27 ஜூலை 2013

''சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013''



     மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
         ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வட்டம் மற்றும் சத்தியமங்கலம் வட்டம் பகுதியைச்சேர்ந்த அனைத்து கணினி,இணையம்,மின்னஞ்சல்,முகநூல்,ட்விட்டர்,அலைபேசி இணையவழி தொடர்பு கொண்டுள்ள நண்பர்களை 
             ''சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013''
      (அதாவது சத்திகோபி வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - இதன் சுருக்கம் சகோ தர வலைப்பதிவர்கள் சங்கமம்-2013 இப்ப புரிஞ்சுதுங்களா?) 
                 நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.   கோபி நண்பர்கள் மரியாதைக்குரியவர்களான (1)ஸ்வஸ்திக் ஏஜென்சீஸ் இளங்கோ , (2)ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ் பெரியசாமி ,(3) L.I.C.பரமேஸ்வரன் ஆகியோர் ஆலோசனையுடன் வருகிற செப்டெம்பர் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (08-09-2013) அன்று கோபி அல்லது சத்தி அல்லது தாளவாடி மலைப்பகுதியில் நடத்த இருக்கும் இந்த சமூக நல நிகழ்வுக்கு சகோ தர வட்டாரங்களைச்சேர்ந்த அனைத்து இணைய நண்பர்களும் கலந்து கொண்டு நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.மாணவர்கள்,இளைஞர்கள்,உட்பட பெண்களும் கலந்து கொள்ளலாம்.
            இந்த சங்கமம் நிகழ்ச்சியினை விளம்பரத்திற்காக இன்றி விழிப்புணர்வுக்காக கிராமப்பகுதி மற்றும் மலைப்பகுதி மக்களுக்கான,இளைஞர்களுக்கான நல்ல விசயங்களைக் கொண்டு செல்வது உட்பட இன்னும் பல விசயங்களை விவாதித்து  இறுதி முடிவு எடுக்க வேண்டி உள்ளது.அதன்பிறகு அழைப்பிதழாக இங்கு பதிவிடப்படும்.பதினைந்து தினங்களுக்கு முன்னரே பதிவிட உள்ளோம்.
      தங்களது ஆலோசனை & கருத்தினை      consumerandroad@gmail.com -ல் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.
     அனைவரும் வருக! ஆதரவு தருக!! ஆலோசனையும் தருக!!!
                                                                                                     என
                                                                                       அனைவருக்காக,                                                                                         பரமேஸ்வரன்.C.       
                                                                               ஒருங்கிணைப்பாளர் ,
                                                                           சகோ தர வலைப்பதிவர்கள்   
                                                                                         சங்கமம்-2013  -                                                                                             -தாளவாடி. -638461
                                                                                         சத்தி வட்டம்-ஈரோடு மாவட்டம்.                          

22 ஜூலை 2013

பதவிகளில் முதல் பெண்கள்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
            கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.சாதனைப்  பெண்கள் வரிசையில் இதோ படியுங்க! பத்திரப்படுத்துங்க!! பாராட்டுங்க!!!

 முதல் பெண் குடியரசு தலைவர்பிரதீபா பாட்டீல்
    முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி
முதல் பெண்கவர்னர்
சரோஜினி நாயுடு
முதல் பெண் முதல்வர்
சுசேதா கிருபலானி
முதல்பெண்அமைச்சர்
விஜயலெட்சுமி பண்டிட்
முதல் பெண் மத்திய அமைச்சர்
ராஜ்குமாரி அம்ரித் கெளர்
முதல் பெண் லோக்சபை சபாநாயகர்
ஷன்னா தேவி
முதல் பெண் ராஜ்யசபைத் துணைத்
தலைவர் வயலட் ஆல்வா
குடியரசுத் தலைவர் தேர்தலில்
போட்டியிட்ட மனோஹர
நிர்மலா ஹோல்கர்
முதல் பெண் வேட்பாளர்
இ.தே. காங்கிரசின் முதல் பெண்
தலைவர் டாக். அன்னிபெசன்ட்
இ.தே. காங்கிரசின் முதல் இந்தியப்
பெண் தலைவர் சரோஜினி நாயுடு
ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண்
தலைவர் விஜயலெட்சுமி பண்டிட்
இந்தியாவின் முதல் பெண்
அரசி ரசியா சுல்தான்
முதல் பெண் ஏர்மார்ஷல்
பத்மா பந்தோபாத்யாயா
முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல்
புனீதா ஆரோரா
பாலகே விருதுபெற்ற முதல்
நடிகை தேவிகாராணி
புக்கர் பரிசு பெற்ற முதல் பெண்
அருந்ததி ராய்
முதல் மிஸ்வேர்ல்ட் ரீத்தா ஃபாரியா
முதல் மிஸ் யூனிவர்ஸ்
சுஷ்மிதா சென்
பாரத் ரத்னா விருது பெற்ற முதல்
பெண் இந்தரா காந்தி
மக்சாஸே விருது பெற்ற முதல் பெண்
அன்னை தெரசா
ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்
பானு அத்தையா
அயல்நாட்டுத் தூதரான முதல் பெண்
விஜயலெட்சுமி பண்டிட்
முதல் பெண் ஐஏஎஸ்
அதிகாரி அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா
முதல் ஐபிஎஸ் அதிகாரி கிரண்
பேடி
முதல் பெண் வழக்கறிஞர்
கொர்னேலியா சொராப்ஜி
முதல் பெண் நீதிபதி அன்னா சாண்டி
உச்சநீதிமன்ற முதல் பெண்
நீதிபதி எம். பாத்தியமா பீபி
உச்சநீதிமன்ற முதல் பெண்
தலைமை நீதிபதி லீலா சேத்
உயர்நீதிமன்ற முதல் பெண்
நீதிபதி அன்னா சாண்டி
முதல் பெண் மஜிஸ்டிரேட்
ஓமனக்குஞ்சம்மா
முதல் பெண் மருத்துவர்
காதம்பினி காங்குலி
முதல் பெண் தலைமை பொறியாளர்
பி.கே. த்ரேசியா
முதல் பெண் சிவில் சர்ஜன்
முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்ட்ரி
இந்தியாவின் முதல் பெண் பெண்
பட்டதாரி கர்னேலியா சொராப்ஜி
இந்தியாவின் முதல் பெண்
டிஜிபி காஞ்சன் பட்டாச்சார்யா
முதல் பெண் போட்டோகிராபர்
ஹோமி வ்யாஸ வல்லி
சேனா விருது பெற்ற முதல் பெண்
பிம்லா தேவி (சிஆர்பிஎஃப்)
விண்வெளி சென்ற முதல் இந்தியப்
பெண் கல்பனா சாவ்லா
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல்
பெண் பச்சேந்திரி பால்
எவரெஸ்டில் இருமுறை ஏறிய முதல்
பெண் சந்தோஷ் யாதவ்
கடல்வழி உலகைச் சுற்றி வந்த முதல்
பெண் உஜ்வல ராய்
ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடந்த
முதல் பெண் ஆர்த்தி சாஹா
ஆங்கிலக்கால்வாய
ை இருமுறை நீந்திய முதல் பெண்
பூலா சௌத்ரி
ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த
முதல் பெண் பூலா சௌத்ரி
அண்டார்டிகா சென்ற முதல் இந்தியப்
பெண் மெகர் மூஸ்
சாகித்ய அகாதமி விருது பெற்ற
முதல் பெண் அம்ருதா ப்ரீதம்
ஞானபீடம் வென்ற முதல் பெண்
ஆஷா பூர்ணா தேவி
புலிட்சர் பரிசு பெற்ற முதல்
இந்தியப் பெண் ஜூம்பா லாகிரி
ராஜீவ் காந்தி கேள்
ரத்னா விருது பெற்ற முதல் பெண்
கர்ணம் மல்லேஸ்வரி
ஒலிம்பிக்ஸ் தக்கம் வென்ற பெற்ற
முதல் பெண் கர்ணம் மல்லேஸ்வரி
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாமின்
ஒரு சுற்றில் வெற்றி
பெற்ற முதல் இந்தியப் பெண்
நிருபமா வைத்தியநாதன்
டென்னிஸ் கிராண்ட் ஸ்லாமில்
மூன்றாம் சுற்றுவரை
சென்ற முதல் இந்தியப் பெண்
சானியா மிர்ஸா
இந்தியாவின் முதல் கமர்ஷியல்
பெண் பைலட் துர்பா பானர்ஜி
இந்தியாவின் முதல் பெண்
அயலுறவுச் செயலர் சோகிலா ஐயர்....
  என பரமேஸ்வரன். 
      செயலாளர் - 
   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -
    தமிழ்நாடு.

21 ஜூலை 2013

GOOGLE சேவை சாதனங்களில் மிக உபயோகமானவைகளில் சில...............

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                 கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். இந்தப் பதிவில் (GOOGLE) கூகிள் பற்றிய சில விவரங்களைக்காண்போம். பயன்படுத்தி பயன்பெறுவோம்.மரியாதைக்குரிய நாகூர் கனி காதர் மைதீன் பாஷா அவர்களுக்கும் ஒரு நன்றியைச்சொல்லி வாழ்த்துவோம்.
   
           கூகுள் சேவை சாதனங்களில் பயனுள்ள சில தங்களது பார்வைக்கு............

                                         எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம்.

             கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம்.

                     1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate)

                  இது ஒரு இலவச மொழி பெயர்க்கும் புரோகிராம். 64 மொழிகளுக்கிடையே மொழி பெயர்க்கும் பணியைத் தருகிறது. இதன் மூலம் சொற்கள், வாக்கியங்கள், இணையப் பக்கங்களை மொழி பெயர்க்கலாம். எண்ணற்ற தகவல்கள் அவை எந்த மொழியிலிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொழியில் பெற முடியும். ஒருவர் தங்கள் மொழியில் இருப்பதனை, அல்லது அடுத்த மொழியிலிருப்பதனை, அதன் ஒலிக்குறிப்பில் டைப் செய்தால் போதும். சரியான டெக்ஸ்ட்டில் அவை அமைக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்படும்.

                                  2. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):

                தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.

                                                   3. கூகுள் திங்க் (Google Think)

                          கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர்.

                             4. கூகுள் மாடரேட்டர் (Google Moderator):

                பலவகைத் தலைப்புகள் குறித்து இங்கு இலவசமாகக் கலந்து ஆலோசிக்கலாம். கருத்துக்களை வரவேற்று, எந்த ஒரு வாடிக்கையாளரும், புதிய இழை ஒன்றை உருவாக்கலாம். கேள்விகளைக் கூடப் பதியலாம். இந்த தளத்திற்கு வரும் எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். குறிப்பிட்ட கருத்தை வரவேற்று அதற்கு வாக்களிக்கும் வசதி கூட இதில் உள்ளது. முதல் கேள்விகள், நீல நிறப் பின்னணியில் மையக் கேள்வியாகக் காட்டப்படும். மற்றவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்கலாம். ஒரு கருத்துரு அல்லது தலைப்பின் கீழ் துணைப் பிரிவுகளையும் உருவாக்கலாம்.
               

                                5. கூகுள் சவுண்ட் சர்ச் (Google Sound search): 
     
              இது ஒரு விட்ஜெட் எனப்படும் அப்ளிகேஷன். நம்மைச் சுற்றி இசைக்கப்படும் இசை மற்றும் பாடல்களை அறிந்து அடையாளம் கொள்ள இது உதவி புரிகிறது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, அடையாளம் காணப்பட்ட பாடல்களை விலைக்கு வாங்க முடியும். அடையாளம் காணப்படும் பாடல்களின் பட்டியலை உருவாக்கி வைத்து, பின்னொரு நாளில் கேட்கலாம் மற்றும் வாங்கலாம்.

                                     6. கூகுள் ஸ்கீமர் (Google Schemer):

                             தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைகள் எது வேண்டுமானதாகவும் இருக்கலாம். ஓர் அருங்காட்சியகம் செல்லுதல், நண்பர்களுடன் கூட்டாகக் கலந்துரையாடல், வார இறுதிக்கான சுற்றுலா செல்ல இடம் தேர்ந்தெடுத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே இது போல கலந்துரையாடப்பட்டு வரையறை செய்யப்பட்ட திட்டங்களும் இதில் கிடைக்கும்.

                            7. பவர் சர்ச்சிங் வித் கூகுள் (Power searching with Google):

                     தேடுதல் தளம் தான், கூகுள் நிறுவனத்தின் வலிமையே. அந்த வகையில், எப்படி சிறப்பாக நம் தேடுதலை அமைத்துக் கொள்ளலாம் என்று, இந்த தளத்தில், கூகுள் நமக்கு டிப்ஸ் தருகிறது. இணையத்திலேயே பயிற்சியும் தரப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வழிகளை, தேடுதலுக்கென நாம் தெரிந்து கொள்கிறோம்.

                              8. பில்ட் வித் குரோம் (Build with chrome):

         ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனமான லெகோவுடன் இணைந்து கூகுள் அமைத்த தளமே பில்ட் வித் குரோம். இது ஒரு நவீன இணைய தொழில் நுட்பமாகும். இங்கு பிரவுசர் வழியாக, முப்பரிமாணப் படங்களைக் காணலாம். பயனாளர்களும் தங்களின் முப்பரிமாண உருவங்களை அமைக்கலாம். இதில் செயலாற்றுவது மிகவும் வேடிக்கை நிறைந்ததாக உள்ளது.

                        9. கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art Project):

                 இது கூகுள் தரும் ஸ்ட்ரீட் வியூ போன்றதாகும். மியூசியம்,கலை அரங்கங்கள் ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம். கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும், 40 நாடுகளைச் சேர்ந்த 151 வல்லுநர்களுடன் இணைந்து இந்த தளத்தினை கூகுள் அமைத்துள்ளது. மியூசியம் நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பமும் இந்த தளத்தில் இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு அனுபவத்தினைத் தருகின்றன.

              10. கூகுள் ஸ்காலர் (Google Scholar):

                  இலக்கியம், ஆய்வு கட்டுரைகள், கல்வித் துறை சார்ந்த பதிப்புகள், இணைய வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் நீதிமன்றம் வெளியிடும் கருத்துகள் ஆகியவை குறித்து உரையாட இது ஒரு நல்ல தளம். மிகப் பெரியதாக விரிந்து இருந்தாலும், இதனை அணுகுபவர்கள், தங்களுக்குத் தேவையானதை மிக எளிதாகப் பெற்று இயங்கலாம்.

                     11. கூகுள் மார்ஸ் (Google Mars):

                அரிசோனா பல்கலையில் உள்ள, நாசா விண் வெளி ஆய்வு விஞ்ஞானிகளுடன் கூட்டாக இணைந்து, சிகப்பு கிரகமான மார்ஸ் குறித்த மேப் ஒன்றை கூகுள் தயாரித்துள்ளது. இது ஏறத்தாழ கூகுள் எர்த் போன்றதாகும். அதன் மூலம் நாம் எப்படி பூமியின் அனைத்து பாகங்களுக்கும் சென்று வர முடிகிறதோ, அதே போல மார்ஸ் கிரகத்திற்கு, கூகுள் இதில் பாதை அமைத்துத் தருகிறது. மார்ஸ் எப்படி தோற்றமளிக்கும் என்பதனை நாம் கண்டு கொள்ள அருமையான தளம் இது.

                                                                                            இப்படிக்கு ,
                                                                                                 அன்பன் 
                                                                                         C.PARAMESWARAN. 
                                                                                              (SECRETORY ) 
                                                                             CONSUMER PROTECTION AND 
                                                                             ROAD SAFETY ORGANISATION -
                                                                                                    TAMIL NADU
                                                                                 .http://consumerandroad.blogspot.com

14 ஜூலை 2013

மக்கள் சிந்தனை பேரவை- தமிழகமெங்கும் வாசகர் வட்டம்-

 மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
      கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். 
               மக்கள் சிந்தனை பேரவை - ஈரோடு. சார்பில் தமிழகமெங்கும் வாசகர் வட்டம் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் துவங்கும் எண்ணத்தில் முதல் கட்டமாக நூறு இடங்களில் அறிமுகப்படுத்திய                  
                துவக்க விழா U.R.C. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில்
                

                   தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.

              மரியாதைக்குரிய ஐயா அவர்கள்?.... வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பிறகு
    
        மரியாதைக்குரிய ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் விழா அறிமுகவுரை நிகழ்த்தினார்.ஐயா அவர்களது உரையில் கலைமகள் கல்விநிலையத்தில் நான்காம் வகுப்பு படித்த போது அவரது ஆசிரியர் திருமிகு.மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள் சத்திய சோதனையின் ஒவ்வொரு வரிகளுக்கும் விளக்கம் கொடுத்து போதித்தார்.அன்று அவர் விதைதான் இன்று நாங்கள் விருடசமாக வளர்ந்துள்ளோம்.என்று ஆரம்ப கல்வி ஆசிரியரின் சிறப்பைப் போற்றினார்.பெரிய சேமூர் பள்ளியில் 2000புத்தகங்கள் நூலகத்தில் இருப்பதைக்கண்டறிந்து பெற்றது அப்போதைய தலைமை ஆசிரியர் உள்ளூர் மக்களுக்கே புத்தகங்கள் இருப்பது தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பதை மாணிக்கம்பாளையத்திலிருந்து கொண்டு எப்படி அறிந்தீர்கள்? போன்ற அன்று நூலகம் அமைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் முதல் பாரதி மாணவர் மன்றம்,பாரதி இளைஞர் மன்றம்,பகத்சிங் இளைஞர் மன்றம்,மற்றும் தீச்சுடர் இலச்சினை வரலாறு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் சிந்தனைப்பேரவை துவக்கியது,பாரதி மன்றத்தின் முப்பத்திமூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் தேதி மாறாமல் 13-ந்தேதி நிகழ்ச்சி பாரதி விருது பதினைந்து ஆண்டுகளாக சமூக சேவை புரிவோருக்கு வழங்குவது என  இன்று வரை எத்தனையோ பொது நலனுக்காக கடமையாற்றுவதை  நினைவு போற்றினார்.

      மரியாதைக்குரிய ஐயா,தி.க.சிவசங்கரன் ( படைப்பாளிகளுக்கு படைப்பாளி) அவர்கள்  தலைமையுரை ஆற்றினார்.
                          (ஐயா அவர்களுக்கு வயது 90) 
               அவரது சூழ்நிலை கருதி அமர்ந்தவாறு உரை நிகழ்த்தினார்.அப்போது இன்றைய சமூகத்தில்  கல்வித்துறை,ஊடகத்துறை,அரசியல் துறை,என அனைத்து துறைகளிலும் சுயநலமே மிஞ்சிக்கிடக்கிறது. இந்நிலை மாறி பொதுநலன் என்னும் நிலை வளர வேண்டும்.புத்தகங்களை வாசித்தால் மட்டுமே சிறந்த,அறிவார்ந்த,பண்பட்ட மனிதனை உருவாக்கும்.புதிய சமூதாயம் உருவாக,புதிய அணுகுமுறை,புதிய சிந்தனை பெற வாசியுங்கள்,யோசியுங்கள்,புத்தகத்தை நேசியுங்கள்.என்றார்.அந்த பழுத்த பழத்தின் அனுபவப்பேச்சு எனக்கு கிடைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

                     
          மரியாதைக்குரிய ஐயா, புலவர்.செ.இராசு அவர்கள் வாழ்த்துரையில் கிடைத்த அரிய செய்திகளில் சில (1)பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் அவர்களது மண் ஈரோடு.(2)னுலவர்,பெ.தூரன் விளைந்த மண் ஈரோடு.(3) 1943-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களது முதல் நூல் ''கவிதையல்ல'' அரங்கேற்றமானது ஈரோடு மண்.(4) 1832-இல் எட்டு லட்சம் மக்களில் (அப்போதைய கோவை மாவட்டம்) கல்வியறிவு பெற்றோர் 1.32சதவீதம்.அதாவது இரண்டு சதவீதத்திற்கும் குறைவு.அதில் பெண்கள் வெறும் எண்பத்திரண்டு பேர் மட்டுமே படித்தவர்கள்.இன்னும் பல அரிய கருத்துக்கள் கிடைத்தன.
                  (மரியாதைக்குரிய ஐயா அவர்கள் வயது எழுப்பதியாறு. இன்னும் கல்வெட்டு,தொல்லியல்துறை,செப்பேடு,ஓலைப்பட்டயம்,ஓலைச்சுவடி,
இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை கடந்த ஐம்பது ஆண்டுகளாக செய்து வருகிறார்.  கொங்கு மண்டலத்தின் சிறப்பினை உலகறியச்செய்தவர்.)
                 

    மரியாதைக்குரிய ஐயா,K.வைத்தியநாதன் அவர்கள் (தினமணி ஆசிரியர்) உரையில் என்றும் மாறாது இருப்பது அன்பு,பூஜ்யம்,அதேபோல அறிவு பகிரப்பகிர விருத்தியடைந்து கொண்டே போகும்.அறிவைப்பெருக்குவது வாசிப்பது. நல்ல புத்தகங்களைப்படிப்பது. சமூக உணர்வோடு,சமூக அக்கறையோடு,இன்றைய தலைமுறை எப்படி இருக்க வேண்டும்.நாளைய தலைமுறை எவ்வாறு உருவாக வேண்டும்.என்பது பற்றியெல்லாம் நல்ல புத்தகங்களால் மட்டுமே அறியமுடியும்.விவாதக் கலாச்சாரம் நடைபெற வேண்டும்.அப்போதுதான் சிந்தனையும் அறிவும் பெருகும்.மக்களாட்சி தத்துவம் சிறப்பாக நடக்கும். ஆனால் முன்னேற்றம் குறைவாக இருக்கும்.நம் மூதாதையர் தந்த செழிப்பு மிகுந்த உலகத்தை நாம் உறிஞ்சிவிட்டு சக்கையை மட்டும் நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்ல எந்த விதத்திலும் நமகு உரிமை இல்லை.அனைவரும் மரணத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்ற உண்மையை மட்டும் உணர்ந்தோமேயானால்  சமத்துவம் நிலைபெறும்.பெருந்தலைவர் காமராஜ் அதற்காகத்தான் இலவச சீருடை,இலவச கல்வி,மதிய உணவு திட்டங்களை கொண்டு வந்தார்.அனைவருக்கும் கல்வி இன்றியமையாதது என்பதை உணர்ந்தார்.வீர வாஞ்சி,பகத்சிங்,திருப்பூர் குமரன் போன்ற தியாகிகளை வருடந்தோறும் நினைவு கூற வேண்டும் என்றார்.பொது நலனே வாழ்க்கை என்பதை உணர்ந்து வாசகர் வட்டம் அமைக்கும் எல்லா இடங்களிலும் அந்தந்தபகுதி தினமணி நிருபர்கள் பேருதவி புரிவார்கள். உங்களுக்கு வேண்டியதை உரிமையோடு கேட்டுப்பெறுங்கள்.என்ற உறுதியையும் கொடுத்தார்.

 
    
    தமிழமெங்கும் வழங்கப்பட்ட நூறு வாசகர் வட்டத்திற்கான சான்றுகளில் நந்தா கல்வி நிலைய மாணவர்களுக்கான சான்றினை  மரியாதைக்குரிய ஐயா-நந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாகி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
                                  
மரியாதைக்குரிய  சான்றோர் பெருமக்களுடன் நானும் !




             இறுதியாக திரு.என் .பழனிசாமி பொருளாளர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
              நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது.
              

08 ஜூலை 2013

மாணவர் தினவிழா,ஓட்டுனர் தினவிழா,,பாதசாரிகள்&பயணிகள் தினவிழா,நடத்துனர் தினவிழா-


மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                          நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.நோக்கங்களில் குறிப்பிடுபவையாக  மாணவர் தினவிழா,ஓட்டுனர் தினவிழா,பாதசாரிகள் தினவிழா,பயணிகள் தினவிழா,நடத்துனர் தினவிழா,என பல்வேறு தளங்களில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கொடுப்பது என குறிப்பிட்டுள்ளது.அதன் ஒரு பகுதி இங்கு காணவும்.


                             '' செயலாளர்- திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் சங்கத்தின் பெயர் விளக்கம் மற்றும் நோக்கங்கள் பற்றி விளக்கினார்.நோக்கங்களில் முக்கியமானவைகளான  
             (1) CPARS.ORG  சங்கம் பதிவு அனுமதி பெற்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் 'மாணவர் தினவிழா' மற்றும் 'ஓட்டுனர் தினவிழா' அனுசரிப்பது.
                       (2) துவக்கவிழா நடைபெறும் இன்றைய தேதியான ஜூலை மாதம் ஏழாம் தேதி - ஒவ்வொரு ஆண்டும் 'பாதசாரிகள் & பயணிகள் தினவிழா' மற்றும் 'நடத்துனர் தினவிழா' அனுசரிப்பது.
                     (3)மக்கள் நலனுக்கான சேவையில் தனியாகவோ,அரசுத்துறைகளுடன் இணைந்தோ,பிற சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்தோ,தனிநபரான தன்னார்வலர்களுடன் இணைந்தோ செயல்படும். 
              (4)பொது மக்களுக்கு  'நுகர்வோர் கல்வி மற்றும் சாலைப் பாதுகாப்பு கல்வி' கொடுக்க 'Mobile Library' என்னும் 'நடமாடும் நூல்நிலையம்' அமைத்து  மக்கள் போக்குவரத்து மிகுந்துள்ள பேருந்து நிலையங்கள்,ஆட்டோ நிறுத்தங்கள்,முக்கிய சந்திப்புகள்,கடைவீதிகள்,பள்ளிகள்,கல்லூரிகள்,திருவிழாக்கூட்டங்கள்,
பொதுவிழாக் கூட்டங்கள்,கிராமப்பகுதிகள்,மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட கால வேளையில் தொடர்ந்து செயல்படுத்துவது ஆகும். 
    என்று சங்கத்தின் நோக்கங்களில் சிலவற்றை எடுத்துக் கூறினார்.
  மேலும் அறிய   http://consumerandroad.blogspot.com   என்ற வலைப்பக்கத்திற்கு செல்லவும்.

