13 டிசம்பர் 2016

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மொபைல் பண பரிவர்த்தனை

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மொபைல் போன் பண பரிவர்த்தனை செய்ய
           பதிவு செய்யும் முறை:
பதிவு செய்யும் முறை:
 • மொபைல் போனில் பின்வருமாறு டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புக. ‘MBSREG <இடைவெளி> <மொபைலின் கம்பெனி பெயர்> <இடைவெளி> <மொபைல் மாடல்> ‘ எ.கா: MBSREG Nokia 6600
 • உங்கள் கைபேசி ஜாவா மென்பொருள் கொண்டு செயல்படுமெனில் உங்களுக்கான பயனாளர் ஐடியும், எம்பின் நம்பர் (MPIN) எனப்படும் தனிநபர் அடையாள எண்ணும்(ரகசிய எண்) மற்றும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோட் செய்யத் தேவையான இணையதள முகவரியையும் எஸ்எம்எஸ் மூலம் பெறுவீர்கள். இதற்கு ஜிபிஆர்எஸ் இணைப்பு இருக்க வேண்டும்.
 • விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்தவுடன் எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட பயனாளர் ஐடியுடன் இணையதளத்தினுள் நுழைக.
 • பயனாளர் ஐடியை எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்டபடியே டைப் செய்க.
 • மொபைல் பேங்கிங் செயலியைத் திறந்தவுடன் உங்களின் எம்பின்(MPIN) எண்ணை மாற்ற கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.
 • அவ்வாறு கேட்கப்படவில்லையெனில் “Settings" என்ற முதன்மை மெனுவில் உள்ள “Change MPIN” என்பதைத் தேர்வு செய்க.
 • “old MPIN” என்ற இடத்தில் எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட 'எம்பின்'எண்ணையும், “new MPIN” என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் புது 'எம்பின்' எண்ணையும் குறிப்பிடுக. இந்த புது 'எம்பின்' எண்ணை “Confirm new MPIN” என்ற இடத்திலும் குறிப்பிட வேண்டும்.பின்னர் அவற்றை அனுப்புக.
 • நீங்கள் புது 'எம்பின்' எண்ணை மாற்றியது எஸ்எம்எஸ் மூலம் உறுதி செய்யப்படும்.
 • 'எம்பின்' எண்ணை மாற்றியதற்கான உறுதிப்படுத்தும் எஸ்எம்எஸ் பெற்றவுடன் ஒரு ரகசிய கேள்வியைத் தேர்ந்தெடுத்து அதற்கான பதிலை அளிக்க வேண்டும். இதற்கு “Settings" என்ற முதன்மை மெனுவில் உள்ள “Validate Account” என்பதைத் தேர்வு செய்க. இதில் ஏதேனும் ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுத்து பதில் அளிக்கவும்.
 • இந்த ரகசிய கேள்வியையும் அதற்கான பதிலையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் 'எம்பின்' நம்பரை மறந்துவிட்டாலோ அல்லது இச்சேவையை ரத்து செய்ய விரும்பினாலோ இது உங்களை அடையாளம் காண தேவைப்படும்.
 • பின்னர் அருகாமையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் வழியாக இதனை ஆக்ட்டிவேட் செய்யுங்கள்.
 • ஏடிஎம் கார்டை நுழைத்தபின் ‘Services’ என்ற மெனுவில் ‘Mobile Banking’என்பதை தேர்ந்தெடுங்கள்
 • “Mobile Banking” என்பதன் கீழ் ‘Register’ என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் மொபைல் எண்ணைக் கொடுங்கள். பதிவினை உறுதிப்படுத்த மீண்டும் மொபைல் எண்ணைக் கொடுங்கள்.
 • மேற்கண்ட செயல்முறைகளை முடித்தவுடன் உங்கள் மொபைல் பேங்கிங் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.
 • இதன் பின்னர் மொபைல் பேங்கிங் சேவையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக