18 மார்ச் 2012

ரகசிய கேமரா- உசாருங்க! உசாரு!?!


 அன்பு நண்பர்களே,

             வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இங்கு ரகசியக் கேமரா பற்றிய ஒரு எச்சரிக்கைத் தகவல் பற்றி இங்கு காண்போம்.




இது ஒரு எச்சரிக்கை! மற்றும் விழிப்புணர்வு பதிவு. குறிப்பாக பெண்கள் படித்து உசாராக இருக்க வேண்டும்.எனவே அவசியம் பெண்கள் படித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.

           இந்த பதிவைப் படிக்கிற உங்களுக்கு ஒரு எளிமையான கேள்வி? , நீங்கள் ரோட்டில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறீர்கள். அப்போது உங்களை  ஒரு நாலு பேர் ஒரு மாதிரியாக, கண்இமை மூடாமல் பார்க்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.அதைக் கண்ணுற்ற உங்களால் சரியாக நடக்க முடியுமா? உடனே கால்கள் பின்ன, தடுமாற்றத்துடன் நடக்கும்நிலை ஏற்படுகிறது இல்லைங்களா?. அதிலும் நடப்பது ஒரு வாலிப வயதுடைய பையனாக இருந்து குறுகுறுன்னு பார்க்குறது நாலு பெண்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம் அது வரைக்கும் நன்றாக நடந்துகிட்டு இருந்த அந்த பையன் அவங்க பார்க்கிறார்கள் என்பது தெரிந்ததும் தடுமாறி   நடக்க ஆரம்பித்திடுவான். இதே மாதிரி நிலைமைதான் ஒரு பெண் நடக்கும் போது நாலு ஆண்கள் பார்க்கும் போதும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.  இவை எல்லாம் மனிதனின் இயல்பு.  அடிப்படை உணர்ச்சிகள்.
          ஆனால் இந்த உணர்ச்சிகள் எல்லாம் நமக்கு நம்மையே அறியாமல் மக்கி போக ஆரம்பமாகிக் கொண்டு இருக்கிறதுங்க.  எப்படின்னு கேட்கிறீர்களா? நாம் ரோட்டில் நடக்கும் போதும் சரி, மளிகைக்கடை,ஜவுளிக்கடை,நகைக்கடை,அழகு சாதனக்கடை,என கடைகளில் இருக்கும் போதும் சரி, ஆஸ்பத்திரிகளில் இருக்கும் போதும் சரி, ரயில்வே ஸ்டேஷன் , ஏர்போர்ட் , பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் , ஷாப்பிங் மால், டிராபிக் சிக்னல் என எங்கு பார்த்தாலும் இன்றைக்கு கண்காணிப்புக் கேமரா இல்லாத இடமே இல்லை என கூறும் அளவுக்கு நம்மைச்சுற்றி எல்லா இடங்களிலும் ரகசியக் கேமராக்கள் நம்மை படம் எடுத்துக்கொண்டு இருக்கின்றன.
என்னுடைய நண்பர் ஒருவர் சொன்ன ஒரு புள்ளி விவரம் , லண்டனில் ஒருவர் ஒரு நாள் காலையில் ஆபீஸுக்கு போயிட்டு இரவு வீடு திரும்புவதற்குள் அவரை இந்த கண்காணிப்பு கேமராக்கள் குறைந்தபட்சம் இருநூறு முறையாவது புகைப்படம் எடுகின்றனவாம். எதுக்குங்க லண்டனுக்கு எல்லாம் போய்கிட்டு? , இங்க நம்ம ஊரிலேயே இருக்கிறதே! ஆயிரத்தெட்டு கண்காணிப்பு கேமராக்கள். தினமும் நம்மை கண்காணித்துகொண்டே இருக்கின்றன. அது சரிங்க. எதற்கு இதெல்லாம்? ஏன் இந்த கண்காணிப்பு ?
      இதற்கெல்லாம் இதோ பதில், குற்றங்களை தடுப்பதற்காக , பாதுகாப்பு காரணங்களுக்காக , தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்காக.என்பவைகள்தாம். அதாவது இந்த காரணங்கள் எல்லாம் 100% சரியாகவே இருந்தாலும் . என்னுடைய கேள்வி எல்லாம், எங்கே போயிற்று தனிமனித சுதந்திரம்? இன்றைய நிலையில் நம்மால் எந்த ஒரு கண்காணிப்பும் இல்லாமல் தனிமனித சுதந்திரத்துடன் வெளியே போய் வர முடியுமா? சும்மா நாலு பேரு நாம நடக்கும் போது வெறிக்க பார்த்தாலே நமக்கு என்னவோ போல இருக்கு, ஆனா கண்காணிப்பு கேமரா என்கிற பெயரால் நம்மை கேமரா கண்கள் எப்போதும் கண்காணித்து கொண்டே இருப்பது எப்படி இருக்கும் ? எதற்காக எந்தக் குற்றமும் செய்யாத நம்மைக் கண்காணிக்க வேண்டும்? ஆக மொத்தத்தில் தனிமனித சுதந்திரம் ( privacy )  பறிபோய்விட்டதாகவே  நான் உணர்கிறேன் . 
         சரி அதற்காக கண்காணிப்பு கேமராவை எல்லாம் நீக்கி விடலாம் , எங்கேயும் வைக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை . ஆனால் கண்காணிப்பு கேமரா வைப்பது மட்டுமே குற்றங்களைத் தடுத்து விடாது , குறைத்து விடாது . எடுத்துக்காட்டாக திருடவோ , கொள்ளை அடிக்கவோ வருபவர்கள் அவர்கள் தப்பிக்க திருடர்கள் ஒரு கூடுதலான வேலை செய்ய வேண்டி இருக்கும் அது என்ன என்றால் , அவர்கள் போகின்ற இடத்தில உள்ள கண்காணிப்புக் காமெராக்களை முதலில் செயல் இழக்கச் செய்ய வேண்டி இருக்கும் அல்லது கேமரா கண்காணிப்பில் சிக்காமல் இருப்பதற்கான மறைக்கும் வேலையை செய்ய வேண்டி இருக்கும் .ஆனால்  தீவிரவாதிகளுக்கு இந்த கண்காணிப்பு கேமரா பற்றிய கவலை எல்லாம் கிடையாது . மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்த போதே பார்த்தோம் . தீவிரவாதிகளுக்கு அவர்கள் உயிர் மேல் கவலையே இல்லை! அப்புறம் எங்கீங்க கண்காணிப்பு காமெராவைப் பற்றி எல்லாம் கவலைப்பட போகிறார்கள் ? வந்த வேலையை செய்து முடிப்பதில் தீவிரம் காட்டுவார்கள்.
       சரிங்க, இப்போது கண்காணிப்பு கேமரா பற்றி கேள்விப்பட்ட நமக்கு இத்தனை கஷ்டமாக இருக்கிறது என்றால் உங்களுக்கு ஒரு கேள்வி , பெண்கள் வெளி இடங்களுக்கு போகும் போது ஆண்கள் யாராவது தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் அந்த பெண்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கும்? எத்தனை தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ?
           அதாவது வெறுமனே வெளி இடங்களில் இந்த மாதிரி பார்வைக்கே நமக்குள் எத்தனை தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது , அதைப் புகைபடமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்தால் எப்படி இருக்கும் ? அதற்கும் ஒரு படி மேலே சென்று! எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டால் எப்படி இருக்கும்?????????!!!!!!!!
              இன்றைய தினம் இவை எல்லாம் நடக்குதுங்க! . இவைகள் எல்லாம் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பக்கவிளைவுகள். இது மட்டும் அல்ல , கூடுதலாக எவைகள் எல்லாம் இணையதளத்தில் வெளியாகின்றன . இதற்கான காரணங்கள்தான் என்ன?எவ்வாறு நம்மை அறியாமல்நமது படங்கள் எடுக்கப்படுவது எவ்வாறு? முடிந்த அளவு அவைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? 
               ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.    கண்காணிப்பு கேமராக்களுக்கும் , ரகசிய கேமராக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதுங்க. கண்காணிப்பு கேமராக்கள் என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லோருக்கும் தெரிகிற மாதிரி அதிகாரப் பூர்வமாக பொது இடங்களில் வைக்கப்படுவது, அதற்கு பெயர் Security Camera  அல்லது  CCTV Camera (Closed Circuit Television Camera ).  ஆனால் ரகசிய கேமராக்கள் என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒளித்தோ அல்லது மறைத்தோ வைக்கப்படக்கூடிய சிறிய வகை கேமராக்கள் . இதன் நோக்கம் உளவு பார்ப்பதற்காகவோ அல்லது வேறு சில வக்கிர உள்நோக்கங்களுக்காகவோ வைக்கப்படுபவை.
இந்த ரகசியக் கேமராக்களுக்கு நிறைய பெயர்கள் உண்டு Spy Cam , Candid Cam , Hidden Cam , Secret Cam  என்று பல பெயர்கள்.  சரிங்க. இந்தக் கேமராக்களை வைத்துக்கொண்டு என்னதான் செய்யமுடியும் என்பதைக்கேட்டால் நீங்கள் அதிர்ச்சிக்கு ஆளாகிவிடுவீர்கள். .
         நான் ஓட்டுனராக  இருப்பதால், மற்றும் இணையதளம் மற்றும் முகநூல் பயன்பாடு அதனால் அறிமுகம் ஆன அல்லது அறிமுகம் இல்லாத நண்பர்கள் என சமூகத்தில் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.அவர்களுக்கு ஏற்றார்போல சில கருத்துரைகள் கொடுத்துவிட்டால் போதும்.அவர்கள் வாயிலாகப் பல விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவ்வாறாக! ரகசியக் கேமரா பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு அதன்வழியாக சில கம்பெனிகள் விவரம் கிடைக்க, நான் அதிர்ந்துதான் போனேன் . சொன்னால் நம்ப மாட்டிங்க. இதை பற்றிய விவரம் எவ்வளவு பேருக்கு இன்னும் தெரியும் என்று தெரியவில்லை , அந்த ரகசிய கேமராக்களின்  மாடல்கள் உண்மையிலேயே மிகவும் மோசமான அதிர்ச்சியை உண்டாக்கின.அதாவது ரகசிய கேமராக்கள் கதவு கைப்பிடி  , கடிகாரம்  , சுவிட்ச் , சுவிட்ச் போர்டு , பல வகை லைட்  வடிவத்தில் , அலங்கார விளக்குகள் , பொம்மைகள் , குளியல் அறையில் லைட் , ஷவர் , வாட்டர் ஹீட்டர்,பொம்மை,பூந்தொட்டி,திரைச்சீலை,வரவேற்பு மாடல்கள்,போர்டுகள்,  என எல்லா வடிவங்களிலும் கேமரா மாடல்கள் இன்றைய உலக சந்தையில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கின்றன.இதனை வாங்கி அப்படியே பொறுத்தினால் போதுமானது.  யாராலும் கண்டு பிடிக்க முடியாது.அதே சமயம் அந்தக் கேமரா நாள் கணக்கில் பதிவு செய்யும்.ஆச்சரியமாக இருக்கிறதுங்களா! இது உண்மைதாங்க. இவை தவிர பேனா வடிவில்,பெல்ட் வடிவில்,சட்டைப்பொத்தான் வடிவில்,மூக்குக்கண்ணாடி வடிவில்,மோதிர வடிவில்,நெற்றிப்பொட்டு வடிவில்,சாவிக்கொத்து வடிவில்,தனியாக சாவி வடிவில்,கால்குலேட்டர் வடிவில்,ஸ்டிக்கர் வடிவில் என்றெல்லாம் சிறிய ரகசியக் கேமராக்கள் வந்து விட்டன,
(அதாவது நம்ம தமிழ் சினிமாவான  “மங்காத்தா” படத்தில் அஜித் பேனா வடிவ கேமராவை உபயோகித்து இருப்பார்.) 

உங்களுக்காக  சில ரகசிய கேமராக்களின் படங்கள் கீழே : 

        இந்த கேமராக்கள் எங்கு எல்லாம் எப்படி எல்லாம் சமூக விரோத தனமாக , வக்கிர எண்ணங்களுடன் உபயோகப் படுத்தப்படுகிறது? என்று கேட்டீர்கள் என்றால் அவைகள் எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல் ரூம்களில் , ஹோட்டல் பாத் ரூம்களில் , துணிக் கடைகளில் பெண்கள்  உடை மாற்றும் அறைகளில்தான் பொருத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் எல்லா ஹோட்டல்கள் , குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களிலும் இந்த வேலை நடக்கிறது. இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்பது வேறு கதை , யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் , அதை பின்னர் விவாதிப்போம் . 
             இன்றைய இணையதளத்தில் இந்த ரகசிய கேமராக்களை பயன்படுத்தி ஏகப்பட்ட அந்தரங்க காட்சிகள் படமாக்கப்படுகின்றன பல வக்கிர கும்பல்களினால் அதை இணையதளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். பாவம் ஹோட்டலில் தங்குபவர்களுக்கு இதை பற்றி எந்த விவரமும் தெரியாது . கேமரா பொறுத்தப்பட்டதோ , அவர்களின் படம் பிடிக்கப்பட்டதோ எதுவும் தெரியாது. 
பெரும்பாலும்  இந்த வக்கிர கும்பல்களின் குறி! பெண்கள் மற்றும் இளம் தம்பதிகள் . பெரும்பாலும் தேனிலவுக்கு போகும் இடங்களான சுற்றுலா தளங்களின் உள்ள ஹோட்டல்களில் இந்த அபாயம் அதிகம் உள்ளது. ஜாக்கிரதை .

    
     பெரும்பாலான பிரபலங்களின் குளியல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஆவது எல்லாரும் அறிந்ததே , ஆனால் பிரபலங்கள் மட்டும் அல்லாது சாமானிய குடும்ப பெண்களின் , வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன இன்றைய இணையதளத்தில் .எப்படி இதெல்லாம் சாத்தியம் ஆகிறது? எல்லாம் இந்த ரகசிய கேமராக்களின் உதவியால்தான். ஹோட்டல்களில் தங்கும் போது கண்டுபிடிக்க முடியாத சிறிய வகை ரகசிய கேமராக்களைப் பற்றி இது வரை யாராவது யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? கவலைப்பட்டது உண்டா?இனி கண்டிப்பாக கவலைப்படணும் , கவனமாய் இருக்கணும். 

இனி ஹோட்டலில் தங்கும் போது கவனிக்க வேண்டிய , செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,
1) தம்பதிகள் மிக எச்சரிக்கையாக இருங்கள். . 
2). கிராம புற மக்களே உஷார். எதார்த்தமாக இருந்தால்! நீங்கள் கேமரா கண்களில் இருந்து தப்பிக்க வழி இல்லை .
3) பெண்கள் முடிந்தவரை உடையை கலையாமல் இருக்கவும் அறையில் இருக்கும் போது. உடை மாற்றும் போது என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் சுவர்களுக்கு கூட (கேமரா)கண்கள் இருக்கலாம் .
4) அதே போல் பெண்கள் குளிக்கும் போது உடம்பை மறைக்க துணி கட்டிக்கொண்டு குளிக்கவும்.

      இவையெல்லாம் செய்ய சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் ஆனால்  ரகசிய கேமரா கண்களுக்கு இரை ஆகி , வக்கிர மனம் கொண்டவர்களின் கண்களுக்கு விருந்தாகாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேறு வழி இல்லை .

       சரி இது எல்லாம் நமக்கு தெரியாமல் ரகசிய கேமராக்களால் நமக்கு வரும் பிரச்சனைகள் . ஆனால் சிலர் ஆர்வ கோளாறினாலும் , சில தம்பதிகள் அவர்கள் உபயோகத்திற்காக சொந்த கேமராவிலோ அல்லது மொபைல் கேமராவிலோ எடுக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எப்படி வெளியுலகிற்கு , இணையதளத்திற்கு வருகிறது? அதை தடுப்பது எப்படி? 
உங்கள் லேப்டாப் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள WEB CAM வெப்காம்களை மற்றவர்கள் உங்கள் அனுமதி இன்றி உங்களை எப்படி பார்க்க முடியும் ? அதை எப்படி தடுப்பது ? 

.                  இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு பின்புறமாகக் கூட மறைத்து வைக்கப்படுகிறது  ஏனென்றால் அந்த இடம்தான் யாருக்கும் அவ்வளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷாப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளுக்குப் பின்னால் ரகசிய கேமரா வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் பெண்கள் இனிமேல் கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை அரைகுறை தவிர்க்கவும். 
          இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில்  கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும்.அதாவது பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீசார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும். ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்துக் கொண்டும், பதிவு செய்து கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்து ரசித்துக் கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை.! 
         இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting என்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை. 
சரி இந்த வகை ‘’தில்லாலங்கடி’’ கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது? 

 Reflecting Glass -சை  கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :

1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க. இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுணுக்கமாகக் கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால்  இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது. 
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கைப் பையில் எப்போதும் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று வைத்துக் கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் ,மற்றும்  உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி ஆக இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.  
2. உங்கள் கைப்பையில் எப்போதும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்துப் பார்த்தால் அதில் ஒளி ஊடுருவுகிறதா! என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது  முகம் பார்க்கும் கண்ணாடி. 
3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப எளிமையான பரிசோதனைங்க.  உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால்  கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியைக் குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்புக் கண்ணாடிகள் பொருத்தி இருக்கும் இல்லையா அதில் நாம் கருப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட காருக்குள் என்ன இருக்கிறதென்று சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா? அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.

       சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதைப் பற்றி . ஆனால் இன்றைய சூழ்நிலையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த புகைப்படமோ , வீடியோவாகவோ அப்படியே வெளியிடப்படுகிறது. அதற்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய சொந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருதுங்க  இணையதளத்தில்!?!?!?!?!??!. 

    சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி  அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம்  எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா? தவறா? என்ற விவாதத்திற்கு நாம் போக  வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை . 
          ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருகிறதுங்க? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின்  படத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அவ்வாறான சூழ்நிலையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ? 
இன்றைய கால கட்டத்தில் இது மிகவும் சுலபமுங்க. , முன்பெல்லாம்  புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைப்படமோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன். 

           எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று  தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் ???????? படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்திற்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும். அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்துக் கொண்டு மற்ற புகைப்படங்களை அல்லது பிறகு எடுக்கும் குடும்ப மற்றும் நட்பு சம்பந்த படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோவுக்கு கொடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்கு Recovery Software என்று பெயருங்க. இந்த சாப்ட்வேர் Delete ஆன file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டரில்  இருக்கின்ற மெமரியில் delete ஆன  file களைக் கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரிக் கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்சினைதான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்! நெருங்கின நண்பராகக் கூட இருக்கலாம்.அவர்களது குறுக்குப் புத்தியால் இந்த Recovery Software பயன்படுத்தி மெமரிக்கார்டை ஆராய்ந்து அதனை அவர்களது நண்பர்கள் அல்லது சுற்றுச்சூழலில் கிடைத்த வசதிகளைப்பயன்படுத்தி இணையதளத்தில் வெளியிடுகிறார்கள்!. .இப்படி தங்களுடைய கேமராவில் தாங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்ப்பது?
டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்,
1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய ??????? படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் சொந்த போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும். அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு!?! இருக்கிறது.என்பதே எனது கருத்து! (இன்னும் தெளிவில்லை)




                                                      
உங்க WEBCAM ஜாக்கிரதை . . .


         
சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது லேப்டாப்பிலோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லாமல் யாரேனும் ஆன் செய்து உங்களைப் பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் கூகுள் டாக் என்னும்
Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்டில்  இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு பதிவிட விரும்பவில்லைங்க. ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்கு என்ன சாப்ட்வேர்  தரவிறக்கம் அதாவது டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . பிறகு தவறான விசயங்களை நானே இந்த சமூகத்திற்கு விசங்களாக கொடுத்தது போல் ஆகிவிடும். எனவே,விசயங்களை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
    இதில் இருந்து தப்பிக்க : 

1.
நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்து இருப்பவரானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் . 

2.
நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமாங்க. லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கரையாவது அல்லது ஸ்டிக்கர் பொட்டையாவது  ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது .




      இந்த பதிவுகள் அனைத்தும் விழிப்புணர்வுகளுக்காக மட்டுமே எழுதப்பட்டது.  அதனால் தயவு செய்து இதில் உள்ள நல்ல விசயங்களை மட்டும் எடுத்து கொள்ளவும்.இந்த பதிவில் உள்ள நாகரீகமற்றவைகளாக தாங்கள் கருதும் செய்திகளை தவிர்த்துவிடவும் . தேவை இல்லாத விசயங்களை தவிர்த்து விடவும் . ஆகவே இதை படித்த அனைவரும் கவனமாகவும் , ஜாக்கிதையாகவும் நிம்மதியாகவும் வாழ்வோமாக என்றுவாழ்த்துகிறேன்.

07 மார்ச் 2012

உலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள்

                         மாண்புமிகு முதல்வர் அவர்கள்.


அன்பு நண்பர்களே,
    KONGU THENDRAL  வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..08-03-2012  உலக மகளிர் தினம்.
உலக மகளிர் தின விழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்-எளையம்பாளையத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கல்லூரி தாளாளர் திருமிகு.பேராசிரியர்.டாக்டர்.மு.கருணாநிதி B.Pharm.,M.S.,Ph.D.,அவர்களதுமிகச்சிறப்பாக ஆற்றிவரும் மகளிருக்கான கல்விப்பணிக்காக சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும்,வணக்கங்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.





              மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை உலக மக‌ளி‌ர் ‌தினமாக‌ நா‌ம் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.

             முத‌லி‌ல் அனை‌த்து மக‌ளி‌ரு‌க்கு‌ம்  ''கொங்கு தென்றல்'' சா‌ர்‌பி‌ல் மக‌ளி‌ர் ‌தின வா‌ழ்‌த்துகளை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.

         உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

           18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.

               இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. 

       இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது.
             எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், வேலை பா‌ர்‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக ப‌ணியா‌ற்ற வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்ததே‌  த‌விர, ஊ‌திய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டது. (அது இ‌ன்று வரை பல இட‌ங்க‌ளி‌ல் தொடருவது ம‌ற்றொரு ‌பிர‌ச்‌சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைக‌ள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அ‌ப்போதைய அமெரிக்க அரசு செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை.

            இதனால் அமெ‌ரி‌க்கா முழுவது‌ம் கிளர்ந்தெழு‌ந்த பெண் தொழிலாளர்கள் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தா‌ன் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அர‌சி‌ன் ஆதரவுடன் அடக்கினர். வெ‌ற்‌றி பெ‌ற்றதாக பக‌ல் கனவு‌ம் க‌ண்டன‌ர். ஆனா‌ல் அ‌ந்த பக‌ல் கனவு ‌நீ‌ண்ட நா‌‌ட்களு‌க்கு ப‌லி‌க்க‌வி‌ல்லை.

        அட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

     இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ‌அ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய சாரா‌ம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தா‌ர். பெ‌ண்களை அட‌க்‌கி ஆள ‌நினை‌த்த ஆ‌ண் சமுதாய‌ம் இத‌ற்கு ஒ‌ப்பு‌க் கொ‌ள்ளுமா அ‌ல்லது இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற வ‌ழி ஏ‌ற்படு‌த்துமா... ப‌ல்வேறு தட‌ங்க‌ல்களா‌ல் இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற முடியாம‌ல் போனது.

            இத‌ற்‌கிடையே பெ‌ண் தொ‌ழிலாள‌ர்க‌ள் அமை‌ப்‌பி‌ன‌ர் ஆ‌‌ங்கா‌ங்கே உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப‌த் தொட‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர். 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நக‌ரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.

         அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ஒரு ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்புதா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் மக‌ளி‌ர் ‌தின‌க் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் களை க‌ட்டியு‌ள்ளன. 

நம்மை ஈன்ற தாயும் ஒரு பெண்.நமது வாழ்க்கைத்துணையும் ஒரு பெண்.நமது வாரிசும் ஒரு பெண்.என்ற சிந்தனையோடு நாமும் பெண்ணுக்கு சம உரிமை கொடுத்து பெண்ணைப் படிக்க வைப்போம்.பெண்ணைப்போற்றுவோம்.பாரதத்தை வலிமையாக்குவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். வாழ்க பெண்ணியம்! வளர்க பாரதம்!!
   PARAMESDRIVER -TAMILNADU SCIENCE FORUM - THALAVADY - ERODE DISTRICT.


                      மகளிர் தினத்தை போற்றுவோம்.
                       இந்தியாவின் சாதனை பெண்கள்

INDHIRA GANDHI

KALPANA CHAWLA








இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமிகு.பிரதீபா பாட்டில்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமிகு.இந்திரா காந்தி.
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் திருமிகு.சரோஜினி நாயுடு.
இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் திருமிகு.சுசேதா கிருபாலினி. (உத்தரபிரதேசம்)
இந்தியாவின் முதல் IPS அதிகாரி திருமிகு.கிரண் பேடி.
இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி திருமிகு.இஷா பெசன்ட் ஜோஷி.
இந்தியாவின் முதல் பெண் விமான பைலட்திருமிகு. துர்கா பானர்ஜி.
எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண் திருமிகு.பசெந்த்ரி பால்.
முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி திருமிகு.பாத்திமா பீவி.
விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண் திருமிகு.கல்பனா சாவ்லா.
இந்திய ராணுவத்தின் முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல் திருமிகு.புனிதா அரோரா.
ஐ.நா. சபையின் முதல் பெண் (இந்தியா) தலைவர் திருமிகு.விஜய லக்ஷ்மி பண்டிட்.
இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் திருமிகு. மீரா குமார்.
இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி திருமிகு.சுஸ்மிதா சென்.
இந்தியாவின் முதல் உலக அழகி திருமிகு.ரெய்ட ஃபாரியா (Reita Faria)

   kongu thendral.blogspot.com

விப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012

            

 அன்பு நண்பர்களே,
    PARAMES DRIVERவலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை வருக! வருக!! என வரவேற்கிறேன்.திருச்செங்கோடு-விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 07-03-2012 இன்று  விப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக்கூட்டம்   நடைபெற்றது.











 
மின்தடை காரணமாக பதிவிடுதலில் காலதாமதம் ஏற்படுகிறது.பொறுத்தருளவும்.





 







































     

உலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்

Wednesday, March 7, 2012




அன்பு நண்பர்களே,
     PARAMES DRIVER-வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.08-03-2012 நாளை உலக மகளிர் தினம்.
உலக மகளிர் தின விழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்-எளையம்பாளையத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.







March 8, 2011 உலக மகளிர் தினம்

இம்மண்ணில் மனித இனம் தோன்றியது.

இவ்வினம் வளர பெண்ணினம் வேண்டும்.

மண் வளத்தை நினைப்பவர்கள்
வன வளத்தை நினைப்பவர்கள்
பெண் வளத்தையும் நினைக்க வேண்டும்.

பசு பெண் ஈன்றால் முகம் சிரிப்பார்
பெண் பெண் ஈன்றால் முகம் சுளிப்பார்
தன் இனத்தை தானே அழிக்க
நினைப்பதுவும் இவ்வினமே!

நதி ஆனாள்,
காற்று ஆனாள்,
மலை ஆனாள்,
தேசம் ஆனாள்,
தெய்வம் ஆனாள்,
ஆனால் அவளுக்கென்று
ஓர் வரம் கேட்க மறந்தாள்.

வீட்டிலும், நாட்டிலும்,
வெளியிலும், வெய்யிலிலும்
வேளை தவராமல் வேலை.

வேலை முடித்து வந்தாலும்
முடிக்காமல் வந்தாலும்
சமூகம் குத்தும் சொல்லால் வேலை.

ஆத்திரக்காரி, அன்புக்காரி,
அதிகாரக்காரி, அமைதிக்காரி
என்று தூற்றிப் போற்றி
இவ்வினத்தை எது வேண்டுமானாலும் செய்யலாம்.!
இவ்வினத்திற்கு கொண்டாடும் தினம் தான் உலக மகளிர் தினம்.!


06 மார்ச் 2012

பிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு

      அன்பு நண்பர்களே
, வணக்கம். KONGU THENDRAL.BLOGSPOT.COM வலைப்பக்கத்திற்கு தங்களை வணங்கி வரவேற்கிறோம். பிளாஸ்டிக்-சுற்றுப்புற சீர்கேடு பற்றி இங்கு காண்போம்.


       குப்பைகள் மேலாண்மையில் ஏற்படும் குறைபாடுகளே, பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதால் உண்டாகும் பிரச்சனைக்கு முதன்மை காரணமாகும். கட்டுப்பாடில்லாத வேதிப்பொருட்களை உபயோகிப்பதால் திறந்த சாக்கடைகள் அடைப்பு, நிலத்தடி நீர் அசுத்தம் போன்ற சுற்றுப்புற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பிளாஸ்டிக் என்றால் என்ன?
பிளாஸ்டிக் எனப்படுவது பலபடியாக்கல் வேதிவினையினால் பெறப்படுவதாகும் (பாலிமர்ஸ்). தனித்தனியாக இருக்கும் மூலக்கூறுகளை (மோனோமர்ஸ்) பலமுறை ஒன்றிணைத்து பெரிய மூலக்கூறுகள் (பாலிமர்ஸ்) பெறப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள் எத்திலீன் மூலக்கூறுகள் பலபடியாக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. எத்திலீன் மூலக்கூறுகள் பலபடியாக்கப்பட்டு பாலிஎத்திலீன் உருவாக்கப்படும்போது, அதில் நீண்ட சங்கிலிகளாக கார்பன் அணுக்கள் இருக்கும். நீண்ட சங்கிலியிலுள்ள இக்கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்திருக்கும்.


பிளாஸ்டிக் பைகள் எதனால் ஆனவை?
பிளாஸ்டிக் பைகள் கீழ்க்கண்ட எதாவதொரு மூன்று அடிப்படை பலபடியாக்கப்பட்ட பாலிஎத்திலீன் மூலக்கூறுகளால் ஆனவை. அதிக அடர்த்தியுள்ள பாலிஎத்திலீன், குறைந்த அடர்த்தியுள்ள பாலிஎத்தீலீன், நீண்ட குறைந்த அடர்த்தியுள்ள பாலிஎத்திலீன். மளிகை சாமான்களை வைக்க அதிக அடர்த்தியுள்ள பாலிஎத்திலீன் பைகளும், சலவைத்துணிகளை வைக்க குறைந்த அடர்த்தியுள்ள பாலிஎத்திலீன் பைகளும் பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன. இந்த வெவ்வேறு அடர்த்தியுள்ள பாலித்தீன் பொருட்களுக்கும் முக்கியமான வித்தியாசம் அதன் பலபடியாக்கல் சங்கிலிகளிலுள்ள கிளைகளாகும். அதிக அடர்த்தியுள்ள மற்றும் நீண்ட குறைந்த அடர்த்தியுள்ள பாலித்தீனில் நீண்ட கிளையற்ற கார்பன் சங்கிலிகளாகவும், குறைந்த அடர்த்தியுள்ள பாலித்தீனில் கிளைகளையுடைய கார்பன் சங்கிலிகளுமிருக்கும்.


பிளாஸ்டிக் உடல்நலத்துக்கு தீங்கானதா?
பிளாஸ்டிக் அதன் உள்ளமைப்பின்படி கெடுதல் விளைவிக்கக்கூடியவையல்ல. பிளாஸ்டிக் பைகள் கனிம மற்றும் கரிமமல்லாத பொருட்களான நிறமிகள், ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ், தாதுக்கள், பிளாஸ்டிசைசர்ஸ், சாயங்கள் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும்.
நிறமிக்கள் மற்றும் சாயங்கள் போன்றவை தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் சாயங்கள். பிளாஸ்டிக் பைகளுக்கு நிறம் கவர்ச்சியான நிறம் கொடுப்பதற்காக பயன்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் நிறமிகள் புற்றுநோய் உருவாக்கக்கூடியவை. உணவுப்பொருட்களை இத்தகைய பிளாஸ்டிக்பைகளில் எடுத்துச்செல்லும்போது இந்நிறமிகள் உணவுப்பொருட்களில் கலந்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். நிறமிகளிலுள்ள அதிக எடையுள்ள கனிமங்களான காட்மியம் அவற்றில் இருந்து வெளிவந்து உணவுப்பொருளுடன் கலந்து உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது.
பிளாஸ்டிசைசர்ஸ் எனப்படுபவை குறைவான ஆவியாகும் தன்மையுடைய கரிம எஸ்டர்களாகும். உணவுப்பொருட்கள் இப்பைகளில் எடுத்துச்செல்லும்போது, உணவுப்பொருட்களில் கலந்துவிடுகின்றன. இவைகளும் புற்றுநோயினை உருவாக்கக்கூடும்.
ஆண்டி ஆக்ஸடென்ட்ஸ் மற்றும் ஸ்டெபிலைசர்கள் கரிம மற்றும் கனிம மற்றும் கரிம வேதிப்பொருட்களாகும். இவை வெப்பம் அதிகரிக்கும்போது இவைகளும் பிளாஸ்டிக் பைகளிலிருந்து வெளியேறி அதில் எடுத்துச்செல்லும் உணவுப்பொருட்களில் கலந்து உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.
விஷத்தன்மையுடைய காட்மியம் மற்றும் காரியம் போன்ற தனிமங்கள் பிளாஸ்டிக்பைகளை உற்பத்தி செய்யும் போது உபயோகப்படுத்தப்படுகின்றன. இத்தனிமங்களும் பிளாஸ்டிக் பைகளிலிருந்து கரைந்து அதிலிருக்கும் உணவுப்பொருட்களை மாசுபடுத்துகின்றன. காட்மியம் சிறிதளவு உடலில் உறிஞ்சப்படும்போது இருதய வீக்கம், வாந்தி போன்ற உபாதைகளை ஏற்படுத்துகிறது. காரியம் நீண்ட நாட்களுக்கு உடலில் எடுத்துக்கொள்ளப்பட்டால் அது மூளைத்திசுக்களின் அழிவை ஏற்படுத்தும்.


பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் சிரமங்கள்
பிளாஸ்டிக் பைகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் சாக்கடைகளை அடைத்து, அதனால் சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தினை ஏற்படுத்தும். இதனால் தண்ணீர் மூலமாக மனிதர்களுக்குப் பரவும் நோய்களும் அதிகரிக்கும். மறுசுழற்சி அல்லது நிறமேற்றப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் சில வித வேதிப்பொருட்கள் இருக்கும். இவை நிலத்தில் கலந்து மண்ணை மாசுபடுத்துவதுடன் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும். இவ்வாறு பிளாஸ்டிக் பைகளை முறையாக மறுசுழற்சி செய்யும் தொழில் நுட்பங்கள் இல்லாவிட்டால், இவை மறுசுழற்சி செய்யப்படும்போது நச்சு வாயுக்கள் வெளியேறி அது சுற்றுப்புற சீர்கேட்டினை உண்டாக்குகிறது. சில பிளாஸ்டிக் பைகளில் மீதமுள்ள உணவுப்பொருட்கள், கழிவுப்பொருட்களுடன் கலந்து பின் அதனை விலங்குகள் உட்கொள்ளும்போது தீயவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கின் தானாகவே சிதைவடையும் தன்மையில்லாததாலும், தண்ணீர் உட்கிரகிக்கும் திறன் இல்லாததாலும், அவை மண்ணில் எறியப்பட்டால் மண்ணின் தண்ணீர் உறியும் தன்மையினை குறைத்து அதனால் நிலத்தடி நீரின் அளவினையும் குறைக்கின்றன.
இதனால் பிளாஸ்டிக் பொருட்களின் தன்மையினை அதிகரித்து அவற்றின் சிதைவடையும் வினைகளை குறைக்க அதனுடன் சேர்க்கப்படும் பிளாஸ்டிசைசர்ஸ், ஃபில்லர்ஸ், பிளேம் ரிடார்டன்ட்ஸ், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுவதால் பிளாஸ்டிக் உபயோகத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் அதிகரிக்கின்றன.


பிளாஸ்டிக்கழிவு மேலாண்மை முறைகள்
மெல்லிய பிளாஸ்டிக் பைகள் குறைந்த மதிப்பு உடையவை. இது மட்டுமன்றி அவற்றை பிரித்தெடுப்பது கடினம். பிளாஸ்டிக் பைகளின் தடிமனை அதிகரிக்கும்போது அவற்றின் விலையும் அதிகரிப்பதுடன், அதன் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே உதவுகிறது. பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கமும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அவற்றை அப்புறப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிளாஸ்டிக்கினால் ஆன பைகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவை நகர்ப்புற கழிவு மேலாண்மைக்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன. மலைப்பிரதேச மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், சிக்கிம், மேற்கு வங்கம் போன்றவை பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களின் உபயோகத்தினை சுற்றுலாப்பிரதேசங்களில் தடை செய்துள்ளன. ஹிமாசலப்பிரதேச அமைச்சரவை அம்மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தினை எச்.பி உயிர் முறையில் சிதைவடையாத கழிவுக்கட்டுப்பாட்டு சட்டம், 1985ன் கீழ் 15.8.2009 முதல் தடைசெய்துள்ளது.
மத்திய அரசும் பிளாஸ்டிக்கழிவினால் சுற்றுப்புற சீர்கேடு உண்டாவதை மதிப்பிட ஒரு குழுவையும், செயற்குழுவையும் உருவாக்கி அதன் பரிந்துரைகளை பின்பற்ற முடிவு செய்துள்ளது.
பிளாஸ்டிக் பைகள் மற்றும் டப்பாக்களின் மேலாண்மை மற்றும் கட்டுபாட்டுக்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் உபயோகம் என்ற 1999ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தினை 2003ம் ஆண்டு சுற்றுப்புற பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ் மாற்றியமைத்துள்ளது. இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையமும் உயிர்முறையில் சிதைவடையும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு 10 தரக்கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் உபயோகத்திற்கு மாற்று
சணல் மற்றும் துணிப்பைகளுக்கு, மானியம் வழங்கி பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பிரபலப்படுத்துதல். எனினும் காகிதப்பைகளை தயாரிக்க அதிக அளவு மரங்கள் வெட்டப்படுவதால், அவற்றின் உபயோகம் கட்டுக்குள் வைக்கப்படவேண்டும். உயிர் முறையில் சிதைவடையும் பிளாஸ்டிக் பைகள் மட்டுமே உபயோகப்படுத்தப்படவேண்டும. இதுமட்டுமன்றி உயிர்முறையில் சிதைவடையும் பிளாஸ்டிக் பைகளை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும்.
                     PARAMES DRIVER // 
    KONGU THENDRAL. BLOGSPOT.COM // 
        THALAVADY-ERODE DISTRICT.

பிளாஸ்டிக்’ – சில உண்மைகள்

அன்பு நண்பர்களே,

    வணக்கம்.கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை வணங்கி வரவேற்கிறோம்.இந்த பதிவில் பிளாஸ்டிக் பற்றி சில விவரங்களைக் காண்போம்.



                     வாகனங்கள், கம்யூட்டர்கள், செல்போன்கள் என அனைத்தும் பிளாஸ்டிக்மயமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில், சமீப காலமாக பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை அறவே நீக்குவது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பதற்கு எந்தவிதமான திட்டங்களைம் தீட்டாமல், வெறும் கோஷங்கள், ஆர்பாட்டங்கள், முகாம்கள் மட்டும் நடத்துவதில் பயன் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.
பிளாஸ்டிக்குக்கு இணையான மாற்று பொருட்கள் தகுந்த அளவில் கண்டுபிடிக்கப்படாததால், வரும் ஆண்டுகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும் என சென்னையில் நடந்த பன்னாட்டு பிளாஸ்டிக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் ஒருவர் ஆண்டொன்றுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறார் எனவும், அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள ஒருவர் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5.2 கிலோ மட்டுமே பயன்படுத்துவதாகவும் இந்திய பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
`எளிதில் மட்காமல் பலநுறு ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியது பிளாஸ்டிக்’ என்ற தவறான எண்ணம் மக்களிடையே பரவி விட்டது. இதை நன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தீமையாக கருதக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுபுறச் சூழ்நிலைக்கு தீங்கு செய்வதில்லை என்பதை நன்கு கூர்ந்து கவனித்தால் தெரியும். பழுதடைந்த பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி எறிம்போது தான் பிரச்சினைகள் தோன்றுகின்றன. கலர் கலரான பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக விலங்குகள் உட்கொள்வதாலும், கழிவுநீர்க் கால்வாய் களில் அடைப்பை ஏற்படுத்துவதாலும் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. எனவே, உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை வீசி எறியாமல் , சேர்த்து வைத்து மறுசுழற்சி செய்வதன் முலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். சிங்கப்பூரில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, மறுசுழற்சி முறையில் பொருட்களை தயாரிக்கின்றனர். இவ்வாறு தயாரிக்கபட்ட பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதும் நிதர்சனமான உண்மை.
பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக் ஆசிட் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கபட்டு பயன்படுத்தபடுகின்றன. அங்கு வரிச்சலுகைகள் கொடுத்து இதுபோன்று இயற்கையான முறையில் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதற்கு ஊக்கமளிக்கின்றனர். முயற்சி செய்தால் இந்தியாவிலும் இதுபோன்ற இயற்கை பிளாஸ்டிக்கைத் தயாரிக்க முடியும். அதே நேரத்தில் இது சிறிதளவே செயற்கை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அமையும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். எனவே, பிளாஸ்டிக்கை எதிர்த்து குரல் கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், அதற்கான மாற்றுபொருட்களை கண்டுபிடிபதிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 
 PARAMES DRIVER -  TAMIL NADU SCIENCE FORUM - THALAVADY - ERODE DISTRICT

  போதைமது புகைத்தல் தீங்குகள் விழிப்புணர்வு