26 ஆகஸ்ட் 2013

அன்னை தெரேசா.....


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இன்று அன்னை தெரேசா பிறந்த தினம்.

அன்னை தெரேசா பிறந்த தினமின்று:
*******************************
அன்னை தெரேசா தனது சேவையில் பல அவமானங்களையும் சந்தித்தார் , இவற்றையெல்லாம் கடந்தே இவர் பல சேவைகளை செய்துள்ளார் , இவரது வாழ்க்கையில இடம்பெற்ற நிகழ்வில் ஒரு நிகழ்வே இது
அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன

.
பலர் அருவருத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழு நோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயத்துக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவருடைய Missionaries of Charity அமைப்பு தற்போது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.

உன்னத அன்னையின் உயிர்மூச்சு 1997ம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி அவரது 87வது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.


தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வருணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது

கிடைத்த விருதுகள் :
• 1962 – பத்ம ஸ்ரீ விருது
• 1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
• 1971 – குட் சமரிட்டன் விருது
• 1971 – கென்னடி விருது
• 1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
• 1973 – டெம் பிள்டன் விருது
• 1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
• 1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது
• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை


அன்பு மட்டுமே உலகில் நிலையாக இருக்கும் என்பது அன்னை தெரேசாவின் வாழ்க்கையில இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம் .

                                              அன்னை தெரேசா தனது சேவையில் பல அவமானங்களையும் சந்தித்தார் , இவற்றையெல்லாம் கடந்தே இவர் பல சேவைகளை செய்துள்ளார் , இவரது வாழ்க்கையில இடம்பெற்ற நிகழ்வில் ஒரு நிகழ்வே இது
                                      அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். 
                                  ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. 
                                  அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இறுதி வெற்றி தெரசாவுக்குத்தான். 
                          இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன

.
                             பலர் அருவருத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழு நோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயத்துக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவருடைய Missionaries of Charity அமைப்பு தற்போது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.

                      உன்னத அன்னையின் உயிர்மூச்சு 1997ம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி அவரது 87வது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.

                                  தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வருணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது

கிடைத்த விருதுகள் :
• 1962 – பத்ம ஸ்ரீ விருது
• 1971 – 23வது போப் ஜான் அமைதி விருது
• 1971 – குட் சமரிட்டன் விருது
• 1971 – கென்னடி விருது
• 1972 – சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது
• 1973 – டெம் பிள்டன் விருது
• 1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
• 1982 – பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
• 1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது
• 1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை

அன்பு மட்டுமே உலகில் நிலையாக இருக்கும் என்பது அன்னை தெரேசாவின் வாழ்க்கையில இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம் .

19 ஆகஸ்ட் 2013

பயனுள்ள இணையதளங்கள் நமக்காக....

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
            கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இங்கு இணையதள நண்பர்களுக்காக சில பயனுள்ள வலைத்தளங்கள் பதிவிட்டு உள்ளேன்.அனுபவியுங்க!

         பயனுள்ள இணையதளங்கள்!

சான்றிதழ்கள்


1) பட்டா / சிட்டா அடங்கல் பார்வையிட.......
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ் பார்வையிட.........
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

C.எலக்ட்ரானிக் என்னும்  E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/

2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/

http://www.makemytrip.com/

http://www.ezeego1.co.in/

D. E-Payments (Online)

1) தொலைத்தொடர்பு BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

2)  நகர்பேசி Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

http://www.itzcash.com/

3)மின்சாரம்  E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/

https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

4) இணையதள வங்கி மூலமாக  பணம் மாற்றும் வசதி,

5) மின்னணு E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/

http://shopping.indiatimes.com/

http://shopping.rediff.com/shopping/index.html

6) பங்கு சந்தை Share Market –  On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/

http://www.hdfcsec.com/

http://www.religareonline.com/

http://www.kotaksecurities.com/

http://www.sharekhan.com/

E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்து கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

http://www.results.southindia.com/

http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/

http://www.lampsglow.com/

http://www.classontheweb.com/

http://www.edurite.com/

http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்து கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/

http://www.tnpsctamil.in/

http://www.upsc.gov.in/

http://upscportal.com/civilservices/

http://www.iba.org.in/

http://www.rrcb.gov.in/

http://trb.tn.nic.in/

http://www.tettnpsc.com/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்து கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/

http://www.omcmanpower.com/

http://www.naukri.com/

http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/

http://bsf.nic.in/en/career.html

http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/

http://www.gmail.com/

http://www.yahoochat.com/

http://www.meebo.com/

F. கணினி பயிற்சிகள் (Online)

1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/

http://www.intelligentedu.com/

http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) குழந்தைகளுக்கான  கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html

3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/

http://www.miniclip.com/

http://www.pogo.com/

http://www.freeonlinegames.com/

http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதளங்கள்.
http://www.google.com/

http://www.wikipedia.com/

http://www.hotmail.com/

http://www.yahoo.com/

http://www.ebuddy.com/

http://www.skype.com/

G. பொது சேவைகள் (Online)

1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/

http://www.rtiindia.org/forum/content/

http://rti.india.gov.in/

http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தளங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/

http://www.india-tourism.com/

http://www.theashokgroup.com/

http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளும் வசதி
http://www.tamilmatrimony.com/

http://kalyanamalai.net/

http://www.bharatmatrimony.com/

http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்து  கொள்ள
http://www.koodal.com/

http://freehoroscopesonline.in/horoscope.php

6) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

7) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்களின் முகவரி / தொலைபேசி தகவல்களை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதழ்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/

http://www.dinamani.com/

http://www.dailythanthi.com/

http://www.tamilnewspaper.net/

http://www.vikatan.com/

http://www.puthiyathalaimurai.com/

http://www.nakkheeran.in/

10) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/

http://www.bbc.co.uk/

11)
நீங்கள் SPEED POST மூலமாக அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இணையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய

1) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொருட்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/

I. வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/

http://www.rates.goldenchennai.com/

http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/

http://www.xe.com/

H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெறுவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf

http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf

6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf

7) திருமணப்பதிவிற்கான குறிப்பு ஆவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc

http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf

K. விவசாய சந்தை சேவைகள் (Online)

1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/

2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/

3) தோட்டப்பயிர்களின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx

4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/

5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/

6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php

7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/

9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/

L. தொழில் நுட்பங்கள்

1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed

3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html

4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html

5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html

M. வேளாண் செய்திகள்

1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html

3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html

4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html

5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html

N. திட்டம் மற்றும் சேவைகள்

1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html

2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html

3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html

4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm

5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html

6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html

7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/

9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html

10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html

11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html

12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html

O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்

1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html

3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html

4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html

5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html

6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html

7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/

9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html

http://www.tnsamb.gov.in/fertilizers.html

10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php

P. போக்குவரத்து துறை

1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf

2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do

3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html

4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do

5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do

6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do


நன்றிங்க என அன்புடன் 
                     C.பரமேஸ்வரன்,
                         ஓட்டுனர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-கோவை கோட்டம்
ஈரோடு மண்டலம்.

11 ஆகஸ்ட் 2013

தமிழர்களின் சமையல்பொருட்களின் மருத்துவக்குணங்கள்.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
   கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
           நமது தமிழர்கள் சமையல்பொருட்களின் மருத்துவப்பயன்கள் பற்றி காண்போம்.
    #‎நறுமணச்‬ சரக்கு வகைகள் - மசாலாக்களும் மருந்துகளும் .. தகவல்கள்.
               #‎கிராம்பு‬ எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலி
ருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.
   என்ன சத்து?
                            கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
  என்ன பலன்கள்?
               கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
          ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
              கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
           சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
            தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
            கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
             முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
   சருமப் பிரச்னைகளுக்கு -
              கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.
           திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.
               துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
         எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
                 வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவி வர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.
                கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் வாந்திபேதி குணமடையும்.
                       சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டல் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப்பூண்டு, உள்ளிச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
              #‎சுக்கு‬, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.

                   உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

              #பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது.

                  #ஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

                   # கிராம்பு: நுரையீரல் தொடர்பான நோய், காயங்களினால் திசுக்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குடலில் உள்ள ஒட்டுண்ணி, பூஞ்சை, பாக்டீரியாக்களை அழிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

‪             #‎இஞ்சி‬ : மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்கள் ஆறும் தன்மையை அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் ள்ளது. குமட்டலை தவிர்க்க உதவும்.

                 #  புதினா: ஜீரண உறுப்பை சீர்செய்து, மலச்சிக்கலை குறைக்கும் தன்மை இதில் உள்ளது. உணவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது. ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை தடுக்கும் திறன் வாய்ந்தது.

              # ஏலக்காய்: வாயுவை நீக்குதல், ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல், சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது. ‪#‎ஏலக்காய்‬ ஊறவைத்த நீர் தொண்டை உலர்வதை தடுக்கும்.

‪               #‎மல்லி‬: செரிமானத்திற்கு உதவும் மல்லி, இதயத்திற்கு நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும்.

‪                 #‎மஞ்சள்‬: காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால், இதை தினசரி உட்கொள்ளும் போது ரத்த சோகையை தவிர்க்கலாம். குடல் நோய்கள் மற்றும் வயிற்றுபோக்கை குணப்படுத்தும். இதன் சாறு படர்தாமரையை குணப்படுத்தும்.

           # சோம்பு: வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.

‪                    #‎பெருங்காயம்‬: கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.

‪                #‎சீரகம்‬: சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.

‪               #‎வெந்தயம்‬: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.

‪                            #‎கடுகு‬: இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

‪                         #‎பூண்டு‬: வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தைக் குணப்படுத்துகிறது.

‪                     #‎ஓமம்‬: இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது. 
                என அன்பன் பரமேஸ்வரன்.சி.,
           ஓட்டுனர்,
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,
 தாளவாடி கிளை - ஈரோடு மண்டலம்.

அறிவு என்பது என்னங்க?

                                                அறிவு என்பது என்னங்க?
  
     மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                      

          '' கொங்குத் தென்றல்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்தப்பதிவில் ''அறிவு என்பது என்ன?'' என்பதற்கான விளக்கம் எனக்குத்தெரிந்த கருத்தினை பதிவிடுகிறேன்.
                      இதில் ஏதாவது தவறுகள் இருந்தாலோ,குறைகள் இருந்தாலோ , கூடுதலான ஆலோசனைகள் இருந்தாலோ, அல்லது இந்த பதிவால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தாலோ  தங்களது கருத்தினையும்,விமர்சனத்தையும்,  எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன்.
                                 
                        சரிங்க இனி விசயத்திற்கு வருவோம்;-
      
               அறிவு என்பது என்னங்க? என்ற  தலைப்பை தேர்வு செய்யக்காரணமாக இருந்தவர்  இணையதள நண்பர் மரியாதைக்குரிய, ரவிபார்த்தசாரதி அவர்கள்.
                 தற்போது நம்ம ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை நடத்திவரும் புத்தகத்திருவிழா-2013 நடைபெற்றுக்கொண்டிருப்பது  அனைவரும் அறிந்ததே!.
               அறிவுத்திருவிழாவாம் புத்தகத்திருவிழாவின் எட்டாவது நாளான 10-08-2013-ந்தேதி அன்று மாலை 03-00 மணி முதல் 05-00 மணிவரை படைப்பாளர்கள் மேடையில்  இணையநண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

             அந்த நிகழ்ச்சியில் மலேசியா,லட்சத்தீவு,தாளவாடி,சேலம்,திருவண்ணாமலை,கோவை, சத்தி உள்ளிட்ட பல இடங்களிலிருந்து தமிழ் ஆர்வலர்கள்,தமிழ் இணையப்பயனர்கள்,வலைப்பதிவர்கள்,ஃபேஸ்புக்,கூகிள் பிளஸ் போன்ற சமூகவலைத்தள நண்பர்கள்,வருகை தந்து தமிழுக்கு பெருமை சேர்த்தனர்.
            (  நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும் தமிழுலகம் சார்பாக நன்றிகள் பல.)
                    அப்போது கலந்துரையாடல் கருத்துப்பரிமாற்றம் எல்லாம்  மிகச்சிறப்பாக நடந்தேறியது.அப்போது ஈரோடு நகரப்பகுதியினைச்சேர்ந்த இணையதள நண்பர் திருமிகு.ரவிபார்த்தசாரதி அவர்கள் ''உலக வெப்பமயமாதல் என்பது என்றும் நடக்காது வெப்பமயமாதல் என்பது சுத்தப்பொய்''.என்று அதிர்ச்சியான விவாதத்தை முன்வைத்தார்.
                            மேலும் அவர் விவாதத்தில் ,சுனாமி,நிலநடுக்கம்,எரிமலை வெடிப்பு,புயல்கள்,கடல்கள் உள்வாங்குதல் போன்ற இயற்கைப்பேரிடர்கள் நடைபெற காரணம் இதுவரை பெய்த மழையால் உப்புப்பாறைகளிலிருந்து கரைந்த உப்புக்கரைசல்  கடலுடன் கலந்து,கலந்து அதன் விளைவாக கடல்நீரில் ஏற்பட்ட  உப்பின் அடர்த்தியால்தான் இது போன்ற இயற்கைச்சீற்றங்கள் ஏற்படுகின்றன.என்ற கருத்தினை ஆழமாக, ஆபத்தான கருத்தினை முன்வைத்தார்.
            அவரது சவாலான கருத்துள்ள விவாதங்களை எதிர்கொள்ள வேண்டியதாகவும் உள்ளது.இவ்வாறான சவாலான கருத்தினை ஒரு பேராசிரியர் முன் வைத்திருக்கிறார்.ஆனால் பேராசிரியரோ  திருமிகு.ரவிபார்த்தசாரதி அவர்களுக்கு கல்வி அறிவுக்குறைபாடு காரணமாக  அறிவார்ந்த தகுதி இல்லை! எனக்  கூறிவிட்டதாக ஆதங்கப்பட்டதோடு ஆவேசப்பட்டார்.
                 (அவரது கருத்துச்  சுதந்திரத்திற்கு,கருத்துரிமைக்கு  ஆதரவு அளிப்போம்.அந்த கருத்துக்கள் அறிவியல் ரீதியான நடைமுறைக்கு ஒத்துவருமா?வராதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்.அல்லது அவரது சவாலை முறியடிக்க விவாதக்களம்! ஒன்று அமைத்து விவாதம் நடத்தலாம்!உண்மைநிலையை வெளிக்கொணரலாம்!!அது வேறு விசயம்! ஆனால் திருமிகு.ரவி பார்த்தசாரதி அவர்கள்  மதிப்பிற்குரிய சான்றோர்களான தமிழக,இந்திய,உலக விஞ்?????????அனைவரையும் முட்டாள்? எனக் கூறியது  வருந்தத்தக்கது.கண்டனத்திற்குரியதும் கூட .)
                அதனால்தாங்க,
                      அறிவு என்பது என்ன? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.அதாவது.........
        அறிவு என்பது உணர்தலாலும்,அனுபவத்தாலும்,கற்பதாலும் சிந்திப்பதாலும்,கற்பனைகளாலும் கிடைப்பதாகும்.அறிவு என்பது பிறந்த நாளிலிருந்து இறக்கும்வரை தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்ககூடியதாகவே உள்ளது.முடிவில்லாதது.முழுமையாகப்பெறமுடியாதது.

                                        ஆனால் அந்த அதிசயமிக்க,ஆழமிக்க,அளவிடமுடியாத,அறிவினை ,கல்விநிலையங்களில் படித்தவர்களுக்கே அறிவு இருப்பது போன்றும்,அவ்வாறு கல்விநிலையங்களில் படித்தவர்களே அறிஞர்கள் என்ற தோற்றப்பாடும் பொதுவாக நம் எல்லோரிடத்தும் காணப்படுகின்றன.அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது.

         அதற்கு உதாரணமாக நமது முன்னோர்களான அறிவியலறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றினை படிக்க வேண்டும். அவர்களது ஏழ்மைநிலை.,மற்றும் மதவெறியர்களால் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டு தன்னுயிரையே மாய்த்த நிலையை அறிய வேண்டும்அதற்காக இங்கு
           (ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை வருடந்தோறும் நடத்தும் புத்தகத்திருவிழா,இது இருநூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் நிறைந்தபிரமாண்ட ப்பெருவிழா!)  
                 நடைபெறும் புத்தகக்கண்காட்சியில் நேர விரயம் இல்லாமல்,எவ்வித இடையூறுகளும் இல்லாமல் மிக எளிதாக இவ்வாறான புத்தகங்களைப்பெற்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்..
               உதாரணமாக கணித வரலாற்றின் ரத்த சாட்சிகளான அறிஞர் பெருமக்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றியும் இதர அறிவியல் அறிஞர்களின் துயரங்கள் பற்றியும் இங்கு காண்போம்.
                     (1)பெராரி என்ற கணிதவியலார் அவரது குடும்பத்தாராலேயே உணவில் விசம் கொடுக்கப்பட்டு கொல்லப்படுகிறார். (2)ரெய்மன் என்ற கணிதவியலார் திடீர் என மர்மமாக இறக்கிறார்.  (3)இவாரிஸ்ட் காலோயிஸ் என்ற கணிதவியலார்  ஓடவைத்த குதிரையின் பின்னால் கட்டி இழுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார்.  (4) கிரேக்க நாட்டைச்சேர்ந்த உலகின் முதல் பெண் கணிதவியலார் ''ஹிப்பாஷியா'' என்ற கிரேக்க நாட்டைச்சேர்ந்தவர்., ''சாத்தானின் பீடை'' என்றுஅன்றைய மதவாதிகளால் அறிவிக்கப்பட்டு அவரை நிர்வாணமாக்கி துண்டு,துண்டுகளாக வெட்டப்பட்டு தீயிலிடப்பட்டு கொல்லப்படுகிறார்.  (5)தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் படிக்கும்போதே அவரது ஆசிரியரால் மூளைக்கோளாறு உள்ளவர் என்று திட்டப்பட்டு பாதியிலேயே படிப்பை விட்டு வெளியேறியவர்,  (6)நீல்ஸ் போகர் என்ற டேனிஷ் விஞ்ஞானி,  (7)சர் ஐசக் நியூட்டன் என்றகணித விஞ்ஞானி,  (8)லியானார்டோ டவின்சி என்ற உலகப்புகழ் பெற்ற இத்தாலியக்கலைஞர்  போன்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் மூளைத்தளர்ச்சி உள்ளவர்கள்,மூளைக்குறைபாடு உள்ளவர்கள் என்று அன்றைய தினம் பள்ளியில் பயின்றபோது ஆசிரியர்களால் கணிக்கப்பட்டு  பல துயரங்களுக்கு ஆளானவர்கள்தான்.

                   இவ்வாறு அறிவு என்பதும் அறிவியல் என்பதும் எப்போதும் யாவருக்கும் தனிப்பட்ட சொத்து ஆகாது! என்பதை மேற்கண்ட அறிவியல் அறிஞர் பெருமக்களின் வரலாற்றை படிக்கும்போது உணர்கிறோம். அதனால்தாங்க!,  

       அறிவு என்பது உயிரினங்களுக்கு ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடும் தன்மை கொண்டதுங்க!.உதாரணமாக  நம்மைவிடத் தாழ்ந்த உயிரினமாகக் கருதப்படும்
          விலங்குகள்,பறவைகள்,பூச்சியினங்கள்,உட்பட எல்லா உயிரினங்களுக்கும் அறிவு மற்றும் ஆற்றல் உண்டு.அவற்றை இயற்கையறிவு,உணர்வறிவு,படிப்பறிவு,பட்டறிவு,அனுபவ அறிவு,கல்வியறிவு,தொழில் சார்ந்த அறிவு,துறை சார்ந்த அறிவு, ஆழ்மனப்பதிவு அறிவு எனப் பலவகைகளாகப் பிரிக்கலாம். தேனீக்களின் வாழ்வியல்முறை இன்றைய கணினியுகத்திலும் வியப்புக்குரியதாகவே உள்ளன.அதேபோல கறையான்களின்,எறும்புகளின்,தூக்கணாங்குருவிகளின்,சிலந்திகளின் வாழ்வியல்முறைகள்,வசிப்பிடம் அமைக்கும் முறைகள்,தலைமைக்குக்  கட்டுப்பட்டு நடக்கும் முறைகள் என வியத்தகு நிகழ்வுகளை அன்றாடம் தமக்குள்ளே நடத்திக்கொண்டு இருக்கின்றன.தேனீக்களைப்போன்று கூடு கட்ட முடியுமா?தேனீக்களைப் போன்று தலைமைக்குக் கட்டுப்பட்டு சுறுசுறுப்பாக,நமது வாழ்வை சீரமைக்கமுடியுமா?தூக்கணாங்குருவி போன்று கூடு கட்ட முடியுமா?சிலந்தி போன்று வலைபின்னலை உருவாக்க முடியுமா?கறையான்கள் போன்று வசிப்பிடம் அமைத்துக்கொள்ள முடியுமா? பறவையினங்களைப்போன்று திசையறிந்து கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று சூழ்நிலைக்கேற்ப திரும்பி வர முடியுமா? நாம் அதிகம் படித்தவர்களை மட்டும் அறிவாளிகள் என்று கணிக்க இயலுமா? படிப்பு என்பது மற்றவர்களின் அனுபவங்களை படித்து அறிந்து கொள்ளத்தாங்க முடியும்.அதற்காக புத்தகம் மட்டுமே படித்துவிட்டு  மிதிவண்டி ஓட்ட முடியுமா?புத்தகம் மட்டுமே படித்துவிட்டு நீந்த முடியுமா? அனுபவமும் முக்கிய பங்கு கொண்டதுங்க!
                     அவ்வாறு இருக்கையில் நமக்குள் எத்தனை சோம்பல்?,எத்தனை மறதி?எத்தனை தடுமாற்றம்?எத்தனை குறுக்குப்புத்தி?எத்தனை சுயநலம்?எத்தனை கெடுதல்? எத்தனை தவறுகள்?எத்தனை ஆணவம்?  
                          எனவேதாங்க, அறிவு என்பது ஆளை வைத்து,அழகை வைத்து, உருவத்தோற்றத்தை வைத்து,கற்ற ஏட்டுக்கல்வியை மட்டும் வைத்து  அளவிட முடியாதுங்க!.இதில் மாறுபட்ட கருத்து ஏதும் இருந்தால் தெரிவியுங்க!!,கடும் விமர்சனம் பண்ணுங்க!!!.                                             
                                                                    என 
                                                                     அன்பன்
                                                              பரமேஸ்வரன்.C.,
                                                            ஓட்டுனர்,
                               தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை கோட்டம்,
                                  தாளவாடி கிளை-ஈரோடு மண்டலம்.

09 ஆகஸ்ட் 2013

தாயின் மணிக்கொடி பாரீர்.


 

            
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
       

                           நமது சுதந்திரக்கொடியின் மகிமை பற்றி அறிந்திருக்க வேண்டும்.அல்லவா! அதற்கான பதிவுங்க.கேட்க கீழுள்ள வரியினை சொடுக்குங்கள்.

THAYIN NATIONAL SONGS - NATIONAL SONGS

                   சமூக நலனில் அக்கறையுள்ள,
                                             பரமேஸ்வரன்.சி.,
                                            ஓட்டுனர்,
                                           தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்- கோவை.,
                                           தாளவாடி கிளை ,
                                           ஈரோடு மண்டலம் - 638461.

தேசிய கீதம்.ஜன கண மன,National Anthem Jan teachertn



                   

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
               நமது இந்தியாவின் தேசிய கீதம் ''ஜன கண மன.........பாடல்.அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.அதற்கான பாடல் பதிவுங்க.கேட்க கீழுள்ள வரியினை சொடுக்குங்கள்.

                                                             National Anthem Jan teachertn

                                  சமூக நலனில் அக்கறையுள்ள,
                                         பரமேஸ்வரன்.சி.,
                                              ஓட்டுனர்,
                                    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை,
                                         தாளவாடி கிளை-
                                        ஈரோடு மண்டலம் - 638461.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்,01 NEER NATIONAL SONGS



                 

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
         நமது தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பினைப்போற்ற பாடுவோம்,''தமிழ்த்தாய் வாழ்த்து'' நீராருங்கடலுடுத்த.........பாடல்.கீழுள்ள இடுகையினைச்சொடுக்குக. 

01 NEER NATIONAL SONGS

             என்றும் சமூகநலனில் அக்கறையுள்ள,
                        பரமேஸ்வரன்.சி.,
                           ஓட்டுனர்,
                    தமிழ்நாடு  அரசு போக்குவரத்துக்கழகம்- கோவை.
                      தாளவாடி கிளை - ஈரோடு மண்டலம்.-638461

05 ஆகஸ்ட் 2013

தமிழ் வளர்த்த தமிழ்ச்சான்றோர்கள்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
            தமிழ் வளர்த்த தமிழ்சான்றோர்கள் பட்டியல் இங்கு பதிவிடுகிறேன்.கூடுதல் விவரம் தெரிந்த நண்பர்கள் தகவல் கொடுக்க வேண்டுகிறேன்.
 (1)உ.வே.சாமிநாத அய்யர்
 (2)தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
 (3)மறைமலை அடிகளார்
 (4)தேவநேயப் பாவலர்
 (5)கா.அப்பாதுரையனார்
 (6)சிதம்பரநாத செட்டியார்
 (7)ஆபிரகாம் பண்டிதர்
 (8)மு.வரதராசனார்
 (9)ச.வையாபுரி பிள்ளை
 (10)மயிலை சீனி.வெங்கடாசலம்
 (11)ரா.பி.சேதுபிள்ளை
 (12)சுப்பிரமணிய பாரதி
 (13)சேவியர் தனிநாயகம் அடிகளார்
        நம்  தாய்மொழியாம் தமிழுக்காக பாடுபட்ட இங்கு விடுபட்ட  அறிஞர் பெருமக்கள் பற்றிய   விவரம் அறிந்த நண்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.
                   பரமேஸ்வரன்.சி
                     ஓட்டுனர்
தமிழ்நாடு அரசு போகுவரத்துக்கழகம்-கோவை
 தாளவாடி கிளை - ஈரோடு மண்டலம்.

தமிழ் மொழி வளர்த்த வெளிநாட்டவர்கள்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                 இந்த பதிவில் தமிழ்மொழி வளர்த்த வெளிநாட்டு அறிஞர் பெருமக்களின் விவரங்களை பதிவிட்டு அவர்களை நமது நினைவில் கொள்வோம்.
 (1)ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன். (1841 - 1897)
 (2)ராபர்ட் கால்டுவெல் (1814 - 1891)
 (3)ஆலன் டேனியலூ (1907 - 1994)
 (4)ஜோகன் பிலிப் பேப்ரிசியஸ் (1711 - 1791)
 (5)ஹென்ரிக் ஹென்ரிக்ஸ்
 (6)ஹென்ரிக் அடிகளார்
(7)ஹூப்பர்
(8)ஜென்சன் ஹெர்மன்
( 9)எம்.ஏ.லேப்
(10) ஜான் லேசர்ஸ்
 (11) ஜான் முர்டாக் (1819 _1904)
 (12)ராபர்ட் டி நொபிலி (1577 - 1656) தத்துவ போதகர் என பெயரை மாற்றுக்கொண்டவர்.,தமிழகத்துறவியாகவே வேடமணிந்து கொண்டவர்.மயிலாப்பூரில் மறைவு.
 (13)பீட்டர் பெர்சிவல்
 (14) ஜீ.யூ.போப் (1820 - 1908) இவரது கல்லறையில் ''நான் ஒரு தமிழ் மாணவன்'' என்று எழுத வேண்டும் என்று கூறியவர்.
 (15)ரேனியல் சிட்டி (1790 -1838)
 (16) ஹில்கோ வியார்டோ ஸ்கோமெரர்ஸ்
 (17) ஜூனியர் வில்சன்
(18) வின்ஸ்லோமிரன் (1789 - 1864)
 (19)பார்த்தலோமியா சீகன் பால்கு (1682 -1719) இவர் 1714-இல் இந்திய மொழிகளிலேயே தமிழை முதன்முதலாக அச்சேற்றியவர்.தன்னை ஐய்யர் என்று கூறிக்கொண்டவர்.இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற செல்வத்தினுள் தமிழே முதன்மையானது என்று பிரிட்டன் நாட்டில் ஜார்ஜ் மன்னன் தலைமையில் நடந்த வரவேற்புரையில் தமிழில் பேசி தமிழனின்,தமிழின் சிறப்பை உலகறியச்செய்தவர்.
 (20)கமில்ஸ் சுலபில்- இவர் செக்கோஸ்லேவியா நாட்டைச்சேர்ந்த அறிஞர்.தமிழின் சிறப்பைப்போன்று ஆங்கிலம் உட்பட உலகின் எந்த மொழிக்கும் இல்லை என்று தமிழின் பெருமையை உணர்த்தியவர்.
(21)வீரமாமுனிவர். கான்ஸ்டன் ஜோசப் பெஸ்கி-(1682 - 1746 )தமிழ் அகராதிகளின் தந்தை,தமிழில் எழுத்து சீர்திருத்தம் செய்து எளிமையாக்கியவர்.
 (22)இரேனியஸ்
 (23)கிரண்டலர்
 (24)டாக்டர் வின்சுலோ
 (25)மாச்சுமுல்லர்
     (26)டாய்லர்

                   இதில் விடுபட்ட அறிஞர் பெருமக்களின் பெயர்கள் அறிந்த  அன்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.தமிழ் வளர்த்த தமிழ்ச்சான்றோர்கள் பட்டியல் அடுத்த பதிவில்.
                               என
                பரமேஸ்வரன்.சி.
                           ஓட்டுனர்.
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-கோவை
  தாளவாடி கிளை-ஈரோடு மண்டலம்.

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...