கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...
மனித இனத்தில் அழிக்கமுடியாத பெரும்நோய்கள் சாதிப்பாகுபாடு....
QUORA -இணைய பக்கத்தில் கிடைத்த தகவலை கீழே பகிர்ந்துள்ளேன். வாசியுங்க...
- உயர் ஜாதியினரின் இறுதி சடங்கு நடை பெறும் இடத்தில் கீழ் ஜாதியினருக்கு இடம் தர மறுப்பது.
- உயர் ஜாதியினரை எதிர்த்து கீழ் ஜாதியினர் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை கொலை செய்வது.
- உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த தமக்கு அதே உயர்ஜாதியை சேர்ந்த மணமகன்/ மணமகள் தேவை என்று திருமண விளம்பரம் கொடுப்பது.
இவை அனைத்தும் ஹிந்து மதத்தில் நடைபெறுகிறது என்று நினைத்தால் நிற்க. இது போன்ற ஜாதி கொடுமைகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களிடையே உண்டு.
பொதுவாக ஹிந்து மதத்தில் மட்டுமே ஜாதி பிரிவினை உண்டு என்றும் ஏனைய மதத்தில் ஜாதிகள் இல்லை, பிரிவினை மட்டுமே உண்டு என்ற ஒரு தவறான எண்ணம் பலரிடம் உண்டு. இதே கேள்விக்கு அதே மாதிரி பதில்களும் சிலர் அளித்திருக்கின்றனர்.
இந்தியாவில் 85% இஸ்லாமியர்கள் கீழ் ஜாதி என்று அழைக்கப்படும் பஸ்மன்டாஸ் (Pasmandas) குழுவை சார்ந்தவர்கள், 15% இஸ்லாமியர்கள் உயர்ந்த ஜாதி என்று அடையாளம் காணப்படும் அஷ்ரப் (Ashraf) குழுவை சார்ந்தவர்கள்.
இஸ்லாமில் உயர்ந்த ஜாதி - சயீத், மாலிக், ஷேக், முகல், பதான், ரன்கட் (Rangad) முஸ்லீம் ராஜ்புட் etc
இஸ்லாமில் கீழ் ஜாதியினர் - அர்சல் (Arzal) தலித் இஸ்லாமியர்கள்.
இஸ்லாமில் பின்தங்கிய ஜாதியினர் - அஜ்லப் (Ajlaf)
அம்பேத்கர் அவர்களும் "Thoughts on Pakistan" என்ற புத்தகத்தில் இஸ்லாம் மதத்தின் ஜாதிகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். Thoughts On Pakistan (பக்கம் 225-226)
உயர் ஜாதி இஸ்லாமியர்கள் அடக்கம் செய்யப்படும் இடுகாட்டில் கீழ் ஜாதி இஸ்லாமியர்களுக்கு இடம் வழங்கப்படுவதில்லை. Backward Muslims protest denial of burial
உயர்ஜாதி இஸ்லாமியருக்கு உயர்ஜாதி மணமகள் தேவை என்ற நாளிதழ் விளம்பரம்.
டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆகியவை உயர்ஜாதி இஸ்லாமியர்கள் பிடியில் உள்ளது என்றும் பல்வேறு கீழ் ஜாதி இஸ்லாமியர்கள் சாதி அடிப்படையில் அவமானம், அவமரியாதை மற்றும் வன்முறையை அன்றாடம் சந்திக்கின்றனர் என்று கீழ் ஜாதி இஸ்லாமியர்களின் நல்வாழ்வுக்காக போராடி வரும் அன்வர் அலி அவர்கள் தனது புத்தகமான Maswat Ki Jung என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். Masawat Ki Jung [Paperback] [Jan 01, 2005] Ali Anwar - Ali Anwar
The Pasmanda movement castigates Muslim minority institutions, particularly, Aligarh Muslim University (AMU) and Jamia Millia Islamia (JMI). Pasmanda activists say that since the inception of AMU, upper-caste Muslims have occupied all the important positions in the university. It was established for the Shahzadas (princes), not for the poor and backward Muslims, they say and add that Sir Syed, the founder, was not supportive of education for women and backward Muslims. They say, in post-Independence India, upper-caste Muslims have taken over these institutions in the name of minority rights. - Pasmanda movement questions the myth of a monolithic Indian Muslim identity
பதானி என்ற ஆடையை ஒரு தலித் அணிந்த போது ஜாதியின் காரணமாக என்ன நிகழ்ந்தது என்று இங்கு காணலாம்.
“You belong to lower caste and should not wear a pathani.” They further threatened to kill Bhati if he dared to wear a ‘pathani’ again.
Police have booked Amjad Pathan and Azgar Pathan for beating up Jayanti Bhati (27), a truck driver, on afternoon of November 26 near Green Palace hotel in Gandhidham.
Casteist rage: Dalit man thrashed for wearing ‘pathani’, two booked | Rajkot News - Times of India
காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கீழ் ஜாதி இஸ்லாமியர்களுக்கு பெரும்பாலும் வழங்குவதில்லை, மாறாக உயர்ஜாதி இஸ்லாமியர்களுக்கே வழங்குகிறது. சுதந்திர இந்தியாவில் நடந்த 14 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 400 இஸ்லாமியர்களில் 340 பேர் உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. Reservation for Muslim Backwards, The Milli Gazette, Vol.5 No.22, MG116 (16-30 Nov 04)
அதாவது 2% உயர் ஜாதி இஸ்லாமியர்கள் 85% இடங்களையும். 12% கீழ் ஜாதி இஸ்லாமியர்கள் 15% இடங்களையும் பெற்றனர்.
இஸ்லாமியர்களிடையே உள்ள ஜாதி பாகுபாடு துன்பத்தை அளிக்கிறது என்றும், அதை சீர்திருத்தம் செய்ய அவர்களுக்கிடையே ஓர் இயக்கம் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும், ஹிந்துக்களுக்கு இடையே இத்தகைய தீமைகள் இருந்தாலும், அவர்களில் சிலர் அதன் இருப்பை அறிந்திருக்கிறார்கள், அவர்களில் சிலர் அவற்றை அகற்றுவதற்காக தீவிரமாக போராடுகிறார்கள், மாறாக இஸ்லாமியர்கள் தங்களுக்குள் நிலவும் ஜாதி பாகுபாடு என்ற தீமையை உணரவில்லை, அதன் விளைவாக அவர்கள் அதை அகற்றுவதற்கு போராடுவதற்கு பதிலாக தற்போதுள்ள நடைமுறைகளில் எந்த மாற்றத்தை செய்வதற்கும் இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள் என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
The existence of these evils among the Muslims is distressing enough. But far more distressing is the fact that there is no organized movement of social reform among the Musalmans of India on a scale sufficient to bring about their eradication. The Hindus have their social evils. But there is this relieving feature about them—namely, that some of them are conscious of their existence and a few of them are actively agitating for their removal. The Muslims, on the other hand, do not realize that they are evils and consequently do not agitate for their removal. Indeed, they oppose any change in their existing practices.
—From Pakistan, or the Partition of India - B.R. Ambedkar -pp. 218-223
BR Ambedkar: In his own words
தற்போது அலி அன்வர் போன்ற சிலர் பஸ்மன்டா குழுவினரின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்தாலும், இஸ்லாம் மதத்தில் உள்ள ஜாதி வேறுபாடுகளை களைய அவர்கள் செல்லவேண்டிய தூரம் மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்து மதத்தில் 4 ஜாதிகள் உள்ளதை போல் கிருத்துவ மற்றும் முஸ்லீம் மதத்திலும் 4 பிரிவுகள் உள்ளதாக சொல்கின்றனரே உண்மையா?
கிறிஸ்துவ மதத்தில் உள்ள ஜாதி வேறுபாடுகளை மற்றொரு நாள் காணலாம், அங்கும் ஜாதிகள் இல்லாமல் இல்லை, தலித் கிருஸ்தவ மதத்திலும் உள்ளனர்.
ஹிந்து மதத்தில் மட்டுமல்ல கிறித்துவம் மற்றும் இஸ்லாம் மதத்திலும் ஜாதி பிரிவினைகள் உண்டு.
எந்த மதமாக இருந்தாலும் ஜாதி பிரிவினைகள் ஒழிய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக