20 டிசம்பர் 2016

பணமுள்ள பரதேசிகள்!

தாகம் தீர இப்போது தேவைக்கான தண்ணீரை மறுநாள் குளிப்பாட்ட கிடைக்கும்? என்பது சரியா?
நிதர்சனமான உண்மை! அவசியம் படியுங்க!!
அவசரத்தேவை,அத்தியாவசியத் தேவை கூட புரிந்துகொள்ளாமல் இன்றைய அரசு நிலை உள்ளதைக்கண்டு வேதனைப்படுவதைத்தவிர?????
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டனைக்குள்ளாகக்கூடாது.என கேள்விப்பட்டிருக்கிறேன்.அதுபோல கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். என்பதில் என் போன்றோருக்கு முரண்பாடு ஏதுமில்லைங்க.ஆனால் துர்நாற்றம் வீசுகிறதே என்று மூக்கை அரை மணி நேரம் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா?ஆக்ஸிஜன் என்னும் உயிர்க்காற்றின் ஒரு நிமிட தாமதத்துக்கு கூட உயிர் பொறுக்காது.அதுபோல உழைப்பின் ஊதியத்தையும்,ஏற்கனவே வைத்திருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் செல்லாது என்ற அறிவிப்பால் வங்கியில் செலுத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியதோடு உழைப்பின் கூலியையும் வங்கியிலேயே முடக்கிக்கொண்டு?
மாதந்தோறும் புழக்கத்திலிருக்கும் மாறாத செலவினங்களான ,பால் கணக்கு,மளிகைக்கணக்கு,கல்விக்கட்டணம்,காய்கறி செலவு,போக்குவரத்து செலவு,மருத்துவ செலவு,வீட்டு வாடகை செலவு,பெட்ரோல் மற்றும் டீசல் செலவு,விருந்தோம்பல் செலவு, பெறப்பட்ட கடனுக்கான வட்டி கட்டுதல்,திடீர் செலவினங்களான திருமணச்செலவு,ஈமச்சடங்கு செலவு,மின் கட்டணம்,போன் கட்டணம், குடிநீர் கட்டணம்,வீட்டு வரி,சொத்து வரி ,வாகனம்,மொபைல்,மிக்சி,கிரைண்டர்,போன்ற இயந்திரங்கள் பராமரிப்பு செலவு,பழுது நீக்கும் செலவு,இன்னும் எத்தனையோ செலவினங்களை நிர்வகிக்கும் நமக்கு நிதி ஆதாரம் மாதச்சம்பளம் ஒன்றே என்ற நிலையில் வாழ்ந்து வரும் நம்முடைய சம்பளத்தையும்,ஏற்கனவே வைத்திருந்த பணத்தையும் வங்கியில் செலுத்தவைத்துவிட்டு மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாறி ரொக்கமில்லா பயன்பாட்டுக்கு வாழ பழக்கப்படுத்திக்கொள்ளுங்க என்று விளம்பரப்படுத்தும் அதே நேரத்தில் ஸ்வைப் என்னும் உரசல் பரிமாற்றம் அரசுத்துறை நிறுவனங்கள் உட்பட நம்முடைய வழக்கமான பயன்பாட்டுத்தளங்கள் எங்கும் டிஜிட்டல் வசதியே இல்லாமல் நம்முடைய பணம் எங்கும் வீணாகாது.வங்கியில் பத்திரமாக அப்படியே இருக்கும் என்று ஆறுதல் சொல்லும் புண்ணியவான்களே,நாய் பெற்ற தெங்கம் போல (முழுத் தேங்காய் கிடைக்கப்பெற்ற நாய் உள்ளிருக்கும் தேங்காய்ப்பருப்புக்காக தேங்காயை உடைக்க முடியாமல் அங்கும் இங்கும் உருட்டி அலையும் நாய் போல)
இப்போது ஏ.டி.எம் கார்டை வைத்துள்ள எங்களை எந்த வங்கியின் ஏ.டி.எம்.மையத்தில் பணம் இருக்கும் என்று எ.டி.எம். மையங்களுக்காக தெருத்தெருவாக அலைய வைத்து வேதனைப்படுத்துவதை எப்படிங்க உங்களால் மட்டும் நியாயமாக பார்க்க முடிகிறது.
பிழைக்க அவசரத்தேவைக்கு உயிர்த்தண்ணீர் கேட்டால் சற்று பொறு? அடுத்த ஆண்டு புயல் மழையால் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை பயன்படுத்திக்கொள் என்று சொல்வதைப்போல் அல்லவா உள்ளது.பின்னர் கிடைக்கும் பிரியாணியை விட தற்போது பசியை போக்கும் பழைய சோறு,கஞ்சி அல்லவா அமிர்தம் போன்றது.தேவைக்கான நேரமும்  , கால இடைவெளியும் பொருந்த வேண்டாமா? மிகவும் வேதனையுடன் 

எனது பணத்துக்காக அலையும் C. பரமேஸ்வரன் டிரைவர்,சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக