மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
மக்கள் சிந்தனை பேரவை - ஈரோடு. சார்பில் தமிழகமெங்கும் வாசகர் வட்டம் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் துவங்கும் எண்ணத்தில் முதல் கட்டமாக நூறு இடங்களில் அறிமுகப்படுத்திய
துவக்க விழா U.R.C. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில்
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.
மரியாதைக்குரிய ஐயா அவர்கள்?.... வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பிறகு
மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் விழா அறிமுகவுரை நிகழ்த்தினார்.ஐயா அவர்களது உரையில் கலைமகள் கல்விநிலையத்தில் நான்காம் வகுப்பு படித்த போது அவரது ஆசிரியர் திருமிகு.மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள் சத்திய சோதனையின் ஒவ்வொரு வரிகளுக்கும் விளக்கம் கொடுத்து போதித்தார்.அன்று அவர் விதைதான் இன்று நாங்கள் விருடசமாக வளர்ந்துள்ளோம்.என்று ஆரம்ப கல்வி ஆசிரியரின் சிறப்பைப் போற்றினார்.பெரிய சேமூர் பள்ளியில் 2000புத்தகங்கள் நூலகத்தில் இருப்பதைக்கண்டறிந்து பெற்றது அப்போதைய தலைமை ஆசிரியர் உள்ளூர் மக்களுக்கே புத்தகங்கள் இருப்பது தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பதை மாணிக்கம்பாளையத்திலிருந்து கொண்டு எப்படி அறிந்தீர்கள்? போன்ற அன்று நூலகம் அமைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் முதல் பாரதி மாணவர் மன்றம்,பாரதி இளைஞர் மன்றம்,பகத்சிங் இளைஞர் மன்றம்,மற்றும் தீச்சுடர் இலச்சினை வரலாறு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் சிந்தனைப்பேரவை துவக்கியது,பாரதி மன்றத்தின் முப்பத்திமூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் தேதி மாறாமல் 13-ந்தேதி நிகழ்ச்சி பாரதி விருது பதினைந்து ஆண்டுகளாக சமூக சேவை புரிவோருக்கு வழங்குவது என இன்று வரை எத்தனையோ பொது நலனுக்காக கடமையாற்றுவதை நினைவு போற்றினார்.
மரியாதைக்குரிய ஐயா,தி.க.சிவசங்கரன் ( படைப்பாளிகளுக்கு படைப்பாளி) அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
(ஐயா அவர்களுக்கு வயது 90)
அவரது சூழ்நிலை கருதி அமர்ந்தவாறு உரை நிகழ்த்தினார்.அப்போது இன்றைய சமூகத்தில் கல்வித்துறை,ஊடகத்துறை,அரசியல் துறை,என அனைத்து துறைகளிலும் சுயநலமே மிஞ்சிக்கிடக்கிறது. இந்நிலை மாறி பொதுநலன் என்னும் நிலை வளர வேண்டும்.புத்தகங்களை வாசித்தால் மட்டுமே சிறந்த,அறிவார்ந்த,பண்பட்ட மனிதனை உருவாக்கும்.புதிய சமூதாயம் உருவாக,புதிய அணுகுமுறை,புதிய சிந்தனை பெற வாசியுங்கள்,யோசியுங்கள்,புத்தகத்தை நேசியுங்கள்.என்றார்.அந்த பழுத்த பழத்தின் அனுபவப்பேச்சு எனக்கு கிடைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
மரியாதைக்குரிய ஐயா, புலவர்.செ.இராசு அவர்கள் வாழ்த்துரையில் கிடைத்த அரிய செய்திகளில் சில (1)பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் அவர்களது மண் ஈரோடு.(2)னுலவர்,பெ.தூரன் விளைந்த மண் ஈரோடு.(3) 1943-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களது முதல் நூல் ''கவிதையல்ல'' அரங்கேற்றமானது ஈரோடு மண்.(4) 1832-இல் எட்டு லட்சம் மக்களில் (அப்போதைய கோவை மாவட்டம்) கல்வியறிவு பெற்றோர் 1.32சதவீதம்.அதாவது இரண்டு சதவீதத்திற்கும் குறைவு.அதில் பெண்கள் வெறும் எண்பத்திரண்டு பேர் மட்டுமே படித்தவர்கள்.இன்னும் பல அரிய கருத்துக்கள் கிடைத்தன.
(மரியாதைக்குரிய ஐயா அவர்கள் வயது எழுப்பதியாறு. இன்னும் கல்வெட்டு,தொல்லியல்துறை,செப்பேடு,ஓலைப்பட்டயம்,ஓலைச்சுவடி,
இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை கடந்த ஐம்பது ஆண்டுகளாக செய்து வருகிறார். கொங்கு மண்டலத்தின் சிறப்பினை உலகறியச்செய்தவர்.)
மரியாதைக்குரிய ஐயா,K.வைத்தியநாதன் அவர்கள் (தினமணி ஆசிரியர்) உரையில் என்றும் மாறாது இருப்பது அன்பு,பூஜ்யம்,அதேபோல அறிவு பகிரப்பகிர விருத்தியடைந்து கொண்டே போகும்.அறிவைப்பெருக்குவது வாசிப்பது. நல்ல புத்தகங்களைப்படிப்பது. சமூக உணர்வோடு,சமூக அக்கறையோடு,இன்றைய தலைமுறை எப்படி இருக்க வேண்டும்.நாளைய தலைமுறை எவ்வாறு உருவாக வேண்டும்.என்பது பற்றியெல்லாம் நல்ல புத்தகங்களால் மட்டுமே அறியமுடியும்.விவாதக் கலாச்சாரம் நடைபெற வேண்டும்.அப்போதுதான் சிந்தனையும் அறிவும் பெருகும்.மக்களாட்சி தத்துவம் சிறப்பாக நடக்கும். ஆனால் முன்னேற்றம் குறைவாக இருக்கும்.நம் மூதாதையர் தந்த செழிப்பு மிகுந்த உலகத்தை நாம் உறிஞ்சிவிட்டு சக்கையை மட்டும் நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்ல எந்த விதத்திலும் நமகு உரிமை இல்லை.அனைவரும் மரணத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்ற உண்மையை மட்டும் உணர்ந்தோமேயானால் சமத்துவம் நிலைபெறும்.பெருந்தலைவர் காமராஜ் அதற்காகத்தான் இலவச சீருடை,இலவச கல்வி,மதிய உணவு திட்டங்களை கொண்டு வந்தார்.அனைவருக்கும் கல்வி இன்றியமையாதது என்பதை உணர்ந்தார்.வீர வாஞ்சி,பகத்சிங்,திருப்பூர் குமரன் போன்ற தியாகிகளை வருடந்தோறும் நினைவு கூற வேண்டும் என்றார்.பொது நலனே வாழ்க்கை என்பதை உணர்ந்து வாசகர் வட்டம் அமைக்கும் எல்லா இடங்களிலும் அந்தந்தபகுதி தினமணி நிருபர்கள் பேருதவி புரிவார்கள். உங்களுக்கு வேண்டியதை உரிமையோடு கேட்டுப்பெறுங்கள்.என்ற உறுதியையும் கொடுத்தார்.
தமிழமெங்கும் வழங்கப்பட்ட நூறு வாசகர் வட்டத்திற்கான சான்றுகளில் நந்தா கல்வி நிலைய மாணவர்களுக்கான சான்றினை மரியாதைக்குரிய ஐயா-நந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாகி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மரியாதைக்குரிய சான்றோர் பெருமக்களுடன் நானும் !
இறுதியாக திரு.என் .பழனிசாமி பொருளாளர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக