25 ஏப்ரல் 2012

விலையில்லா மடிகணிணி-கோபி








   தாளவாடி கிரிக்கெட் இளைஞர்கள் வெற்றிப்புன்னகையுடன் இங்கு..கோப்பையுடன் இது தாளவாடி மலைப்பகுதிங்க!.................







          மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் ''விலையில்லா மடிகணிணி'' கல்லூரி மாணவியருக்குக் கொடுத்ததன் விளைவு,வீட்டில் எல்லோரும் கணிணி பயின்று கொண்டிருக்கிறார்கள்.இந்த திட்டம் மிகவும் வரவேற்கக்கூடியது.என்றால் அது மிகையாகாது.இந்த இளம் பிஞ்சுகள் எங்கே சென்று கணிணியை தொட்டுப்பார்க்கப்போகிறார்கள்?.இப்போது இந்தக்குழந்தை கணிணியை நன்றாக   இயக்கக்கற்றுக்கொண்டுவிட்டது. மடிக்கணிணி மட்டுமல்ல மேஜைக்கணிணியையும்தானுங்க.







             நம் குடும்பம் - இது சத்தியமங்கலத்தில்  வெளிவரும் தம்பதியினருக்கான  முதல் தமிழ் மாத சிற்றிதழ்.
         ''வாசிப்பதற்கு மட்டுமல்ல,நேசிப்பதற்கு''. 
        இனிய இல்லறத்தை விரும்பாதோர் தொடர்ந்து படிக்க வேண்டாம்- என்று ஒரு அன்பு வேண்டுகோளும் இப்பத்திரிக்கையின் முதல் அட்டைப்படத்தில் உண்டுங்க......









   இங்க பாருங்க! இது கர்நாடகா மாநிலத்திலிருந்து ஏற்றிவரும் கால்நடைங்க. இது பாவங்க, கர்நாடகாவில் பொதுமக்களே கால்நடைகளை சித்திரவதை செய்ய அனுமதிப்பதில்லைங்க.அதனாலே அங்கு தெரியாமல் ஆனால் தாளவாடியில் வெளிப்படையாக மூட்டை போல ஏற்றிவரும் மாடுங்க,தலமலை வனப்பாதையில் பயணம்!.பாவங்க.அதுக என்ன செஞ்சுதுங்க!  மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டு திம்பத்தில் இறக்கப்படுதுங்க.உன்னிப்பாக கவனித்தால்தான் தெரியும் கடைசியில் ஏற்றப்பட்டுள்ள எருமை என்ன துன்பத்திற்கு ஆளாகுகிறது என்று.இதுபோல தினசரி வருகிறது மூட்டை போல அடுக்கிக்கொண்டு!!!!!!!!!வனத்துறையினர் இதைக்கவனித்தால் நன்றாக இருக்கும்.இந்த போட்டோ எடுத்தது யாருன்னு தெரிஞ்சா! எடுத்தவருக்கு  அடி உதைதாங்க!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...