மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
FACEBOOK என்னும் முகநூல் நண்பர்களுக்காக நமது தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பு,எளிமை,தெளிவு,முழுமை மற்றும் தமிழில் எளிதாகத் தட்டச்சு செய்வது , மற்றும் பலமொழி கற்றுத்தேர்ந்த மேலைநாட்டறிஞர்கள் தமிழின் சிறப்பினை உணர்ந்து தமிழுக்கு ஆற்றிய தொண்டு ஆகியன இங்கு பதிவிடுகிறேன்.
முதலாவதாக தமிழின் சிறப்பு பற்றி காண்போம்;-
ஓர் எழுத்தினை உச்சரிக்கும்போது எழுகின்ற ஓசை நயத்திற்கேற்ப அந்த எழுத்தின் வரிவடிமும் அமைந்திருப்பது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பு.இத்தகைய சிறப்பு மற்ற திராவிட மொழிகள் உட்படஉலகில் எந்த மொழிக்கும் இல்லை என்பதை பலமொழி கற்ற ''செக்கோஸ்லோவாகியா'' நாட்டின் அறிஞர் ''கமில்ஸ் சுலபில்'' அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உலகுக்கு எடுத்து உரைத்துள்ளார்.
உதாரணமாக நாம் ''கிருஷ்ணா'' என்று எழுத வேண்டுமானால் தமிழில் தனித்தனி எழுத்தாக உச்சரிக்கும் ''கி- ரு -ஷ்- ணா' என்ற அதே எழுத்தை (கட்டடம் கட்ட செங்கல் அடுக்குவது போல்) சேர்த்தால் மட்டும் போதும்.ஆனால் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,இந்தி,உட்பட அனைத்து மொழிகளிலும் தனித்தனியாக உச்சரித்த எழுத்துக்களை சேர்க்கும்போது ''கிருஷ்'' ஆகிய மூன்றெழுத்துக்களும்- சம்யுக்தாக்ஷரங்கள் என்னும் ஒத்தெழுத்து வடிவில் பாதிபாதியாக வெட்டி ஒட்டப்பட்டுத்தான் எழுத முடியும்.(நான் மொழிப்பற்று காரணமாக ஆய்வுக்காக மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,இந்தி ஆகிய மொழிகளையும் அரபு மொழியினையும் கற்க துணிந்து ஓரளவு கற்றுள்ளேன்.எழுத படிக்க தெரியும்.ஆனால் அர்த்தம் புரியாது?அதன் விவரம் பின்னொரு பதிவில் புகைப்படமாக எடுத்து தருகிறேன்.)
இரண்டாவது தமிழில் தட்டச்சு செய்வது எளிது.;-
கணினியுகத்தில் ஆங்கிலம் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தமையால் அனைத்து கணினி பயன்பாடுகளுக்கும் ஆங்கிலமே பயன்பாட்டில் அதுவும் பொதுக்குறியீட்டு முறை என்ற பொதுவான ஒரே முறை பயன்படுத்தப்பட்டு வந்தது..
ஆனால் தமிழ் போன்ற பிற மொழிகளின் பயன்பாடு மிக சமீபத்திய காலத்தில்தான் கணினியில் பயன்படுத்தப்பட்டது.அதிலும் வியாபாரத் தந்திரம் காரணமாக வணிகர்களின் சில சுயநலத்தின் காரணமாக ஒவ்வொருவரும் அவரவரின் வெளியீடுகளை மட்டுமே விற்பனையில் இருக்க வேண்டும்.எழுத்தின் ஒருமுறையை கற்றவர்கள் மீண்டும் அதே முறை எழுத்துக்குறியீடுகளை மட்டும் வாங்க வேண்டும்.வேறு நிறுவனத்தின் எழுத்துருக்களை வாங்கக்கூடாது என்ற நோக்கில் பலரும் பல குறியீட்டுமுறை எழுத்துருக்களை வெளியிட்டு நம்மை குழப்பிவிட்டனர்.
தட்டச்சு முறையும் சற்று கடினமாக தோன்றியதால் தட்டச்சு பயின்றவர்களும் பாமினி என்னும்அந்த முறையை விட்டு வெளியே வர பயந்துவிட்டனர்.
ஆனால் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டின்போது தமிழுக்காக தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களின் சீரிய முயற்சியால் தமிழ்99 தட்டச்சு முறை மிக எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுவெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசும் அங்கீகாரம் வழங்கி Tamil'99 எழுத்து முறை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஆங்கிலத்தை விட எளிமையானது.இந்த தமிழ்99 முறை . அதைப்பற்றி பார்ப்போம்;-
தட்டச்சுப்பொறியில் தட்டிய எழுத்துத்தான் பதிவாகும்.கணினியில் கட்டளை கொடுத்து தட்டச்சு செய்வதால் அதற்கேற்ப எழுத்து மாறிப்பதிவாகும்..இதுவே நமக்கு கிடைத்த வசதியாகும்.
தமிழ் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் ஆக முப்பது எழுத்துக்களும் சேர்ந்து அத்தனை தமிழ் எழுத்துக்களையும் உருவாக்குகின்றன.அதே முறையில்தான் தமிழ்'99 முறையும் செய்கிறது.
எனவே, முப்பது தமிழ் எழுத்துக்கள் எந்த எந்த விசைப்பொத்தானில் உள்ளது என்று மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.அதற்கு NHMWriter என்னும் சாப்ட்வேர் நமக்கு இலவசமாகக் கிடைத்துள்ள பரிசு ஆகும்.
நான் பயன்படுத்துவது இந்த NHMWriter Tamil'99 தாங்க.இந்த என் எச் எம் ரைட்டரை இன்ஸ்டால் செய்வதும் எளிதானது.(NHMWriter மென்பொருளிலும் தமிழ்'99 முறை,பாமினி முறை,தட்டச்சு முறை,தமிங்கில முறை என அனைத்து (அதாவது) பலமுறைகளும் உள்ளன.நமக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆனால் தமிழ்'99 முறைதான் எளிமையானது,விரைவானது.இனி எந்த தமிழ் எழுத்துக்கள் எந்த விசைப்பொத்தானில் என்பதைக் காண்போம்.இதனை மட்டும் மனதில் வைப்போம்.
முதல் விசை அழுத்தத்தில் அ-a., ஆ-q ., இ- s ., ஈ- w ., உ-d., ஊ-e ., எ-g., ஏ- t ., ஐ-r ., ஒ-c ., ஓ-x ., ஔ - z ., ஃ - f ., க-h ., ங-b ., ச -[ ., ஞ-] ., ட - O., ண-p ., த-l ., ந-; ., ப-j ., ம-k., ய - ' ., ர-m ., ல-n ., வ-v ., ழ -?., ள-y ., ற -u ., ன -i ., ஆகிய எழுத்துக்கள் கிடைக்கும்.
ஷிப்ட் அழுத்தியவாறு பின்வரும் ஆங்கில எழுத்து விசை அழுத்தினால் ஸ-Q., ஷ-W., ஜ-E., ஹ-R., க்ஷ-T., ஸ்ரீ-Y., என வடமொழி எழுத்துக்கள் கிடைக்கும்.இவ்வளவுதாங்க. முயற்சி செய்து பாருங்க.
http://software.nhm.in/products/writer1511 என்ற
NHMWriter மென்பொருள் வலைத்தளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.இன்ஸ்டால் செய்யும் முறை பற்றியும் இதில் விவரமாக கொடுத்துள்ளது சிறப்பு ஆகும்.
பிறகு மெய்யெழுத்துக்களையும் உயிரெழுத்துக்களையும் தட்டச்சு செய்து அனைத்து உயிர்மெய் எழுத்துக்களையும் பெறலாம்.
(உயிர் மற்றும் மெய்யெழுத்துக்கள் ஆகிய முப்பது எழுத்துக்களால் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களும் கிடைக்கும்.)
அதாவது தமிழ் என தட்டச்சு செய்ய l (இது small L) m s / f என தட்டச்சிட மென்பொருள் உதவியால் த்+அ,ம்+இ,ழ் = தமிழ் என தானே மாறிப் பதிவாகும்.
(கவனியுங்க!;-ஓட்டுனர் பணி புரியும் நான் எனது மகளின் பயன்பாட்டிற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் கணினி வாங்கினேன்.நானும் கணினி அருகில் அமர்ந்து எழுத்துக்களை தட்டச்சிட்டுப் பார்க்க,பதிவானது கண்டு வியக்க,இரண்டு நாட்களில் தமிழில் தட்டச்ச பழகிக்கொண்டேன்.தற்போது வாய்ப்பு கொடுக்கும் இடங்களில் பயிற்சியும் கொடுத்து வருகிறேன்.அரை மணி நேரம் பயிற்சி மட்டும்).
தமிழ் வளர்த்த மேல்நாட்டறிஞர்கள் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
என C. பரமேஸ்வரன் -
ஓட்டுனர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் - கோவை.
தாளவாடி கிளை.ஈரோடு மண்டலம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக