மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வட்டம் மற்றும் சத்தியமங்கலம் வட்டம் பகுதியைச்சேர்ந்த அனைத்து கணினி,இணையம்,மின்னஞ்சல்,முகநூல்,ட்விட்டர்,அலைபேசி இணையவழி தொடர்பு கொண்டுள்ள நண்பர்களை
''சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013''
(அதாவது சத்திகோபி வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - இதன் சுருக்கம் சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013 இப்ப புரிஞ்சுதுங்களா?)
நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். கோபி நண்பர்கள் மரியாதைக்குரியவர்களான (1)ஸ்வஸ்திக் ஏஜென்சீஸ் இளங்கோ , (2)ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ் பெரியசாமி ,(3) L.I.C.பரமேஸ்வரன் ஆகியோர் ஆலோசனையுடன் வருகிற செப்டெம்பர் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (08-09-2013) அன்று கோபி அல்லது சத்தி அல்லது தாளவாடி மலைப்பகுதியில் நடத்த இருக்கும் இந்த சமூக நல நிகழ்வுக்கு சகோ தர வட்டாரங்களைச்சேர்ந்த அனைத்து இணைய நண்பர்களும் கலந்து கொண்டு நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.மாணவர்கள்,இளைஞர்கள்,உட்பட பெண்களும் கலந்து கொள்ளலாம்.
இந்த சங்கமம் நிகழ்ச்சியினை விளம்பரத்திற்காக இன்றி விழிப்புணர்வுக்காக கிராமப்பகுதி மற்றும் மலைப்பகுதி மக்களுக்கான,இளைஞர்களுக்கான நல்ல விசயங்களைக் கொண்டு செல்வது உட்பட இன்னும் பல விசயங்களை விவாதித்து இறுதி முடிவு எடுக்க வேண்டி உள்ளது.அதன்பிறகு அழைப்பிதழாக இங்கு பதிவிடப்படும்.பதினைந்து தினங்களுக்கு முன்னரே பதிவிட உள்ளோம்.
தங்களது ஆலோசனை & கருத்தினை consumerandroad@gmail.com -ல் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.
அனைவரும் வருக! ஆதரவு தருக!! ஆலோசனையும் தருக!!!
என
அனைவருக்காக, பரமேஸ்வரன்.C.
ஒருங்கிணைப்பாளர் ,
சகோ தர வலைப்பதிவர்கள்
சங்கமம்-2013 - -தாளவாடி. -638461
சத்தி வட்டம்-ஈரோடு மாவட்டம்.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நம்ம ஊரு மாணவர்களுக்கு,இளைஞர்களுக்கு,இல்லதரசிகளுக்கு கணினி பயன்பாடு, இணைய பயன்பாடு,மின்னஞ்சல் பயன்பாடு பற்றி எளிமையான விசயங்களை கற்றுக்கொடுப்பதற்கான கருத்துகள்,ஆலோசனைகள் சேகரிக்க உள்ளோம்.என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறோம்.என C.PARAMESWARAN - THALAVADY-ERODE DISTRICT.
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு