15 பிப்ரவரி 2012

இந்திய தேசியக்கொடி




அ
ன்று செவ்வாய்க் கிழமை. ஜூலை மாதம் 22ம் தேதி 1947ம் வருடம். இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டம். அன்றைய தினத்தின் முதல் நடவடிக்கையாக, நம் நாட்டின் தேசியக்கொடியினைத் தீர்மானித்து முடிவு செய்வது எனும் நோக்கத்தில் கூடியிருந்தது.
ஆனாலும் அன்றைக்கு முதலில் பேசிய பீஹார் மாநிலத்தை சேர்ந்த ராம் நாராயண் சிங், ஒரு வேண்டுகோளை முன்வைத்து சபையின் கவனத்தை ஈர்த்தார்.
“விடுதலை அடையவிருக்கும் நம் நாட்டின் அரசியல் சாசனத்தை நிர்ணயம் செய்ய கூடியுள்ள இந்த மாபெரும் அவையின், கடிதங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறைகளில் இன்னமும் ‘மாட்சிமை தங்கிய மன்னரி சேவையில்’ எனும் தலைப்பு காணப்படுகிறது. இந்த பொருத்தமற்ற வாசகத்தினை இனிவரும் நாட்களில், இந்த அவை தனது அஞ்சல் உறைகளில் பயன்படுத்தாது கைவிட வேண்டும்.”
இந்தக் கோரிக்கைக்கு அவைத் தலைவர் ராஜேந்திர பிரசாத் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
தேசியக்கொடியின் மீதான முன்மொழிவினை அவையில் பகிர்ந்து கொள்ளுமாறு ஜவஹர்லால் நேருவுக்கு அவர் அழைப்பு விடுத்தார். நேரு தேசியக்கொடி குறித்து முன்மொழிந்த தீர்மானம்:
தேசியக்கொடி செவ்வகமாகவும் அதன் நீள அகலம் 3: 2 எனும் விகிதத்திலும், கொடியில் மூன்று வர்ணங்களில் காவி மேல்புறத்தும், பச்சை கீழ்ப்புறத்தும், இவற்றிற்கு இடையே வெள்ளை நிறமும்; அதில் நீல நிறத்தில் சாரநாத் ஸ்தூபியில் இருக்கும் சக்கரம் மையத்தில் அமையும்படியாகவும் இருக்கும் கொடி நமது தேசியக்கொடியாகத் திகழும் எனும் தீர்மானத்தினை அவையின் அனுமதிக்கும் ஏற்புக்கும் முன்மொழிகின்றேன்
தீர்மானத்தை முன்மொழிந்த நேருவின் உரையில் உணர்ச்சிமிகுந்த வார்த்தைகளால் சுதந்திரப் போரின் தருணங்கள் மேற்கோளிடப்பட்டன. கொடியின் நிறத்தினையும் வடிவத்தினையும் குறிப்பிட்ட நேரு, அதுவரை சுதந்திரப் போரினை முன்னின்று நடத்திய போராளிகள் பயன்படுத்திய கொடிக்கும், தான் தற்போது முன்மொழிந்துள்ள கொடிக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை எனச் சொல்லி, அன்றைய கொடியின் மத்தியில் சாமன்ய மனிதனைக் குறிக்கும் சின்னமாக காந்தியார் கருதிய ராட்டை சக்கரம் இருந்தது, இன்றைக்கு அந்த இடத்தில் சாரநாத் ஸ்தூபியில் காணப்படும் தர்ம சக்கரம் காணப்படுகிறது எனக் குறிப்பிட்டு, கதர் துணி மற்றும் பட்டுத் துணிகளாலான இரண்டு கொடிகளை அவைக்குச் சமர்பித்தார்.
அவைத்தலைவர் இந்த தீர்மானத்திற்கு மாற்றம் வேண்டி தனக்கு உறுப்பினர்களிடமிருந்து மூன்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தவுடன் அவையில் சலசலப்பு தோன்றியது.
நேரு முன்மொழிந்த தீர்மானத்தில் திருத்தம் கோரும் தனது தீர்மானத்தினை முன்மொழிந்து ஹெச்.வி காமத் எனும் உறுப்பினர் பேசினார்:
நேரு முன்மொழிந்துள்ள கொடியில் காணப்படும் தர்ம சக்கரத்திற்குப் பதிலாக ஸ்வஸ்திக் சின்னத்தினை அமைக்கலாம் என முன்மொழிந்தார் காமத். இந்தியாவின் நீண்ட பாரம்பரியக் கலாசாரத்தினை ஸ்வஸ்திக் வெளிப்படுத்தும் என்பது காமத் சொன்ன விளக்கம்.
தாஜாமுல் ஹுசைன் எனும் உறுப்பினரை தனது தீர்மானத்தினை முன்மொழியுமாறு அவைத்தலைவர் அழைத்தார். ஆனால் ஹுசைன் அப்போது அவையில் இல்லை. ஆகையால் நேருவின் தீர்மானத்தில் மாற்றம்வேண்டி கருத்து சமர்ப்பிக்க கோரிக்கை வைத்திருந்த மற்றுமொரு உறுப்பினர் தேஷ்முக் தனது கருத்துகளைக்கூற அவைத்தலைவர் அழைத்தார்.
அப்போது பேசிய தேஷ்முக், அங்கு அதற்கு முன்பு உரைநிகழ்த்திய நேருவின் உணர்ச்சிமிகுந்த, ஆழ்ந்த கருத்துகளினால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதால் தான் முன்மொழிவதாக இருந்த திருத்தம் வேண்டும் தீர்மானத்தினை, திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சொல்லிவிட்டார்.
நேருவின் தீர்மானத்தினை ஆதரித்து சேத் கோவிந்த் தாஸ், வி.ஐ. முனிசாமிப் பிள்ளை, சௌத்ரி கலிசுமான் ஆகியோர் பேசினர்.
நேருவின் தீர்மானத்தினை ஆதரித்து சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தனக்கே உரிய தத்துவ ஞானத்துடன் உரை செய்தார். நேரு முன்மொழிந்த வண்ணங்கள், ராஜ தர்மத்தையும் மத ஒற்றுமையையும் எடுத்துரைப்பதாகச் சொன்னார்.
பின்னர் மோகன் சிங் மேத்தா, மொகமத் ஷரிஃப் இருவரும் நேருவின் தீர்மானத்தினை ஆதரித்தனர். இந்நிலையில் இடைமறித்த உறுப்பினர் சத்திய நாராயண சின்ஹா, இந்த விவாத்தினை நீட்டித்துக் கொண்டே செல்லாது, விரைந்து தீர்மானத்தினை நிறைவேற்றலாம் எனக் கருத்து சொன்னார்.
அவைத்தலைவர் ராஜேந்திர பிரசாத், இந்தப் பொருளில் பேச 26 உறுப்பினர்கள் வேண்டுகோள் வைத்திருப்பதாகவும், இதில் அவையின் உறுப்பினர்கள் அனைவருமே தங்கள் கருத்துகளைச் சொல்வதற்கு ஆவலாக இருக்கலாம் எனவும், ஆனால் நேருவின்  தீர்மானத்தினை அவையின் கருத்தறியும் வகைக்கு ஓட்டெடுப்புக்கு விடலாம் எனக் கருதுவதாகவும் சொன்னார்
அப்போதுதான் அவைக்கு வந்திருந்த தாஜாமுல் ஹுசைன், இந்த சபையில் கருத்துரைக்க வேண்டுகோள் செய்த உறுப்பினர்கள் அனைவரது கருத்துகளையும் அறிந்தபின் ஓட்டெடுப்பு நிகழ்த்தலாம் எனத் தெரிவித்தார்
தேசியக்கொடியினை நிர்ணயம் செய்யும் இதுபோன்றதொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வும் வாய்ப்பும் பின்னர் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை, ஆகவே பேச வேண்டுகோள் வைத்துள்ள அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என, பி.கே சித்வா, ராய் பகதூர் சியாமனந்தன் சஹாயா, பண்டிட் கோவிந்த் மாளவியா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த, ராஜேந்திர பிரசாத், தான் அவையின் கருத்துக்குச் செவி சாய்ப்பதாகவும், அதேசமயம் இந்தப் பொருளில் பேச வாய்ப்புக் கேட்டு கோரிக்கை வைத்தவர்களை மட்டும் பேச அழைப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது பாலகிருஷ்ண சர்மா, தாஜாமல் ஹூசைன் இருவரும் கவிக்குயிலைக் கூவ அழையுங்கள் எனச் சொன்னதற்கு, ராஜேந்திரப் ப்ரசாத், “கண்டிப்பாக அழைக்கிறேன். அந்த இனிமையான குரலுடன் இன்று நாம் நிகழ்வுகளை நிறைவு செய்யலாம், இனிப்புடன் நிறைவு செய்வது வழக்கம்தானே” என்று வேடிக்கையாகச் சொன்னார்
அதன்பின்பு சயித் மொகமத் சாலுல்லா, ஹெச்.சி. முகர்ஜி, ஆர்.கே சித்வா, ஜெய்பால் சிங், ஃப்ராங் அந்தோணி, குர்முக் சிங் முகாஃபர், ஹெச்.ஜே காண்டேகர், பால கிருஷ்ண சர்மா, பண்டிட் மாளவியா, ஜோசப் அல்பான், ஜெய் நாராயண வியாஸ், நாகப்பா, லஷ்மி நாராயண சர்மா, ஜெரோம் டிசோசா ஆகியோர் உரையாற்றியபின், நிறைவு உரைக்கு கவிக்குயில் சரோஜினி நாயுடு அழைக்கப்பட்டார். அவரது உரையுடன் அன்றைக்கு நேரு முன்மொழிந்த, இன்றைக்கு நாம் மதிப்புடன் கொண்டாடும் தேசியக்கொடி, இந்திய நாட்டின் தேசியக்கொடியாக ஏற்கப்பட்டது.
அதன்பின் நேரு அவைக்குச் சமர்ப்பித்த இரண்டு தேசியக்கொடிகளும், வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டி, தேசிய அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டன‌.
அவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் மரியாதையினை மஹாத்மா காந்தியாருக்குத் தெரிவிக்க ராஜேந்திர பிரசாத்திடம் கேட்டுக்கொண்டனர். அவ்வாறே செய்வதாக அவரும் சொன்னார்.
இந்தத் தீர்மானத்தினை முன்மொழிய நேரு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு சிறு வரலாறு உண்டு.
அரசமைப்பு சட்டத்தினை வடிவமைக்க அரசியல் சாசன நிர்ணய சபை அமைக்கப்பட்டபோது, தேவையான பணிகளைப் பிரித்துச் செய்ய துணைக் கமிட்டிகள் அமைத்துக் கொள்ளப்பட்டன. அப்படி தேசியக்கொடி, தேசிய சின்னங்களுக்கெனவும் ஒரு தனி கமிட்டி அமைக்கப்பட்டது.  அந்த கமிட்டியில் ராஜேந்திர பிரசாத், மௌலானா ஆசாத்,  ராஜாஜி, சரோஜினி நாயுடு, சர்தார் கே.எம். பணிக்கர், கே.எம். முன்ஷி, அம்பேத்கர், சர்தார் பல் தேவ் சிங், ஃப்ராங்க் அந்தோணி, எஸ்.என். குப்தா, பண்டிதர் ஹிராலால் சாஸ்திரி, பட்டாபி சீதாராமையா, சத்தியநாராயண சின்ஹா ஆகியோர் உறுப்பினர்கள்.
இந்த கமிட்டியின் கூட்டம் 19-ஜூலை-1947 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு நேரு சிறப்பு அழைப்பாளராக அழைக்ப்பட்டார். அன்றுதான் அவர் சுதந்திர இந்தியாவின் தேசியக்கொடிக்கான தீர்மானத்தினை அரசியல் சாசன நிர்ணய சபையில் முன்மொழிந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
காந்தியாரின் ராட்டைக்குப் பதிலாக, இந்திய தேசியக்கொடியின் மத்தியில் அசோக சக்கரம் இருக்கும் என்பது நேருவின் உரையில் காணப்பட்டாலும், இதற்கும் ஒரு பூர்வ வரலாறு இருக்கிறது
கிலாபத் இயக்கத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான மௌலான மொகமத் அலி தலைமையில் 1923ம் ஆண்டு ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பிங்கலி வெங்கய்யா, இந்தியாவுக்கு தேசியக்கொடி வேண்டும் எனப் பேசினார். அவரையே தேசியக்கொடியினை வடிவமைத்திடும்படி காந்தியார் கேட்டுக்கொண்டார். இவர் வடிவமைத்த கொடியிலும் அசோகச் சக்கரமே இருந்தது. இவர்  “A National Flag for India“ எனும் புத்தகமும் எழுதினார். இந்தப் புத்தகம் அச்சாவதற்குரிய அனைத்துச் செலவுகளையும் எஸ்.வி. ராமமூர்த்தி ஏற்றுக்கொண்டார். எஸ்.வி. ராமமூர்த்தி அந்நாளில் ப்ரிடிஷ் ஆட்சியில் சென்னை ராஜதானியின் கவர்னரது எக்சிக்யூட்டிவ் கௌன்சிலின் உறுப்பினர்.
இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ன் தொடக்க நேரம், அதாவது ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவு மிகச் சரியாக 12 மணிக்கு, நாடாளுமன்றக் கட்டடக் கடிகாரம் கணீரென ஒலித்த தருணம், இந்தியா சுதந்திர இந்தியாவாக மலர்ந்த தருணம்.
ஜூலை மாதம் 22 ம் நாள் அதே சபையில் ஏற்கப்பட்ட தேசியக்கொடியினை இந்திய அன்னையர் சார்பாக நாட்டுக்கு வழங்கிடுமாறு, அதற்கென அமைக்கப்பட்ட மகளிர் குழுவினை ராஜேந்திர பிரசாத் அழைத்தார். அந்தக் குழுவில் சரோஜினி நாயுடு, அம்ரித் கௌர், விஜயலஷ்மி பண்டிட், ஹன்சா மேத்தா, அம்மு ஸ்வாமிநாதன், சுசேதா க்ருபளானி, குத்சியா அய்சத் ரசூல், துர்கா பாய், ரேணுகா ராய், தாட்சாயிணி வேலாயுதன் ஆகியோர் உறுப்பினர்கள்
தேசியக்கொடியினை கையாளவும், அதற்கு மரியாதை செய்யவும் உரிய விதிமுறைகள் Flag Code of India எனும் தலைப்பில் 2002ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்த விதிமுறைகள் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவையாவன: தேசியக்கொடியின் அளவுகள் குறித்த விதிகள்; தேசியக்கொடியினை தனி நபர்கள், கல்வி நிறுவனங்கள், தனியாள் நிறுவனங்கள் பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விதிகள்; தேசியக்கொடியினை அரசும், அரசு நிறுவனங்களும் பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விதிகள்.
  • தேசியக்கொடி செவ்வக வடிவில், நீள அகலம் 3:2 எனும் விகிதத்தில், மேல்புறம் காவி வண்ணம், நடுவில் வெண்மை, கீழ்ப்புறம் பச்சை, நடுவில் உள்ள வெண்மையின் நடுவில் நீலநிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் என்ற வடிவத்தில் இருக்க வேண்டும்.
  • தேசியக்கொடி, கம்பளி, கதர் மற்றும் பட்டுத் துணிகளில் கையினால் நெய்யப்பட்டதாகவே இருக்கவேண்டும்.
  • செவ்வக வடிவில் 3:2 என நீள அகலம் எனப் பொதுவில் இல்லாது கீழ்க்கண்ட அளவுகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • 6300 x 4200, 3600 x 2400, 2700 x 1800,1350 x 900, 900x 600, 450 x 300, 225 x 150, 150 x 100 (அளவுகள் மில்லி மீட்டரில்.)
  • தனிமனிதர், தனியார் நிறுவனங்கள் தேசியக்கொடியினை, தேசியச் சின்னங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, அதற்குரிய மரியாதையுடனும் மதிப்புடனும் பயன்படுத்த தடையில்லை.
  • இதன்படி, தேசியக்கொடியினை எந்த ஒரு விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தலாகாது. பிறருக்கு மரியாதை செய்யும்போது தேசியக்கொடியினைத் தாழ்த்திப் பிடித்து வணக்கம் சொல்லுதல் கூடாது.
  • பொது இடத்தில் தேசியக்கொடியினைக் கிழித்தல், எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்
  • எந்த ஒரு பொருளையும் மூடிவைக்கும் அலங்காரப் பொருளாக தேசியக்கொடியினைப் பயன்படுத்தலாகாது. (அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் மறைந்தவரின் உடலை, ராணுவ வீரர் இறந்தால் அவரது உடலை தேசியக்கொடி கொண்டு போர்த்துதல் இதில் அடங்காது.)
  • தேசியக்கொடியை, அணியும் உடை, பயன்படுத்தும் கைத் துண்டுகள், கைக்குட்டைகளில் பயன்படுத்தக் கூடாது.
  • தேசியக்கொடி மண்ணில்/தரையில்/தண்ணீரில் படுபடியாக விடக்கூடாது.
  • தனியார் கல்வி நிலையங்களில், நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும் போது, கிழிந்த, சேதமான நிலையில் இருக்கும் கொடி பயன்படுத்தலாகாது; மிகவும் பிரதானமான இடத்தில் கொடி ஏற்றப்பட வேண்டும்; தேசியக்கொடியுடன் பிற கொடிகள் ஏற்றப்படலாகாது.  தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பம் மற்றும் அதன் பீடத்தின் மீது மாலைகளோ அல்லது வேறு பொருட்களோ வைக்கலாகாது.
  • தேசியக்கொடியினை காகிதத்தில் செய்து, விருந்தினர் வருகையின்போது மரியாதை நிமித்தம் அசைத்து வரவேற்பு நல்கலாம்.
  • சூரிய உதயத்திற்கு பின்புதான் தேசியக்கொடி ஏற்றப்படவேண்டும். அது போல சூரிய அஸ்தமனத்துக்குள் இறக்கி வைக்கப்படவேண்டும்.
  • கல்வி நிறுவனங்களில், தேசியக்கொடி முக்கிய தினங்களில் ஏற்றப்படும்போது, கூடிநிற்பவர் கொடிக்கு எதிர்ப்புறம் ஒரே பக்கத்தில் இருக்கவேண்டும். கொடி ஏற்றப்பட்டுள்ள கம்பத்தினை சூழ்ந்து நிற்கலாகாது.
  • அரசு கட்டடங்களில் பிறநாட்டுக் கொடி அல்லது ஐ.நாவின் கொடியுடன் நமது தேசியக்கொடி ஏற்றப்படும் சந்தர்ப்பங்களில், கட்டடத்தின் எதிரே நின்று கட்டடத்தைப் பார்ப்பவர்களுக்கு அந்தக் கட்டடத்தின் இடதுமூலையில் கொடி வருமாறு ஏற்ற வேண்டும்.
  • பலநாட்டுக் கொடிகள் ஏற்றப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் (உதாரணமாகப் பல நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம்) கட்டடத்தில், நமது தேசியக்கொடியே முதலில் ஏற்றப்பட்டு, கடைசியில் இறக்கப்பட வேண்டும். பிறநாட்டு ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்து அகரவரிசைப்படி கொடிகளின் வரிசை அமைய வேண்டும்.
  • அரசு  விருந்தினராக இந்தியாவில் பயணிக்கும் வெளிநாட்டுப் பிரமுகரின் காரில், வலப்புறம் நம் தேசியக்கொடியும், இடப்புறம் அவரது நாட்டுக் கொடியும் பறக்கவிடப்பட வேண்டும்.
  • தலைவர்கள் மறைவின்போது, தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும்.
  • குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் இவர்களது மறைவின்போது நாடெங்கும்; லோக்சபா சபா நாயகர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இவர்கள் மறைந்தால் டெல்லி நகரிலும்; மத்திய அமைச்சர் மறைந்தால் டெல்லி நகரம் மற்றும் அவர் சார்ந்த மாநிலத் தலைநகரிலும்; மத்திய அரசின் இணை அமைச்சர்/ துணை அமைச்சர் மறைந்தால் டெல்லி நகரிலும்; மாநில அரசின் அல்லது யூனியன் பிரதேச‌ கவர்னர் / முதலமைச்சர் / மறைந்தால் அந்த மாநில யூனியன் பிரதேசம் முழுவதும்; மாநில / யூனியன் பிரதேச அமைச்சர் மறைந்தால் அந்த மாநில / யூனியன் பிரதேச தலை நகரத்திலும் அரைக் கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட வேண்டும்.
  • ஆயினும் தலைவர்கள் மறைவு, அடக்கம், எரியூட்டும்  தினம் இவை, குடியரசு தினமான ஜனவரி 26, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, தேசப்பிதா காந்தியாரின் பிறந்த தினமான அக்டோபர் 2, தேசிய் வாரமான ஏப்ரல் 6 முதல் 13 வரை (ஜாலியன் வாலாபாக் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை போற்றும் விதமான தேசிய வாரம் இது), மாநில உதயம் கண்ட நாட்கள் போன்றவற்றில் ஏற்பட்டால், மறைந்த தலைவரின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் கட்டடத்தில் மட்டுமே தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். அதுவும் அந்த நாளில் அவரது உடல் தகனத்திற்காக / அடக்கத்திற்காக அந்தக் கட்டடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டபின் மீண்டும் தேசியக்கொடி முழுக்கம்பத்திற்கு உயர்த்தப்படவேண்டும்.
  • காலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பு தலைவர்களின் மரணச் செய்தி கிடைக்கப்பெற்றால், உடன் தேசியக்கொடி அரைக் கம்பத்திற்கு இறக்கப்பட வேண்டும். அன்றைக்கு மாலை அடக்கம் / தகனம் நடைபெறாது இருப்பின் மறுநாளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவேண்டும். மறுநாள் பறக்கவிடப்படும் போது, தேசியத் துக்கம் பின்பற்றப்படும் என தொடர்புடைய அரசு அறிவிக்கும் நிலையில், அந்த நாட்களில், கொடி முழுக்கம்பத்துக்கு ஏற்றப்பட்டு பின்னர் அரைக்கம்பத்துக்கு இறக்கப்பட வேண்டும். அன்று மாலை கொடி இறக்கப்படும்போது அரைக்கம்ப நிலையிலிருந்து இறக்கப்படலாகாது; அரைகம்ப நிலையில் இருந்து, முழுக்கம்ப நிலைக்கு கொடியினை உயர்த்தி ஏற்றி, அதன் பின்னரே இறக்க வேண்டும்.
சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தின் மீது அமைந்துள்ள உயர்ந்த கொடிக்கம்பமே நம் நாட்டில், தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பங்களில் மிக உயர்ந்தது.
இந்திய தேசியக்கொடிக்குத் தரப்படவேண்டிய மரியாதை தொடர்பாக நடைபெற்ற சில சுவாரசியமான வழக்குகள் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
கட்டுரை எழுத உதவிய நூல்கள் / ஆவணங்கள்:
1. Constituent Assembly Debates
2. Flag Code of India
3. Dr Rajendra Prasad in the Constituent Assembly- Correspondence and Selected Documents
4. Great Indian Patriots – P Rajeshwar Rao
-நன்றிங்க;-சந்திரமௌளீஸ்வரன்

07 பிப்ரவரி 2012

கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02

அன்பு நண்பர்களே,
கொங்குத்தென்றல் வலைப்பதிவிற்கு  வருகை தந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்



 
                 .சத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வள மையத்தின்  கிராமக் கல்வி குழு மற்றும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் 07-02-2012 இன்று  இரண்டாம் நாள்.


           மரியாதைக்குரிய வட்டார வள மேற்பார்வையாளர் அவர்கள்சத்தி ஒன்றியம்- பெரியூர் மையத்தில் கல்விக்குழு உறுப்பினர்களின் பங்கேற்பில்  விளக்கவுரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.அருகில் இடது கோபி சுகாதார ஆய்வாளர் திருமிகு.மணி அவர்கள் மற்றும் வலது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சத்தி & தாளவாடி வட்டார பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.

                  
               திருமிகு.சுகாதார ஆய்வாளர் அவர்கள் சுகாதாரம் பற்றி குறிப்பாக பள்ளியில்  ஏழாம் வகுப்புக்கு மேல் பயிலும் பெண் குழந்தைகளுக்கு உடலியல் ரீதியாக தோன்றும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் பற்றிய தெளிவுரை கொடுக்க ஆசிரியைகளுக்கான,பெற்றோர்களுக்கான கடமைகள் பற்றி மிகத்தெளிவாக விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.



    திருமிகு.மு.பாலகிருஷ்ணன் M.A.,D.T.Ed., இடைநிலை ஆசிரியர்-ஊராட்சி ஒன்றிய அரசுப்பள்ளி,வேடர்நகர்,புதுவடவள்ளி-சத்தியமங்கலம் அவர்கள் பள்ளிக்குழந்தைகளிடம் சூழலுக்கேற்ப,குழந்தைகளோடு ஒன்றி உறவுக்கு உறவாக,நட்புக்கு நட்பாக பழகி பாடங்களை சுமையில்லாமல் ஆர்வத்தோடு கற்க ஏற்றவாறு கற்பிப்பது பற்றி விளக்கவுரை அதாவது
         ''ஆசிரியர் பணி அறப்பணி!,அதற்கே உன்னை அர்ப்பணி!!''
        என வார்த்தைகளுக்கேற்ப சுமார் இரண்டு மணி நேரம் தொய்வின்றி  கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களிடையே உரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.
       மரியாதைக்குரிய மக்கள் பிரதிநிதி அவர்கள் அரசுப்பள்ளி குழந்தைகள் சேர்க்கை மிகவும் குறைந்து வருவதாக குறைபட்டு அதனை நிவர்த்தி செய்ய பொதுமக்களாகிய நமது செயலாற்றல் எவ்வாறு இருக்க வேண்டும்.அரசு மானியங்கள் பள்ளிக்கு சரியானமுறையில் பயன்படுத்தப்படுகிறதா?எனக் கண்காணிப்பது பற்றிய  விழிப்புரை நிகழ்த்திய காட்சி மேலே உள்ள படம்.அருகில் வார்டு உறுப்பினர் உட்பட மேலும் பல உள்ளூர் பொறுப்பாளர்கள்.
         அரசியலில் நாங்கள் பல்வேறு அணிகளில் இருந்தாலும் கல்வி என்பது பொதுமக்கள் என்ற வகையில் எங்களது குழந்தைகளுக்கும் அவசியம். என பயிற்சியில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள பழைய கலையனூர்  மக்கள் பிரதிநிதி அவர்கள்.அருகில் திருமிகு. ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள்.
         வருகை புரிந்த கிராமப் பெரியோர்களுக்கு வழிகொடுத்து, பிறகு மீண்டும் தமது தமிழ்ச்சொல்லாடலால் கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்த சிந்திக்கத்தூண்டும் கதைகளால் அரங்கத்தை கலகலக்க வைத்த திருமிகு.மு.பாலகிருஷ்ணன்.M.A.,D.T.Ed.,  இடைநிலை ஆசிரியர் அவர்கள்.


             மரியாதைக்குரிய ஆசிரியர் பயிற்றுனர் அவர்கள் அரசு கல்விக்காக செலவிடப்படும் நிதிகள் மற்றும் கட்டுமானங்கள்,அதனைக் கண்காணிப்பது,பாதுகாப்பது என  கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடமைகள் & உரிமைகள் பற்றி விளக்கிய காட்சி மேலே உள்ள படம்.

      பெரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணிணியில் சர்வ சாதாரணமாக நுட்பங்களைக் கையாண்ட காட்சி மேலே மற்றும் கீழே உள்ள படங்கள்.



         கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவு பரிமாற பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் இவர்களுடன் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சி மேலே உள்ள படம்.மற்றும் கீழே உள்ள படம்.








          கோபி செட்டிபாளையம் சுகாதார ஆய்வாளர்  திருமிகு.மணி அவர்கள்  கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் சுகாதாரம் பற்றி கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்த காட்சி.மேலே உள்ளபடம்.(அதோடு பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்,என அனைவருக்கும் அவரது கைபேசி எண் கொடுத்த பாங்கு பாராட்டுக்குரியது)



      தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொறுப்பாளர் திருமிகு.பரமேஸ்வரன் அவர்கள் அரசுப்பள்ளி மற்றும் அதில் பணி புரியும் தற்போதைய ஆசிரியர்கள் எவ்விதத்திலும் திறமை குறைந்தவர்களல்லர்!. என ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரின் செயல்,மற்றும் கோவை மாவட்டம்-காரமடை ஊராட்சி ஒன்றியம்-ராமாம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் செயல்பாடு பற்றி ஆதாரத்துடன் விளக்கி இங்கும் பொதுமக்கள் மனது வைத்தால் இங்குள்ள அரசுப்பள்ளிகளையும் சர்வதேச தரமுள்ள பள்ளிகளுக்கு இணையாக மாற்ற முடியும்.என தெளிவுரை நிகழ்த்தினார்.அதற்காக கையாண்ட ஆதாரங்கள் கீழ் கண்டவாறு. ஐந்து ஆதாரங்களை பிற வலைப்பதிவுகளிலிருந்து குறுந்தட்டில் பதிவிட்டுக்கொண்டுவந்து பெரியூர்- முகாமில் திரையிட்டு கிராமக்கல்விக்குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.

                  மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயனுள்ள தகவலாக - கணிணியில் தமிழில் தட்டச்சு செய்வது பலமுறைகள் வியாபார ரீதியாகக் கையாள்வதன் சூழ்ச்சியினையும் அவ்வாறு பலவகைகளைக் கையாண்டு மனம் சோர்வடையாமல் எளிதில் பயன்படுத்த முப்பது எழுத்துக்களைக்கொண்டு ஷிப்ட் அழுத்தாமல்  தமிழ்'99 முறையில்  தமிழ் தட்டச்சு செய்வது மிக எளிமையானது என்பதனையும், விசைப்பலகையில் கைவிரல்களை எவ்வாறு பதிந்து எளிமையாக கையாளலாம் என்பது பற்றியும்,தமிழ்'99 க்கான மென்பொருளை http://www.nhmwriter.inவலைத்தளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து அதனை கணிணியில் உள்ளீடு செய்து பயன்படுத்துவது பற்றியும் திரையிட்டு  எளிய விளக்கவுரை நிகழ்த்தினார்.


 உதாரணத்திற்காக கையாண்ட சில வலைத்தளங்களில் எடுக்கப்பட்ட விபரங்கள் கீழே,

Tuesday, September 13, 2011


அரசுப்பள்ளியா இது



அன்பு நண்பர்களே,

         paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வணங்கி வரவேற்கிறேன்.இந்த வலைப்பதிவில் அரசுப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஒரு அரசு துவக்கப்பள்ளியினை இங்கு அனைவரும் அறிவோம்.

            அரசுப்பள்ளியின் தரத்தினை சர்வதேசப் பள்ளியின் தரத்திற்கு இணையாக உள் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்தி உயர்த்திய சாதனையாளர்கள்  இராமம்பாளையம் பள்ளி தலைமையாசிரியை மரியாதைக்குரிய  திருமதி;சரஸ்வதி மற்றும் ஆசிரியர் மரியாதைக்குரிய திரு; ப்ராங்ளின் ஆகியோருக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.இதோ அந்தப்பள்ளி;-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஒன்றியம் இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.





பள்ளி பற்றிய தகவல்கள்:



  • அமைதியான கிராமச் சூழல்.
  • போதுமான கட்டட வசதி.
  • சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.
  • கணினி பயிற்சி வகுப்புகள்.
  • ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.
  • பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.
  • ஓவியப் பயிற்சி வகுப்புகள்.
  • விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.
  • தலைமைத்துவப் பயிற்சி.
  • தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.
  • மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.
  • மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.
  • வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card), ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு (Diary). (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).















மாதிரி வகுப்பறை (Model Classroom)

1. மாணவர்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள். 2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள். 3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம். 4. DVD - கள் அடங்கிய Digital நூலகம். 5. கணினி. 6. தொலைக்காட்சி. 7. DVD Player. 8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள். 9. கணித உபகரணங்கள். 10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள். 11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள். 12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை. 13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை. 14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி. 15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள். 16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள். 17. உயர் தர தள அமைப்பு. 18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை. 19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள். 20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி 
-paramesdriver.blogspot.com //  Sathy & Thalavadi


  


Friday, June 17, 2011


(24)ஈரோடு மாவட்ட ஆட்சியர்- சமூகப் பணி



             மாவட்ட ஆட்சியரின் சமூக நற்பணி


        அன்பு நண்பர்களே.
          paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
             நமது மாவட்டமாம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப் பள்ளிகளின் தரம்   தனியார் பள்ளிகளின் பள்ளிகளின் தரத்தை விட எவ்விதத்திலும் குறைந்துவிட வில்லை என்ற நிரூபணத்திற்காகவே

      (தனியார் பள்ளிகளில் தகுதிக்கும் மீறி அலைந்து திரிந்து கடன் வாங்கி வீண்  செலவு செய்யும் நம் போன்ற நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்று கூடக்கருதலாம்)
    
               தமது குழந்தையை ஈரோடு குமலன் குட்டை ஊராட்சி ஒன்றியதொடக்கப்       பள்ளியில் சேர்த்து! அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களின் சேவைக்கு புதுமையான நற்சான்று வழங்கி இமாலயச் சாதனை புரிந்துவிட்டார்.
          அதற்காக மரியாதைக்குரிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் அய்யா அவர்களின் துணைவியார் மருத்துவர் அவர்களுக்கும்

                  ஈரோடு மாவட்ட பொதுமக்கள் சார்பாகவும்,

                           கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றோர் சங்கத்தின் சார்பாகவும்,

                   தேனீக்கள் சமூக சேவை அமைப்பின்(தாளவாடி & சத்தியமங்கலம்) சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
              
          அய்யா அவர்களது இந்த மகத்தான சேவையானது அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது மட்டுமின்றி

                  அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும்,கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் பணி சிறப்பாகத் தொடர ஊக்க மருந்தாக அமைந்துள்ளது எனலாம்.
          
                    இலவசம் என்றாலே  அதன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி சிந்திக்காமல் ஏளனம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
                        இதே முறையை சமூதாய உணர்வுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.
                
               அனைத்துப்பகுதிகளிலும் பணியாற்றும் குறிப்பாக கிராமப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் பணி புரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் கடமை உணர்ந்து
          ''ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி'' 
  
          என்ற கூற்றுக்கேற்ப கடமை உணர்ந்து சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும், என்பதே அனைவரின் எதிர்பார்ப்பார்ப்பாகும்.
                
                   மரியாதைக்குரிய ஆட்சியர் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று தம் மகளுக்கு மதிய உணவும், இலவச சீருடையும் வழங்குமாறு பள்ளி  தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்திருக்கும்! அவரது சமூகப் பார்வை

              ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' 

                 என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கு ஏற்ப சாதி,மத,இன வேறுபாடின்றி அனைவரும் மனிதகுலமே, என இந்த சமூகத்திற்கே வழிகாட்டிவிட்டார்.

                அதைவிட முக்கியமாக ஆட்சிப்பணி புரியும் அய்யா அவர்களும், அரசு மருத்துவ மனையில் மருத்துவப் பணி புரியும் அவரது துணைவியார் அவர்களும் படித்த சிறந்த பண்பாளர்கள் என்பதனையும்,அவர்களது முற்போக்கான சிந்தனைக்கேற்ப சமூகப்பணி சிறப்பாகச் செய்பவர்கள் என்பதனையும் இதன் மூலம் அனைவரும்உணரச் செய்து விட்டனர்.

                               அனைத்து தரப்பு அரசு துறை அதிகாரிகளும், அலுவலர்களும், ,பணியாளர்களும் அவரவர் பணிக்கேற்ப கடமையுணர்ந்து தம்மால் இயன்றவரை சமூகப் பணி சிறப்பாக ஆற்ற வேண்டும்.

            (குறைந்தது வறுமையில் வாடும் ஏழை மக்களிடம் கையூட்டுப் பெறுவதையாவது தவிர்த்து 
         அவர்கள் வரிப்பணத்தில்தான்  கை நிறையச் சம்பளமாகப் பெறுகிறோம் என்பதனை உணர்ந்தாவது 
            தம் கடமையைச் செய்ய வேண்டும்)

               ஈரோடு மாவட்ட  ஆட்சியர் மரியாதைக்குரிய ஆனந்தக்குமார் அவர்களைப் போல அனைவரின் எண்ணங்களும், செயல்களும் அமையுமேயானால்
             
               நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மரியாதைக்குரிய    டாக்டர்;அப்துல் கலாம் அவர்களின் ''வல்லரசுநாடு'' எனும்  இந்தியாவின் கனவு நனவாகும் தூரம் மிக தொலைவில் இல்லை எனலாம்.
                   
                        வெற்றியும் பெறலாம்.
                 
           சமூக சீர்திருத்தவாதி தந்தை  பெரியார் பிறந்த மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்த நமது ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறோம்,வணங்குகிறோம்..என....
  
                 parameswaran.c
   Driver / Tamilnadu Transport Corporation / Thalavadi-Branch / Erode - Division



      கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி.அரசுப்பள்ளி ஆசிரியரான ஃப்ராங்ளின் தற்கால வழிகாட்டி.







தமிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக்கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.



பள்ளி முகப்பு


மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு.அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி. கல்வி வியாபாரப் போட்டியில் தமிழகத்தின் கல்வி வியாபாரத்தில் நோஞ்சானாய்ப் போட்டியிடும் ஒரு நோஞ்சான் குழந்தையின் அடையாளாமாய் வெளிப்புறத்தில் தெரிகிறது அந்த அரசு ஆரம்பப் பள்ளி.

தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி, ஆசிரியர் திரு. ப்ராங்ளின்


பள்ளி முகப்பை அடையும் போது, பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும்,ஆசிரியர் ஃப்ராங்ளினும் நம்மை அன்போடு வரவேற்கிறார்கள். முதல் சந்திப்பெனினும்,பார்வைகளிலேயே அன்பு வழிந்தோடுகிறது. கடும் போட்டியில் வென்ற நகரத்துச் சாயம் படியாத ஒரு வெள்ளந்தியைப் பாராட்டும்போது கசியும் வெட்கம் போல்,அவர்களிருவரும் நம்மைப் பார்க்கும்போது அவர்களிடமிருந்து வழிந்தோடுவதைப் பார்க்க முடிந்தது.



வகுப்பறை



மனதில் பொங்கும் பெருமையோடு அந்த வகுப்பறைக்குள் அழைக்க உள்ளே நுழைந்த போது, அந்த அற்புதச் சூழலை விவரிக்க வார்த்தைகள் போதாது. அந்த வகுப்பறையின் தரமும் வடிவமைப்பும் மூச்சடைக்க வைத்தது. 



எழுதுபலகை, குடிநீர், முதலுதவிப்பெட்டி

  • பளபளக்கும் தரை,  
  • தரமான பச்சை வண்ணப்பலகை,  
  • வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய், 
  • அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,  
  • வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,  
  • தெர்மோகூல் கூரை,  
  • மின்விசிறிகள், 
  • உயர்தர நவீன விளக்குகள், 
  • கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள், 
  • மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை, 
  • வேதியியல் உபகரணங்கள்,
  • கணித ஆய்வக உபகரணங்கள்,
  • முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,  
  • மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள், 
  • அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
  • மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
  • அனைவருக்கும் தரமான சீருடை,
  • காலுறைகளுடன் கூடிய காலணி,
  • முதலுதவிப்பெட்டி,
  • தீயணைப்புக்கருவி,
  • உயர்திறன் வாய்ந்த கனிணி,
  • காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்

..... என எல்லாமே தரமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு சேகரித்த பொக்கிஷமாய் அந்தக் கிராமத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த தயாராக இருக்கிறது.



கணினி உட்பட கல்வி உபகரணங்கள்




இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில்,சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே. 



மேசை, பெட்டியுடன் கூடிய நாற்காலி

தான் செய்யும் பணியை ஒரு வழக்கமான பணி என நகர்த்தாமல், அதை உயிராய் நேசித்ததன் விளைவுதான் இது. பாரதியின் அக்னிக்குஞ்சு போல், அவருக்குள் இருந்த மாற்றம் எனும் நெருப்புக்கங்குதான், இன்றைக்கு தமிழகத்தின் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் வண்ணம், ஒரு சாயம் வெளுத்துப்போன உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளியை உலகத்தரத்திற்கு மாற்றிக்காட்டியுள்ளது.






பில்லூர் அருகே மலைவாழ் மக்கள் பகுதியில் இருந்த ஓராசிரியர் பள்ளி ஆசிரியராக நியமிக்கப் பட்டபோதே, ஃப்ராங்ளின் மிகுந்த சிரத்தையெடுத்து வெறும் பதினேழு பிள்ளைகள் படித்த நிலையில் இருந்து 30 பிள்ளைகளாக உயர்த்தியிருக்கிறார்.



சில வருடங்களுக்கு முன் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஃப்ராங்கிளின், தனக்குள் இருந்த கனவுத்திட்டத்தை செயல்படுத்த துவங்கினார். ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன கட்டம் அது. ஆண்டாண்டு காலமாக இருந்த அந்த அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர் படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக அவசியத் தேவை மாற்றம் என்பதே.



காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும்எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர், தனக்கு மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டை தீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளார்.



ஊர்மக்களுடன் ஆசிரியர்கள்




மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்களினும் ஒரு பெரிய தொகையை அளித்து அந்த வேள்வியை தொடங்கியுள்ளனர். வளரும் தலைமுறைக்காக தொடங்கிய வேள்வியில் அவர்களின்பங்களிப்பு, அர்ப்பணிப்பு, நோக்கம் ஆகியவற்றை உணர்ந்த, அவர்களின் செயல்பாட்டின் மேல் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட கிராமத்தினரின் ”கிராம கல்விக்குழு”வும் கை கோர்க்க நான்கே மாதத்தில் புதியதொரு உலகம் சமைக்கப்பட்டது.



இந்தக் கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு சொர்க்கம் காத்திருந்தது.இருக்கும் இரண்டு வகுப்பறையில் ஒன்றை ஒரு முன்மாதிரி வகுப்பறையாக வடித்தெடுத்துள்ளனர்.



தங்களின் பங்களிப்பு, இராமாம்பாளையம் கிராமக் கல்விக்குழுவினரின் உதவி என, சுமார் இரண்டரை லட்சம் செலவில் இதை நிறைவேற்றியுள்ளனர். எப்படி இப்படியொரு செயலைச் செய்ய தங்களால் ஒத்துழைப்பு அளிக்க முடிந்தது என கிராமத் தலைவரிடம் கேட்கும் போது அவர் சொல்லும் ஒரே வார்த்தை“திரு.பிராங்களின் மீது தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமே” என்பதுதான்.



ஆசிரியர் திரு. ப்ராங்ளின்




திரு.ஃப்ராங்களின் வெறுமென ஒரு சாதாரண ஆசிரியராக அந்தப் பள்ளியில் செயல்படவில்லை. குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கிறார். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் அவர்மேல் ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம்.குழந்தைகள் குறித்து பெருமையாகச் சொல்லும் ஆசிரியர் “எங்கள் பிள்ளைகளுக்கு வெறும் கல்வியை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை. சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும்”தெரிவிக்கிறார்.



பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது. முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதைத் திறம்படத் துவங்கியுள்ளனர்.



மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை,அடையாள அட்டை, ஆசிரியர்,  மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.



பிள்ளைகளின் சுய ஒழுக்கம் மற்றும் தெளிவு குறித்து கூறும்போது, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் மூன்று மாதங்களாய் புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு செய்திடவில்லை. நடந்துவரும் போது சுவர்களைத் தொடர்ந்து தொட்டால் அழுக்காகிவிடும், அதைத் தவிர்க்க வேண்டும் என்பது உட்பட ஒவ்வொன்றிலும் பிள்ளைகள் ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதை அவ்வப்போது காண நேர்ந்தது. பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு,திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.



இந்த மறுமலர்ச்சி இத்தோடு நிற்காமல் எல்லாக் கிராமங்களிலும் பூக்க வேண்டும்.அதற்கு நீரூற்ற இன்னும் எத்தனை காலம் அரசாங்கத்தையே எதிர்பார்ப்பது. ஏன் அந்த மாற்றத்தை நாமே விதைக்கக்கூடாது? கோவில் இல்லாதா ஊர்கள் உண்டா,அதிலும் குறிப்பாக அங்கிருக்கும் கோவில்கள் கோடிக்கணக்ககில்,லட்சக்கணக்கில் செலவு செய்து புணரமைக்கப்படுவதற்காக எவ்வளவோ சிரமப்பட்டு எல்லாக் கிராமங்களும் நிதியீட்டிக்கொண்டுதானே இருக்கின்றன?அதில் ஏன் கொஞ்சம் தொகையை இந்த பள்ளிகளை நோக்கி மடைமாற்றக்கூடாது?  
குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளியிலும் படித்து முன்னேறிய முன்னாள்மாணவர்களே கூட ஒன்று திரண்டு தங்களைச் செதுக்கிய பள்ளியை ஏன் ஒரு மாதிரிப்பள்ளியாக மாற்றிடமுடியாது? எல்லாமே சாத்தியம் தான், ஆனால் எங்கே மாற்றம் நிகழ வேண்டுமோ அங்கே ஒரு ஃப்ராங்ளின் உருவாக வேண்டும், அல்லது நானோ, நீங்களோ இதை எடுத்துச்சொல்லி ஒரு ஆசியருக்குள் ஒளிந்திருக்கும் ஃப்ராங்ளினை வெளிக்கொணரவேண்டும்! பள்ளியின் வலைப்பதிவு முகவரி
இதேபோல் ஒரு மாதிரிப் பள்ளியை அமைக்க அனைத்து திட்டங்களையும், தன் அனுபவத்தையும் தருவதற்கு திரு.ஃப்ராங்ளின் தயாராக இருக்கின்றார். நாம் தயாரா?



ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவதுதான் புரட்சியா?மாற்றத்திற்காக அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் புரட்சிதான்!



திரு. ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com  99424 72672      
 


  போதைமது புகைத்தல் தீங்குகள் விழிப்புணர்வு