சிறு தொழில் மையத்தின் முகவரிகள்-தமிழ்நாடு.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
    கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.தமிழ்நாட்டில் உள்ள சிறு தொழில் மையத்தின் முகவரிகள் காண்போம்.
 1.சென்னை
இயக்குநர்
தொழில் மற்றும் வர்த்தக மைய அலுவலகம்
தொழில் மற்றும் வர்த்தகத் துறை
சேப்பாக்கம்
சென்னை- 600005
தொலை பிரதி : 28547026, 28548517
தொலைபேசி : 044 28548173
indcom@tn.nic.in
2.
சென்னை
மண்டல துணை இயக்குநர் அலுவலகம்
எண்:47, அண்ணாசாலை
சென்னை - 600002
தொலைபேசி : 044 28549753
dicchn@tn.nic.in
3.
கோவை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
எண்: 2, ராஜா சாலை
கோவை
தொலைபேசி : 0422 391678, 397311
diccbe@tn.nic.in
4.
கடலூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
செம்மண்டலம்
கடலூர்.
தொலைபேசி : 04142 310116, 310192
diccud@tn.nic.in
5.
தர்மபுரி
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
சிட்கோ, சேலம் முதன்மை சாலை,
தர்மபுரி
தொலைபேசி : 04342 230892, 231081
dicdpi@tn.nic.in
6.
திண்டுக்கல்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
எஸ்.ஆர். மில்ஸ் சாலை
சிட்கோ தொழில் பண்ணை வளாகம்
திண்டுக்கல் 624 003
தொலைபேசி : 0451 470893, 422417.
dicdgl@tn.nic.in
7.
ஈரோடு
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
சிட்கோ தொழில் பண்ணை வளாகம்
ஈரோடு
தொலைபேசி : 0424 275283, 275859
dicerd@tn.nic.in
8.
காஞ்சிபுரம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
காஞ்சிபுரம் 631 501
தொலைபேசி : 04112 238837, 238551
dickpm@tn.nic.in
9.
கரூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
ஜவஹர் பிளாசா
152, இரண்டாவது தளம்
ஜவஹர் பசார்
கரூர் 639 001
தொலைபேசி : 04324 264272
dickar@tn.nic.in
10.
நாகப்பட்டினம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நேதாஜி ரோடு
நாகப்பட்டினம் 611110
தொலைபேசி: 04652 41193
dicngp@tn.nic.in
11.
மதுரை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
அழகர் கோயில் தெரு
மதுரை 625 002
தொலைபேசி: 0452 537621, 537128, 530358.
dicmdu@tn.nic.in
12.
நாகர்கோயில்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
கன்னியாகுமரி மாவட்டம்
கோணம்
நாகர்கோயில்
தொலைபேசி: 04652 200008
dickkm@tn.nic.in
13.
நாமக்கல்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
கேகேபி கட்டிடம்
114 பி5, சேலம் சாலை
நாமக்கல் 637 001.
தொலைபேசி : 04286 577251
dicnmk@tn.nic.in
14.
பெரம்பலூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
56 பி, ராஜாஜி நகர்
அரியலூர் 621 713
தொலைபேசி: 04329 222363, 20004.
dicpmb.tn.nic.in
15.
புதுக்கோட்டை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
புதுக்கோட்டை
தொலைபேசி : 04322 21794
dicpdk@tn.nic.in
16.
இராமநாதபுரம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
பட்டினம் காத்தான்போஸ்ட்
வெளிப்பட்டினம்
இராமநாதபுரம் வழி
625 535
தொலைபேசி : 04567 - 30497
dicrmd@tn.nic.in
17.
சேலம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
தொழில்சாலை வளாகம்
5 ரோடு, சேலம்.
தொலைபேசி : 0427 448505, 447878
dicslm@tnau.nic.in
18.
சிவகங்கை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
சிவகங்கை
தொலைபேசி : 04575 40257, 40407
dicsug@tn.nic.in
19.
தஞ்சாவூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நஞ்ககோட்டை ரோடு
தஞ்சாவூர் 613 006
தொலைபேசி : 04362 355318
dictnj@tn.nic.in
20.
தேனீ
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நெ.56, பாரதி ரோடு
தேனீ
தொலைபேசி : 04546 72081
dicthn@tn.nic.in
21.
திருவள்ளூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
1டி, சிவி நாயுடு சாலை
2வது தளம்
ஜெயா நகர்
திருவள்ளூர் 602 601
தொலைபேசி : 04116 666787
dictlr@tn.nic.in
22.
திருச்சி
வட்டாட்சியர் அலுவலக சாலை
திருச்சி 62001
தொலைபேசி: 0431 460823
460331
dictry@tn.nic.in
23.
திருவண்ணாமலை
நெ.5, டிடி, பிளாட் நெ.35
பா.வு.சா. நகர்
மாந்தோப்பு
திருவண்ணாமலை 606601
தொலைபேசி: 04175 24849
dictvm@tn.nic.in
24.
திருவாரூர்
நெ.7, புது தெரு
திருவாரூர்
தொலைபேசி: 04366, 540028
dictvr@tn.nic.in
25.
திருநெல்வேலி
தாமஸ் ரோடு
திருநெல்வேலி 627 001
தொலை பேசி : 0462 572162
572384
dictnv@tn.nic.in
26.
தூத்துக்குடி
பாளையம் கோட்டை ரோடு
பை பாஸ் சாலை அருகில்
தூத்துக்குடி 628 101
தொலைபேசி : 0423 443947
dictut@tn.nic.in
27.
உதகை
உதகை 643006
தொலைபேசி: 0423 443947
dicnlg@tn.nic.in
28.
வேலூர்
காங்கேய நல்லூர் ரோடு
காந்தி நகர் தொழில் வளாகம்
வேலூர் 632 006
தொலைபேசி : 0416 244257
dicvel@tn.nic.in
29.
விழுப்புரம்
பவானி சாலை
அலமேலு புரம்
விழுப்புரம்
தொலைபேசி : 04146 23616
dicvpm@tn.nic.in
30
விருதுநகர்
வட்டாட்சியர் அலுவலக வளாகம்
விருது நகர் 626 002
தொலைபேசி : 04562 352739
dicvnr@tn.nic.in


நன்றிங்க என paramesDriver, http:// consumerandroad.blogspot.com

   

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...