08 ஜூலை 2013

மாணவர் தினவிழா,ஓட்டுனர் தினவிழா,,பாதசாரிகள்&பயணிகள் தினவிழா,நடத்துனர் தினவிழா-


மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                          நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.நோக்கங்களில் குறிப்பிடுபவையாக  மாணவர் தினவிழா,ஓட்டுனர் தினவிழா,பாதசாரிகள் தினவிழா,பயணிகள் தினவிழா,நடத்துனர் தினவிழா,என பல்வேறு தளங்களில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கொடுப்பது என குறிப்பிட்டுள்ளது.அதன் ஒரு பகுதி இங்கு காணவும்.


                             '' செயலாளர்- திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் சங்கத்தின் பெயர் விளக்கம் மற்றும் நோக்கங்கள் பற்றி விளக்கினார்.நோக்கங்களில் முக்கியமானவைகளான  
             (1) CPARS.ORG  சங்கம் பதிவு அனுமதி பெற்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் 'மாணவர் தினவிழா' மற்றும் 'ஓட்டுனர் தினவிழா' அனுசரிப்பது.
                       (2) துவக்கவிழா நடைபெறும் இன்றைய தேதியான ஜூலை மாதம் ஏழாம் தேதி - ஒவ்வொரு ஆண்டும் 'பாதசாரிகள் & பயணிகள் தினவிழா' மற்றும் 'நடத்துனர் தினவிழா' அனுசரிப்பது.
                     (3)மக்கள் நலனுக்கான சேவையில் தனியாகவோ,அரசுத்துறைகளுடன் இணைந்தோ,பிற சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்தோ,தனிநபரான தன்னார்வலர்களுடன் இணைந்தோ செயல்படும். 
              (4)பொது மக்களுக்கு  'நுகர்வோர் கல்வி மற்றும் சாலைப் பாதுகாப்பு கல்வி' கொடுக்க 'Mobile Library' என்னும் 'நடமாடும் நூல்நிலையம்' அமைத்து  மக்கள் போக்குவரத்து மிகுந்துள்ள பேருந்து நிலையங்கள்,ஆட்டோ நிறுத்தங்கள்,முக்கிய சந்திப்புகள்,கடைவீதிகள்,பள்ளிகள்,கல்லூரிகள்,திருவிழாக்கூட்டங்கள்,
பொதுவிழாக் கூட்டங்கள்,கிராமப்பகுதிகள்,மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட கால வேளையில் தொடர்ந்து செயல்படுத்துவது ஆகும். 
    என்று சங்கத்தின் நோக்கங்களில் சிலவற்றை எடுத்துக் கூறினார்.
  மேலும் அறிய   http://consumerandroad.blogspot.com   என்ற வலைப்பக்கத்திற்கு செல்லவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...