11 ஆகஸ்ட் 2013

அறிவு என்பது என்னங்க?

                                                அறிவு என்பது என்னங்க?
  
     மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                      

          '' கொங்குத் தென்றல்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்தப்பதிவில் ''அறிவு என்பது என்ன?'' என்பதற்கான விளக்கம் எனக்குத்தெரிந்த கருத்தினை பதிவிடுகிறேன்.
                      இதில் ஏதாவது தவறுகள் இருந்தாலோ,குறைகள் இருந்தாலோ , கூடுதலான ஆலோசனைகள் இருந்தாலோ, அல்லது இந்த பதிவால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தாலோ  தங்களது கருத்தினையும்,விமர்சனத்தையும்,  எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்.
                                 
                        சரிங்க இனி விசயத்திற்கு வருவோம்;-
      
               அறிவு என்பது என்னங்க? என்ற  தலைப்பை தேர்வு செய்யக்காரணமாக இருந்தவர்  இணையதள நண்பர் மரியாதைக்குரிய, ரவிபார்த்தசாரதி அவர்கள்.
                 தற்போது நம்ம ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை நடத்திவரும் புத்தகத்திருவிழா-2013 நடைபெற்றுக்கொண்டிருப்பது  அனைவரும் அறிந்ததே!.
               அறிவுத்திருவிழாவாம் புத்தகத்திருவிழாவின் எட்டாவது நாளான 10-08-2013-ந்தேதி அன்று மாலை 03-00 மணி முதல் 05-00 மணிவரை படைப்பாளர்கள் மேடையில்  இணையநண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

             அந்த நிகழ்ச்சியில் மலேசியா,லட்சத்தீவு,தாளவாடி,சேலம்,திருவண்ணாமலை,கோவை, சத்தி உள்ளிட்ட பல இடங்களிலிருந்து தமிழ் ஆர்வலர்கள்,தமிழ் இணையப்பயனர்கள்,வலைப்பதிவர்கள்,ஃபேஸ்புக்,கூகிள் பிளஸ் போன்ற சமூகவலைத்தள நண்பர்கள்,வருகை தந்து தமிழுக்கு பெருமை சேர்த்தனர்.
            (  நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும் தமிழுலகம் சார்பாக நன்றிகள் பல.)
                    அப்போது கலந்துரையாடல் கருத்துப்பரிமாற்றம் எல்லாம்  மிகச்சிறப்பாக நடந்தேறியது.அப்போது ஈரோடு நகரப்பகுதியினைச்சேர்ந்த இணையதள நண்பர் திருமிகு.ரவிபார்த்தசாரதி அவர்கள் ''உலக வெப்பமயமாதல் என்பது என்றும் நடக்காது வெப்பமயமாதல் என்பது சுத்தப்பொய்''.என்று அதிர்ச்சியான விவாதத்தை முன்வைத்தார்.
                            மேலும் அவர் விவாதத்தில் ,சுனாமி,நிலநடுக்கம்,எரிமலை வெடிப்பு,புயல்கள்,கடல்கள் உள்வாங்குதல் போன்ற இயற்கைப்பேரிடர்கள் நடைபெற காரணம் இதுவரை பெய்த மழையால் உப்புப்பாறைகளிலிருந்து கரைந்த உப்புக்கரைசல்  கடலுடன் கலந்து,கலந்து அதன் விளைவாக கடல்நீரில் ஏற்பட்ட  உப்பின் அடர்த்தியால்தான் இது போன்ற இயற்கைச்சீற்றங்கள் ஏற்படுகின்றன.என்ற கருத்தினை ஆழமாக, ஆபத்தான கருத்தினை முன்வைத்தார்.
            அவரது சவாலான கருத்துள்ள விவாதங்களை எதிர்கொள்ள வேண்டியதாகவும் உள்ளது.இவ்வாறான சவாலான கருத்தினை ஒரு பேராசிரியர் முன் வைத்திருக்கிறார்.ஆனால் பேராசிரியரோ  திருமிகு.ரவிபார்த்தசாரதி அவர்களுக்கு கல்வி அறிவுக்குறைபாடு காரணமாக  அறிவார்ந்த தகுதி இல்லை! எனக்  கூறிவிட்டதாக ஆதங்கப்பட்டதோடு ஆவேசப்பட்டார்.
                 (அவரது கருத்துச்  சுதந்திரத்திற்கு,கருத்துரிமைக்கு  ஆதரவு அளிப்போம்.அந்த கருத்துக்கள் அறிவியல் ரீதியான நடைமுறைக்கு ஒத்துவருமா?வராதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்.அல்லது அவரது சவாலை முறியடிக்க விவாதக்களம்! ஒன்று அமைத்து விவாதம் நடத்தலாம்!உண்மைநிலையை வெளிக்கொணரலாம்!!அது வேறு விசயம்! ஆனால் திருமிகு.ரவி பார்த்தசாரதி அவர்கள்  மதிப்பிற்குரிய சான்றோர்களான தமிழக,இந்திய,உலக விஞ்?????????அனைவரையும் முட்டாள்? எனக் கூறியது  வருந்தத்தக்கது.கண்டனத்திற்குரியதும் கூட .)
                அதனால்தாங்க,
                      அறிவு என்பது என்ன? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.அதாவது.........
        அறிவு என்பது உணர்தலாலும்,அனுபவத்தாலும்,கற்பதாலும் சிந்திப்பதாலும்,கற்பனைகளாலும் கிடைப்பதாகும்.அறிவு என்பது பிறந்த நாளிலிருந்து இறக்கும்வரை தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்ககூடியதாகவே உள்ளது.முடிவில்லாதது.முழுமையாகப்பெறமுடியாதது.

                                        ஆனால் அந்த அதிசயமிக்க,ஆழமிக்க,அளவிடமுடியாத,அறிவினை ,கல்விநிலையங்களில் படித்தவர்களுக்கே அறிவு இருப்பது போன்றும்,அவ்வாறு கல்விநிலையங்களில் படித்தவர்களே அறிஞர்கள் என்ற தோற்றப்பாடும் பொதுவாக நம் எல்லோரிடத்தும் காணப்படுகின்றன.அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது.

         அதற்கு உதாரணமாக நமது முன்னோர்களான அறிவியலறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றினை படிக்க வேண்டும். அவர்களது ஏழ்மைநிலை.,மற்றும் மதவெறியர்களால் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டு தன்னுயிரையே மாய்த்த நிலையை அறிய வேண்டும்அதற்காக இங்கு
           (ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை வருடந்தோறும் நடத்தும் புத்தகத்திருவிழா,இது இருநூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் நிறைந்தபிரமாண்ட ப்பெருவிழா!)  
                 நடைபெறும் புத்தகக்கண்காட்சியில் நேர விரயம் இல்லாமல்,எவ்வித இடையூறுகளும் இல்லாமல் மிக எளிதாக இவ்வாறான புத்தகங்களைப்பெற்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்..
               உதாரணமாக கணித வரலாற்றின் ரத்த சாட்சிகளான அறிஞர் பெருமக்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றியும் இதர அறிவியல் அறிஞர்களின் துயரங்கள் பற்றியும் இங்கு காண்போம்.
                     (1)பெராரி என்ற கணிதவியலார் அவரது குடும்பத்தாராலேயே உணவில் விசம் கொடுக்கப்பட்டு கொல்லப்படுகிறார். (2)ரெய்மன் என்ற கணிதவியலார் திடீர் என மர்மமாக இறக்கிறார்.  (3)இவாரிஸ்ட் காலோயிஸ் என்ற கணிதவியலார்  ஓடவைத்த குதிரையின் பின்னால் கட்டி இழுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்.  (4) கிரேக்க நாட்டைச்சேர்ந்த உலகின் முதல் பெண் கணிதவியலார் ''ஹிப்பாஷியா'' என்ற கிரேக்க நாட்டைச்சேர்ந்தவர்., ''சாத்தானின் பீடை'' என்றுஅன்றைய மதவாதிகளால் அறிவிக்கப்பட்டு அவரை நிர்வாணமாக்கி துண்டு,துண்டுகளாக வெட்டப்பட்டு தீயிலிடப்பட்டு கொல்லப்படுகிறார்.  (5)தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் படிக்கும்போதே அவரது ஆசிரியரால் மூளைக்கோளாறு உள்ளவர் என்று திட்டப்பட்டு பாதியிலேயே படிப்பை விட்டு வெளியேறியவர்,  (6)நீல்ஸ் போகர் என்ற டேனிஷ் விஞ்ஞானி,  (7)சர் ஐசக் நியூட்டன் என்றகணித விஞ்ஞானி,  (8)லியானார்டோ டவின்சி என்ற உலகப்புகழ் பெற்ற இத்தாலியக்கலைஞர்  போன்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் மூளைத்தளர்ச்சி உள்ளவர்கள்,மூளைக்குறைபாடு உள்ளவர்கள் என்று அன்றைய தினம் பள்ளியில் பயின்றபோது ஆசிரியர்களால் கணிக்கப்பட்டு  பல துயரங்களுக்கு ஆளானவர்கள்தான்.

                   இவ்வாறு அறிவு என்பதும் அறிவியல் என்பதும் எப்போதும் யாவருக்கும் தனிப்பட்ட சொத்து ஆகாது! என்பதை மேற்கண்ட அறிவியல் அறிஞர் பெருமக்களின் வரலாற்றை படிக்கும்போது உணர்கிறோம். அதனால்தாங்க!,  

       அறிவு என்பது உயிரினங்களுக்கு ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடும் தன்மை கொண்டதுங்க!.உதாரணமாக  நம்மைவிடத் தாழ்ந்த உயிரினமாகக் கருதப்படும்
          விலங்குகள்,பறவைகள்,பூச்சியினங்கள்,உட்பட எல்லா உயிரினங்களுக்கும் அறிவு மற்றும் ஆற்றல் உண்டு.அவற்றை இயற்கையறிவு,உணர்வறிவு,படிப்பறிவு,பட்டறிவு,அனுபவ அறிவு,கல்வியறிவு,தொழில் சார்ந்த அறிவு,துறை சார்ந்த அறிவு, ஆழ்மனப்பதிவு அறிவு எனப் பலவகைகளாகப் பிரிக்கலாம். தேனீக்களின் வாழ்வியல்முறை இன்றைய கணினியுகத்திலும் வியப்புக்குரியதாகவே உள்ளன.அதேபோல கறையான்களின்,எறும்புகளின்,தூக்கணாங்குருவிகளின்,சிலந்திகளின் வாழ்வியல்முறைகள்,வசிப்பிடம் அமைக்கும் முறைகள்,தலைமைக்குக்  கட்டுப்பட்டு நடக்கும் முறைகள் என வியத்தகு நிகழ்வுகளை அன்றாடம் தமக்குள்ளே நடத்திக்கொண்டு இருக்கின்றன.தேனீக்களைப்போன்று கூடு கட்ட முடியுமா?தேனீக்களைப் போன்று தலைமைக்குக் கட்டுப்பட்டு சுறுசுறுப்பாக,நமது வாழ்வை சீரமைக்கமுடியுமா?தூக்கணாங்குருவி போன்று கூடு கட்ட முடியுமா?சிலந்தி போன்று வலைபின்னலை உருவாக்க முடியுமா?கறையான்கள் போன்று வசிப்பிடம் அமைத்துக்கொள்ள முடியுமா? பறவையினங்களைப்போன்று திசையறிந்து கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று சூழ்நிலைக்கேற்ப திரும்பி வர முடியுமா? நாம் அதிகம் படித்தவர்களை மட்டும் அறிவாளிகள் என்று கணிக்க இயலுமா? படிப்பு என்பது மற்றவர்களின் அனுபவங்களை படித்து அறிந்து கொள்ளத்தாங்க முடியும்.அதற்காக புத்தகம் மட்டுமே படித்துவிட்டு  மிதிவண்டி ஓட்ட முடியுமா?புத்தகம் மட்டுமே படித்துவிட்டு நீந்த முடியுமா? அனுபவமும் முக்கிய பங்கு கொண்டதுங்க!
                     அவ்வாறு இருக்கையில் நமக்குள் எத்தனை சோம்பல்?,எத்தனை மறதி?எத்தனை தடுமாற்றம்?எத்தனை குறுக்குப்புத்தி?எத்தனை சுயநலம்?எத்தனை கெடுதல்? எத்தனை தவறுகள்?எத்தனை ஆணவம்?  
                          எனவேதாங்க, அறிவு என்பது ஆளை வைத்து,அழகை வைத்து, உருவத்தோற்றத்தை வைத்து,கற்ற ஏட்டுக்கல்வியை மட்டும் வைத்து  அளவிட முடியாதுங்க!.இதில் மாறுபட்ட கருத்து ஏதும் இருந்தால் தெரிவியுங்க!!,கடும் விமர்சனம் பண்ணுங்க!!!.                                             
                                                                    என 
                                                                     அன்பன்
                                                              பரமேஸ்வரன்.C.,
                                                            ஓட்டுனர்,
                               தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை கோட்டம்,
                                  தாளவாடி கிளை-ஈரோடு மண்டலம்.

4 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.
    நன்கு எழுதுங்கள்; நிறைய எழுதுங்கள்.
    நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மரியாதைக்குரியவரே,திருமிகு.ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்களே வணக்கம்.தங்களது மேலான கருத்துரைக்கு எனது முதற்கண் நன்றிகள் பல.தங்களது ஆசிர்வாதத்தோடு இனி என்றென்றும் எழுத உள்ளேன்.நன்றிங்க ஐயா!.என அன்பன் Parameswaran.c // Driver - Tamil nadu state transport corporation - Thalavady -Erode Dt.(1) http;// konguthendral.blogspot.com .,(2) http;//paramesdriver.blogspot.com.,(3)http;//consumerandroad.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. மிகுந்த ஆரோக்கியமான பதிவு.அதிலும் தலைப்புக்கு காரணமா என்னைய கை காட்டிவிட்டீர்கள்.நன்றி.
    என்னுடைய ஆவேசத்திற்கு காரணம் பலியாகிக் கொண்டிருக்கும் மற்றும் பலியாகத் தயாராக உள்ள அப்பாவிகளின் உயிர்கள்.
    படித்த சமுதாயம் மற்றும் உலக அளவில் விரைவு கருத்துப் பரிமாற்றம் என மின்னல்வேக முன்னேற்றத்தில் வாழ்ந்து வருகிறோம்.
    எனது கருத்துகளை யாரும் மதிக்கவில்லை என்ற கோபத்தில் நான் எழுதவில்லை என்பது நிச்சயமான உண்மை.

    எனது எழுத்துரு இடித்துரைப்பது.

    பெரிய எழுத்துகளில்....
    நீ(உங்களை அல்ல) சாகப்போகிறாய்,விழி...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய ஐயா,ரவி அவர்களே வணக்கம்.தங்களுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறேன்! தாங்கள் கவனிக்கவில்லைங்களா? அது தங்கள் மீதுள்ள கோபம் என்பது இல்லைங்க! மாறாக நம்ம சமூகம் விஞ்ஞானிகளாக ஏற்றுக்கொண்டிருக்கும் சூழலில் அவர்களை திட்டாமல் தங்களது கருத்துக்களை தாராளமாக வெளியிட்டு மக்கள் ஆதரவினை திரட்டலாம் அல்லவா?நம்ம நாகரீகம்,பண்பாடு காக்கப்பட வேண்டும்.நாம் மட்டும் விதிவிலக்காக இருக்கக்கூடாதுங்க!

      நீக்கு

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...