31 ஜூலை 2024

தமிழ் எண்கள் ...1 முதல் கோடி,கோடி வரை..

 



        கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறோம்...


"தமிழரிடம் தமிழில் பேசுவோம்"

தமிழ் எண்களை மீண்டும் பயன்படுத்துவோம். 



தமிழ் எண்கள்,இந்திய-அரேபிய எண்கள் இரண்டையும் பயன்படுத்தியுள்ள மைல்கல்...நன்றி; தஞ்சாவூர் அருங்காட்சியகம்.


  ஒன்று என எழுதப்பட்ட எல்லைக்கல் ,நன்றி; சேலம் அருங்காட்சியகம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத் தொடக்கத்தில் தமிழ் எண்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன.என்பதற்கான சான்றுகள் மேற்கண்ட மைல்கற்கள்....

ஒன்று விழ ஒன்பதாய் எழும்.
வாழும் உலகெங்கும். வீழாது தமிழ்.
பழகு தமிழை அழகு தமிழாய் எழுதுவோம்.

தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன்படுத்தப்படவில்லை.

 10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் இருப்பதைக்கொண்டு இதை அறியலாம். 

        எழுத்தால் எழுதப்படும் தமிழ் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே (Abbreviational System) பயன்படுத்தப்பட்டன. 

சுழியம்( 0 ) அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட்டன.

உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டன.

அதாவது,

இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று
௨-௲-௪-௱-௫-௰-௩

தற்கால புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகின்றன. .

  ௧ = 1, ௨ = 2, ௩ = 3, ௪ = 4, ௫ = 5,

 ௬ = 6, ௭ = 7, ௮ = 8, ௯ = 9, ௰ = 10, 

௰௧ = 11, ௰௨ = 12,௰௩ = 13,௰௪ = 14,௰௫ = 15,

௰௬ = 16,௰௭ = 17, ௰௮ = 18, ௰௯ = 19, ௨௰ = 20,

௨௰௧ = 21,௨௰௨ = 22,௨௰௩ = 23,௨௰௪ = 24,௨௰௫ = 25,

௨௰௬ = 26,௨௰௭ = 27,௨௰௮ = 28,௨௰௯ = 29,௩௰ = 30,

௩௰௧ = 31,௩௰௨ = 32,௩௰௩ = 33,௩௰௪ = 34,௩௰௫ = 35,

௩௰௬ = 36,௩௰௭ = 37,௩௰௮ = 38,௩௰௯ = 39,௪௰ = 40,

௪௰௧ = 41,௪௰௨ = 42,௪௰௩ = 43,௪௰௪ = 44,௪௰௫ = 45,

௪௰௬ = 46,௪௰௭ = 47,௪௰௮ = 48,௪௰௯ = 49,௫௰ = 50,

௫௰௧ = 51௫௰௨ = 52௫௰௩ = 53௫௰௪ = 54௫௰௫ = 55௫௰௬ = 56௫௰௭ = 57௫௰௮ = 58௫௰௯ = 59௬௰ = 60

௱ = 100,  ௨௱ = 200, ௩௱ = 300, 

௱௫௰௬ = 156, ௲ = 1000, ௲௧ = 1001,

௲௪௰ = 1040, ௮௲ = 8000, 

௰௲ = 10,000, ௭௰௲ = 70,000, 

௯௰௲ = 90,000, ௱௲ = 100,000 (lakh)

௮௱௲ = 800,000, ௰௱௲ = 1,000,000 (10 lakhs)

௯௰௱௲ = 9,000,000, ௱௱௲ = 10,000,000 (crore)

௰௱௱௲ = 100,000,000 (10 crore)

௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)

௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)

௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)

௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...