12 மார்ச் 2019

DRIVER CHESS சதுரங்கம் விளையாட தெரியுமா?

அன்புடையீர்,
            இலவசமாக சதுரங்க விளையாட்டு பயிற்சி  வகுப்பு  ........
(2019 மே மாதம் ஜேம்ஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்காக இலவசமாக சதுரங்கப் பயிற்சியளித்ததன் அனுபவமே இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன்.)
              - - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
             சதுரங்கப் பயிற்சி இலவசமாக நடத்த அறிவித்ததால் என்னை நோக்கி வந்த கேள்வி...
            (1) செஸ் சொல்லித்தர யார் வருகிறார்கள்? கிராண்ட் மாஸ்டரா?ஆர்பிட் வீரரா?சாம்பியனா? செஸ் விளையாட்டு மெட்ரிக் போன்ற வசதியுள்ள பள்ளிகளில்தானே பயிற்சியளிக்க முடியும்! உன்னால் முடியுமா?என்று பலரும் அவரவரின் எண்ணங்களுக்கேற்ப கேள்வி கேட்டவண்ணம் உள்ளார்கள்!.அவர்களுக்கு
என்னுடைய பதில்....
  செஸ் விளையாட அறிவு ஒன்றே போதும்..
சாதனையாளர்கள் யாருமே பிறப்பதில்லை.,உருவாக்கப்படுகிறார்கள்..
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் விஸ்வநாதன் அவர்கள் தன் சொந்த முயற்சியால் பயிற்சி எடுத்து சாதனை புரிந்தவர்.அதாவது,'தானாக முளைத்த வேப்ப மரம்!'..
 செஸ் விளையாட அடிப்படை என்னவென்றால்!
கம்ப்யூட்டர் கையாள கீபோர்டு பயன்பாடு அவசியமாக தெரிந்திருப்பதைப்போல, செஸ் விளையாட அடிப்படையான செஸ்மொழி அறிந்திருத்தலும் சுயமாக சிந்தித்து விளையாடும் வழிகாட்டுதலும் தேவை....

                             தலையும் புரியாமல்,வாலும் புரியாமல் செஸ் விளையாடினால் அலுப்பு தட்டும்.வெறுப்பினை ஏற்படுத்தும்.அதுவே முறையாக, கட்டங்களில் முழுப் பயிற்சியளித்து, செஸ் குறியீடுகளைக் கற்பித்து,காய்களின் திறன் மற்றும் நகரும் போக்கு உள்ளிட்ட விதிகளைக் கற்பித்தால் ,யாவரும் மூளை செயல்பாட்டால்,அறிவை உபயோகித்து,சிந்தித்து,திட்டமிட்டு,தந்திரங்களைக் கையாண்டு,வியூகம் அமைத்து ஆர்வமாக விளையாடலாம்.இந்த அடிப்படைத்  தகவல்களை சொல்லிக்கொடுத்தாலே மனதில் வைத்து தன் திறமைகளை கையாண்டு சுயமாக சிந்தித்து ஆர்வத்துடன் விளையாடுவர்.
  1980ஆம் ஆண்டுவரை இந்தியாவில் ஒருவராவது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற மாட்டார்களா? என ஏங்கியகாலங்களில் தானாக முளைத்த வேப்பமரமாக,நாகப்பட்டினம் மாவட்டம்-மயிலாடுதுறையில் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் சென்னையில் படிக்கும்போது ஆர்வத்தினால் தானே பயிற்சிசெய்து 1988 ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக பட்டம் பெற்ற வரலாறு  படித்து பாருங்க!..
  நடுத்தர குடும்பத்தில் பிறந்த சென்னை மாணவர் பிரக்ஞாநந்தா 2018ஆம் ஆண்டில் இத்தாலியின் மோரோனி லைகா ஜூனியருடன் மோதி வெற்றிபெற்றபின்பு  நெதர்லாந்தின் ரோலண்ட்(2514 புள்ளி) மோதி வெற்றிபெற்று (12வருடம் 10மாதம்13நாள்) இளம் வயது  கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும், உலகளவின் 2வது இளம்வீரர் என்ற சாதனை படைத்தார்.அவருடைய வரலாறும் படித்துப் பாருங்க!!..
  இந்த ஆண்டு நம்ம ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசை சேர்ந்த ப.இனியன் என்ற (16வயது) மாணவன் 'ஒளிரும் ஈரோடு' என்னும் தன்னார்வ அமைப்பின் உதவியால்  பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற சர்வதேச செஸ்போட்டியில் பங்கேற்று 2513 புள்ளிகள் பெற்று இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
இந்தியாவின் 61கிராண்ட் மாஸ்டர்களில் தமிழ்நாடு19க்கும் அதிகமான கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி முதலிடத்திலும்,மேற்குவங்கம் 8 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஆக...அடிப்படை பயிற்சிகளை முறையாக கொடுத்தாலே ஆர்வமுள்ள அனைவரும் விளையாட கற்றுக்கொண்டு சுயமாக சிந்தித்து ஆர்வமுடன் விளையாடுவர்.வெற்றியும் பெறுவர்..
   என நம்பிக்கையுடன்,
   C. பரமேஸ்வரன்,
  விதைகள் வாசகர் வட்டம்,
 சத்தியமங்கலம்

09 மார்ச் 2019

இலவச செஸ் பயிற்சி.......பதிவு செய்யுங்க...

                         விதைகள் வாசகர் வட்டம் மற்றும்
             காருண்யா கம்ப்யூட்டர் சென்டர் இணைந்து நடத்தும்
                                கோடைகால பயிற்சி வகுப்பு.-மே 2019
            இலவச (செஸ்) சதுரங்க பயிற்சி மற்றும் ஓவிய பயிற்சி-
                            ++++++++++++++++++++++++++++++++

இடம்;     ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பேருந்து நிலையம் அருகில்,
சத்தியமங்கலம்.
நாள்;       2019 மே மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் (5,12,19,26 தேதிகள்)

நேரம்;
முதலாவதாக......
                   2,3,4,5 வகுப்பு மாணவ,மாணவியருக்கு காலை 9மணி முதல் 10 மணிவரை - செஸ் விளையாட்டு அடிப்படைப் பயிற்சி.
(செஸ் விளையாட்டின் பயன்கள்,கட்டங்களில் முழு பயிற்சி, காய்களும் அவற்றை நகர்த்தும் முறைகளும்,செஸ் மொழி,விளையாட்டுவிதிகள்,விளையாடும் முறை,கேம் சீட் எழுதும் முறை பற்றிய பயிற்சி)
இரண்டாவதாக.......
               6,7,8 வகுப்பு மாணவ,மாணவியருக்கு காலை 10 மணி முதல் மதியம் 12மணி வரை - செஸ் விளையாட்டு ஆரம்ப பயிற்சி.
 அடிப்படைப் பயிற்சியுடன்,யோசிப்பது பற்றிய பயிற்சி,திறப்புகள்,கோட்டை கட்டுதல்,நடுகள ஆட்டம், போரிடுதல்,தற்காப்பு,திட்டமிடுதல்,தந்திரங்கள்,சூழ்ச்சிகள்,தாக்குதல், பரிமாற்றம்,பலியாட்டம்,ஃபோர்க்,பின்(மறைத்தல்),இரட்டைக்குறி,
இறுதியாட்டம்,செக்,செக்மேட்,ஸ்டேல்மேட்,டிரா போன்ற  பயிற்சிகள்,EDCC, TNSCA,AICF,FIDE (WCF), ELO Rating,ORBIT List - இவைகளுக்கான விளக்கம் அளித்தல்
மூன்றாவதாக.........
          ஓவிய பயிற்சி ஆர்வமுள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும்....
  மதியம் 3மணி முதல் 5மணி வரை..ஓவியப் பயிற்சியில் பென்சிலால் வரை பயிற்சி,நிழல் ஓவியம் வரை பயிற்சி,முப்பரிமாணம் வரை பயிற்சி,


குறிப்பு ;
 செஸ் ஆர்வலர்கள், செஸ் வீரர்கள்,பயிற்சியாளர்கள்,பள்ளிகள் என அனைவரும் கோடைகால பயிற்சியில் பங்கேற்கலாம்.ஆலோசனை வழங்கலாம்.இணைந்து மாணவர் நலனுக்கான பணியாற்றலாம்...

 விதிமுறைகள்;
 (1) இந்த பயிற்சி சேவை நோக்கமானதால் முற்றிலும் இலவசமானது.
(2)மாணவ,மாணவியர் கண்டிப்பாக முன்பதிவு செய்யவேண்டும்.
(3)முன்பதிவு செய்ய கடைசி நாள் 2019 ஏப்ரல் 24 மாலை6மணி வரை.
(4)மாணவியர் பயிற்சிக்கு வரும்போது கண்டிப்பாக பெற்றோருடன் அல்லது பாதுகாவலருடன் வரவேண்டும்.
(5) சதுரங்க பயிற்சிக்கு வருவோர் செஸ்போர்டு செட்,ஒரு நோட்டு,பேனா,பென்சில்,ஸ்கேல்,கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
(6) ஓவிய பயிற்சிக்கு வருவோர் ஒரு நோட்டு,பேனா,பென்சில்,ஸ்கேல்,அழிப்பான் ஆகியன கொண்டு வரவேண்டும்.
(7)பயிற்சி முடிந்த பின்னர்  சதுரங்கபோட்டி  மற்றும் ஓவிய போட்டி நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.

முன்பதிவு செய்ய ...
(1)திரு.யாழினி ஆறுமுகம்,தலைவர்,
யாழினி புத்தக நிலையம்,பேருந்துநிலையம் அருகில்,
சத்தியமங்கலம்-
வாட்ஸ்அப் எண் ; 9003790297
(2)திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,
வாட்ஸ்அப் எண் ; 9585600733
(3)திரு.GMK.தருண்ராஜா ஓவியர்,
கோபி கலை அறிவியல் கல்லூரி -
வாட்ஸ்அப் எண் ;9944583438







08 மார்ச் 2019

ப.இனியன், ஈரோடு மாவட்டத்துக்கே பெருமை

இந்தியாவின் 61 வது கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் (ஈரோடு மாவட்டம்)


  நம்ம ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசை சார்ந்த கே.பன்னீர்செல்வம்,சரண்யா தம்பதியினரின் புதல்வனும்,இந்தியன் பப்ளிக் ஸ்கூல் பிளஸ் 1 மாணவனுமான 16வயது நிரம்பிய ப.இனியன் அவர்கள் கடந்த 5-3-2019 செவ்வாய்க்கிழமையன்று பிரான்சில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் உக்ரைனின் கிராண்ட் மாஸ்டர் செர்ஜி ஃபெடோர்ச்சூ அவர்களை வென்று எலோ ரேட்டிங் 2513 புள்ளிகளை பெற்று இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.ஈரோடு மாவட்டத்துக்கே பெருமைதேடி தந்துள்ளார்.
 இனியனின் நகர்த்துதல்கள் பின்வருமாறு...
 1. d4 Nf6 2. c4 e6 3. Nc3 Bb4 4. e3 b6 5. Bd3 Bb7 6. Nf3 c5 7. O-O O-O 8. Na4 cxd4 9. exd4 Re8 10. a3 Bf8 11. b4 a5 12. b5 d6 13. Nd2 Nbd7 14. Nb3 Rc8 15. Be3 Be4 16. Rc1 Qc7 17. Be2 Qb8 18. f3 Bg6 19. Qd2 Red8 20. Rfd1 h6 21. Qe1 Re8 22. Qf2 Rc7 23. g4 Rcc8 24. h4 Be7 25. Qh2 Qa7 26. g5 hxg5 27. hxg5 Nh7 28. Qg3 Bd8 29. Kf2 e5 30. dxe5 dxe5 31. Qg4 Re6 32. c5 Nxc5 33. Nbxc5 bxc5 34. Bc4 Nf8 35. Qh3 Be7 36. Rh1 Bh7 37. g6 Qb8 38. Bxe6 1-0

61வது கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த 
ஒளிரும் ஈரோடு அமைப்பிற்கும்,பயிற்சியாளர் கே.விஸ்வேஸ்வரன் சென்னை 
அவர்களுக்கும் சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாக நன்றிகள் பல......

04 மார்ச் 2019

அபினந்தன்தான் முதல் F16 KILLER-03





இறுதி பாகம் -
 #War_against_terror
                         வானில் நடந்த விமான நாய் சண்டையில்.. ஒரு மிகவும் பழையதான மிக்-21 இரண்டாவது தலைமுறை விமானம், ஒரு ஐந்தாவது தலைமுறை விமானத்தை தாக்கி அழித்தது அமெரிக்காவிற்கும், அதன்.. ராணுவ விற்பனைக்குமே அந்த ப்ளேனின் புகழுக்கும் மரண அடி. 

                 ஈராக் போரில்.. டுல்லி என்ற F-16 விமானி, ஆறு SAMகளிலிருந்து அதாவது தரையிலிருந்து விமானத்தை தாக்க வந்த
மிஸ்ஸைல்களிடமிருந்து தப்பினார். ஒவ்வொரு மிஸைலிடம் இருந்து தப்பிக்க அதிகமில்லை ஜென்டில்மேன்.. ஜஸ்ட் ,நான்கே வினாடிகள்தான் -  ரியாக்‌ஷன் டைம். அப்படியே செங்குத்தாய் தடம் மாறி தப்பித்தது எப்-16இன் புகழ் . அவர் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கும் வீடியோ அதி வீரமான, திகிலான வீடியோ நடுங்க வைக்கும்.இதை ஏன் சொல்கிறேன் என்றால்..


 இதுவரை F-16ஐ யாரும் வீழ்த்தவே இல்லை. 
அபிதான் முதல் எப்-16 கில்லர். 

பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவிற்கும் அசிங்கமாகி டென்ஷனான விஷயம் கூட இதுதான்.
அபினந்தன் பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்டது.. இந்திய அரசுக்கும், ராணுவத்திற்கும்.. தெளிவாகத்தெரியும். எப்படி என்கிறீர்களா..? சிம்பிள்.. முதலில் இந்திய அரசு செய்தியில்.. ஒரு மிக்-21 பைசனும், விமானியும் காணவில்லை என்று ஒரு வரி மட்டும் செய்தி போட்டு திரையை போட்டுவிட்டார்கள் இந்திய தரப்பில்.. ஆனால் எப்படி டிப்ளமேடிக் பிரஷர் தந்தார்கள் என்பதை பார்க்கலாம்...

                அபியை விட ஒத்துக்கொள்ள பல காரணங்கள் அதில் முக்கியமானவைகள்... இவைகளும் கீழே.

முதலில்...
சௌரவ் காலியா என்ற இந்திய வீரரை தெரியுமா.. ? கார்கில் போரின்போது உயிரோடு இருக்கும்போதே, கண்ணை தோண்டி, ஆசனவாயில் கண்ணாடியை சொருகி.. கொலை செய்த விஷயம் கேட்ட போது கண்ணீரில் மிதந்தேன். கொலை காண்டு பாக் மேல் வந்தது. அதனால் அப்படியே அபி இல்லை எங்களிடம் இல்லவே இல்லை என்று கூட சொல்லியிருக்கலாம். ஆனால்.. பாகிஸ்தானின் மேஜர் ஜென்ரல் அசீப் கஃபூர் தன் ட்விட்டர் பகுதியில்.. அபி அடிவாங்கியது, விசாரணை, சாய் வீடியோ எல்லாவற்றையும் பகிர்ந்ததில்.. உலகமே வேறு அதை பார்த்துவிட்டபடியால். பாக்.. ஒற்றை வழிப்பாதையில் போய் மாட்டிக்கொண்டுவிட்டது.
இந்தியா எந்தவித பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை.. மூடிட்டு விமானியை விடு என்று மட்டும் சொல்லவில்லை.. மற்றபடி ஆல்மோஸ்ட் அதுமாதிரிதான் அதன் அணுகுமுறை கூட..இருந்தது.

இரண்டாவதாக.......
                     பாக்கிற்கு நாக்கில், பேக்கில் எல்லா இடத்திலும் சனி. இந்தியா பால்கோட்டில் தாக்கியதில்.. எப்படி 300 பேர் என்று சொன்னார்கள் தெரியுமா..? அடர்ந்த வனப்பகுதிக்குள், ஒரு முகாமினுள்.. 300 ஆக்டிவான மொபைல்கள். இதை ஆராய்ந்தது NTRO National Technical Research Organisation. யாருமே இல்லாத காட்டின் நடுவில்.. 300 மொபைல்கள் எப்படி ஆக்டிவ் ஆக இருக்க முடியும். ஒரு கிராமத்தான் என்றது பாகிஸ்தான்!.....கிராமத்தானிடம் 300 மொபைல் இருக்குமா? அல்லது அங்கு பத்து பேர் தலா 30 மொபைல் வைத்திருக்க முடியாது. இதை ஆராய்ந்த இந்திய இன்டெல்.. இதன் பேச்சுகளை, யார் என்ன பேசினார்கள் என்பதைக்கூட கேட்டிருக்க முடியும். IAF.. பாம் போட்டுவிட்டு வரத்தான் முடியும். பிணத்தை எண்ணிக்கொண்டிருக்க முடியாது. இதைத்தான் ஏர் சீப் மார்ஷலுமே சொன்னார்.
பாகிஸ்தான் உடைந்த மரங்களை, தகர்ந்த பாறைகளை காட்டி எதுவும் நடக்கவில்லை, ஆனால் இயற்கையை அழிக்க முயன்றதால் இந்தியா மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருக்கிறது. வழக்கு போட்டால்.. அதன் கோவணம் கழன்றுவிடும் என்று அதற்குமே நன்றாகத்தெரியும். சரி..

மூன்றாவதாக.....
                 ஒரு தகரத்தை.. ஆர்மி அதிகாரிகள் டீவியில் காட்டியபோது.. பாகிஸ்தான் நக்கலாய் சிரித்தது. ஆனால் முதல் ஆப்பே பாக்குக்கு அதுதான். பாகிஸ்தானின் F-16 போட்ட ஒரு AIM120-AMRAAM மிஸ்ஸைல் ஆளில்லா இடத்தில் இந்திய காஷ்மீரில் விழ.. அந்த தகரத்தை பொறுக்கி பாக் எஃப்-16 விமானத்தை வைத்து இந்திய ராணுவம் மீது உபயோகித்தது.. அதாவது எங்கள் ராணுவ தளத்தை தாக்கியது.. எல்லையை மீறியது என்ற செய்தி உலகெங்கும் போனது. அஜித் தோவல்.. அமெரிக்க செக்ரெட்டரி மைக் போம்பியோவிடம் இந்த தகவலை உடனடியாய் கொடுக்க.. அமெரிக்கா தன் டேட்டாபேஸில் இதன் விவரங்களை தேடியது.. அந்த தகரம்.. பல வில்லங்களை அமெரிக்காவில் எழுப்பியது. அது தைவானுக்கு விற்றதாய் செய்தி வெளியானது.. தைவான் என்னிடம் அதற்கு தேவையான ஏரோப்ளேனுமில்லை, மிஸைலுமில்லை போய்யா? புளுகாதே! என்றது. அமெரிக்காவில் யாரோ ஜிங்கிடி வேலை பண்ணி பாகிஸ்தானுக்கு இதை அனுப்பியதில் அங்கு பூகம்பம். உண்மையில் பாகிற்கு 500 மிஸைல்கள் ரேய்தான் 17/11/2006 விற்ற ஸ்கீர்ஷாட் இணைத்திருக்கிறேன்.. இதை விற்றது தீவிரவாதிகளை அழிக்க, இந்தியாவை அல்ல. இப்போது வசமாய் ஆப்பில் பாக் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

நான்காவதாக...
                பாகிஸ்தான் அதைவிட கேவலமான ஒரு பொய்யை சொல்லியது. இந்த மிஸைலை நாங்கள் சீன ப்ளேனில் ஃபிட் பண்ணினோம் என்றது. F-16 ஐ வைத்து நாங்கள் இந்தியாவை மிரட்டவில்லை என்றது.. ங்கொய்யால.. இப்படி மாட்ட என்ன சைக்கிள் செயினா இது..? OEM-அதாவது ஒரிஜினல் எக்விப்மென்ட் மான்யூபேக்சுரரின் சோர்ஸ்கோடில் மாற்றம் பண்ணினால்தான் சீன ப்ளேனில் KLJ-7 சீன ஃப்யர் கன்ட்ரோல் ரடாரோடு இணைக்கவே முடியும்..
                      ரேய்தான் என்கிற அமெரிக்க கம்பெனி.. அண்ணாச்சி.. இது எப்ப..? என்று திருப்பி கேட்க
            பாக்குக்கு.. பேதியானது.. பாக்கிற்கு அனேகமாய் ராணுவ தளவாடங்கள் அமெரிக்காவிலிருந்து இனி கிடைக்க தடை வரலாம்.. வரும்..

ஐந்தாவதாக.....
            மிக மிக முக்கியமான ஒன்று..
கடைசியாக மூன்று ராணுவதளபதிகள் சேர்ந்து எப்போது மக்களிடம் பேசினார்கள்..? கார்கில் போர்1999.. அதற்கு முன்.. 1971 பங்களாதேஷ்
போர் சமயத்தில்.. இதற்கு அப்புறம் பயத்தில் பாக் கெஞ்சாமல் கொஞ்சவா செய்யும்.

ஆறாவதாக..
                    ராஜாங்க ரீதியாக.. வெளிநாடுகளான.. ப்ரான்ஸ், ஜப்பான் , அமெரிக்கா.. ரஷ்யா.. எல்லாம் பாக்கை கண்டிக்க, சீனா சைலன்டாக இருந்தது..
 இது போதாதா என்ன..? அபியை விட..?

                   கடைசியாய் நீர்மூழ்கிகள் க்வாதர், கராச்சி பக்கம் நிறுத்த அரபிக்கடலில் நகர.. கப்பற்படை அரபிக்கடலில் வியூகமாய் நகர ஆரம்பித்ததை பாக் பயத்துடன் பார்த்திருக்கலாம். இதை வைத்தே பாதி பாக்கையே அழிக்கலாம்.
 இரவின் முன் பகுதியில் ஆர்மி ட்ரஸ் போட்டுக்கொண்டு போன அபி.. ப்ளேசரில் வந்து சேர்ந்ததை பார்த்த சந்தோஷத்தில்.. இந்தியன் பிஸ்ட்ரோவில் ஒரு எக்ஸ்ட்ரா நான் பன்னீர் பட்டர் மசாலா சாப்பிட்டதில் சந்தோஷமான சுகம் புதிய வலிமையான பாரதம் பிறந்து விட்டதற்கு..கிடைத்தது என்று சந்தோஷப்பட்டுவிட்டு தூங்க வீட்டுக்கு திரும்பினோம்.
 



தகவல் உதவி ;
facebook / prakash Ramasamy 

அபினந்தன்தான் முதல் F16 KILLER -02



பாகம்-3.
#War_against_terror
வர்தமானன் அபினந்தனின் ஃபளைட் மனோவியரிங் பற்றி எழுத மிகவும் சிரமப்பட்டேன். காரணம் attack pilotகளின் விமான ஃபார்மேஷன் பற்றியும்.. அபிநன்தனின் tactics பற்றியும் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தபோது.. ஒரு விமானப்படை நண்பரின் மெஸேஜை, என் பழைய வங்கி பாஸ்.. எங்களின் க்ரூப்பில் ஷேர் பண்ணி பெருமிதப்பட்டுக்கொண்டார். அதனால் இந்த விமான tactics பற்றிய தரவுகளில் சொல்லப்பட்ட tactics நடந்ததா என்றால், என்னால் மற்ற பகுதிகளைப்போல் அறுதியிட்டுச்சொல்ல முடியாது.. ஏறக்குறைய இதுதான் நடந்தது.
முதலில்.. இந்த விமானங்கள் பாகிஸ்தானை தாக்கிய ஸ்டைல் என்னை மிகவும் கவர்ந்தது. F-16 இல்லை, ரஃபேல் இல்லை..ஆனால் மிராஜ்-2000 வைத்து.. ஸ்பைஸ்-2000 பாம்களை லேசர் பாட்களை வைத்து உபயோகித்தது. அதாவது..

                 இதில் GPS கோ ஆர்டினேட்டுகளையும், இடத்தின் படத்தையும் இதில் ஏற்றிவிட்டால் போதும். பாமை ரிலீஸ் பண்ணியவுடன், அது கால நிலைகள், மழை, வெயில், பனி.. இப்படி எல்லாவற்றையும் பார்த்து.. அதற்கு தகுந்தாற்போல் அட்ஜஸ்ட் செய்து.. நடுவானில்.. நேவிகேஷனை அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு.. இணைத்த படத்தோடு ஒப்பிட்டு, சரியான இடம்தான். வரேன்டா! இதோ என்று மரணகிழி கிழித்துவிடும். ஜாபா டெர்ர் காம்ப்..படம்கூட இணைத்துள்ளேன்.
                                         நன்றி: ரவி மாரிஸ்.
           அப்படி நொறுக்கிய பாம் +|- 3 மீட்டர் மட்டும்தான் error. அதாவது எல்ஐசி பில்டிங் என்றால் மூணு மீட்டர் தான் மிஸ் ஆகும். மவுன்ட் ரோடு விட்டு எக்மோர் போகாது..
அத்தனை துல்லியம்.
மொத்தமாய் ஒழித்துவிட்டு.. துடைத்து, மெழுகி, கோலம் போட்டுவிட்டதை நம் ஐஏஎஃப் உறுதி பண்ணிக்கொண்டது. ரியல் டைமில் ஏர் சீப் மார்ஷல், மற்ற ராணுவ தளபதிகள், பிரதமர், சூஷ்மா, மற்றும் நிர்மலா அவர்களுக்கு தகவல் போய்க்கொண்டு இருந்தது. விமானம் குவாலியருக்கு வந்து சேர்ந்தது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெயிஷ் காம்ப் நொறுக்கப்பட்டுவிட்டது என்பதைவிட, எல்லை தாண்டி எப்படி இந்தியா வந்தது என்று மிக அவமானமாகப்போய்விட்டது கொமாரு பாகிஸ்தானுக்கு..
பர்மாக்குள் போய் அடித்தாய்.. பாகிஸ்தான் பர்மா இல்லை தெரியுமா என்று கொஞ்ச காலம் முன் சொன்ன பாகிஸ்தானின் முகம்..செருப்படி வாங்கிய திருடனைப்போல் இருந்தது. இனி எங்கள் முறை.. எங்கே? எப்போது? என்று சொல்லி சொல்லி அடிப்போம் என்றது பாகிஸ்தான். இந்தியா மௌனமாய் புன்னகைத்துக்கொண்டது. வந்தால் தயாராகத்தான் இருக்கிறோம் என்று..
இந்தியா அமைதியாக இருந்தது. நாங்கள் இப்படியான ஒரு தீவிரவாத காம்பை இங்கே அழித்தோம் என்று மட்டும் ஒரு ராணுவ அதிகாரி தகவல் சொல்ல..
அகிலம் மிரண்டது புதிய இந்தியாவின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளால்... அபிநன்தன் என்கிற பைலட்டின் மிக்-21 பைசன் எனும் புராதான ப்ளேன்.. தான் ஒரு மிகப்பெரிய சாகசத்தை செய்யப்போகிறோம் என்பதையறியாமல்.. தன் விமானிக்காக காஷ்மீர் எல்லையில் காத்துக்கொண்டிருந்தது.

பாகம்-4
#War_against_terror
F-16 விமானங்கள் எதிரி நாட்டை தாக்க ஆறு விதமான ஃபார்மேஷன்கள் இருப்பதாய் படித்தேன். இணையத்தில் தேடியதில் ஒரு மேன்யுவலே கிடைத்து விட்டது. பேசிக், டாக்டிகல், டூ ஷிப், த்ரீ ஷிப், ஃபோர் ஷிப் மற்றும் டாக்டிகல் டர்ன்ஸ். இப்படித்தான் மிக் பைசனுக்குமே கூட.. இந்த ஒவ்வொரு ஃபார்மேஷனுக்குள்ளும் தரித்திர பட்சம் ஐந்து ஃபார்மேஷன் இருக்கும். எத்தனை விமானங்கள் வருகிறது, என்ன மாதிரி ஃபார்மேஷன் என்பது எதிரிகளுக்கு இதன் நோக்கத்தை புரிய வைக்கும். டென்ஷனான காஷ்மீர் காலை.
Feb-27 2019 காலை 9.52
அப்படித்தான்.. அன்று காலையிலுமே கூட.. அவாக்ஸ் அதாவது நேத்ரா விமானங்களும், வடக்கு ஏர் கமேண்டுமே 10 எதிரி விமானங்கள் வருவதை கண்டுபிடித்து விட்டது. பாகிஸ்தானின் 3 ஏர்பேஸ்களில் இருந்து வருவதும், அவை மூன்று க்ரூப்பாக வருவதும்..
காலை 9.54.
இந்தியா..2 மிக் 21-பைசன்களையும், 4 சுகோய் எம்கே ஐ களையும் எதிர்வரும் விமானங்களை தடுத்து இன்டெர்சப்ட் செய்ய பணித்தது.
காலை 9.58.
இந்திய விமானங்கள் எதிர்வரும் விமானங்களுக்கு, இந்திய வான்வெளிக்குள் நுழையப்போகிறீர்கள் என்று எச்சரிக்கப்பட்டது.
காலை 9.59.
இந்தியா இரண்டாவது முறையாக பாக் விமானப்படையிடம் எச்சரிக்கை விடுத்தது. IFAC ப்ரோடோகால்களை பாக் விமானப்படை மதிக்கவில்லை..
காலை 10.00.
பாக்கின் F-16 இந்திய வான்வெளிக்குள் நுழைந்தது. அது ஸ்வார்ம் மெர்ஜ் அட்டாக் ஃபார்மேஷனில் வந்தது. இது ஒரு tactical formation.
காலை 10.01.
தரைப்படையின் சரமாரித்தாக்குதல்களும், சுகோய் மற்றும் மிக் ஃபைட்டர்கள் வான்வெளியில் இவர்களை எதிர்கொள்ள பறந்தது. இதைக்கண்ட ஒன்பது ப்ளேன்களுமே, ஒரு கிலோமீட்டர் உள்ளே வந்துவிட்டு திரும்பி பாக் எல்லைக்குள்ளே விரட்டியடிக்கப்பட திரும்பிப்போனது..
காலை 10.02.
ஒரு பாக் ப்ளேன் மட்டும் மூன்று கிலோ மீட்டர் உள்ளே வந்து.. ஆர்மி HQ குள் இருக்கும் எண்ணை கிடங்கை தாக்க வந்தது. ஒரு சுகோயும்.. மிக்-21 ன்னும் இந்த F-16 ஐ துரத்த ஆரம்பித்தது. இதற்கு Defensive split என்று சொல்லுவார்கள். அபிநன்தன் இருந்த மிக்-21 முன்னாலும், நடுவில் F-16உம், பின்னால் சுகோயும் துரத்த.. இந்திய விமானம் சுகோய் சுட்டவுடன்.. பாக்கின் F-16 wingover எனும் டாக்டிகல் 45 டிகிரி சாய்வில் தப்பித்தது. அபி நன்தனின் மிக்-21 புராதானமான விமானம். பறக்கும் சவப்பெட்டி என்று சொல்லப்படும் இந்த விமானம் F-16 க்கு எந்தவித போட்டியுமே இல்லை. இருந்தும் dogfightஇல் ஈடுபட்டது. அபிநன்தன் விமானம் பழையது..ஏவியானிக்ஸ் மட்டும் புதியது. அதாவது ரடார், சிக்னல் போன்றவை புதியது. அபி, எதிரி விமானத்தை குறிவைத்து ரடாரை லாக் செய்துவிட.. எப்-16 ஐ துரத்த ஆரம்பித்தார். படுவேகத்தில் அது பாக்கின் எல்லையில் நுழைய.. அபி ஏவிய R-73 ஏவுகணையை லாக் செய்துவிட்டபடியால்.. அவருக்கு இரண்டே ஆப்ஷன்தான்.அதுவும் 1000 கிலோமீட்டர் வேகத்தில் எடுக்கப்படவேண்டிய முடிவு கூட.
1. லாக் அவிழ்த்துவிட்டு தளத்துக்கு திரும்புதல்.
2. லாக் பண்ணிய ஏவுகணையை வீச பாக் எல்லைக்குள் துரத்தி சென்று அடித்து அழித்தல். இரண்டாவது ஆப்ஷனை செலக்ட் செய்து துரத்த ஆரம்பித்தார் அபி. இதுதான் வீரம்.
காலை 10.08
Engage பண்ணிய R-73 ஏவுகணையை ஏவி பாக்கின் F-16 விமானத்தை அழித்தவுடன்.. பாக் எல்லையில்.. தரைப்படைகளின் குண்டுகளிலிருந்து தப்பிக்க..High G Barrel roll எனும் வட்டமடித்து.. மேலே விமானத்தை எழுப்பினார். அப்போது அந்த பழைய விமானத்தில் சக்தியில்லாமல் தடுமாறியது. எழும்பி... அதற்குபிறகு தலைகீழாய் திரும்பி பறந்தால் இந்திய எல்லைதான். அப்போதுதான் பாக்கின் SAM- அதாவது சர்ஃபேஸ் டு ஏர் மிஸ்ஸைல் ஒன்று வந்து அடித்தது..அது வருவதற்கு முன்னரே, விமானம், பைலட்டை உந்தி வெளியேற்றிவிட்டது.
அவர் தரையிறங்கி.. அடிவாங்கி, முக்கியமான தஸ்தாவேஜ்களை தின்று, சாய் குடித்து.. பேட்டியெல்லாம் தந்த வீடியோவை.. பாகிஸ்தான் கமான்டர் அசிஃப் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அப்போது பிடித்தது சனி அவருக்கும் இம்ரானுக்கும்.. மீதி கடைசி பகுதியில்..

அபினந்தன்தான் முதல் F16 KILLER-01

புல்வாமாவில் ராணுவ வீரர்களை தீவிரவாததற்கொலையாளன் தாக்கியபிறகு நடந்த விபரங்களை பார்ப்போம்.....

 அரசியலாய் பார்க்காமல் ராஜாங்க ராணுவ ரீதியில் என்ன நடந்தது..?
முதலில் ஒரு கேள்வி..

                       நம்மில் எத்தனை பேருக்கு செஸ் பிடிக்கும்..? அதை விளையாட எத்தனை பேருக்கு தெரியும்..? ஏன் பிடிக்காது..? அல்லது பிடிக்கும்..?

                    அத்தனை ராஜதந்திரம் மற்றும் nerve நிரம்பிய இந்த செஸ், ரொம்ப emotive ஆனது கூட.. ஆனால் பலருக்கும் பிடிக்காது.. 

                   காரணம் நிறைய மூளையை உபயோகித்து விளையாட, புரிந்துகொள்ள வேண்டியதால். 


                      ஆனால் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் எல்லோருக்குமே பிடிக்கும்.. இதில் மூளை உபயோகிப்பது உண்டு. ஆனால் அதிகம் நமது உடலைத்தான்.. செஸ்ஸூக்கு நேர் எதிர்மறை.


                     செஸ் போலத்தான் ராஜதந்திர நடவடிக்கைகள் கூட. இந்த அபி விஷயத்தில் கூட.. எல்லாம் நம் கண்முன்னால் பத்திரிக்கைகளில், வலைதளங்களில் கிடைத்தாலும் அத்தனையையும் கண்டுகொள்ளாமல் கடந்து போனோம்.
ராணுவ..ராஜதந்திர நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அப்படி என்னதான்  கிழித்தார்கள்..? It was another day in their office. சரி..  புல்வாமாவில் இருந்து ஆரம்பிப்போமா..?

                  புல்வாமா நடந்ததில் நிஜமாய் ஆடிப்போனது இந்திய தேசம். இதை அரசியல் ஆக்க முனைவது அயோக்கியத்தனம். அடுத்து ஸ்ட்ராடஜிக்கலாய் இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல விஷயங்கள் நடந்தது. துருப்புகள் இனி விமானத்தில் கொண்டு செல்லப்படுவார்கள் என்பதில் ஆரம்பித்து..பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளை பிடித்ததில் பல விஷயம் தெரிய வந்தது. நிற்க.

                 இஸ்ரோவால்.. 87 சதம் பாக்கை விண்வெளியிலிருந்து கண்காணிக்க முடிந்தது. வீட்டு தாழ்வாரம், மனித நடமாட்டம் எல்லாமே. இதற்கு காரணம் ''கார்டோசேட்,-2C,'' இந்த விண்கலம் 526 கிலோ மீட்டர் உயரத்தில் நின்றுகொண்டு 14 அண்டை நாடுகளை நோட்டம் பார்த்துக்கொண்டிருக்கிறது... இதன் ஸ்பேஷியல் காமெராக்கள் வீடுகள் கட்டிடங்களை சில மீட்டர் தொலை வரை ஹை-ரெசொல்யூஷனில் படமெடுத்து தந்துகொண்டே இருக்கிறது.
பாகிஸ்தானோ. சைனாவின் உதவியால் இந்திய படங்களை வாங்கிக்கொண்டு இருக்கிறது. இந்திய ராணுவ நகர்வுகளையும் வியூகங்களையும் இப்படித்தான் கண்காணிக்கிறது.
சீனாவை மனதில் வைத்து, அமெரிக்கா இந்தியாவுடன் பல இமேஜ்களை, தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. அப்படி இஸ்ரோ தகவல்களை அதாவது மசூத் அசரின் தீவிரவாத பள்ளிகளை.. இஸ்ரோ தர, அமெரிக்க. இஸ்ரேல் மற்றும் ஒரு நாட்டின் உளவுத்துறைகளின் தகவல்களை ஒருங்கிணைத்து ரெடி ஆனது.
ஆனால்.. தரையில் இருந்து (இவர்கள் பாக்கினுள் இருக்கும் உளவாளிகள் அல்லது கான்ட்ராக்டர்கள்) உறுதியான தகவல்கள் வந்த பின்னரே இந்த co ordinates ஏவுகணைகளில் மனனம் செய்யப்படு லேசரால் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இது அனைத்துமே.. ராணுவத்திடம் முழு பொறுப்பை ராணுவ மந்திரி பொறுப்பை தந்தவுடன்..சுறுசுறுப்படைந்தது இந்திய ராணுவம்...........

Day 1, 2019 Feb-15
இந்திய தேசம்.. சோகத்திலிருந்து கோபத்திற்கு மாறியது. எப்படி இத்தனை உயிரிழப்புகள்..? என்ன ஆச்சு இன்டலுக்கு..? கஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்.. இது பாதி இன்டெல் ஃபெயிலியர்தான். ஆனால்.. எங்களால் சரியாக இத்தனை வெடி மருந்தை ஏற்றியதும்.. அதை இயக்க வைத்து ஆர்மி வண்டியின் பாதை எதிரே வந்ததை தடுக்க இயலாததும், எங்களின் தவறுதான். இதற்கு மேல்.. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்மி தலைமைகள் முடிவு செய்தார்கள்.
இரண்டு சிக்கல்கள்.
 (1)இந்த ராணுவ நடவடிக்கையை வெளியில் தெரியாமல் செய்து முடிக்க வேண்டும்.
 (2) எப்படியான தாக்குதல்..?

Day -2 February 16 (2019)
மூன்று ராணுவ தலைமையைம் சேர்ந்து முடிவு செய்து.. பிரதமரிடமும், ஆலோசகர்..அஜித் தோவலிடமும், தந்தபின் இதற்கான கடைநிலை பணி வரை முடிவானது. அற்புதமான clock work. எங்கெங்கு தாக்குதல்.. எத்தனை பாக் போஸ்ட்டுகளை பிடிக்க வேண்டும் என்று.. ஆனால்.. இதை அரசு நிராகரித்து பால்கோட் மற்றும் இரண்டு இடங்களிலும்.. மிலிட்டரி மற்றும் சிவில் இடங்களின் மீது தாக்குதல் இல்லாமல்.. விமான படையை உபயோகித்து என்றும், முடிவானது.. விமானப்படை பத்து நாட்கள் அவகாசம் கேட்டது. சரி என்று அனுமதி தரப்பட்டது. இந்தியன் ஆர்மி பாகிஸ்தான் ஆர்மியை பிசியாக வைத்திருக்க எல்லையில் ஷெல்லிங் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கவும் முடிவானது. 2001ல் செய்தது போல் க்வாதர், கராச்சிக்கு அருகில் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தவும், இது பாக்கை திசை திருப்பவும் தேவை என்றும் முடிவானது.
மொத்த தாக்குதலும் குறைந்த நேரத்திலும், எளிதான, அதிகம் காவல் உள்ள மேற்கு எல்லையை எப்படி கடக்கலாம், எந்த நேரம்.. பாகிஸ்தானுக்கு தெரியாமல் எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று துல்லியமாய் நிமிடத்திற்கு நிமிட ஆபரேஷன் ப்ளான் முடிவானது. முசாபராபாத்தில் ஒரு இடத்தில் பாக்கின் உள்ளே நுழையவும் முடிவானது..
பாக் ரேடாரின் ரெஸ்பான்ஸ் டைம்..இந்திய ட்ரோன்கள் மற்றும் ரா வின் தகவல்களால் நிரப்பப்பட்டது.. எல்லையில் உள்ள விமானதளங்களை பாக் 24 மணிகளும் கண்காணித்துக்கொண்டிருந்ததால்.. க்வாலியர் தளம் தேர்ந்தெடுக்கப்பட்டது. க்வாலியரில் மிராஜ்-2000 ஸ்க்வாட்ரன் நிறுத்தப்பட்டுள்ளது. அதை வைத்தே பாக்கை சார்த்த முடிவானது.
ஆக்ராவிலிருந்து IL-78 ப்ளேனை ரி ஃப்யூலிங்க் வானத்தில் இருந்து செய்ய முடிவானது. பஞ்சாபின் படிண்டாவிலிருந்து்AWAcCS கண்காணிப்பு விமானத்தை ரெடியாக்க முடிவானது. Sukhoi-30 ஐ ஹரியானாவில் உள்ள சிர்ஸா ஏர்பேஸில் இருந்து புறப்படவும் முடிவு செய்யப்பட்டது.
Day-4 February 18.
NSA விடம் ஐந்து இலக்குகளை தந்தது ராணுவம். முஸாபராபாத், சகோதி, பாலகோட் மட்டுமே போதும் என்று முடிவானது.
Day-5 February 19.
Operational clearence தரப்பட்டது. ஆனால், மிக துல்லியமாக ஆணை தரப்பட்டது. அதிகமாக பாக் உள்ளே போக தேவையில்லை. அதிக பட்ச விமான மற்றும் உயிர்சேதங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. லேசர் துணையோடு க்ரிட் லாக் செய்யப்பட்ட ஏவுகணைகளை.. தூரத்தில் இருந்து விட முடிவானது. தரையில் பொருட்கள் நகர ஆரம்பித்தது.
Day-10 February 26. D Day.
EMB-AWB எம்ப்ரேர் உளவு விமானம் துல்லியமாய் அதிகாலை 1-00 மணிக்கு படின்டா பஞ்சாபில் இருந்து டேக் ஆப் ஆகியது.
IL-78 மிகச்சரியாக 2.00 மணிக்கு ஆக்ராவில் இருந்து டேக் ஆகியது.
அதே சமயத்தில் குவாலியரில் இருந்து.. 6 மிராஜ்-2000 ப்ளேன்கள் பறக்க ஆரம்பித்தன. இரண்டு இரண்டாய் மூன்று ஃபார்மேஷன். Laser pods மூலம் தகர்க்க திட்டமிடப்பட்டது.
4 sukhoi 30 MKI விமானங்கள் துரத்தி வரும் பாக் விமானங்களை தாக்கவும்.. நம் இந்திய விமானங்களை காப்பாற்றவும் மிகச்சரியாய் மூன்று மணியளவில் வானில் எல்லைக்கருகில் பறக்க ஆரம்பித்தது.
எல்லா இந்திய ஏர்பேஸ்களுமே அலர்ட்டில் வைக்கப்பட்டு இருந்தன. மிராஜ் விமானங்கள் க்வாலியரில் இருந்து கிளம்பி... சிர்ஸா மேல் பறந்து இன்னும் வடக்கு போய்.. ஒரு யூ டர்ன் அடித்து பாக் உள்ளே நுழைந்தது. அல்ட்ரா மாடர்ன் அல்காரிதங்கள் ப்ளேனிலிருந்து ரடாரின் சிக்னல்களை செயலிழக்க செய்தது.. இந்தியாவின் இன்னொரு மைல்கல்..
முஸாபராபாத், சகோதி, பாலகோட்டின் மீது தாக்குதல் நடத்தியது. மொத்த மிஷன் 19 நிமிடங்கள். பாலகோட் மீது 3.45 முதல் 3.53 வரை, முஸாபராபாத் மீது 3.48 முதல் 3.55 சகோதி மீது 3.58 முதல் 4.04 வரை தாக்குதல்கள்.
திரும்பி வரும்போது.. ப்யூயல் டாங்கை கழற்றிவிட்டு எல்லாம் விரைவில் சேர்ந்து வரும் ஃபார்மேஷனை பார்த்து...scramble பண்ணிய F-16 பாக் பேஸ்க்கு வாலை சுருட்டிக்கொண்டு திரும்பியது.
இதனால் பெருத்த அவமானப்பட்ட பாக்கிற்கு துக்கம். .....
 ட்விட்டரில் எதேச்சையாக கவனித்ததில்.. ஒரு விமான மானிட்டர் ஹான்டில் மட்டும்.. இந்திய போர் விமானங்கள் பாக்கிற்குள் செல்கிறதே இந்த நேரத்தில் என்று அலறியதை பார்த்தேன். அது ஃபேக் (போலியானது) என்று தாண்டிப்போனதும் வேடிக்கை.
1999 கார்கில் போர் சமயத்தின் போது கூட எல்லை தாண்டாத இந்திய விமானங்கள்  காஷ்மீர் தாண்டி பாகிஸ்தானின் பக்தூன்வாலாவில் குண்டு போட்டது தான்   NEW NORMAL INDIA. புதிய வலிய பாரதம்.

அடுத்த பாகத்தில்
அபிநன்தனின் ராணுவ சாகச டீடெயில்..

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...