22 மார்ச் 2020

கோவிட்19 என்னும் Corona virus

                     உசாரய்யா! உசாரு!! கொரோனா வைரஸ் உசாரு!                                                        Corona virus





                                பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு அழைப்பிற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் இந்த ஊரடங்கு உத்தரவு (இன்று) 22 -03 -2020ஞாயிறு  காலை 7மணிக்கு தொடங்கி (நாளை) 23ம் தேதி காலை 5 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
                        தமிழகத்தில், மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு துவங்கியது. இந்த ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் அரசு பஸ்கள் ஓடாது என தமிழக அரசு அறிவித்தது. கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்கள் அடைக்கப்பட்டிருக்கும் என அதன் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதன்படி, அரசு பஸ்கள் இயங்கவில்லை. ரயில்களும் இயக்கப்படவில்லை. ஓட்டல்கள், மார்க்கெட்கள், கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.


கொரோனா என்னும் கொடிய வைரஸ்....
                    தொடர்ந்து உடல் வலி, காய்ச்சல், இருமல் குறையாமல் இருந்தால் குறிப்பாக மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

                    வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய மக்கள் அனைவரையும்22-03-2020 ஞாயிறு இன்று  வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கவைத்த அரக்கன்...
                     ஈரோடு மாவட்டம் ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழா,பண்ணாரி மாரியம்மன் திருவிழா,சுற்றுவட்டார சந்தைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் காலிசெய்துவிட்டது...

         சீனாவில் கடந்த2020 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு கொரோனா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. தற்போது கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றிய இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றுவதாக சீன நாட்டின் தேசிய சுகாதாரத்துறையும் அதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனமும் இவை மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக எச்சரித்தது.

                         கொரோனா என்னும் கோவிட் 19 என்னும் வைரஸ் அறிகுறிகளில் முதன்மையானது சளி, காய்ச்சல், வறண்ட இருமல். ஆனால் இவை சாதாரணமாக வந்தாலே அதற்கு காரணம் வைரஸ் தொற்றுதான். ஆனால் சாதாரண வைரஸ் தொற்று வந்தாலே அது கொரோனா அறிகுறிதான் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கிறார்கள். இதனால் சளி, இருமல் வந்தாலும் கை வைத்தியமோ அல்லது சுயமாக மாத்திரைகளோ எடுத்துக் கொள்கிறார்கள். தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அதேநேரம் சளி, இருமல் பிரச்சனை இருக்கும் போது அவை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது இந்த நேரத்தில் முக்கியம் என்றும் கூறுகிறார்கள்.

                 முடிந்தவரையிலும் உங்களுக்கு அறிகுறி தெரிந்தால் நீங்களே உங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. அலட்சியப்படுத்தும் அறிகுறிகள் பலவும் சமயத்தில் வைரஸ் தொற்றாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பதால் வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப குணப்படுத்துவதும் அவசியம் என்பதை இத்தருணத்தில் உணர்ந்து கொள்ளுங்கள்.

                    சீனாவில் உள்ள வுஹான் மாநிலத்தில் விலங்குகள் மற்றும் கடல் வாழ் இறைச்சிகள் விற்கப்படும் இடத்தில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த2019 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு கொரோனா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. தற்போது கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ளது.

             விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றிய இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றுவதாக சீன நாட்டின் தேசிய சுகாதாரத்துறையும் அதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனமும் கொரோனா வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக எச்சரித்தது.

                கடந்த மூன்று மாத காலத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்கியிருக்கிறது. இந்த தொற்றுக்கு இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதும் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது வரை இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்துகள் கண்டறியப்படவில்லை. சில மருந்துகள் கொரோனா வைரஸை குணமாக்கிவிடும் என்று கண்டறியப்பட்டு விலங்குகளுக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றை குணப்படுத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றுவரை இதற்கான மருந்துகள் கண்டறியப்படவில்லை என்பதால் எச்சரிக்கையும் சுகாதாரமும் மட்டும் தான் இப்போதைக்கு நம்மை காப்பாற்றும்.

Corona virus: ஏன் கொரோனாவை கண்டு உலகமே அஞ்சுகிறது.. காரணம் இதுதான்...




            சீன நாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்கு திரும்பியவர்கள் சிலருக்கு இந்த தொற்று இருப் பதை அமெரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து நாடு உறுதி செய்தது. இதை தொடர்ந்து சீனா மற்றும் மற்றும் ஹாங்காங் பகுதியிலிருந்து இந்தியா திரும்பிய பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தெர்மல் ஸ்க்ரீனிங் சோதனை செய்யப்பட்டது. இதில் வைரஸ் தொற்று அறிகுறி இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கேரளா, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் சேர்ந்த பயணிகள் 11 பேரை மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியது. பிறகு அதில் தொற்று இருப்பவர்கள் தீவிர சிகிச்சைக்கு பின்பு குணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

                 தற்போது இந்தியாவில் இந்த தொற்று315 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் குணமடைந்த நிலையில் 5பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது கட்டத்தில் நாம் இருந்துவருகிறோம். இந்த கட்டத்தை அபாயமில்லாமல் தாண்டிவிட்டால் சற்றே மூச்சிவிடக்கூட முடியும். இல்லையெனில் அதிகப்படியான ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பது மறுக்கமுடியாது.

covid -19 vaccine:
         கொரோனா வைரஸ் குணப்படுத்த மருந்து கண்டு பிடிச்சுட்டாங்களா?

                     இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் இதற்கான தயார் நிலையில் படுக்கை வசதிகளை அமைத்திருக்கிறது. தமிழகத்தில் தலைமை மருத்துவமனையான ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இந்த வைரஸை எதிர்கொள்வதற்கான சோதனை மையம், தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிகுறிகள் என்ன என்று பார்க்கலாம்.

​காய்ச்சல்

சாதாரண காய்ச்சல் போன்று வரும் இந்த வைரஸ் தொற்று மூன்று நாட்களுக்கு மேலும் குறையாமல் இருக்கும். உடல் வெப்பநிலையை காட்டிலும் அதிக வெப்பநிலையைக் கொண்டிருக்கும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்திலிருந்து யாராவது சீனாவுக்கு பயணம் சென்றிருக்கலாம். அல்லது அங்கு பயணம் செய்த உறவினர்கள் அல்லது நண்பர்களை சந்தித்து இருக்கலாம். அக்கம் பக்கத்திலும் சீனா பயணத்தோடு யாரேனும் தொடர்பு கொண்டிருக்கலாம். அதனால் காய்ச்சலுக்கு சுயமாக மாத்திரைகள் எடுக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். இந்த தொற்று பரவிய பிறகு 14 முதல் 20 நாட்களுக்குள் தான் அறிகுறிகள் தெரிகிறது என்பதால் பரவுவதும் அதிகரித்துவருகிறது.

     குழந்தைகளை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற பெற்றோர்கள் என்ன செய்யணும்?
                    உடல் வெப்பத்தை காட்டிலும் அதிகமான வெப்பம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் வைரஸ் தொற்று பரிசோதனை தாமதிக்காமல் செய்ய வேண்டும். காய்ச்சல் தொற்று இருந்தால் இந்த நேரத்தில் சுய வைத்தியம் வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது மருத்துவத்துறை.
                     தற்போது காய்ச்சலில் தொற்று என்பது 14 நாட்களுக்கு பிறகு இதன் அறிகுறி தென்படுவதாலும் 27 நாட்களுக்கு பிறகு தொற்று இருப்பது தெரியவருவதாலும் வேகமாக இந்த தொற்று பரவி வருவதை தடுக்க முடியாமல் போவதாக மருத்துவத்துறை கவலை தெரிவிக்கிறது. அதனால்

                   சளி, இருமல் அறிகுறி இருந்தாலே தங்களை தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

           கொரோனா வைரஸ் தாக்காமல் தப்பிக்க கைகளை இப்படித்தான் கழுவணுமாம்...




              பொதுவாக காய்ச்சல் வந்தால் சளியும், இருமலும் உடன் வரும். அதனால் இவை உடல் சூடு அல்லது குளுமையால் தான் என்று முடிவெடுக்கவேண்டாம். தொடர் இருமலும், சளியும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சலின் போது இருமலும், சளியும் இருப்பவர்கள் பொது இடங்களிலும் துப்ப வேண்டாம்.

                   coronavirus precautions : கொரோனா வந்தாலே மரணம்தானா?, பீதியில் மக்கள் ஆனால்..

                   வீட்டிலும் தனி கழிவறையையோ அல்லது உபயோகத்துக்கு பின்பு நீரை விட்டு சுத்தம் செய்து கிருமி நாசினிகளை தெளிக்கவோ வேண்டும். யாருடைய கைகளிலும் குலுக்க வேண்டாம். கைகளை கழுவாமல் முகத்தில் குறிப்பாக மூக்கு, கண் பகுதியில் துடைக்க வேண்டாம்.வீட்டில் இருப்பவர்களிடமிருந்து தனிமை படுத்தி கொள்ளுங்கள். தயவு செய்து வெளியில் செல்லாதீர்கள்.

                 வீட்டிலும் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவது அனைவருக்கும் பாதுகாப்பானது. தும்மல் வந்தால் கைகளை கொண்டு மூடி தும்முவதோடு உடனடியாக கைகளை சோப்பு நீர் கொண்டு சுத்தமாக கழுவுவது நல்லது. வெளி இடங்களுக்கு செல்லும்போது கவனமாக கைகளை தேய்க்க வேண்டாம். வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கைகளை சோப்பு கொண்டு கழுவுங்கள்.

​மூச்சுத்திணறல்

                தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால் இந்த அறிகுறிகளையும் கவனியுங்கள் காய்ச்சலோடு தொண்டை செருமல், தலைவலி, மூச்சுதிணறலும் உண்டாககூடும். எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளையும், உடல் எதிர்ப்பு சக்தி குறைந்த கர்ப்பிணிகளையும், வயதானவர்களையும் எளிதில் தொற்றி பாதிப்பை உண்டாக்கக் கூடியது என்பதால் இவர்களை அதிக கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

          கொரோனாவை எதிர்க்கும் 10 விதமான ஊட்டச்சத்து பானங்கள் தவிர்க்காமல் குடியுங்கள்!

                இதை தொடர்ந்து உடல் வலி, காய்ச்சல், இருமல் குறையாமல் இருந்தால் குறிப்பாக மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதற்காக இந்த அறிகுறிகள் இருந்தாலே கொரோனா வைரஸ் நமக்குமா? என்ற பயம் வேண்டாம். அதே நேரம் அறிகுறிகளை அலட்சியப்படுத்தவும் வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களின் முக்கிய அறிவுரை.

             காய்ச்சல் என்று வந்தாலே திரவ உணவு எடுத்துகொள்ளுங்கள். கண்டிப்பாக ஓய்வும், போதுமான தூக்கமும் கண்டிப்பாக கடைப்பிடியுங்கள். இயன்றவரை சுய வைத்தியம் வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் இப்போதைய அறிவுரை.
          கண்டிப்பாக மருத்துவரது ஆலோசனையோடு நம்மை தனிமைப்படுத்திக்கொள்வதுதான் இப்போதைக்கு அனைவருக்கும் பாதுகாப்பானது.

15 மார்ச் 2020

PCRA & IRST,NSDC-TNSTC BSR-14-03-2020

 தொழிற்முறை ஓட்டுனர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி-2020
       இடம்;
                 ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி
           தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-பவானிசாகர்

                           நாள்; 14-03-2020
   முதல் அமர்வு;காலை 9 மணி முதல் 10மணி வரை
   பயிற்சியாளர்; திருB. அர்ஜூனன் அவர்கள்,
                             ஓட்டுனர் பயிற்றுநர்,பவானிசாகர் பயிற்சிப் பள்ளி,
 





இரண்டாம்அமர்வு; காலை 10மணி முதல் மதியம் 12.30வரை
       
                               PCRA - DRIVER TRAINING PROGRAM

  பயிற்சியாளர்;
                           திரு. M..தங்கவேல் அவர்கள், பழனி
 PETROLIUM CONSERVATION RESEARCH ASSOCIATION - SOUTHERN REGIN
 பெட்ரோலியம் கன்சர்வேசன் ரிசர்ச் அசோசியேசன்-சவுத் ரீஜனல்

     நோக்கம்;
  விபத்து தவிர்ப்பு,எரிபொருள் விரயம் தவிர்ப்பு,பாதுகாப்பான இயக்கம்,வருவாய்ப் பெருக்கம், கேட்டதை,பார்த்ததை,கற்றதை,பட்டதை நினைவுபடுத்தி உடல்நலனையும்,மனநலனையும் பாதுகாத்து
 ஒவ்வொரு நொடியும் பணியில் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படத் தூண்டுதல்












மூன்றாவது அமர்வு ;
    மதியம் 12.30 மணி முதல் மாலை 5.30மணிவரை
    திரு. வினோத்குமார் அவர்கள்,
          விரிவுரையாளர், மதுரை
THE INSTITUTE OF ROAD SAFETY TRUCKNOWLEDGY,
NATIONAL SKILL DEVELOPMENT CORPORATION,
LOGITICS SKILL COUNCIL,
PRADHAN MANTRI KAUSHAL VIKAS YOJANA
 









நிறைவாக:
(1) இரண்டு இலட்ச ரூபாய்க்கான இன்சூரன்ஸ் பாலிசி 
(மூன்று வருடங்கள் வரை செல்லத்தக்கது)
(2)பேட்டரி லைட்-1 (300ரூபாய் மதிப்புடையது)
(3) பனியன்-1(100ரூபாய் மதிப்புடையது)
(4) ரூபாய்500/-(வங்கியில் நமது கணக்கிற்கு அனுப்பிவைப்பார்கள்),
ஆகிய பலன்களுடன் இல்லம் வந்தடைந்தோம்.

 மறவாதீங்க!
 (1) சமீபத்திய புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்) - 2
(2)  ஆதார் ஜெராக்ஸ்-1
 (3)  ஓட்டுனர் உரிமம் ஜெராக்ஸ்-1
 (செல்லத்தக்க உரிமம் மற்றும் பேட்ஜ் பதிவுடன்)
(4)வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் முதல் பக்கத்தின் ஜெராக்ஸ்-1
 சமர்ப்பிக்க வேண்டும்.
 கொடுக்கப்படும் விண்ணப்பத்தில்  ஆங்கிலத்தில் விபரங்களை எழுதுங்க!.

பாதுகாப்பாக பயணிப்போம்-2020-21

சலையில் பாதுகாப்பு நமது உயிர் பாதுகாப்பு என....






  தொடர்புக்கு C.பரமேஸ்வரன்,சாலை பாதுகாப்பு இயக்கம்-9585600733

பாதுகாப்பாக பயணிப்போம்-25-2-2020முதல்



                    சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ஆதலால்
                         பாதுகாப்பாக பயணிப்போம்
                                                                                         என
                           பள்ளி மாணவ,மாணவியருக்கான
                        உறுதிமொழி ஏற்பு தொடக்கவிழா-
 இடம்;
                   ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-தாளவாடி
நாள்;
                 25-2-2020செவ்வாய்க்கிழமை காலை 10மணி
                                  நிகழ்ச்சி நிரல்
                          தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை;
                  திரு.டில்லிபாபு  அவர்கள்,ஆசிரியர்
தலைமை;
                     திருமதி.தனபாக்கியம் அவர்கள்,
                   வட்டார கல்வி அலுவலர்-தாளவாடி
முன்னிலை;
                     திரு.செல்வம் அவர்கள்,
                    வட்டார கல்வி அலுவலர்-தாளவாடி
                      திரு.S.வினோத்குமார் அவர்கள்
                      கிளை மேலாளர்-
                   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-தாளவாடி
                  திரு.M. சுரேஷ்குமார் அவர்கள்,தாளாளர்,
                   KCT MATRICULATION SCHOOL-THALAVADI
தொடங்கி வைத்து சிறப்புரை;
                  திரு. ஆறுமுகம் அவர்கள்
                  காவல் துணை ஆய்வாளர்-
                  தாளவாடி காவல்நிலையம்
வாழ்த்துரை;
                   திரு. மரிய அருள்வியானி அவர்கள்,
                 TRED சமூக சேவை அமைப்பு-தாளவாடி
                 திரு.N.சுந்தர் அவர்கள்,
                விடியல் இளைஞர் மன்றம்-தாளவாடி
               திரு.சுஹைல் அகமது அவர்கள்-தாளவாடி
உறுதிமொழி ஏற்பு;
                   மாணவ,மாணவியர்
              ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும்
             KCT மெட்ரிக் பள்ளி -தாளவாடி
நன்றியுரை;
               திரு.குருமல்லப்பா அவர்கள்,ஆசிரியர்
                                    நாட்டுப் பண்





 திருமதி.தனபாக்கியம் வட்டார கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில்,காவல் துணை ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் துண்டறிக்கை வழங்கி தொடங்கி வைத்தல்





 மாணவ,மாணவியரின் நலன் கருதி இந்த தொடர் பிரச்சாரம் என C.பரமேஸ்வரன் அவர்கள்  நோக்கம் பற்றி விளக்கமளித்தல்.


                          சாலையில் பாதுகாப்பாக பயணிப்போம் என
                          அனைவரும் உறுதிமொழி ஏற்றல்



                    திரு.வியானி அவர்கள்  விழிப்புரை வழங்குதல்



               ஆண்டு முழுவதும்(2021வரை)
                  தொடர் நிகழ்வாக,
(1)அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பாதுகாப்பாக பயணிப்போம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
(2) சாலை பாதுகாப்பு-குறும்பட போட்டிகள்
(3)கவிதை போட்டிகள்
(4)ஓவியப் போட்டிகள்
(5)கையெழுத்து இயக்கம் (பேருந்து நிலையங்களில்)
(6)விழிப்புணர்வு பிரச்சாரம்
(7)தலைக் கவசம்  உயிர் கவசம்-பேரணி
(8)கருத்தரங்கம்&பட்டிமன்றம்
 நடத்தப்படும்....
என அன்பன்
C.பரமேஸ்வரன், 9585600733
சாலை பாதுகாப்பு இயக்கம்,
ஈரோடு மாவட்டம்.