அன்புநண்பர்களே,
வணக்கம்.
(1)இவர் திருமிகு.அஜீத்குமார்M.com.,C.A(Final),C.W.A(Inter),M.A.,B.L.அவர்கள்.
வழக்குரைஞர் மற்றும் வரி,நிதி,மேலாண்மை திட்ட ஆலோசகர்.சென்னையிலும்,சத்தியமங்கலத்திலும் அலுவலகம் உள்ளன.''முடியாது என்பது முட்டாளின் அகராதி'' என்ற வாக்கை வேதமாகப்போற்றுபவர்.
(1)இவர் திருமிகு.அஜீத்குமார்M.com.,C.A(Final),C.W.A(Inter),M.A.,B.L.அவர்கள்.
வழக்குரைஞர் மற்றும் வரி,நிதி,மேலாண்மை திட்ட ஆலோசகர்.சென்னையிலும்,சத்தியமங்கலத்திலும் அலுவலகம் உள்ளன.''முடியாது என்பது முட்டாளின் அகராதி'' என்ற வாக்கை வேதமாகப்போற்றுபவர்.
சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் கிராமத்தின் சொர்க்க பூமி புத்தாக்க வேலையின் ஒரு பகுதியான பழுதடைந்திருந்த முன்புற வாயிலின் கதவுகள் சிமெண்ட் வேலை செய்து கட்டட வேலைக்கான செலவுகளையும் சேர்த்து வெல்டிங் வைத்து புதுப்பிக்க ஆகும் அனைத்து செலவுகளையும் தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டுள்ளார். மரியாதைக்குரிய ஐயா அவர்களை கரட்டூர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
(2) இவர் மரியாதைக்குரிய S.S.V.சுந்தரம் என்று அழைக்கப்படும் திருமிகு,சுந்தரம் அவர்கள்.சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் உணவகம் மற்றும் தேனீரகம் நடத்தி வருகிறார்.நிலக்கிழார்,கரட்டூர் சொர்க்க பூமிக்கு நிதி உதவியாக ரூபாய்.ஐந்தாயிரம் நிகழ்விடத்திலேயே வழங்கி மகிழ்கிறார்.பெற்றுக்கொள்பவர் திரு.C.சிவக்குமார் அவர்கள்.(மகாசக்தி ஆண்கள் குழுத் தலைவர்.வணங்கி மரியாதை செலுத்துபவர் திரு. M. தாமோதரன் அவர்கள்.மகாசக்தி ஆண்கள் குழு செயலாளர்) மரியாதைக்குரிய ஐயா அவர்களை கரட்டூர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
(3)அமெரிக்காவில் கனடா வாழ்க்கைநிலை கொண்டுள்ள கரட்டூர் மண்ணின் மைந்தன் திருமிகு.மதன் அவர்கள்.(இன்னும் புகைப்படம் கிடைக்கவில்லை) நிதி உதவியாக ரூபாய் இருபதாயிரம் அனுப்பி உள்ளார்.தாய் மண்ணை மறவாத அவர் செயல் கண்டு கரட்டூர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
தனிநபர் உதவிகள் தவிர குழுமங்கள் உதவி செய்கின்றன.அதில் முதலாவதாக மரியாதைக்குரிய அன்னா ஹசாரே குழுவினர் சத்தியமங்கலம் (இவர்களது உதவிகள் பற்றி முழுமையாகத்தெரிந்த பிறகு பின்னர் பதிவிடப்படும்).பொதுச்சேவையின்பால் அக்கறை கொண்ட மரியாதைக்குரிய அன்னா ஹசாரே குழுவினரையும் கரட்டூர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
குறைகள் இருப்பின் அறிவுரை கூறுங்கள்.அவசியம் திருத்திக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக