12 மே 2014

இந்திய சீர்தர நேரம். IST +5.30மற்றும் புவியிடங்காட்டி..

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                   கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                   இந்திய சீர்தர நேரம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிசாப்பூர் நகரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைந்த உலக சீர்தர நேரத்தின் +5.30 மணி நேர வித்தியாசத்தை அடிப்படையாக வைத்து 82.5 டிகிரி தீர்க்க ரேகை அதாவது நெட்டாங்கு (Longititude) புள்ளியினை இந்திய சீர்தர நேரத்துக்கான புள்ளியாக கொண்டு இந்திய நாட்டின் நேரத்தை கணக்கிடப்படுகிறது.
        UTC - Universal Time  Co-ordinated ஒருங்கிணைந்த சீர்தர நேரம் என்பது இங்கிலாந்து நாட்டின் இலண்டன் மாநகரத்திலுள்ள கிரீன்விச் சிறு நகரத்தில் உள்ள ராயல் வானிலை ஆராய்ச்சி மையத்தின் இடைநிலை சூரிய நேரத்தை நண்பகல் நேரத்தை 12.00மணி என மையமாக வைத்து கணக்கிடப்படுகிறது.இந்த நேரத்தை கிரீன்விச் மீன் டைம் என்றும் கூறுவர்.அதாவது GMT - Greenwich Mean Time என்பர்.
                         
                    (இந்த கிரீன்விச் நகரத்தை மையமாக வைத்து வடக்கில் 180 பாகை (டிகிரி) எனவும்,தெற்கில் 180பாகை (டிகிரி)எனவும் பூமியின் வட்டத்தை கணக்கிட்டு இத்தனை பாகை,இத்தனை கலை,இத்தனை விகலை தூரத்தில் ஓர் இடம் அமைந்து உள்ளது என்று கணக்கிட்டு அறியலாம்.இதுவே இன்றைக்கு புவியடங்காட்டி என்னும் GPS (Global Positioning System) முறையில் கூகுள் வரைபடம் உள்ளிட்ட எந்த முறை புவியிடங்காட்டுதல் முறையிலும் குறிப்பிட்ட இடத்தை காண முடிகிறது.)

             கனடா நாட்டைச் சேர்ந்த ஸ்டேண்ட்ஃபோர்டு ஃபிளெம்மிங் (Standford Fleming) என்பவர் 1876ஆம் ஆண்டு பீமியின் உருண்டை வடிவத்தை 360 பாகையாக (டிகிரி) கொண்டு அதன்படி ஒவ்வொரு 15 பாகைக்கும் (டிகிரிக்கும்) ஒரு மணி நேரம் என கணக்கிட்டு 24 மணி நேரத்தை உலகம் முழுவதும் பயன்படும் விதத்தில் 24மணி நேரவலயத்தை அமைத்து வெளியிட்டார்.

   கிரீன்விச் 0பாகை(டிகிரி) கற்பனைக்கோட்டை மையமாக வைத்து   வரையப்பட்ட நேர்கோட்டிலிருந்து நிலநடுக்கோடு என்னும் பூமத்திய ரேகையை தொடும் இடத்தை   0பாகை (டிகிரி) என  கணக்கிட்டு பூமத்திய ரேகையிலிருந்து கிழக்கிலும்,மேற்கிலும் பசிபிக் பெருங்கடலிலுள்ள 180 பாகை (டிகிரி) வரை EAST & WEST என  கணக்கிட்டு IST -(International Date Time) உலக நாள்காட்டி நேரம் குறிக்கப்படுகிறது.

             உதாரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் GPS முறைப்படி அல்லது சோதிடவியல் முறைப்படி சத்தியமங்கலம் அமைந்துள்ள இடம்11பாகை 30கலை வடக்கு,& 77பாகை 14விகலை கிழக்கு என்று குறிப்படப்பட்டு இருக்கும்.இதில்  (11 Degree 30 Minutes) 11பாகை 30 கலை வடக்கு என்று குறித்துள்ளதை வைத்து பூமத்திய ரேகையிலிருந்து வடக்கில்  11பாகை 30 கலை தூரத்தில் சத்தியமங்கலம் அமைந்துள்ளது என தெரிந்து கொள்ளலாம்.அடுத்து 77டிகிரி 14 விகலை தூரத்தில் கிழக்கு என்று குறிக்கப்பட்டுள்ளதை கிரீன்விச் நகரத்தின் 0டிகிரி நேர்கோட்டிலிருந்து கிழக்கில் 77 டிகிரி 14 விகலை தூரத்தில் சத்தியமங்கலம் அமைந்துள்ளது என அறியலாம்.
                    அதாவது வடக்காக மற்றும் கிழக்காக (11பாகை 30கலை வடக்கு,& 77பாகை 14விகலை கிழக்கு) வெட்டும் அல்லது இணைக்கும் இடம் சத்தியமங்கலம் என தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறாக உலகின் அனைத்து இடங்களையும் அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரமா? மக்களவை உறுப்பினரா??

 அனைவருக்கும் வணக்கம்.      நீலகிரி த்தொகுதி 19-04-2024 வெள்ளிக்கிழமை இன்று 18வது மக்களவைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு மூன்றுமரக்கன்றுகளையும...