14 டிசம்பர் 2011

சமயம்

                              சமயம்
                        உலகின் தொன்மையான மதங்களுள் அடங்கக்கூடிய இந்து சமயம், பௌத்தம், சமணம் என்பன இந்தியாவில் தோன்றியவை. இவற்றுள் இந்து சமயத்தின் தோற்றம் பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாது. இந்து சமயத்தின் அடிப்படை நூல்களுள் ஒன்றான ரிக்வேதம் உலகின் மிகப் பழைய நூல்களுள் ஒன்று. எனினும் இந்தியாவுக்கு வெளியே இதன் பரவல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. ஆனால், பௌத்தம் ஆசியாவில் உள்ள பல நாடுகளுக்கும் பரவி இன்றுவரை நிலைபெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து சமயங்கள் வெளிநாடுகளுக்குப் பரவியது ஒருபுறமிருக்க, வெளிச் சமயங்களும் இந்தியாவுக்கு வந்து நிலை பெற்றுள்ளன.

இயேசு கிறித்துவின் சீடர்களில் ஒருவராகிய புனித தோமா கேரள கடற்கரையில் அமைந்துள்ள பண்டைய சேர நாட்டு முசிறிப்பட்டினத்தில் (கொடுங்களூர்) கி.பி. 52/53இல் வந்திறங்கி, கிறித்தவ சமயத்தைப் பரப்பினார் என்றொரு மரபு கேரள கிறித்தவர் நடுவே உறுதியாக நிலைத்துள்ளது. புனித தோமா மயிலாப்பூரில் உயிர்துறந்தார் என்றும் மரபுவழி அறியப்படுகிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து கிறித்தவம் இந்தியாவில் வேரூன்றியிருந்தது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர் இந்தியாவில் கிறித்தவம் பரவ வழிவகுத்தனர். 1498இல் வாஸ்கோ தெ காமா இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்தபின் போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் பரப்பினர்.


13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்து அரசுகளையும், பேரரசுகளையும் நிறுவிய இஸ்லாமியர்கள் மூலமாக இஸ்லாம் சமயம் இந்தியாவுக்குள் வளரத் தொடங்கியது.


2001இல் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்குப்படி, இந்தியாவில் 80.5% மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். உலகிலேயே இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவோர் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது. கிறித்தவம், சீக்கியம், சமணம், அய்யாவழி, பௌத்தம், யூதம், பார்சீகம் ஆகியவை இந்தியாவில் பின்பற்றப்படும் மற்ற சமயங்கள். இந்திய மக்கள் தொகையில் 13.4% இஸ்லாமியர்; 2.5% கிறித்தவர் உள்ளனர்.

சமூக அமைப்பு

சாதிய அமைப்பே இந்திய சமூக கட்டமைப்பின் சமூக அதிகாரப் படிநிலை முறைமையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும் பிரிவுகளில் காணலாம். இவற்றுள் பல்லாயிரக் கணக்கான உட்பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றிற்கு இடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. தற்போது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன. இது தவிர தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடும் உள்ளது. இருப்பினும் இந்நாட்டின் அரசியல் வாழ்விலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.


இந்தியாவில் பெண்களின் சமூக நிலை என்றும் சம நிலமையுடையதாக இருக்கவில்லை. அரசியலில், தொழில் வாய்ப்பில், கல்வியில், பொருளாதார பங்கில் பெண்கள் புறக்கணிகப்பட்டோ தடுக்கப்பட்டோ வந்துள்ளார்கள். பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமையாக்கல், கோயிலுக்கு அடிமையாக்கல் (தாசிகள்) என பெண்களின் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்ட ரீதியாக பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என கூட சொல்ல இயலாது ஏனெனில் இந்தியாவில் சமய அடிப்படையிலான குடியியல் சட்டம் நடப்பில் இருக்கின்றது. எனினும், இந்திய வரலாற்றில் மற்ற நாடுகள் போல் அல்லாத ஒரு முரண்பாடும் உண்டு. அதாவது, பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படல், பெண்களை சிவனுடைய சரி பாதியாக, சக்தியாக அங்கீகரித்தல் போன்றவையாம். மேலும், நவீன இந்தியாவின் ஆளுமை படைத்த தலைவர்களாக பெண்களும் இடம் பெறுகின்றார்கள். இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் பெண்களின் நிலை ஒரே ரீதியில் அமைந்திருக்கின்றது என்றும் கூற முடியாது. குறிப்பாக கேரள மாநிலத்தில் பெண்களின் உரிமைகள் நன்கு பேணப்படுகின்றன.


சமீப காலங்களில் பெண்களின் நிலை குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சி மற்றும் அதை தொடர்ந்த இந்திய பொருளாதார வளர்ச்சி பெண்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது.


பண்பாடு

முதன்மைக் கட்டுரை: இந்தியாவின் பண்பாடு


இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய (complex), பன்முக இசை, நடனம், இலக்கியம் என பல கூறுகளை கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளை கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே.


கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை, இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. இவை தவிர நாட்டார் இசை, தமிழிசை என பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம் மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவை தவிர நாட்டுபுற நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.


உலகின் மிக முக்கிய இலக்கிய உருவாக்கங்களை இந்தியா கொண்டுள்ளது. சமஸ்கிருதம், தமிழ், வங்காள மொழி, உருது போன்ற பல முக்கிய உலக மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இந்தியாவின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன. வேதம், வேதாந்தம், ஆகமங்கள், புத்தசமய படைப்புக்கள், காப்பியங்கள் (இராமாயணம், மகாபாரதம்), தமிழ் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் தமிழ் காப்பியங்கள் என பல கோணங்களில் இந்திய இலக்கியம் வெளிப்படுகின்றது.


கொண்டாட்டங்கள் இந்திய பண்பாட்டின், வாழ்வியலின் இணை பிரியா கூறுகள் ஆகும். பொங்கல், தீபாவளி, நவராத்திரி என கொண்டாட்டங்கள் பல உண்டு. இந்திய சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.


பண்டைய இந்தியாவானது அறிவியலில் சிறந்து விளங்கியது. ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோர் கோள்களின் இயக்கங்களின் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் முக்கியமானவர்களாவர். இன்று பொதுவாக பாவிக்கப்படும் கணித எண்கள், இந்து-அரேபிக் எண்கள் ஆகும். இந்தியாவிலேயே பூச்சியம் என்ற எண்ணக்கரு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பர்.


சேலை, வேட்டி, குர்தா, சல்வார் கமீஸ் போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும் கோதுமையும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாளி, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.


இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாக திரைப்படங்கள் விளங்குகின்றன. இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் வங்காள மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.


இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க சில பண்பாட்டு வேறுபாடுகளை காண முடியும் என்றாலும் மாநில மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் கூடல் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, பெருகி வரும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகும். 1990களுக்குப் பிறகு நிகழ்ந்த உலக மயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இந்தியப் பண்பாட்டை குறிப்பிடத்தக்க அளவு மேல் நாட்டு பண்பாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், மொழிகள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு / உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.


பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இந்திய பண்பாட்டின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இன்னும் நீர்த்துப் போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும்

விளையாட்டு

ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா


ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு எனினும் கிரிக்கெட் விளையாட்டே மிகப் பிரபலமாக உள்ளது.டென்னிஸ், செஸ், கால்பந்து (குறிப்பாக கேரளா, வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்) ஆகியவை பிரபலமான பிற விளையாட்டுகளாகும். கபடி ( சடுகுடு ), மல்யுத்தம், கில்லி தண்டா ஆகியவை இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களாகும். ஒலிம்பிக் போட்டிகளில், தனி நபர் மற்றும் தடகள விளையாட்டுகளில் இந்தியாவின் சாதனைகள் பெரிய அளவில் இல்லை. ஹாக்கியில் மட்டும் சில முறைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்த வரையில் உலக அளவிலான இரட்டையர் போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


சதுரங்கம், கேரம், போலோ, ஸ்னூக்கர், பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுகள் இந்தியாவிலிருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.

[தொகு] விடுமுறை நாட்கள்

இந்தியாவில் மூன்று நாட்கள் தேசிய விடுமுறை நாட்களாகும். அவை:


1. விடுதலை நாள் (ஆகஸ்ட் 15)

2. குடியரசு நாள் (ஜனவரி 26)
3. காந்தி பிறந்த நாள் (அக்டோபர் 2)

இவை தவிர விழாக்களுக்கென உள்ளூர் விடுமுறைகளும் உண்டு.

மாநிலங்களும் பிரதேசங்களும்

                 மாநிலங்களும் பிரதேசங்களும்

              இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.


1. ஆந்திரப் பிரதேசம்
2. அருணாச்சல் பிரதேசம்
3. அஸ்ஸாம்
4. பிஹார்
5. சத்தீஸ்கர்
6. கோவா
7. குஜராத்
8. ஹரியானா
9. இமாசலப் பிரதேசம்
10. ஜம்மு காஷ்மீர்
11. ஜார்க்கண்ட்
12. கர்நாடகம்
13. கேரளம்
14. மத்தியப் பிரதேசம்
15. மகாராஷ்டிரம்
16. மணிப்பூர்
17. மேகாலயா
18. மிசோரம்
19. நாகாலாந்து
20. ஒரிஸா
21. பஞ்சாப்
22. ராஜஸ்தான்
23. சிக்கிம்
24. தமிழ் நாடு
25. திரிபுரா
26. உத்தரகண்ட்
27. உத்தரப் பிரதேசம்
28. மேற்கு வங்காளம்

1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
2. சண்டிகர்
3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
4. தாமன், தியு
5. லட்சத்தீவுகள்
6. புதுச்சேரி
7. தில்லி

மொழி

                       மொழி

                இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் பெரும்பாலானவை இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களுள் அடங்கும். அவை இந்திய-இரானிய மற்றும் திராவிட மொழிக்குடும்பங்கள். தேவநாகரி எழுத்துருவில் வழங்கப்படும் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழிகளாகும். எனினும், பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் பரவலாக பேசப்படும் மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. அவை கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, வங்காள மொழி, மராத்தி, உருது, குஜராத்தி, ஒரியா, பஞ்சாபி, அசாமிய மொழி, காஷ்மீரி, சிந்தி, நேபாளி, கொங்கனி, சமஸ்கிருதம் முதலியன. நாடு முழுவதும் பேசப்படும் ஆங்கிலம், ஒர் இணைப்பு மொழியாக செயல்படுகிறது. தமிழும் சமஸ்கிருதமும் செம்மொழித் தகுதி பெற்ற இந்திய மொழிகளாகும். இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 1652 ஆகும்.

பொருளாதாரம்

                         பொருளாதாரம்

                     விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியில் இந்தியா, தனியார் தொழில் முயற்சிகளிலும், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற துறைகளிலும் இறுக்கமான அரசுக் கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு சோசலிசம் சார்ந்த அணுகு முறையையே கடைப்பிடித்து வந்தது. ஆயினும், 1991 ஆம் ஆண்டு முதல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் படிப்படியாக அதன் சந்தைகளைத் திறந்துவிட்டதோடு, வெளிநாட்டு வணிகம், முதலீடு என்பவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வந்தது. மத்திய, மாநில அரசிகளின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை குறைந்துள்ளதோடு, 1991 மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கம், 2008 ஜூலையில் 308 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தலும், சில துறைகளைத் தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்புக்காகத் திறந்து விடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்தியப் பொருளாதாரம் மரபுவழி வேளாண்மை, தற்கால வேளாண்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, பல தரப்பட்ட புதிய தொழில்கள் மற்றும் மென்பொருள் உட்பட்ட பல துணைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள் சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர்.


இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 டிரில்லியன் டாலர்கள் அளவை எட்டியுள்ளது. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் வேளாண்மை அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் சேவைத்தொழில்கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் தொழில்துறைகளிலும் பணிபுரிகின்றனர். இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் அரிசி, எண்ணெய்விதை, பருத்தி, சணல், தேயிலை, கரும்பு, உருளைக்கிழங்கு என்பனவாகும். வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஐ வழங்குகிறது. சேவைத்துறையும், தொழில்துறையும் முறையே 54%, 18% பங்களிப்பைச் செய்கின்றன. முக்கியமான தொழில்துறைகளில், தானுந்து, சிமெந்து, வேதிப்பொருட்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள், உணவு பதனிடல், இயந்திரங்கள், சுரங்கத்தொழில், பெட்ரோலியம், மருந்துவகை, உருக்கு, போக்குவரத்துச் சாதனங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. விரைவாக வளரும் பொருளாதாரத்துடன் கூடவே, ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகின்றது. ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் (Energy Information Administration) கணக்கீட்டின் படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவின் தாவர, விலங்கு- வளங்கள்

             இந்தியாவின் தாவர, விலங்கு- வளங்கள்

     இந்தோமாலய சூழ்நிலைவலயத்துள் அமைந்துள்ள இந்தியாவில் குறிப்பிடத்தக்க உயிரியல் பல்வகைமை காணப்படுகின்றது. 18 பெரும்பல்வகைமை நாடுகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள மொத்த இனங்களுடன் ஒப்பிடும்போது, பாலூட்டி இனங்களில் 7.6%, பறவை இனங்களில் 12.6%, ஊர்வனவற்றில் 6.2%, ஈரூடகவாழிகளில் 4.4%, மீன்களில் 11.7%, பூக்கும் தாவரங்களில் 6.0% இந்தியாவிலே காணப்படுகின்றன. இங்குள்ள சோலாக் காடுகள் போன்ற பல சூழ்நிலைவலயங்கள், உயர்ந்த விழுக்காட்டிலான பகுதிக்குரிய (endemic) இனங்களைக் கொண்டவையாக உள்ளன. ஏறத்தாழ 33 விழுக்காடு இந்தியத் தாவரங்கள் பகுதிக்குரியவை. இந்தியாவின் காடுகள், அந்தமான், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகியவற்றின் வெப்பவலய மழைக் காடுகள் தொடக்கம் இமயமலைப் பகுதிகளின் ஊசியிலைக் காடுகள் வரை பல்வேறுபட்டு அமைந்துள்ளன.

இந்த எல்லைகளிடையே, ஆச்சா மரங்களை அதிகமாகக் கொண்ட கிழக்கு இந்தியாவின் ஈரவலய இலையுதிர் காடுகள், தேக்கு மரங்களைக் கூடுதலாகக் கொண்ட மத்திய இந்தியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் காணும் இலையுதிர் காடுகள், கருவேல மரங்களைப் பெருமளவில் கொண்ட நடுத் தக்காணத்தினதும், மேற்குக் கங்கைச் சம வெளியினதும் முட்காடுகள் என்பன உள்ளன. முக்கியமான இந்தியத் தாவரங்களுள், நாட்டுப்புறங்களிலே மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படும் வேம்பு, மொஹெஞ்சதாரோவின் முத்திரைகளில் காணப்படுவதும், புத்தர் ஞானம் பெற்றதுமான அரச மரம் என்பவை குறிப்பிடத்தக்கவை.


பல இந்தியத் தாவர, விலங்கு இனங்கள் தொடக்கத்தில் இந்தியாவின் அமைவிடமான கோண்ட்வானாவில் உருவான வகைகளின் வழிவந்தவை. பின்னர், இந்தியத் தீவக்குறை நகர்ந்து, லோரேசிய நிலத்திணிவுடன் மோதியபோது, பெருந் தொகையான உயிரினங்கள் இடம் மாறுவதற்கு வழியேற்பட்டது. எனினும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த, எரிமலை வெடிப்புக்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் பெருமளவு இந்தியப் பகுதிக்குரிய இனங்கள் அழிந்து போயின. இதன் பின்னர், ஆசியப் பகுதிகளிலிருந்து, உருவாகிவந்த இமயமலையின் இரு பக்கங்களிலும் இருந்த விலங்குப்புவியில் கணவாய்கள் வழியாகப் பாலூட்டிகள் இந்தியாவுக்குள் வந்தன. முடிவில், இந்திய இனங்களில், 12.6% பாலூட்டிகளும், 4.5% பறவைகளும் மட்டுமே இந்தியப் பகுதிக்குரியவையாக இருக்கின்றன. இது, 45.8% ஊர்வனவும், 55.8% ஈரூடகவாழிகளும் இந்தியாவுக்கு உரியனவாக இருப்பதுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும். குறிப்பிடத்தக்க ஊள்ளூர் இனங்கள், சிங்கவால் மந்தி (Trachypithecus johnii), புபோ பெதோமீ (Bufo beddomii) என்னும் ஒருவகைத் தவளை இனம் என்பனவாகும். இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் அழியும் வாய்ப்புள்ளவையாகக் குறிப்பிட்டுள்ள இனங்களில் 2,9% இனங்கள் இந்தியாவில் உள்ளவை. இவற்றுள் ஆசியச் சிங்கம், வங்காளப் புலி என்பவை அடங்கும்.


அண்மைப் பத்தாண்டுகளில், மனித ஊடுருவல் காட்டுயிர்களுக்கு ஆபத்தாக அமைந்தன. இதனால், தேசியப் பூங்காக்களும், 1935 ஆம் ஆண்டில் முதன் முதலாக அமைக்கப்பட்டுப் பின்னர் விரிவாக்கப்பட்டன. 1972 இல் இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட காப்பகங்களும், 13 உயிர்க்கோள ஒதுக்ககங்களும், 25 ஈர நிலங்களும் ராம்சார் ஒபந்தம் (Ramsar Convention) எனும் அனைத்துலக ஒப்பந்தத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

புவியியல்

                      புவியியல்

               பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமாலய மலைத்தொடர்கள் (உயரமான சிகரம் கஞ்சண்சுங்கா 8,598 மீ), இந்து-கங்கை சமவெளி (மேற்கில் தார் பாலைவனம்) மற்றும் தக்கான் பீடபூமி. தக்கான் பீடபூமி மூன்று திசைகளில் முறையே கிழக்கே வங்காள விரிகுடாக் கடல், தெற்கே இந்துமாக்கடல் மற்றும் மேற்கே அரபுக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கை ஆறும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை இரண்டுமே வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. யமுனா, கோசி என்பன கங்கை நதியின் துணை நதிகள். கோசி ஆறு பாயும் நிலப்பகுதி மிகக் குறைவான சரிவைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் பொரும் அழிவைக் கொடுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. தீவக்குறைப் பகுதியில் பாயும் கோதாவரி, மகாநதி, காவிரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் சரிவு கூடிய பகுதியில் அமைந்திருப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த ஆறுகளும் வங்காள விரிகுடாவிலேயே கலக்கின்றன. நர்மதா, தாப்பி போன்ற முக்கிய ஆறுகள் இந்தியாவின் மேற்குக் கரையூடாக அரபிக் கடலில் கலக்கின்றன. இந்தியா என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது சிந்து நதியாகும். இந்திய எல்லைக்குள் இரண்டு தீவுக்கூட்டங்கள் உள்ளன. பவளப்பாறைத் தீவுகளான லட்சத்தீவுகள் இந்தியத் தீவக்குறையின் மேற்குக் கடற்கரைக்கு அப்பாலும், எரிமலைச் சங்கிலியான அந்தமான்-நிக்கோபார் தீவுக்கூட்டம் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் அந்தமான் கடலிலும் அமைந்துள்ளன.


இந்தியாவின் தட்ப வெட்பம் தெற்கே வெப்பம் மிகுந்த பருவ மழை சார்ந்ததாகவும், வடக்கே மட்டான தட்பவெப்பமுள்ள காலநிலை ஆகவும் ஏனைய பகுதிகளில் பல்வேறு இடைப்பட்ட தட்ப வெட்ப நிலைகளாகவும் நிலவுகிறது.


இந்தியாவில் கடற்கரை 7,517 கிலோமீட்டர்கள் (4,671 மைல்கள்) நீளமானது. இதில் 5,423 கிலோமீட்டர்கள் (3,370 மைல்கள்) இந்தியத் தீவக்குறைப் பகுதியையும், 2,094 கிமீ (1,301 மை) அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகள் ஆகியவற்றையும் சேர்ந்தவை. இந்தியத் தலைநிலப் பகுதியைச் சேர்ந்த கரைகளில், 43% மணற்பாங்கானவை, 11% பாறைகளைக் கொண்டவையாகவும், 46% சேற்று நிலங்கள் அல்லது சதுப்பு நிலங்களாகவும் காணப்படுகின்றன.

19 நவம்பர் 2011

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011


                                  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

                                                   மாநில மையம்.
          19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு

                                            அழைப்பிதழ்.


              நாள்;  24,25,26 நவம்பர்-2011
              இடம்; பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி,
                                          சத்தியமங்கலம் - 638402
                                        ஈரோடு மாவட்டம்.

           அன்புடையீர்,
                                      வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஓர் மக்கள் இயக்கம். கல்வி,அறிவியல் பரப்புதல்,சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளில் செயல்பட்டு வரும் அமைப்பு. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.இம்மாநாட்டை தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC - Network ) தேசிய அளவில் ஒருங்கிணைக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. மத்திய அரசின் அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை உதவி செய்கிறது.இம்மாநாட்டின் மையக்கருப்பொருளாக  ''நிலவளம்; வளத்துக்காக பயன்படுத்துவோம்,வருங்காலத்துக்காகவும் பாதுகாப்போம்.'' என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாநில மாநாட்டை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி நடத்திக்கொடுக்க அன்புடன் இசைந்துள்ளது. தாங்கள் இம்மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறோம்.
                                                                இவண்;
                           மாநில மாநாட்டு வரவேற்புக்குழு மற்றும்
                        பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி.
                            **************+++++++++++***************
                               
                          துவக்க விழா
  


     24-11-2011 வியாழக்கிழமை  மாலை 02-00 மணி
      
      தலைமை ; Dr.N. மணி
                               மாநிலத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
    
      முன்னிலை; Dr.S.K.சுந்தரராமன், அவர்கள்
                            இயக்குநர்,பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி
   
       வரவேற்புரை; திரு.R.மணி  அவர்கள்
                            மாநில வரவேற்புக்குழு செயலாளர் அவர்கள்.
  
     அறிவியல் பரப்புதலில்
      அறிவியல் இயக்கம்        ;திரு.M.S.ஸ்டீபன் நாதன்
                                                              பொதுச்செயலாளர்,
                                                தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

   அறிவியல் கல்வியும்
  அறிவியல் மாநாடும்       ; திரு.N.  மாதவன்,
                                                 மாநில ஒருங்கிணைப்பாளர்,NCSC

   கருப்பொருள் அறிமுகம்    ;பேரா.S. மோகனா,அவர்கள்
                                                   கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர்,NCSC

  துவக்கவுரை        ; S.பன்னீர் செல்வம் IPS அவர்கள்
                             மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,ஈரோடு

   வாழ்த்துரை      ; Dr.A.சண்முகம் அவர்கள்
                          முதல்வர்,பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி
                     
                                 திரு.C. இராமலிங்கம் அவர்கள்
                                     இணை செயலர்,NCSTC - Network  
                    
                               திரு.V.குமார் அவர்கள்
                            மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,ஈரோடு.
                     
                             திருமதி.M.இராதா,
                                             மாநிலப் பொருளாளர்,
                                 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

    நன்றியுரை; திரு;R.M.சுப்பிரமணியம் அவர்கள்
                           மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர்,  NCSC

             
                   25-11-2011 வெள்ளிக்கிழமை          

                               மதியம் 2-00 மணி
         ஆசிரியர்களுக்கான  சிறப்பு கருத்தரங்கம்

         தலைமை; திரு.S. சுப்பிரமணியன் அவர்கள்
                                           மாநில செயலாளர்,
                                  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
      
     முன்னிலை ; திரு.N. நடராஜன் அவர்கள்
                                  மாவட்ட செயற்குழு, 
                               தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
     
     வரவேற்புரை; திருமதி.G.நளினா அவர்கள்
                                   மாவட்ட துணைத் தலைவர்,
                              தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
     
      கருத்துரை;திரு.பொன்.குமார்
                          மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,
                         அனைவருக்கும் கல்வி இயக்கம்,
                                                   ஈரோடு.

     நன்றியுரை; திரு. B. லியோ
                            மாவட்ட ஒருங்கிணைப்பாளர் NCSC

           
                                   முக்கிய நிகழ்வுகள்

                                            24-11-2011 வியாழன்
        
        காலை 10-00 மணி முதல் 12-00 மணி - 
                                                ஆய்வறிக்கைகள் பதிவு
        
         மாலை 4-00மணி முதல் 5-00மணி -
                              மாநாட்டு நினைவாக    மரக்கன்று நடுதல்

        இரவு 6-00 மணி முதல் 8-00மணி - 
                                  விஞ்ஞானிகள் முதல் சந்திப்பு.
        
     
                                     25-11-2011    வெள்ளி
      
         காலை 9-00மணி முதல் 12-00மணி - 
                                                ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தல்
                                                   மற்றும் வாய்மொழி தேர்வு
     
       காலை 9-00 மணி முதல் 12-00மணி -
                                          ஆசிரியர்களுக்கான திரைப்படங்கள்
    
      மாலை 2-00 மணி முதல் 5-00 மணி - 
                                             குழந்தைகளின் செயல்திறன் வளர்க்க
                                                                             இணை அமர்வுகள்
    
      மாலை 5-00மணி முதல் 7-00மணி -
                                         விஞ்ஞானிகள் இரண்டாம் சந்திப்பு.

                                        
                                  நிறைவு விழா 

                                26-11-2011  சனிக்கிழமை 
                                   
                          காலை 10-00 மணி
        
    தலைமை; திரு.S.T.பாலகிருஷ்ணன் அவர்கள்
                            மாநிலத் துணைத் தலைவர்

    முன்னிலை ; Dr.A.M.நடராஜன் அவர்கள்
                      முதன்மை செயல் அலுவலர்,
                     பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி

    வரவேற்புரை; திரு.V.உமா சங்கர் அவர்கள்
                                            மாவட்ட தலைவர்,
                               தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

   மாநாட்டு ஆய்வறிக்கை ; திரு.K.காத்தவராயன்,
                                             மாநில செயலாக்கக்குழு,NCSC

   வாழ்த்துரை ; திரு;K.முரளி,அவர்கள்,
                                             திட்ட மேலாளர்,
                                            எய்டு எட் அக்சன்.
                        
                             திரு. கருப்புசாமி,அவர்கள்
                                                            இயக்குநர் -
                                                                       ரீடு

  அகில இந்திய மாநாடு
   குழுக்கள் அறிவித்தல் ; திரு.C.வெங்கடேசன்
                                                   மாநில செயற்குழு உறுப்பினர்
                                                 
                                                   திரு.D.உதயன்
                                                   வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்,NCSC
                                                
                                                  திரு. S.கணபதி
                                                  தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்-NCSC
                                                
                                                  Dr.V.சுகுமாரன்
                                                 கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்-NCSC
                                                
                                                   திரு.S.சேதுராமன்       
                                                  மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்-NCSC  

 பரிசளித்து நிறைவுரை ;  Dr.P.முருகேச பூபதி
                                                     துணை வேந்தர்,
                                                     தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
                                                         கோவை
  
   நன்றியுரை ;                 திரு.V.வைரமுத்து
                                                மாவட்ட செயற்குழு,
                                             தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
-------------------------------------------------------------------------------------------------------------                                                               குறிப்பு ;-
                   குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழ்
                        (1) துளிர் (தமிழில்)
                        (2) ஜந்தர்-மந்தர் (இருமாத ஆங்கில இதழ்)
                            வாங்கிப் படியுங்கள். 
      அனைவரும் அறிவியல் இயக்கத்தில் இணைந்து புதுமைகளைப் புகுத்துவோம். தொழில்நுட்பங்களை வளர்ப்போம்.
         
                                       என
         தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-
                      ஈரோடு மாவட்டம். 
      ===================================================================
        | |  பதிவேற்றம் ; PARAMESDRIVER // THALAVADI    ||
====================================================================