20 அக்டோபர் 2024

நமது வணிகம்... NVM GROUP

  



  அன்புள்ள,

               வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம்.



இப்பதிவின் அடிக்குறிப்பில் கண்டுள்ளவாறு  மூன்று நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்தன. முதலில் கொடுமுடி செல்ல முடிவு செய்தேன். 12ஆம் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த‍பிறகு கோவை செல்வதை இறுதிப்படுத்தி  நமது வணிகம் சென்றேன். 

மிக முக்கியமான மூன்று நிகழ்வுகளிலும் விருந்தோம்பல்தமிழர்களுக்கே உரித்தான  அபார உபசரிப்பு ...இருந்தும் பல் ஆட்டங்காட்டும் எனக்கு ருசிக்க முடியாதே! பசிக்கு மட்டும்தானே சாப்பிட முடியும்..

                            20-10-2024 ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற நிகழ்வு பற்றிய பதிவுங்க.மிகச் சுருக்கமான பதிவிடுகிறேன். 



"நமது வணிகம்" கோவை சந்திப்பின் 

 சிறப்பு விருந்தினர்கள்..(சிறந்த ஆளுமைகள்)


மேற்கண்ட ஆளுமைகளின் சிறப்புரை கேட்ட எனக்கு அந்த பாக்கியம் கிடைத்த‍து.இதைத்தான் நான்,

 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' 

என்ற கணியன் பூங்குன்றனாரின் அறவுரையை இன்றளவும் மதிப்பளிக்கிறேன்..

        நமது வணிகம் நிகழ்வ..யாருமே அறிமுகமில்லாத இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன்.இந்த நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே ஒரு இளைஞர் துறுதுறுவென சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்.அவரது செயல்பாடுகளை கண்ணுற்ற எனது மனதில் ஒருவேளை களப்பணிக்காக முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் போன்று  நியமிக்கப்பட்டவராக இருக்குமோ?  என்றே எண்ண ஓட்டம் மின்னியலில் எலக்ட்ரான்கள் ஓடுவது போன்று இயங்கியது.    நிகழ்வுகள் இயக்கம்பெறத்தொடங்கிய பின்னரே,  இவர்தான் நமது வணிகம் குழுவின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்.

மூன்று இலட்சம் ரூபாய்க்கு இரண்டு பஜ்ஜி சாப்பிட்டு அனுபவம் பெற்ற பாக்கியசாலி  

திரு. MMபிரபு அவர்கள் என்று அறிய முடிந்த‍து.

(கவனியுங்க...இரண்டு பஜ்ஜியின் விலை மூன்று இலட்சம் ரூபாய்...நம்பித்தான் ஆக வேண்டும்.திரு.M.M.பிரபு அவர்களின் அனுபவத்தின் உண்மை நிகழ்வு.இதனை தலைப்பாக வைத்தே ஒரு நாவல் எழுதிவிடலாம் போலிருந்த‍து)

                                        நிகழ்வின் விபரம்....



            (20/10/2024) ஞாயிறு,  நமது வணிகம் அமைப்பின் சார்பாக தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக "பொறுப்பு நியமன சந்திப்பு 2024 மற்றும் "தொழில் நெறிமுறை ஊடகவியல் பயிற்சியும்" வழங்கப்பட்டது. இதனை கோவை தொழில்முனைவோர் லயன்ஸ் சங்கம் இணைந்து வழங்கியது.

இதில் லயன்ஸ் பன்னாட்டு சங்கங்களின் தென் இந்திய CSR மண்டல தலைவர் PDG PMJF. S. ராம்குமார் அவர்கள், சேரன் அக்கடெமி திரு. ஹுசைன் அஹமத் அவர்கள் மற்றும் டெக் மஹிந்திரா கோவை மண்டல இயக்குனர் திரு. சரவணன் ஐயா அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

நமது வணிகம் மாத இதழ் ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகிகளும், கோவை தொழில்முனைவோர் லயன்ஸ் சங்க தலைவர், நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழகம் முழுதும் இருந்து 20 மாவட்டங்களில் இருந்து 80 ற்கும் மேற்பட்ட தொழில்‌ முனைவோர்கள் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றனர்.

- நமது வணிகம் மாத இதழ்...









-----------------------------

இங்கு நான் கற்றுக்கொண்டவை...

(1) இரண்டு பஜ்ஜிக்கு மூன்று இலட்ச ரூபாய்களும் கொடுக்கலாம்..

(2)வாய்ப்புகள் பலமுறை வரும். நாம்தான் சரியாகப் பயன்படுத்த வேண்டும். (கொக்கொக்க கூம்பும் பருவத்தே-குறள் நினைவுக்கு வந்த‍து)

(3)ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது..

(4)வணிகத்தில் சமுதாய ஒற்றுமை வேற்றுமை..

(5) யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முப்பாட்டனார் கணியன் பூங்குன்றனார் கூறியது இன்று நாம் அனுபவிக்க முடிகிறது.அதன்பலனாக வெளிநாடுகளின் தொழில்நுட்பங்களை அட்டக்காப்பி அதாங்க ஈயடிச்சான் காப்பியடித்து நம்ம நாட்டில் தொழில் தொடங்கி இலாபம் ஈட்டலாம். என்ற அனுபவப்பகிர்வுகளையும் கேட்க முடிந்த‍து.

(6) BNI -  TEAM என்னும்  பெரும் வணிகர்களுக்கான குழுவினைப்போன்று சிறு குறு வணிகர்களின் நலனுக்கான 'B'  TEAM  ஆக ஒரு குழு தொடங்குவதற்கான முனைப்பில் உள்ளனர் என்ற  சிறப்பான தகவலையும் அறிய முடிந்த‍து.

           







மேற்படி தமிழியக்கத்தில் நானும் பொறுப்பாளராக செயல்படுகிறேன்.
மேற்படி  நுகர்வோர் அறிக்கை மாத இதழின் செய்தியாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். தகவலுக்காக....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நமது வணிகம்... NVM GROUP

     அன்புள்ள,                 வலைப்பக்க வாசகர்களுக்கு வணக்கம். இப்பதிவின் அடிக்குறிப்பில் கண்டுள்ளவாறு  மூன்று நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாற...