04 செப்டம்பர் 2013

ஆசிரியர் தினம்-கவிதைகள்.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இன்று ஆசிரியர் தினம்.நான் படித்த கவிதைகளை இங்கு பதிவிடுகிறேன்.படியுங்கள்.ஆசிரியர்களின் உயர்வைப்போற்றுங்கள்.

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்


எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி ஐயா ! 
உங்கள் சேவைக்கு 
நீங்கள் தந்த கல்விக்கு 
நன்றி சொல்வது மட்டும் போதாது 
நான் என் ஆயுள் முழுவதும் 
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன் 

உங்கள் சேவையை என்றும் 
மறக்க மாட்டேன் ! 
நன்றியுடன் உங்களை 
நினைத்துப் பார்க்கும் 

உங்கள் மாணவன் ஆகிய நான் உங்களுக்குஆசிரியர்கள்  தின நல்வாழ்த்துக்கள்! கூறி வணங்குகிறேன்.


       நாங்கள் பரிட்சை எழுத 
நீங்கள் அல்லவா படித்தீர்கள் 
நாங்கள் வெற்றி பெற 
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள் 

கல்லும் உடையாமல் 
சிலையும் சிதறாமல் 
எங்களை செதுக்கிய 
சிற்பி அல்லவா நீங்கள் 

மழையின் அருமை தெரியாமல் 
மழையை கண்டு ஓடுபவர்போல 
உங்களைக் கண்டு ஓடினோம் 
மழையின் அருமை 
கோடையில் தெரியும் 
உங்களின் அருமை, பெருமை 
இப்போது உணர்கிறேன் ! 
 உங்கள் மாணவன் ஆகிய நான் உங்களுக்குஆசிரியர்கள்  தின நல்வாழ்த்துக்கள்! கூறி வணங்குகிறேன்.



     எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால் 
நோக்கம், லட்சியம் ஒன்று தானே 
என் மாணவன் முன்னேற வேண்டும் 
தேர்ச்சிபெற வேண்டும் 
வெற்றி பெற வேண்டும் 
ஆஹா ! 
எத்தனை உயரிய எண்ணம் 
நீங்கள் அல்லவா 
வணக்கத்துக்குரியவர்கள் 


எத்தனை கேலிகள் 
எத்தனை கிண்டல்கள் 
எத்தனை துன்பங்கள், தொல்லைகள் 
உங்களுக்கு செய்தோம் 
இன்று நினைக்கையில் 
என் உள்ளம் வலிக்கிறதே 
உங்கள் காலில் விழுந்து 
மன்னிப்பு கோருகிறோம் 
எங்களை மன்னியுங்கள் - ஐயா

இன்று வரையிலும் , இனிமேலும் 
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு 
நாங்கள் அடையும் புகழ்களுக்கு 
உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா ! 
 உங்கள் மாணவன் ஆகிய நான் உங்களுக்குஆசிரியர்கள்  தின நல்வாழ்த்துக்கள்! கூறி வணங்குகிறேன்.


நாங்கள் செய்த தவறுக்கு 
தண்டனை எங்களுக்கு தந்து 
வேதனையை - நீங்கள் 
அல்லவா அனுபவித்தீர்கள் 

எத்தனை அன்பு , அரவணைப்பு 
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள் 
எல்லாம் எதற்கு 
எங்கள் வாழ்வு வளம் பெறத்தானே 

எத்தனை நாள் 
மழையில் நனைந்தீர்கள் 
வெயிலில் காய்ந்தீர்கள் 
பசியை மறந்தீர்கள் 

உங்கள் குடும்பத்தைவிட 
எங்கள் நலனில் தானே 
அதிகம் அக்கறை செலுத்தினீர்கள்

இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்த்திருந்தாலும்
நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...!
 



கை எடுத்து வணங்குகிறேன் 
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் 

நான் வாழ ! நான் முன்னேற! 
எனக்காக உழைத்தவர்கள் 
நான் இன்று இன்பம் காண 
அன்று துன்பம் பொறுத்தவர்கள் 

நான் முத்து சேர்க்க 
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள் 
என் இளம் வயதில் கண்ட 
நடமாடும் தெய்வங்கள் ! 
என் ஆசிரியர்கள் 
 உங்கள் மாணவன் ஆகிய நான் உங்களுக்குஆசிரியர்கள்  தின நல்வாழ்த்துக்கள்! கூறி வணங்குகிறேன்.
  என 
எனக்கு ஆரம்பக்கல்வி கொடுத்த ஆசிரியப்பெருந்தகைகள் முதல் அனைத்து ஆசிரியப்பெருமக்களை போற்றி வணங்கும் அன்பன்,
  cC.PARAMESWARAN,
  செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
 தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...