14 ஏப்ரல் 2012

பார்த்தீனியம் களைச்செடி-அபாயம்.

அன்பு நண்பர்களே,
இனிய வணக்கம். 
இங்கு மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பார்த்தீனியம் என்னும் விஷச்செடி பற்றி காண்போம்.


              பார்த்தீனியம்

        பார்த்தீனியம் களைச்செடி முதன் முதலில் நம்
நாட்டில் பூனாவில் காணப்பட்டது. பின்பு அது எல்லா
மாநிலங்களுக்கும் பரவி விட்டது. முன்னமேயே பார்த்~
தீனியத்தின் விதைகள் மிகவும் எடை குறைவாகவும் 
தட்டையாகவும் இருப்பதால் ஓரிடத்தில் இருந்து மற்~
றோர் இடத்திற்கு காற்றின் மூலமாக பரவி விடுகின்றன
என்பதைப் பார்த்தோம். பார்த்தீனியத்தின் வயது 135
நாட்களில் முடிந்து விடுகின்றது. இது ஒரு பருவத்தில்

10,000 விதைகளை உற்பத்தி செய்கின்றது. பார்த்தீனியம்
ஒரு வருடத்தில் மூன்று தலைமுறைகளை உற்பத்தி செய்ய~
வல்ல திறன் கொண்டதாக இருக்கின்றது. ஒரு பார்த்~
தீனி௟ம் செடியை வளரவிட்டால் அது ஒரு வருடத்தில்
லட்சக்கணக்கில் விதைகளை உற்பத்தி செடி விடும்.
நீர் இல்லாத வறட்சியான இடங்களில் கூட வளர்வதற்~
கேற்ற தன்மையை பார்த்தீனியம் பெற்று உள்ளது.
ஆகவே பார்த்தீனியத்தை பூக்கும் பருவத்திற்கு முன்பே
அழித்து விட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக