06 டிசம்பர் 2012

நீங்க வாழ்த்தலாம் வாங்க!


      
மரியாதைக்குரிய நண்பர்களே,
                         வணக்கம்.
                           நீங்க வாழ்த்தலாம் வாங்க!
   மங்கையராகப் பிறப்பதற்கே மாபெரும் தவம் செய்திடல் வேண்டும் என்ற வாசகத்திற்கேற்ப
                  புதுமைப்பெண்கள் உருவாகி வரும் நம்ம ஈரோடு மாவட்டம்.ஆமாங்க நண்பர்களே,சத்தியமங்கலம்-பெரிய கோவில் பகுதியில் வசித்து வரும் அப்துல் ரசீத் மற்றும் ராபியா பசிரி தம்பதியினரின் மகள் ஷாஜிதா.இவர் ஆங்கில இலக்கியம் பயின்ற B.A.,பட்டதாரிப்பெண் ஆவார்.இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் நடத்துனர் பணிக்கு விண்ணப்பித்து  இருந்தார்.சமீபத்தில் நடந்த நேர்முகத்தேர்வில் தேர்வாகி  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிளையில் பணி நியமனம் செய்யப்பட்டு தற்போது. சத்தியமங்கலம் – பவானிசாகர் வழித்தடத்தில் 7-ம் நெம்பர் நகர்ப்புறப்பேருந்தில் TOWN BUS பணி புரிகிறார்.  துணிச்சல் மிகுந்த இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்த அந்த அம்மையார் திருமிகு.ஷாஜிதா நடத்துனர் அவர்களை நாமும் மனதார வாழ்த்தி வரவேற்போம்.பிற பெண்களுக்கும் ஊக்கம் கொடுப்போம்.
                        என
        PARAMESWARAN.C //
          DRIVER // 
        TAMIL NADU STATE TRANSPORT CORPORATION // 
             COIMBATORE DIVISION – 
            ERODE SUB DIVISION – 
              THALAVADY – BRANCH –
             SATHYAMANGALAM-TALUK.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...