27 நவம்பர் 2012

ஆகாயவிமானம் பறப்பது எப்படி?


மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். இங்கு அறிவியலையும் காண்போம்.


                விமானம் பறப்பது எப்படி?



இன்று
வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்




ஒரு
பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A-
ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B-
முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C
-கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D-
பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு
விமானம் ஒரே உயரத்தில் , நேராகப் பறக்க இந்தக் கணிதக் கூற்று சமமாக இருக்க வேண்டும்

Weight=Lift


Drag=Thrust


த்ரஸ்ட்
, டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக்
த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின்
எடைலிப்ட்விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின்
லிப்ட்விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி
பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே
போல விமானத்தில்டிராக் விசையை கொடுப்பதுகாற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே காரணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.அதாவது வேகம் குறையாது.
                    விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன?. காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வைத் தடுப்பதற்காகத்தான் உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது.
            விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை .
விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது? னப் பார்ப்போம்.

ஹெலிகாப்டரின்
மேலெழும்பு விசை அதன் மேலிருக்கும் விசிறி சுழலுவதால் கிடைக்கிறது.ஆனால்  விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது? என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில்
விமானத்தின் மேலெழும்பு விசையைத்  தருவதும் அதே எஞ்சின்தான்சற்று மறைமுகமாக!!

விமானத்தின்
மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் (1)இறக்கை,(2) விமானத்தின் வேகம், மற்றும்(3) காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் மேலெழும்பும் (தூக்கும்) சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின்
இறக்கையைக்  கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று  மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்ப்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையைப் பார்த்தால் கூட கண்ணுக்கு எளிதாகத் தெரியாது, அதை தொட்டுப் பார்த்தால்தான் தெரியும்.

இந்த
மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
            காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறத்தில்  ஒரு குறைந்த காற்றுஅழுத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்ப்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிகக் காற்றழுத்தம் மற்றும்  ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழுத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
       விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்.
       அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவு உள்ளதாக இருக்கும்.
       இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மானிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மானிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான்
விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகாப்டருக்கு வராது)

இது
எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம்
ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிக்கும்போது, சில ஓட்டு வீட்டு கூரைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான்
குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு
டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

22 நவம்பர் 2012

20-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு-2012










அறிவியல் அறிவு-01


மரியாதைக்குரியவர்களே,
                                        வணக்கம்.
         இதற்கு கருத்துரை தேவையில்லை என நினைக்கிறேன்.







  

மரியாதைக்குரியவர்களே இது எனது முகநூல் பதிவில் எடுத்த படம்.எனவே தாங்கள் தயவுசெய்து  அதன் வாசகங்களை மட்டும் படிக்க வேண்டாம்.கருத்துக்களை புரிந்து கொள்ளுங்கள். நன்றிங்க!


21 நவம்பர் 2012

நானோ மீட்டர் - அளவுகள் விபரம்



மரியாதைக்குரிய நண்பர்களே,
                    வணக்கம்.
                இந்தப்பதிவில் நானோ மீட்டர் அளவு பற்றி காண்போம்.


                   நானோமீட்டர்- அளவு
1 மீட்டர் = 1000 மில்லிமீட்டர், 1 மில்லிமீட்டர் = 1000 மைக்ரோமீட்டர்,
1 மைக்ரோமீட்டர் = 1000 நானோமீட்டர்,
1 மீட்டர் 1,000,000,000 நானோமீட்டர் அல்லது மில்லிமைக்ரான்
1 மில்லிமீட்டர் = 1,000,000 நானோமீட்டர்

ஒரு
கடுகின் அளவு 1 மில்லிமீட்டர் என்றால் அதை 10 லட்சம் பகுதியாக பிரித்தால் வருகின்ற அளவு 1 நானோ.

இதைவிடவும்
சிறிய அளவான பிகோ (1 மீட்டர் = 1,000,000,000,000  pico பிகோமீட்டர் ) 1×10−12 m, or as 1 E−12 அணுக்களின் அளவை குறிப்பிட பயன்படுகிறது.
    அளவீடுகளின் துல்லியம் பாரீர்!.இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதனை காணீர்!!.

03 நவம்பர் 2012

கரட்டூர்-சொர்க்கபூமி-05 கொடை வள்ளல்கள் விபரம்.

அன்புநண்பர்களே,
                    வணக்கம். 
    (1)இவர்   திருமிகு.அஜீத்குமார்M.com.,C.A(Final),C.W.A(Inter),M.A.,B.L.அவர்கள்.
       வழக்குரைஞர் மற்றும் வரி,நிதி,மேலாண்மை திட்ட ஆலோசகர்.சென்னையிலும்,சத்தியமங்கலத்திலும் அலுவலகம் உள்ளன.''முடியாது என்பது முட்டாளின் அகராதி'' என்ற வாக்கை வேதமாகப்போற்றுபவர்.
        சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் கிராமத்தின் சொர்க்க பூமி புத்தாக்க வேலையின் ஒரு பகுதியான பழுதடைந்திருந்த முன்புற வாயிலின் கதவுகள் சிமெண்ட் வேலை செய்து கட்டட வேலைக்கான செலவுகளையும் சேர்த்து வெல்டிங் வைத்து புதுப்பிக்க ஆகும் அனைத்து செலவுகளையும் தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டுள்ளார். மரியாதைக்குரிய ஐயா அவர்களை கரட்டூர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.         
   
                                            (2) இவர் மரியாதைக்குரிய S.S.V.சுந்தரம் என்று அழைக்கப்படும் திருமிகு,சுந்தரம் அவர்கள்.சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் உணவகம் மற்றும் தேனீரகம் நடத்தி வருகிறார்.நிலக்கிழார்,கரட்டூர் சொர்க்க பூமிக்கு நிதி உதவியாக ரூபாய்.ஐந்தாயிரம் நிகழ்விடத்திலேயே வழங்கி மகிழ்கிறார்.பெற்றுக்கொள்பவர் திரு.C.சிவக்குமார் அவர்கள்.(மகாசக்தி ஆண்கள் குழுத் தலைவர்.வணங்கி மரியாதை செலுத்துபவர் திரு. M. தாமோதரன் அவர்கள்.மகாசக்தி ஆண்கள் குழு செயலாளர்) மரியாதைக்குரிய ஐயா அவர்களை கரட்டூர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

  (3)அமெரிக்காவில் கனடா வாழ்க்கைநிலை கொண்டுள்ள கரட்டூர் மண்ணின் மைந்தன் திருமிகு.மதன் அவர்கள்.(இன்னும் புகைப்படம் கிடைக்கவில்லை) நிதி உதவியாக ரூபாய் இருபதாயிரம் அனுப்பி உள்ளார்.தாய் மண்ணை மறவாத அவர் செயல் கண்டு கரட்டூர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

     தனிநபர் உதவிகள் தவிர குழுமங்கள் உதவி செய்கின்றன.அதில் முதலாவதாக மரியாதைக்குரிய அன்னா ஹசாரே குழுவினர் சத்தியமங்கலம் (இவர்களது  உதவிகள் பற்றி முழுமையாகத்தெரிந்த பிறகு பின்னர் பதிவிடப்படும்).பொதுச்சேவையின்பால் அக்கறை கொண்ட மரியாதைக்குரிய அன்னா ஹசாரே குழுவினரையும் கரட்டூர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

           சொர்க்க பூமிக்கு சுதந்திரமாக செயல்பட்ட மற்றும் அதற்கான உதவிகளை வாரிவழங்கிய பெரியோர்களை இங்கு புகைப்படமாக பதிவிடவேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பதிவிடுகிறேன்.இன்னும் நிறைய கொடைவள்ளல் பெருமக்கள் அமெரிக்கா உட்பட வெளிநாடுகள்,வெளி மாநிலங்கள்,வெளியூர்கள் என உள்ளனர்.கரட்டூர் சுர்க்க பூமிக்கு உதவிட.. இங்குள்ள மகாசக்தி ஆண்கள் குழுவினரின் வரிசைக்கிரமமான செயல்பாடுகள் காரணமாக முதலில் வழங்கிய கொடைவள்ளல்கள் பற்றிய பதிவுங்க! எனவே மற்றவர்கள் சமூகசேவை கருதி வருத்தப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன்!!!!!!!!.
குறைகள் இருப்பின் அறிவுரை கூறுங்கள்.அவசியம் திருத்திக்கொள்கிறோம்.

கரட்டூர்-சொர்க்கபூமி-04crematorium-Karattur

மரியாதைக்குரிய நண்பர்களே,
      வணக்கம்.
             இன்று காலை 06-00மணிக்கே, நமது கரட்டூரில் சொர்க்கபூமி மரம் நடுவிழா மிக அற்புதமாக அனைவரின் ஒத்துழைப்போடு ஆரவாரமாக நடைபெற்றது.அதன் சுருக்கம் இந்தப்பதிவு.

  புகைப்பட வல்லுனர்& வாகன ஓட்டுனர்,கணிணி தொழில்நுட்ப வல்லுனர் திரு.சுரேஷ் பாபு அவர்கள்.விளம்பரத்தை விரும்பாதவர்.அதனால் இந்தப்படத்தைப் பதிவு செய்ய நேர்ந்தது.
சொர்க்கபூமி மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகளை கேமராவுக்குள் சிறைப்பிடித்தவரைப் பாராட்ட வேண்டுமல்லவா!வாழ்த்துக்கள்.
   கரட்டூர்,சொர்க்கபூமி மேம்பாடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரிங்க!வலைப்பக்கங்களோடு!!!!!!!!......



  சொர்க்க பூமி வாயிலில் கரட்டூர் பெரியவர்கள் முகாமிட்டு பணிகளை ஆய்வும்,ஆலோசனையும் செய்த காட்சி!.


  மரியாதைக்குரிய பெரியவர் இளைஞர்களுக்கு ஆசி வழங்கி மரக்கன்று வழங்கிய காட்சி!.
முழுமனதுடன் ஒத்துழைப்பு நல்கிய ஹசாரே குழுவினருடன் ஊர்ப்பெரியவர்களும்,இளைஞர் பட்டாளமும்..........




 சொர்க்கபூமி! எங்களுக்கும் சொந்தம்!எங்கள் பரம்பரைக்கும் சொந்தம்!!என்று உள்ளூர்ப்பெண்கள் ஆர்வமுடன் வருகைதந்து மரக்கன்று நட்ட காட்சி!
ஊர்ப்பெரியவர்களின் முன்னிலையில் பெண்கள்! மரக்கன்றுகள் நட்டு,எங்கள் உரிமையைக் காத்துவிட்டோம்!என வீர நடைபோட்டு வெளியேறும் காட்சிங்க!

சொர்க்கபூமியா!அது எங்கள் முன்னோர் துயிலுறும் பூமிங்க!எங்களுக்கும் சொந்தமுங்க!என மரக்கன்று நடும் சிறுமிகள்!
சிறுமிகளுக்கு ஊக்கம் அளிக்கும் இளைஞர்கள்!

  வழக்குரைஞர் திருமிகு. அஜீத்குமார் மரக்கன்று நட்டு சமூக சேவைக்கு ஆர்வமூட்டிய காட்சி!இவர்,சத்தியில் பிரபல வழக்குரைஞர்.

கரட்டூர் மண்ணின் மைந்தன் திரு.சங்கர் நிலக்கிழார் மற்றும் தொழில் அதிபர் அவர்கள் அவரது உரிமையை நிலைநாட்டிய காட்சிங்க!
S.S.V.சுந்தரம் என்றழைக்கபடும் திருமிகு. சுந்தரம் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு மனித நேயம் வளர்ப்போம்! என உறுதியேற்ற காட்சி!

























             





   நன்றிங்க! என
              PARAMESWARAN.C// 
            TAMIL NADU SCIENCE FORUM // 
            THALAVADY-SATHY