05 டிசம்பர் 2016

தமிழக முதல்வர் இன்று காலமானார்.

 டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் பற்றிய சிறு குறிப்பு...
 
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்
     தமிழ்நாடு மாநிலத்தின்  11 வது,14 வது,16 வது,18 வது,19 வது முதலமைச்சராக பொறுப்பு வகித்தவரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான டாக்டர் ஜெ.ஜெயலலிதா  அவர்கள்  கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள பாண்டவபுரா தாலூக்காவிற்குட்பட்ட மேல்கோட்டை கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ந் தேதி ஜெயராம் - வேதவள்ளி தம்பதியினருக்கு மகளாகப்பிறந்தார்.

                        பெங்களூருவிலுள்ள பிஷப் காட்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,சென்னையிலுள்ள சர்ச் பார்க் பிரசென்டேசன் கான்வென்ட்டிலும் பள்ளிப்படிப்பை முடித்தவர்.சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் படிக்க சேர்ந்தபோது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்கிடைத்த காரணத்தால் நடிப்புலகத்தில் கால் பதித்தவர்.

                   1961 ஆம் ஆண்டில் கன்னட நடிகர் ராஜ்குமாருடன் ஸ்ரீசைல மகாத்மா கன்னட திரைப்படத்தில் நடிக்கத்தொடங்கியவர் ஆங்கில திரைபடங்களிலும்,இந்தி திரைப்படங்களிலும்,தெலுங்கு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து திரைப்படங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
1965 ஆம் ஆண்டில் ,'வெண்ணிற ஆடை'திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் நடிகருடன்  தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.புரட்சித்தலைவி அவர்களுக்கு 1980 ஆம் ஆண்டு சரத் பாபுவுடன் நடித்த, 'நதியைத்தேடி வந்த கடல்' என்ற தமிழ் திரைப்படம்தான் 127 வது மற்றும் கடைசித் திரைப்படமாகும்.

       1981 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க.வில் உறுப்பினராகி அரசியலில் நுழைந்தார்.
1984 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்கவை உறுப்பினரானார்.
1989ஆம் ஆண்டு அ.தி.மு.க. கட்சியின் தலைமைப்பொறுப்பேற்று அன்று முதல் பொதுச்செயலாளராகவும் அ.தி.மு.க. கட்சியை சிறப்பாக  நிர்வகித்து வந்தார்.தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வர் என்ற சிறப்பும் பெற்றார்.
 இவர் பெற்ற விருதுகளில் கலைமாமணி விருது,சிறப்பு முனைவர்  என்னும் டாக்டர் பட்டம்,தங்க மங்கை விருது குறிப்பிடத்தக்கவை.
 உடல்நலக்குறைவால் 2016 செப்டெம்பர் 22 ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற நிலையில் லண்டன் மருத்துவர் உட்பட டெல்லி எய்ம்ஸ் சிறப்பு மருத்துவர்கள் குழு உட்பட உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டும் இயற்கைவிதியால் 2016 டிசம்பர் 5 ந் தேதி இரவு 11.30மணியளவில் மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...