11 ஏப்ரல் 2014

புதுச்சேரி RTO குறியீட்டு எண்கள்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வட்டாரபோக்குவரத்து அலுவலகங்களின் குறியீட்டு எண்கள் பற்றி காண்போம்.

PY—Puducherry

PY-01 Pondicherry
PY-02 Karaikal
PY-03 Mahe
PY-04 Yanam
PY-05 Pondicherry SOUTH(upcoming)
நன்றிங்க.

ஆந்திரா RTO குறியீட்டு எண்கள்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.ஆந்திரா மாநில வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் அமைவிடமும் குறியீட்டு எண்களும் இங்கு காண்போம். 
  

AP—Andhra Pradesh

AP-01 Adilabad - Mancherial / Nirmal
AP-02 Anantapur / Hindupur
AP-03 Chittoor / Tirupati / Madanapalle
AP-04 Kadapa / Proddatur
AP-05 Kakinada / Amalapuram / Rajahmundry
AP-07 Guntur / Tenali / Piduguralla / Narasaraopet / Repalle
AP-09 Hyderabad Central (Khairtabad)
AP-10 Hyderabad North (Secunderabad)
AP-11 Hyderabad East (Malakpet)
AP-12 Hyderabad South (Kisanbagh)
AP-13 Hyderabad West (Mehdipatnam)
AP-15 Karimnagar / Jagtial / Peddapalli
AP-16 Vijayawada / Gudivada / Machilipatnam / Nandigama / Nuzvid
AP-20 Khammam / Kothagudem / Sathupally / Yellandu / Manuguru
AP-21 Kurnool / Adoni / Nandyal
AP-22 Mahbubnagar / Pebbair / Gadwal
AP-23 Medak / Sangareddy / Siddipet / Patancheru
AP-24 Nalgonda / Suryapet / Miryalaguda / Bhongir / Bibinagar
AP-25 Nizamabad
AP-26 Nellore / Kavali / Gudur / Sullurpeta / Naidupet
AP-27 Ongole / Chirala / Markapur
AP-28 Attapur / Kukatpally / Medchal
AP-29 Uppal Kalan / Ibrahimpatnam
AP-30 Srikakulam / Tekkali / Palasa / Sompeta / Ichchapuram / Kaviti
AP-31 Visakhapatnam / Gajuwaka / Anakapalli
AP-35 Vizianagaram
AP-36 Warangal / Jangaon / Mahabubabad
AP-37 Eluru / Jangareddygudem / Kovvur / Tadepalligudem / Tanuku / Bhimavaram / Palakollu / Chintalapudi
AP-09-Px State Police
AP-xx-Z APSRTC

நன்றிங்க

கேரளா - RTO அலுவலக குறியீட்டு எண்கள்.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.கேரளா மாநில வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் அமைவிடங்களும் குறியீட்டு எண்களும்.இங்கு காண்போம்.

KL—Kerala

KL-01 Thiruvananthapuram
KL-02 Kollam
KL-03 Pathanamthitta
KL-04 Alappuzha
KL-05 Kottayam
KL-06 Idukki
KL-07 Ernakulam
KL-08 Thrissur
KL-09 Palakkad
KL-10 Malappuram
KL-11 Kozhikode
KL-12 Wayanad
KL-13 Kannur
KL-14 Kasargode
KL-15 Kerala State Road Transport Corporation buses
KL-16 Attingal
KL-17 Muvattupuzha
KL-18 Vadakara
KL-19 Parassala
KL-20 Neyyattinkara
KL-21 Nedumangad
KL-22 Kazhakkoottam / Thiruvananthapuram
KL-23 Karunagapally
KL-24 Kottarakara
KL-25 Punalur
KL-26 Adoor
KL-27 Thiruvalla
KL-28 Mallappally
KL-29 Kayamkulam
KL-30 Chengannur
KL-31 Mavelikara
KL-32 Cherthala
KL-33 Changanassery
KL-34 Kanjirappally
KL-35 Pala
KL-36 Vaikom
KL-37 Vandiperiyar
KL-38 Thodupuzha
KL-39 Thripunithura
KL-40 Perumbavoor
KL-41 Aluva
KL-42 North Paravur
KL-43 Mattancherry
KL-44 Kothamangalam
KL-45 Irinjalakuda
KL-46 Guruvayur
KL-47 Kodungallur
KL-48 Wadakkancherry
KL-49 Alathur
KL-50 Mannarghat
KL-51 Ottappalam
KL-52 Pattambi
KL-53 Perinthalmanna
KL-54 Ponnani
KL-55 Tirur
KL-56 Koyilandi
KL-57 Koduvally
KL-58 Thalassery
KL-59 Thaliparamba
KL-60 Kanhangad
KL-61 Kunnathur
KL-62 Ranni
KL-63 Angamaly
KL-64 Chalakkudy
KL-65 Thirurangadi
KL-66 Kuttanadu
KL-67 Uzhavoor
KL-68 Devikulam
KL-69 Udumbanchola
KL-70 Chittur
KL-71 Nilambur
KL-72 Mananthavady
KL-73 Sulthan Bathery

நன்றிங்க.

அமெரிக்க விசா பெறுவது எப்படி ?

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

அமெரிக்க விசா பெறுவது எப்படி ?
சுற்றுலா செல்வதற்கு B1/B2 என்ற விசா தருகிறார்கள்.
10 வருடத்திற்கு இந்த விசா கொடுக்கப்படும், பயணம் செய்யும் கடைசி நாள் வரை காத்து இருக்காமல் முன் கூட்டி இந்த விசாவை வாங்கி வைத்து கொள்ளலாம். அமெரிக்க தூதரகத்தில் நேரடி இன்டர்வியு நடைபெறும், இந்த விசாவில் தொழில் சந்திப்பு பயணம் (Business Visa B1) மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல (Tourist B2) முடியும்.
இன்டர்வியு செய்யும் ஆபிசர் அதிகமாக டாகுமேண்டுகள் ( அபிடவிட், வங்கி பேலன்ஸ், பயண திட்டம், வேலைசெய்யும் நிறுவன கடிதம்) கேட்பது கிடையாது.
எப்படி அப்பளை செய்வது ?
அப்பாயின்மென்ட் பெற கணினி மூலம் அப்ளை செய்யவும் www.ustraveldocs.com/in இரண்டு அப்பாயின்மன்ட் பெற வேண்டும் ஒன்று விசா அப்ளிகேசன் சென்டரில் போட்டோ, மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்ய, இரண்டு, விசா இன்டர்வியு நேரம் பெற.
கையில் கொண்டு போக வேண்டிய டாகுமன்ட்:
உங்களுக்டைய பாஸ்போர்ட், மற்றும் பழைய பாஸ்போர்ட் இருந்தால் அதையும் கொண்டு செல்ல வேண்டும்,
D -160 என்ற அப்ளிகேசன் முழுவதும் நிரப்பப்பட்டு, பார்கோடு நன்றாக தெரியும் படி பிரிண்ட் எடுத்து செல்ல வேண்டும் https://ceac.state.gov/CEAC/
விசா பீஸ்: 160 டாலர், இந்திய ரூ.10400 மட்டுமே.
அமெரிக்க விசா உங்க பாஸ்போர்டில் இருந்தால் வேறு எந்த நாட்டிற்கு போவது என்றாலும் எளிதாக விசா கிடைத்துவிடும். மேலும் விசா எடுப்பது பற்றி சந்தேகமோ அல்லது இன்டர்வியுவில் என்ன கேள்விகள் கேட்பார்கள் எவ்வாறு பதில் கூற வேண்டும் என்ற கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம்.
அமெரிக்க விசா பெறுவது எப்படி ?

சுற்றுலா செல்வதற்கு B1/B2 என்ற விசா தருகிறார்கள். 

10 வருடத்திற்கு இந்த விசா கொடுக்கப்படும், பயணம் செய்யும் கடைசி நாள் வரை காத்து இருக்காமல் முன் கூட்டி இந்த விசாவை வாங்கி வைத்து கொள்ளலாம். அமெரிக்க தூதரகத்தில் நேரடி இன்டர்வியு நடைபெறும், இந்த விசாவில் தொழில் சந்திப்பு பயணம் (Business Visa B1) மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல (Tourist B2) முடியும். 

இன்டர்வியு செய்யும் ஆபிசர் அதிகமாக டாகுமேண்டுகள் ( அபிடவிட், வங்கி பேலன்ஸ், பயண திட்டம், வேலைசெய்யும் நிறுவன கடிதம்) கேட்பது கிடையாது.

எப்படி அப்பளை செய்வது ?

அப்பாயின்மென்ட் பெற கணினி மூலம் அப்ளை செய்யவும் www.ustraveldocs.com/in இரண்டு அப்பாயின்மன்ட் பெற வேண்டும் ஒன்று விசா அப்ளிகேசன் சென்டரில் போட்டோ, மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்ய, இரண்டு, விசா இன்டர்வியு நேரம் பெற.

கையில் கொண்டு போக வேண்டிய டாகுமன்ட்:

உங்களுக்டைய பாஸ்போர்ட், மற்றும் பழைய பாஸ்போர்ட் இருந்தால் அதையும் கொண்டு செல்ல வேண்டும்,

D -160 என்ற அப்ளிகேசன் முழுவதும் நிரப்பப்பட்டு, பார்கோடு நன்றாக தெரியும் படி பிரிண்ட் எடுத்து செல்ல வேண்டும் https://ceac.state.gov/CEAC/

விசா பீஸ்: 160 டாலர், இந்திய ரூ.10400 மட்டுமே.

அமெரிக்க விசா உங்க பாஸ்போர்டில் இருந்தால் வேறு எந்த நாட்டிற்கு போவது என்றாலும் எளிதாக விசா கிடைத்துவிடும். மேலும் விசா எடுப்பது பற்றி சந்தேகமோ அல்லது இன்டர்வியுவில் என்ன கேள்விகள் கேட்பார்கள் எவ்வாறு பதில் கூற வேண்டும் என்ற கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம்.

06 ஏப்ரல் 2014

பற்களில் காரை படிந்துள்ளதா

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
            கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.
                   

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....? என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (potassium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.. கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது. முயற்சித்துப் பாருங்களேன்
              பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....? என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (potassium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.. கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது. முயற்சித்துப் பாருங்களேன்

மரபணு மஞ்சள் வாழைப்பழம்:-

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.

மரபணு மஞ்சள் வாழைப்பழம்:-
*** மக்களை காப்பாற்றுங்கள்தயவு செய்து படிக்கவும், படித்ததும் பகிரவு ***
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.
இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.
பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.
பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.
இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.
மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோஇதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.
மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.
இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி. ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும்..

05 ஏப்ரல் 2014

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றி காண்போம்.


மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இந்தப்பதிவில் நுகர்வோர் பற்றி காண்போம்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பயன்படுத்தும் முக்கியமான சொற்கள்:
1.Consideration = பொருள் அல்லது சேவைக்காக வழங்கப்படும் விலை
2.Defect = பொருளில் உள்ள குறைபாடு
3.Deficiency = சேவையில் ஏற்படும் குறைபாடு
4.Service = சேவை
5.Restriction trade practice = கட்டுப்படுத்தப்பட்ட வியாபார செயல்
6.Unfair trade practice = நேர்மையற்ற வியாபார செயல்

1. நுகர்வோர் என்பவர் யார்? அவருடைய உரிமை என்ன?
தன்னுடைய பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட விலை கொடுத்து பொருட்களை கொள்முதல் செய்யும் அல்லது சேவையை பெறும் எந்த ஒரு தனி நபரும் நுகர்வோர் என அழைக்கப்படுவார். ஆனால் இதனை வியாபாரத்திற்காக பயன்படுத்துபவர் அல்லது மறுவிற்பனை செய்பவர் நுகர்வோராக கருதப்படமாட்டார்.

நுகர்வோரின் உரிமைகள் பின்வருமாறு:
1.குறைபாடான பொருள் அல்லது சேவையினால் பாதிக்காமல் காத்துக்கொள்ளும் உரிமை
2.கொள்முதல் செய்யப்படும் பொருள்/சேவை பற்றிய முழு விவரங்களை பெறுவதற்கான உரிமை.
3.தமக்கு தேவையான பொருட்களை/சேவையை தெரிவு செய்வதற்கான உரிமை.
4.குறைபாடான பொருட்கள்/சேவையை பெற்றிருந்தால் அது பற்றி கேட்பதற்கான உரிமை.
5.இந்த குறையை தீர்ப்பதற்காக நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் உரிமை.
6.தம்முடைய நுகர்வோர் உரிமையை சுதந்திரமாக செயல்படுத்துவதற்காக நுகர்வோர் கல்வி பெறுதவதற்கான உரிமை.

2. பொருட்களை கொள்முதல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை யாவை?
கொள்முதல் செய்யும் பொருள் மூலப்படிவமான பொருள்தானா (original) என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னர் குறை ஏதும் தெரிந்தால் நிவர்த்தி செய்யும் உத்திரவாதத்தை செயல்படுத்த இது தேவைப்படும். மேலோட்டமாக பார்த்த உடனேயே தெரிகின்ற குறையேதும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி கொள்க. பொருளுடன் வரும் விவரங்களை படித்து அந்த பொருளை பற்றிய முழுவதும் தெரிந்து கொள்க. ISI, Agmark போன்று பொருளுக்கு தரச்சான்று ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து கொள்முதல் செய்க.

3. நுகர்வோர் தாம் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிந்து உடனேயே நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா?
இல்லை. முதலில் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் சென்று தாம் கொள்முதல் செய்த பொருளின் குறைபாட்டை எடுத்துக்கூறி சரி செய்து கொடுக்கும்படி கூற வேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் இவ்வாறு புகார் வந்தவுடன் சரியான பொருட்களை உடன் மாற்றி கொடுத்துவிடுவர். அல்லது நுகர்வோரிடம் பெற்ற விலைக்கான தொகையை திருப்பி வழங்கிவிடுவார்.

4. நுகர்வோர் எப்போது நீதிமன்றத்தை அணுக வேண்டும்?
விற்பனையாளரிடம்/உற்பத்தியாளரிடம் நேரடியாக சென்று கேட்டும் குறையை நிவர்த்தி செய்யாமல் மறுத்தளித்தல் செய்யும்போது அல்லது தம்முடைய குறைகளை கேட்காமல் மறுப்பது தெரியவரும்போது மேற்படி பொருள் கொள்முதல் செய்ததற்கான பட்டியல், உத்திரவாதம் ஏதும் அளித்திருந்தால் அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தை அணுகி தாம் பாதிக்கப்பட்டதை முறையீடு செய்யலாம்.

5. கட்டணம் ஏதுமின்றி சேவை புரிபவரிடம் பெரும் குறைபாடான சேவைக்கு நீதிமன்றத்திற்கு அணுக முடியுமா?
எந்த ஒரு நுகர்வோரும் தாம் பெற்ற பொருள் மற்றும் சேவைக்கு ஈடாக விலையை இதனை அளிப்பவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்பதே நுகர்வோர் வழக்கின் அடிப்படையாகும். இலவசமாக மருத்துவ சேவை புரியும் அரசு மருத்துவமனையின் மீது பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிவாரணம் கோரி வழக்கு தொடுக்க முடியாது. ஒரு ரூபாயாவது கட்டணமாக செலுத்தி ரசீது பெற்று சேவை பெற்றிருந்தால் வழக்கு தொடுக்க முடியும்.

6. இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதால் என்னென்ன நிவாரணம் கிடைக்கும்?
இந்த வழக்கு சரியானதுதான், நுகர்வோர் குறைபாடுடைய பொருள்/சேவையால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என நுகர்வோர் நீதிமன்றம் கருதுமாயின் உடன் கீழ்காணும் நிவாரணங்களை செய்யும்படி எதிர்தரப்பினருக்கு உத்திரவிடுகிறது.

1 குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையை உடனடியாக அகற்றும்படி கோருதல்
2.குறைபாடு உடைய பொருள் அல்லது சேவையால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டும்படி கோருதல்
3.இந்த வழக்கிற்கான செலவு தொகையை வழங்கும்படி கோருதல்
4.குறைபாடுடைய பொருளுக்கு பதிலாக அதே மாதிரியான வேறு நல்ல பொருளை வழங்கும்படி கோருதல்
5.பெற்ற குறைபாடுடைய பொருள்/சேவையின் விலையை உடனடியாக திரும்ப வழங்கும்படி கோருதல்
6.உடனடியாக இவ்வாறான நேர்மையற்ற வியாபார செயலை மேலும் தொடராமல் நிறுத்தம் செய்யும்படி உத்திரவிடுதல்
7.அபாயம் விளைவிக்கும் பொருள் ஏதும் சந்தையிடப்பட்டிருந்தால் உடனடியாக அப்பொருட்கள் சந்தையிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி உத்திரவிடுதல்

7. ஈட்டுத்தொகை பெறுவதற்கு ஏதேனும் உச்ச வரம்பு உள்ளதா?
இல்லை. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நடைமுறைக்கு பொருந்த கூடிய அளவிற்கு ஈட்டுத்தொகை இருக்க வேண்டும்.

8. ஒரு பொருள் அல்லது சேவை பெறும்போது ஏற்படும் குறைபாட்டில் ஒரு பகுதி குறையை மட்டும் தீர்க்கும்படி நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியுமா?
ஆம். ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் குறைபாடு உடையதாயின் மற்றவை சரியாக உள்ளது என தெரியும்போது அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் சரிசெய்து தரும்படி நுகர்வோர் நீதி மன்றத்தை அணுக முடியும்.

9. இந்த வழக்கினை வழக்கறிஞர் மூலமாக மட்டும்தான் அணுக வேண்டுமா?
தேவையில்லை. பாதிக்கப்பட்ட நுகர்வோர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகலாம், மிகவும் சிக்கலான நிலையில் மட்டும் வழக்கறிஞரை அணுகுவது நல்லது.

10 நுகர்வோர் வழக்கு தொடுக்கும்போது என்னென்ன காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்?
1.குறைபாடுடைய பொருள் அல்லது சேவையின் பெயர்
2.வழக்கு தொடுப்பவரின் பெயர் மற்றும் முழு விவரங்கள் அவ்வாறே எதிர்தரப்பாளரின் முழு விவரங்கள்
3.இந்த நிகழ்வுகள், எப்போது. எங்கே எவ்வாறு நிகழ்ந்தது
4.எதிர்தரப்பாளர் ஏன் இதற்கு பதிலீடு செய்ய வேண்டும்? அல்லது பொறுப்பு வகிக்க வேண்டும்? அதற்கான உத்திரவாதம் உள்ளதா? பட்டியல் உள்ளதா? விலை கொடுக்கப்பட்டுள்ளதா?
 5.குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள், பட்டியல், பணம் கொடுத்ததற்கான ரசீதுகள், உத்திரவாதம் பெற்றதற்கான ஆதாரங்கள், நேரில் அணுகி கேட்டபோது மறுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அல்லது எழுத்து மூலம் நிவர்த்தி செய்யும்படி கோரி மறுத்ததற்கான ஆதாரங்கள்
6.பொருள்/சேவை கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்குள் வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.

11. வழக்கை எங்கு பதிவு செய்ய வேண்டும்?
          பாதிப்பு எங்கு ஏற்பட்டதோ அந்த இடத்தினுடைய மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். மதிப்பீடு தொகை 25 இலட்சம் வரையிருந்தால் மாவட்ட நுகர்வோர் மன்றத்திலும் 25 இலட்சம் முதல் 1 கோடி வரை மாநில நுகர்வோர் மன்றத்திலும் 1 கோடிக்கும் மேல் எனில் தேசிய நுகர்வோர் மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம்.

12. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?
          ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து இதற்கான அனைத்து ஆவன நகல்களை இணைத்து பொருள் மதிப்பிற்கு தகுத்நவாறு நுகர்வோர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, பதிவு தபால் மூலமாகவோ. தொலைநகல் மூலமாகவோ, விரைவு தபால் மூலமாகவோ வழக்குகளை பதிவு செய்து இந்த வழக்கின் நகலை எதிர் தரப்பாருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

13. நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறுத்து மேல் முறையீடு எவ்வாறு செய்வது?
           நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்ட 30 தினங்களுக்குள் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பாயின் மாநில மன்றத்திலும் மாநில மன்ற தீர்ப்பாயின் தேசிய மன்றத்திலும், தேசிய மன்ற தீர்ப்பு எனில் உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கலாம். அப்போது அனைத்து நடைமுறைகளுடன் நீதிமன்ற தீர்ப்பு நகலையும் இணைத்து மேல் முறையீட்டிற்கு மனு செய்ய வேண்டும்.
           இந்த முப்பது நாட்கள் என்ற வரம்பை நீதி மன்றம் விரும்பினால் சரியான காரணத்திற்காகவே இந்த கால தாமதம் ஆகிவிட்டது எனக்கருதி வழக்கினை ஏற்றுக்கொள்ளும்.

14. மேல் முறையீட்டின்போது நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?
             நீதிமன்ற கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் ஈடுகட்டும் தொகையின் மதிப்பில் 50% அல்லது ரூ.2500 எது குறைவோ அதனை மாநில மன்றத்திற்கு ரூ.35000 தேசிய மன்றத்திற்கு ரூ.5000 உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய தொகையை செலுத்த வேண்டும்.

15. நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை எதிர்தரப்பாளர் நடைமுறைபடுத்தவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?
          எதிர்தரப்பாளர் உத்தரவை ஏற்று செயல்படுத்தவில்லை என்றால் அது ஒரு குற்றச்செயலாகும். குறைந்தது ஒரு மாதம் அதிக பட்சம் மூன்று மாதம் சிறை தண்டனையும், தண்டத் தொகையாக ரூ.2000 அதிக பட்சம் ரூ.10000 மட்டும் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். இடைக்கால உத்தரவு ஏதும் நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுத்தாது.

இந்நிலையில் நுகர்வோர் என்ன செய்ய வேண்டும்?
          இந்த உத்தரவை செயற்படுத்த நுகர்வோர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தால் அந்த தொகைக்கான சான்றுகளை நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு நிலவரி வசூலிப்பது போன்று வசூலிக்கும்படி அனுப்பி வைக்கும்.

16. நுகர்வோர் நீதிமன்றத்தின் செயல்பாடு வரன்முறை யாவை?
            குற்றவியல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி போன்று வழக்குகளை நடத்துவதற்கான அனைத்து உரிமைகளும் நுகர்வோர் மன்ற நீதிபதிக்கு உள்ளது.