதாங்க. முயற்சி செய்து பாருங்க.
       http://software.nhm.in/products/writer1511 என்ற
     NHMWriter மென்பொருள் வலைத்தளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.இன்ஸ்டால் செய்யும் முறை பற்றியும் இதில் விவரமாக கொடுத்துள்ளது சிறப்பு ஆகும்.
பிறகு  மெய்யெழுத்துக்களையும் உயிரெழுத்துக்களையும் தட்டச்சு செய்து அனைத்து உயிர்மெய் எழுத்துக்களையும் பெறலாம்.
            (உயிர் மற்றும் மெய்யெழுத்துக்கள் ஆகிய முப்பது எழுத்துக்களால் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களும் கிடைக்கும்.)
         அதாவது  தமிழ் என தட்டச்சு செய்ய l (இது small L)  m s  / f  என தட்டச்சிட மென்பொருள் உதவியால்   த்+அ,ம்+இ,ழ் = தமிழ் என  தானே மாறிப் பதிவாகும்.
                  (கவனியுங்க!;-ஓட்டுனர் பணி புரியும் நான் எனது மகளின் பயன்பாட்டிற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் கணினி வாங்கினேன்.நானும் கணினி அருகில் அமர்ந்து எழுத்துக்களை தட்டச்சிட்டுப் பார்க்க,பதிவானது கண்டு  வியக்க,இரண்டு நாட்களில் தமிழில் தட்டச்ச பழகிக்கொண்டேன்.தற்போது வாய்ப்பு கொடுக்கும் இடங்களில் பயிற்சியும் கொடுத்து வருகிறேன்.அரை மணி நேரம் பயிற்சி மட்டும்).
        தமிழ் வளர்த்த மேல்நாட்டறிஞர்கள் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
                                                     என C. பரமேஸ்வரன் -
                                                    ஓட்டுனர்,
                                           தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் - கோவை.
                                            தாளவாடி கிளை.ஈரோடு மண்டலம்.
      
  

04 ஆகஸ்ட் 2013

திருமிகு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களை என்றும் மறவோம்!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                        2013 ஆகஸ்டு 03-ந்தேதி முதல் நம்ம ஈரோடு மாநகரில் புத்தகத்திருவிழா மிகச்சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது.
   


                மரியாதைக்குரிய ஐயா'' ஸ்டாலின் குணசேகரன்'' அவர்களை இவ்வுலகம் உள்ளவரை ஈரோடு மாநகர மக்கள் மட்டும்-இல்லைங்க!., நம்ம ஈரோடு மாவட்ட மக்களே மறக்கக்கூடாதுங்க! 
     (தவறி மறந்தால் அதைவிடக்கேவலம் இவ்வுலகில் இல்லை)
           புத்தகத்திருவிழா! என இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவது சாதாரண விசயம் இல்லைங்க!.அதிலும் 2005 முதல் வருடந்தோறும் எத்தனை சிக்கல்களை,சவால்களை,இடையூறுகளை,இன்னல்களை,எதிர்கொண்டு இருநூற்றைம்பது கடைகளை அறிவுப்பெட்டகமாம், புத்தக்ககளஞ்சியங்களைக் கொண்டு வந்து இந்த அற்புத திருவிழாவை நடத்தி வருகிறார் என்பதை சற்றேனும் சிந்தித்துப்பாருங்கள்.
                                 நமக்காக,நமது மக்களுக்காக,மாணவர்களுக்காக,இளைஞர்களுக்காக,இல்லத்தரசிகளுக்காக,பாமர மக்களுக்காக,தமிழர்களுக்காக,என்ற சமூக நோக்கில் எத்தனை துயரங்களை சந்தித்துக்கொண்டு,சகித்துக்கொண்டு இந்த அத்தியாவசிய நிகழ்வை நடத்தி வருகிறார்.மேலும் தமிழமெங்கும் வாசகர் வட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.


         நமக்காக இல்லையாகினும் நமது சந்ததியினருக்காகவாவது  நாமும் ஈரோடு புத்தகத்திருவிழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்குவோம். அல்லது ஒருமுறை நம்ம குடும்பத்தோடு சென்று கண்டு களிப்போம். மதிப்பிற்குரிய ஸ்டாலின் குண சேகரன் ஐயா  அவர்களது அயராத உழைப்பைப் போற்றுவோம்.
                     புத்தகத்திருவிழாவில் குவிந்துள்ள புத்தகப்புதையல் பற்றி ஊரெங்கும் பரப்புரை செய்வோம்.வாங்க!
                                                               என சமூக அக்கறையுடன்,
                                                                      பரமேஸ்வரன்.C, 
                                                                                 ஓட்டுனர், 
                                                                    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், 
                                                                             தாளவாடி கிளை.
 -                                                                         ஈரோடு மண்டலம்.
                                                                        கோயமுத்தூர் கோட்டம்.


03 ஆகஸ்ட் 2013

ஆடி பதினெட்டு கொண்டாடுவது ஏன்?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
          கொங்குத்தென்றல் வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். ஆடி பதினெட்டு கொண்டாட்டம் பற்றி காண்போம்..இந்த விவரத்தை பதிவிட்ட நண்பர் நாகூர் கனி காதர் மைதீன்பாஷா அவர்களுக்கு நன்றி.


ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடுவது ஏன்?

             ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி ... வாடியம்மா... எங்களுக்கு வழித்துணையாக..... என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம். அதிலும், ஆடியில் பொங்கும் நுரையுடன் பெருக்கெடுத்து வரும் புதுத்தண்ணீரைக் காண்பதும் அதில் நீராடுவதும் தனி சுகம்.

ஆடியின் சிறப்பு:

            புரட்டாசி, ஐப்பசி மழைக்காலத்திலும் காவிரியாறு இருகரையைத் தொட்டுத்தான் செல்லும். ஆனாலும், அதற்கு இல்லாத விசேஷம் ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் வந்தது? மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை ஆனிமாதம் துவங்கியதும், குடகுமழையில் பெருக்கெடுக்கும் காவிரி வெள்ளம், ஆனி கடைசியில் கொங்கு, சோழமண்டலங்களைத் தொடும். சித்திரை, வைகாசி வெயிலில் காய்ந்து கிடந்த நிலங்களும், நீர்நிலைகளும் ஆடியில் வரும் புதுதண்ணீரால் நிரம்பும். ஆடிப்பட்டத்தில் அந்தாண்டு முதன்முதலாக விவசாயிகள் தங்கள் நெல்சாகுபடியைத் துவங்குவார்கள். 

         நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே "ஆடிப்பெருக்கு' விழாவின் முக்கிய குறிக்கோள். ஆன்மிக   ரீதியில் மட்டுமின்றி, தங்கள் தொழிலைக் காக்கும் காவிரி அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்திலும் இவ்விழாவை, காவிரிக்  கரையோர மக்கள் கொண்டாடுகின்றனர்.

வந்தாள் காவிரித்தாய்:

             சிவனின் மனைவியாக காவிரி போற்றப்படுகிறாள். கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணத்தின்போது வடபுலம் தாழ்ந்தது. இதனால், அகத்திய முனிவரை "தென்புலம் சென்று பூமியை சமநிலையாக்குமாறு' சிவபெருமான் பணித்தார். சிவனைத் திருமணம் செய்வதற்காக, பார்வதிதேவி ஒற்றைக்காலில் தவம் இருந்தபோது, கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி அகத்திய முனிவரிடம் வழங்கினாள் பார்வதிதேவி. அவரும் அந்தப் பெண்ணைக் கமண்டலத்தில் அடக்கி தென்னகம் நோக்கி வந்தார். அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரியானது. 

               கமண்டலத்தில் மீதிருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று, தான் வசித்த பொதிகை மலையில் கொண்டு விட, அதுவே தாமிரபரணியானது. இக்காரணத்தால் சிவபெருமானின் மனைவியாக போற்றப்படுகிறாள் காவிரி.

          திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் மகேந்திர பல்லவனின் குடவரைக்கோயில் ஒன்றுள்ளது. இங்கு சடைமுடியில் கங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருக்கும் சிவபெருமானும், பக்கத்திலேயே பார்வதி தேவி நின்ற கோலத்தில் இருப்பதையும், தேவகணங்கள் சுற்றி இருப்பதையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. "ஏற்கனவே சடைமுடியில் இரண்டாவது மனைவியைத் தாங்கிய சிவபெருமான், மலைக்கோட்டையின் பக்கத்திலேயே ஓடும் காவிரியின் மீதும் மோகம் கொண்டு விடக் கூடாது' என்ற கவலையில் பார்வதிதேவி நின்ற படியே காவல் இருக்கிறாராம். சிவபெருமானின் மனைவியாக கருதப்படும் காவிரியன்னை, விஷ்ணுவுக்கு தங்கையாக கருதப்படுகிறாள்.

           குணசீலம் வரை அகண்ட காவிரியாகவும், குணசீலத்தை அடுத்த முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாகவும் பிரியும் காவிரி, மீண்டும் கல்லணையில் ஒன்றிணைகிறாள். ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதரை வணங்கும் விதத்தில் ஸ்ரீரங்கத்தீவுக்கு மாலை அணிவிக்கும் விதத்தில் காவிரியும், கொள்ளிடமுமாக வளைந்து செல்கிறாள். பழம்பெருமை மிக்க இந்த நதிகளெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே, ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாடுவதின் நோக்கம்.

காவிரி பாயும் பகுதிகள்:

            காவிரி நதி, கர்நாடகாவில், குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவேரி எனும் பகுதியில் உற்பத்தியாகிறது.இது கடல் மட்டத்திலிருந்து 4,400 அடி உயரத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. காவிரி, கர்நாடக மாநிலத்தில் 320 கி.மீ , தமிழ்நாட்டில் 416 கி.மீ., இரு மாநில எல்லையில் 64 கி.மீ., என மொத்தம் 800 கி.மீ., தூரம் ஓடுகிறது. இது மைசூர், கொள்ளேகால், மேட்டூர், திருச்சி, தஞ்சாவூர், பூம்புகார் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இதன் துணை நதிகளாக கர்நாடகாவில் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, லட்சுமண தீர்த்தம், ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி மற்றும் தமிழகத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய நதிகளும் உள்ளன. 

                    கிருஷ்ணராஜசாகர் (45 டி.எம்.சி.,), கபினி அணை (19 டி.எம்.சி.,), ஹேமாவதி அணை (34 டி.எம்.சி.,), ஹேரங்கி அணை (6 டி.எம்.சி.,), மேட்டூர் அணை (93.50 டி.எம்.சி.,), மேலணை, கல்லணை, கீழணை ஆகியவை காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளாகும். பல தடுப்பணைகளும் உள்ளன. காவிரி, கர்நாடகாவில் சிவசமுத்திர அருவி, தமிழகத்தில் ஒகேனக்கல் அருவி ஆகிய இரு அருவிகள் வழியே பாய்கிறது.

                தமிழகத்திற்கு ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்தடையும் காவிரி, அங்கு ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்து தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானியில், பவானி ஆறும்,ஈரோடு கடந்தபின் கொடுமுடி அருகே நொய்யல் ஆறும், கரூர் அருகே கட்டளை எனும் இடத்தில் அமராவதி ஆறும் சங்கமிக்கின்றன. 

         கரூரிலிருந்து திருச்சி வரை வரும் காவிரி அகலமாக காணப்படுவதால் இங்கு "அகண்டகாவிரி' எனப்படுகிறது. முசிறி, குளித்தலையை கடக்கும் காவிரி, முக்கொம்பு எனும் பகுதியில் மேலணையை அடைகிறது. 
           இங்கிருந்து கொள்ளிடம், காவிரி என இரு கிளை நதிகளாக பிரிகிறது. கொள்ளிடம், வெள்ள வடிகாலாக இருப்பதால், பெரும்பாலும் இது வறண்டே காணப்படும். இரு கிளைநதிகளுக்கும் இடையே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்கும் காவிரி, பின் கல்லணையை அடைகிறது. இங்கிருந்து பல சிறு கிளைகளாக பிரிந்து, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி பின் கடலில் கலக்கிறது. 
         காவிரி டெல்டாவில் பாயும் கிளைநதிகள் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகியவை. தமிழகத்தில் 34 சதவீதம், கர்நாடகாவில் 18 சதவீதம், கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்புகள் காவிரி டெல்டாவில் உள்ளன. 
      தமிழகத்தில் 28 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி, காவிரி நீரால் பயன் பெறுகிறது. காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முக்கிய தொழிலாக நெல் சாகுபடி உள்ளது. இங்கு பருவத்திற்கு ஏற்ற வகையில் குறுவை, சம்பா, தாலடி வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. 
            குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கரிலும், சம்பா சாகுபடி 12 லட்சம் ஏக்கரிலும் நடக்கிறது. புதுச்சேரியின் காரைக்கால் பகுதி, காவிரி டெல்டாவில் உள்ளது. கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி., தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில் கலப்பதால், கேரளாவும் காவிரிநீருக்கு உரிமை கொண்டாடுகிறது.

வளம் பெருக்கும் திருநாள்:

                 "பெருக்கு' என்றால் "பெருகுதல்' என்பது மட்டுமல்ல, "சுத்தம் செய்தல்' என்பதும் அதன் பொருள். ஆடி மாதத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடி வரும். சில நேரங்களில் கரையையும் தாண்டும் நிலை கூட ஏற்படும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டு விடும். ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும். மனித மனங்களிலும் ஆசை, பொறாமை, தீய எண்ணம், ஆணவம் உள்ளிட்ட கெட்ட குணங்கள் நிரம்பியுள்ளன. இதை பக்தி என்னும் வெள்ளத்தை உள்ளே பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதையும் பெருக்கு என்னும் சொல் நமக்கு உணர்த்துகிறது. 

          ஆடிப்பெருக்கு அன்று துவங்கும் தொழில்கள் பலமடங்கு செல்வத்தை தரும் என்பது ஐதீகம். அதுபோல், மனதின் மாசைக் கழுவி, உள்ளத்தில் பக்தியை நிரப்பி வைத்து விட்டால் அன்பு பெருகி உலகமே திருந்தி விடும்.

நகை வாங்க கிளம்பலாமா!

         அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பலமடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு நன்னாள் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது.

மறக்காம கோலம் போடுங்க!

          ஆடிப்பெருக்கன்று மாலையில் திருவிளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் திருமகள் நித்யவாசம் செய்வாள். கோலத்தில் மாக்கோலம், இழைக்கோலம், புள்ளிக்கோலம், ரங்கோலி என்று எத்தனையோ வகை உண்டு. கோலத்தை"சித்ரகலா' என்பர். இதற்கு "சித்திர தாமரை போன்ற லட்சுமி' என்று பொருள்.

           என்னங்க? ஆடிப்பெருக்கின் பெருமையும்,வரலாறும் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.உங்களுக்கும் உறவினர்களுக்கும் ஆடித்திருவிழா நல்வாழ்த்துக்கள்... என PARAMESWARAN.C செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

01 ஆகஸ்ட் 2013

Tamilcube என்னும் தமிழ் கியூப் டிக்ஸ்னரி

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                        கொங்குத் தென்றல் வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்த பதிவில் அனைத்து மொழிகளுக்கான  மிகச்சிறந்த அகராதியான Tamilcube.com  என்னும் தமிழ்கியூப் டாட் காம் வலைத்தளத்தின் சிறப்பு பற்றி காண்போம்.பயன்பெறுவோம்..இந்த Tamilcube.com வலைதளத்தில்
   
                    (அ) ON LINE  INDIAN DICTIONARIES களான
                    (1)  ENGLISH TO TAMIL .,(2)ENGLISH TO HINDI., (3)ENGLISH TO TELUGU.,(4)ENGLISH TO KANNADA.,(5)ENGLISH TO MALAYALAM.,(6)ENGLISH TO MARATHI.,(7)ENGLISH TO BENGALI.,(8)ENGLISH TO GUJARATHI.,(9)ENGLISH TO BUNJABI.,(10)ENGLISH TO SANSKRIT.,(11)ENGLISH TO PALI.,(12)ENGLISH TO URUDU  ஆகிய மொழிகளுக்கான அகராதிகள் Tamilcube.com வலைத்தளத்தில் கிடைக்கின்றன.
  
           (ஆ) ON LINE  ASIAN  DICTIONARIES களான
                      (1) ENGLISH TO MALAI.,  (2) ENGLISH TO INDONESIAN., (3)ENGLISH TO SINHALA., (4)ENGLISH TO CHINESE., (5) ENGLISH TO THAI., (6)ENGLISH TO TAGLAG(Filipino)., (7)ENGLISH TO JAPANESE., (8)ENGLISH TO ARABIC..ஆகிய மொழிகளுக்கான அகராதிகள் Tamilcube.com  வலைத்தளத்தில் கிடைக்கின்றன.
   
        (இ) MOBILE TAMIL DICTIONARY அலைபேசிகளில் பயன்படுத்தும் வசதிகளை - ஐபோன்.,ஆன்டிராய்டு போன்.,ஐபேடு.,ஐபேடு டச் அல்லது பிளாக் பெர்ரி ஆகிய வகைகளுக்கு  Tamilcube.com வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

        (ஈ) LANGUAGE TRANSLATION / CONVERSION TABLE என்ற மொழிமாற்றிகளுக்கான
  (1) ENGLISH TO TAMIL ., (2)ENGLISH TO HINDI., (3)ENGLISH TO TELUGU., (4)ENGLISH TO KANNADA., (5)ENGLISH TO MALAYALAM., (6)ENGLISH TO NEPALI., (7)ENGLISH TO ORIYA., (8)ENGLISH TO  PUNJABI., (9)ENGLISH TO SINHALESE., (10)ENGLISH TO ARABICஆகிய  வசதிகளும் Tamilcube.com  வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

              (உ)  DOWN LOAD FREE BOOKS என புத்தகப்பிரியர்களுக்கான இலவச புத்தகங்களை,நாவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ள
          இலவச(1) தமிழ் புத்தகங்களும், (2)தமிழ் நாவல்களும், (3)தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களும், (4)தமிழ்ப்பாட தேர்வுத் தாள்களும்., மற்ற மொழிகளில் (5)HINDI BOOKS,(6)SANSKRIT BOOKS, (7)MARATHI BOOKS, மற்றும் அலைபேசிகளுக்கான (8)மின் புத்தகங்களும் கிடைக்கின்றன.
        
          (ஊ) HOROSCOPE என்னும் Astrology சோதிட நம்பிக்கையுள்ளவர்களுக்கு
            (1) தமிழில் சோதிடம்., (2)தமிழில் தினசரி ராசி பலன்., (3)தமிழில் வாரத்திற்கான  ராசி பலன்., (4)தமிழில் மாதத்திற்கான  ராசி பலன்., (5)தமிழில் தற்போதைய வருடாந்திர ராசி பலன் மற்றும் (6) இவ்வருடத்தின் குரு பெயர்ச்சி பலன் அறிந்துகொள்ளலாம். 
             மேலும் Tamilcube.com  வலைத்தளத்தில் (1)ஜாதகம் கணிக்கலாம்., (2)பஞ்சாங்கம் பார்க்கலாம்., (3)ராசி,நட்சத்திரம்,லக்னம் Calculate என்னும் கணக்கிடலாம்., (4)ஜாதகப் பிறப்பு அட்டவணை (BIRTH CHART) இலவசமாகப் பெறலாம். என சோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கான வசதிகள் உள்ளன.
         இவ்வாறு எண்ணற்ற வசதிகளைக்கொண்ட வலைத்தளம் நம்ம Tamilcube.com வலைத்தளமுங்க.பாருங்க,பயன் பெறுங்க...
                                                                               என பரமேஸ்வரன்.C /
                                                                                    செயலாளர், ''
                                                                                      சிபர்ஸ்ஆர்க்'' என்னும்
                                                                            நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                                                              சாலை பாதுகாப்பு சங்கம் -                                                                           தமிழ்நாடு.பதிவு எண் 26 / 2013 
                                                 நன்றிங்க.

    

27 ஜூலை 2013

''சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013''



     மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
         ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வட்டம் மற்றும் சத்தியமங்கலம் வட்டம் பகுதியைச்சேர்ந்த அனைத்து கணினி,இணையம்,மின்னஞ்சல்,முகநூல்,ட்விட்டர்,அலைபேசி இணையவழி தொடர்பு கொண்டுள்ள நண்பர்களை 
             ''சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013''
      (அதாவது சத்திகோபி வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - இதன் சுருக்கம் சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013 இப்ப புரிஞ்சுதுங்களா?) 
                 நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.   கோபி நண்பர்கள் மரியாதைக்குரியவர்களான (1)ஸ்வஸ்திக் ஏஜென்சீஸ் இளங்கோ , (2)ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ் பெரியசாமி ,(3) L.I.C.பரமேஸ்வரன் ஆகியோர் ஆலோசனையுடன் வருகிற செப்டெம்பர் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (08-09-2013) அன்று கோபி அல்லது சத்தி அல்லது தாளவாடி மலைப்பகுதியில் நடத்த இருக்கும் இந்த சமூக நல நிகழ்வுக்கு சகோ தர வட்டாரங்களைச்சேர்ந்த அனைத்து இணைய நண்பர்களும் கலந்து கொண்டு நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.மாணவர்கள்,இளைஞர்கள்,உட்பட பெண்களும் கலந்து கொள்ளலாம்.
            இந்த சங்கமம் நிகழ்ச்சியினை விளம்பரத்திற்காக இன்றி விழிப்புணர்வுக்காக கிராமப்பகுதி மற்றும் மலைப்பகுதி மக்களுக்கான,இளைஞர்களுக்கான நல்ல விசயங்களைக் கொண்டு செல்வது உட்பட இன்னும் பல விசயங்களை விவாதித்து  இறுதி முடிவு எடுக்க வேண்டி உள்ளது.அதன்பிறகு அழைப்பிதழாக இங்கு பதிவிடப்படும்.பதினைந்து தினங்களுக்கு முன்னரே பதிவிட உள்ளோம்.
      தங்களது ஆலோசனை & கருத்தினை      consumerandroad@gmail.com -ல் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.
     அனைவரும் வருக! ஆதரவு தருக!! ஆலோசனையும் தருக!!!
                                                                                                     என
                                                                                       அனைவருக்காக,                                                                                         பரமேஸ்வரன்.C.       
                                                                               ஒருங்கிணைப்பாளர் ,
                                                                           சகோ தர வலைப்பதிவர்கள்   
                                                                                         சங்கமம்-2013  -                                                                                             -தாளவாடி. -638461
                                                                                         சத்தி வட்டம்-ஈரோடு மாவட்டம்.                          

22 ஜூலை 2013

பதவிகளில் முதல் பெண்கள்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
            கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.சாதனைப்  பெண்கள் வரிசையில் இதோ படியுங்க! பத்திரப்படுத்துங்க!! பாராட்டுங்க!!!

 முதல் பெண் குடியரசு தலைவர்பிரதீபா பாட்டீல்
    முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி
முதல் பெண்கவர்னர்
சரோஜினி நாயுடு
முதல் பெண் முதல்வர்
சுசேதா கிருபலானி
முதல்பெண்அமைச்சர்
விஜயலெட்சுமி பண்டிட்
முதல் பெண் மத்திய அமைச்சர்
ராஜ்குமாரி அம்ரித் கெளர்
முதல் பெண் லோக்சபை சபாநாயகர்
ஷன்னா தேவி
முதல் பெண் ராஜ்யசபைத் துணைத்
தலைவர் வயலட் ஆல்வா
குடியரசுத் தலைவர் தேர்தலில்
போட்டியிட்ட மனோஹர
நிர்மலா ஹோல்கர்
முதல் பெண் வேட்பாளர்
இ.தே. காங்கிரசின் முதல் பெண்
தலைவர் டாக். அன்னிபெசன்ட்
இ.தே. காங்கிரசின் முதல் இந்தியப்
பெண் தலைவர் சரோஜினி நாயுடு
ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண்
தலைவர் விஜயலெட்சுமி பண்டிட்
இந்தியாவின் முதல் பெண்
அரசி ரசியா சுல்தான்
முதல் பெண் ஏர்மார்ஷல்
பத்மா பந்தோபாத்யாயா
முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல்
புனீதா ஆரோரா
பாலகே விருதுபெற்ற முதல்
நடிகை தேவிகாராணி
புக்கர் பரிசு பெற்ற முதல் பெண்
அருந்ததி ராய்
முதல் மிஸ்வேர்ல்ட் ரீத்தா ஃபாரியா
முதல் மிஸ் யூனிவர்ஸ்
சுஷ்மிதா சென்
பாரத் ரத்னா விருது பெற்ற முதல்
பெண் இந்தரா காந்தி
மக்சாஸே விருது பெற்ற முதல் பெண்
அன்னை தெரசா
ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்
பானு அத்தையா
அயல்நாட்டுத் தூதரான முதல் பெண்
விஜயலெட்சுமி பண்டிட்
முதல் பெண் ஐஏஎஸ்
அதிகாரி அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா
முதல் ஐபிஎஸ் அதிகாரி கிரண்
பேடி
முதல் பெண் வழக்கறிஞர்
கொர்னேலியா சொராப்ஜி
முதல் பெண் நீதிபதி அன்னா சாண்டி
உச்சநீதிமன்ற முதல் பெண்
நீதிபதி எம். பாத்தியமா பீபி
உச்சநீதிமன்ற முதல் பெண்
தலைமை நீதிபதி லீலா சேத்
உயர்நீதிமன்ற முதல் பெண்
நீதிபதி அன்னா சாண்டி
முதல் பெண் மஜிஸ்டிரேட்
ஓமனக்குஞ்சம்மா
முதல் பெண் மருத்துவர்
காதம்பினி காங்குலி
முதல் பெண் தலைமை பொறியாளர்
பி.கே. த்ரேசியா
முதல் பெண் சிவில் சர்ஜன்
முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்ட்ரி
இந்தியாவின் முதல் பெண் பெண்
பட்டதாரி கர்னேலியா சொராப்ஜி
இந்தியாவின் முதல் பெண்
டிஜிபி காஞ்சன் பட்டாச்சார்யா
முதல் பெண் போட்டோகிராபர்
ஹோமி வ்யாஸ வல்லி
சேனா விருது பெற்ற முதல் பெண்
பிம்லா தேவி (சிஆர்பிஎஃப்)
விண்வெளி சென்ற முதல் இந்தியப்
பெண் கல்பனா சாவ்லா
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல்
பெண் பச்சேந்திரி பால்
எவரெஸ்டில் இருமுறை ஏறிய முதல்
பெண் சந்தோஷ் யாதவ்
கடல்வழி உலகைச் சுற்றி வந்த முதல்
பெண் உஜ்வல ராய்
ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடந்த
முதல் பெண் ஆர்த்தி சாஹா
ஆங்கிலக்கால்வாய
ை இருமுறை நீந்திய முதல் பெண்
பூலா சௌத்ரி
ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த
முதல் பெண் பூலா சௌத்ரி
அண்டார்டிகா சென்ற முதல் இந்தியப்
பெண் மெகர் மூஸ்
சாகித்ய அகாதமி விருது பெற்ற
முதல் பெண் அம்ருதா ப்ரீதம்
ஞானபீடம் வென்ற முதல் பெண்
ஆஷா பூர்ணா தேவி
புலிட்சர் பரிசு பெற்ற முதல்
இந்தியப் பெண் ஜூம்பா லாகிரி
ராஜீவ் காந்தி கேள்
ரத்னா விருது பெற்ற முதல் பெண்
கர்ணம் மல்லேஸ்வரி
ஒலிம்பிக்ஸ் தக்கம் வென்ற பெற்ற
முதல் பெண் கர்ணம் மல்லேஸ்வரி
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாமின்
ஒரு சுற்றில் வெற்றி
பெற்ற முதல் இந்தியப் பெண்
நிருபமா வைத்தியநாதன்
டென்னிஸ் கிராண்ட் ஸ்லாமில்
மூன்றாம் சுற்றுவரை
சென்ற முதல் இந்தியப் பெண்
சானியா மிர்ஸா
இந்தியாவின் முதல் கமர்ஷியல்
பெண் பைலட் துர்பா பானர்ஜி
இந்தியாவின் முதல் பெண்
அயலுறவுச் செயலர் சோகிலா ஐயர்....
  என பரமேஸ்வரன். 
      செயலாளர் - 
   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -
    தமிழ்நாடு.

21 ஜூலை 2013

GOOGLE சேவை சாதனங்களில் மிக உபயோகமானவைகளில் சில...............

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்தப் பதிவில் (GOOGLE) கூகிள் பற்றிய சில விவரங்களைக்காண்போம். பயன்படுத்தி பயன்பெறுவோம்.மரியாதைக்குரிய நாகூர் கனி காதர் மைதீன் பாஷா அவர்களுக்கும் ஒரு நன்றியைச்சொல்லி வாழ்த்துவோம்.
   
           கூகுள் சேவை சாதனங்களில் பயனுள்ள சில தங்களது பார்வைக்கு............

                                         எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம்.

             கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம்.

                     1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate)

                  இது ஒரு இலவச மொழி பெயர்க்கும் புரோகிராம். 64 மொழிகளுக்கிடையே மொழி பெயர்க்கும் பணியைத் தருகிறது. இதன் மூலம் சொற்கள், வாக்கியங்கள், இணையப் பக்கங்களை மொழி பெயர்க்கலாம். எண்ணற்ற தகவல்கள் அவை எந்த மொழியிலிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொழியில் பெற முடியும். ஒருவர் தங்கள் மொழியில் இருப்பதனை, அல்லது அடுத்த மொழியிலிருப்பதனை, அதன் ஒலிக்குறிப்பில் டைப் செய்தால் போதும். சரியான டெக்ஸ்ட்டில் அவை அமைக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்படும்.

                                  2. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):

                தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.

                                                   3. கூகுள் திங்க் (Google Think)

                          கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர்.

                             4. கூகுள் மாடரேட்டர் (Google Moderator):

                பலவகைத் தலைப்புகள் குறித்து இங்கு இலவசமாகக் கலந்து ஆலோசிக்கலாம். கருத்துக்களை வரவேற்று, எந்த ஒரு வாடிக்கையாளரும், புதிய இழை ஒன்றை உருவாக்கலாம். கேள்விகளைக் கூடப் பதியலாம். இந்த தளத்திற்கு வரும் எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். குறிப்பிட்ட கருத்தை வரவேற்று அதற்கு வாக்களிக்கும் வசதி கூட இதில் உள்ளது. முதல் கேள்விகள், நீல நிறப் பின்னணியில் மையக் கேள்வியாகக் காட்டப்படும். மற்றவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்கலாம். ஒரு கருத்துரு அல்லது தலைப்பின் கீழ் துணைப் பிரிவுகளையும் உருவாக்கலாம்.
               

                                5. கூகுள் சவுண்ட் சர்ச் (Google Sound search): 
     
              இது ஒரு விட்ஜெட் எனப்படும் அப்ளிகேஷன். நம்மைச் சுற்றி இசைக்கப்படும் இசை மற்றும் பாடல்களை அறிந்து அடையாளம் கொள்ள இது உதவி புரிகிறது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, அடையாளம் காணப்பட்ட பாடல்களை விலைக்கு வாங்க முடியும். அடையாளம் காணப்படும் பாடல்களின் பட்டியலை உருவாக்கி வைத்து, பின்னொரு நாளில் கேட்கலாம் மற்றும் வாங்கலாம்.

                                     6. கூகுள் ஸ்கீமர் (Google Schemer):

                             தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைகள் எது வேண்டுமானதாகவும் இருக்கலாம். ஓர் அருங்காட்சியகம் செல்லுதல், நண்பர்களுடன் கூட்டாகக் கலந்துரையாடல், வார இறுதிக்கான சுற்றுலா செல்ல இடம் தேர்ந்தெடுத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே இது போல கலந்துரையாடப்பட்டு வரையறை செய்யப்பட்ட திட்டங்களும் இதில் கிடைக்கும்.

                            7. பவர் சர்ச்சிங் வித் கூகுள் (Power searching with Google):

                     தேடுதல் தளம் தான், கூகுள் நிறுவனத்தின் வலிமையே. அந்த வகையில், எப்படி சிறப்பாக நம் தேடுதலை அமைத்துக் கொள்ளலாம் என்று, இந்த தளத்தில், கூகுள் நமக்கு டிப்ஸ் தருகிறது. இணையத்திலேயே பயிற்சியும் தரப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வழிகளை, தேடுதலுக்கென நாம் தெரிந்து கொள்கிறோம்.

                              8. பில்ட் வித் குரோம் (Build with chrome):

         ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனமான லெகோவுடன் இணைந்து கூகுள் அமைத்த தளமே பில்ட் வித் குரோம். இது ஒரு நவீன இணைய தொழில் நுட்பமாகும். இங்கு பிரவுசர் வழியாக, முப்பரிமாணப் படங்களைக் காணலாம். பயனாளர்களும் தங்களின் முப்பரிமாண உருவங்களை அமைக்கலாம். இதில் செயலாற்றுவது மிகவும் வேடிக்கை நிறைந்ததாக உள்ளது.

                        9. கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art Project):

                 இது கூகுள் தரும் ஸ்ட்ரீட் வியூ போன்றதாகும். மியூசியம்,கலை அரங்கங்கள் ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம். கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும், 40 நாடுகளைச் சேர்ந்த 151 வல்லுநர்களுடன் இணைந்து இந்த தளத்தினை கூகுள் அமைத்துள்ளது. மியூசியம் நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பமும் இந்த தளத்தில் இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு அனுபவத்தினைத் தருகின்றன.

              10. கூகுள் ஸ்காலர் (Google Scholar):

                  இலக்கியம், ஆய்வு கட்டுரைகள், கல்வித் துறை சார்ந்த பதிப்புகள், இணைய வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் நீதிமன்றம் வெளியிடும் கருத்துகள் ஆகியவை குறித்து உரையாட இது ஒரு நல்ல தளம். மிகப் பெரியதாக விரிந்து இருந்தாலும், இதனை அணுகுபவர்கள், தங்களுக்குத் தேவையானதை மிக எளிதாகப் பெற்று இயங்கலாம்.

                     11. கூகுள் மார்ஸ் (Google Mars):

                அரிசோனா பல்கலையில் உள்ள, நாசா விண் வெளி ஆய்வு விஞ்ஞானிகளுடன் கூட்டாக இணைந்து, சிகப்பு கிரகமான மார்ஸ் குறித்த மேப் ஒன்றை கூகுள் தயாரித்துள்ளது. இது ஏறத்தாழ கூகுள் எர்த் போன்றதாகும். அதன் மூலம் நாம் எப்படி பூமியின் அனைத்து பாகங்களுக்கும் சென்று வர முடிகிறதோ, அதே போல மார்ஸ் கிரகத்திற்கு, கூகுள் இதில் பாதை அமைத்துத் தருகிறது. மார்ஸ் எப்படி தோற்றமளிக்கும் என்பதனை நாம் கண்டு கொள்ள அருமையான தளம் இது.

                                                                                            இப்படிக்கு ,
                                                                                                 அன்பன் 
                                                                                         C.PARAMESWARAN. 
                                                                                              (SECRETORY ) 
                                                                             CONSUMER PROTECTION AND 
                                                                             ROAD SAFETY ORGANISATION -
                                                                                                    TAMIL NADU
                                                                                 .http://consumerandroad.blogspot.com