ஈரோடுமாநகரில்
தமிழியக்கம் அறிமுகவிழா...
தமிழியக்கம் மற்றும் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) தமிழ்த்துறையும் இணைந்து வழங்கும்
தமிழியக்கம் அறிமுகவிழா,
உள்ளாட்சிப் பொறுப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும்விழா நடைபெற்றது.
கஸ்தூரிபா கலையரங்கத்தில் 20-12-2024 வெள்ளிக்கிழமை
மதியம் 2.00 மணிக்கு விஐடி பல்கலைக்கழக நிறுவுநர் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் ஐயா அவர்கள் தலைமையில் தொடங்கிய தமிழியக்கம் அறிமுகவிழாவில் கல்லூரியின் தலைவர் திரு.சி.ஜெயக்குமார் மற்றும் கல்லூரியின் செயலாளர் திரு.செ.து.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் முனைவர் செ.கு.ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.தமிழியக்கம் மாநிலச் செயலாளர் திரு.மு.சுகுமார் தொடக்கவுரையாற்றினார்.தமிழியக்கம் பொதுச்செயலாளர் கவியருவி அப்துல்காதர் அறிமுகவுரை வழங்கினார்.தமிழியக்கம் அமைப்புச் செயலாளர் முனைவர் கு.வணங்காமுடி , துணை அமைப்புச் செயலாளர் திரு.மு.சிதம்பரபாரதி, கோவைமண்டலச் செயலாளர் மருத்துவர் அனுப், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆர்.நிர்மலாதேவி ஆகிய தமிழ்ச்சான்றோர்கள் வாழ்த்துரை வழங்கினர்.தமிழியக்கம் ஈரோடுமாவட்டச் செயலாளர் திருமதி தி.பவளசங்கரி நன்றியுரை வழங்கினார். தமிழியக்க இணைச் செயலாளர் முனைவர் அர.ஜோதிமணி நிகழ்ச்சி நெறியாள்கை வழங்கினார்.ஈரோடு மாவட்டத்திலிருந்து வருகைபுரிந்த ஏராளமான தமிழியக்கப் பொறுப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.முன்னதாக ஈரோடு இரயில்நிலையத்தில் தமிழியக்க நிறுவனத் தலைவர் கல்விக்கோ. வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் ஐயா அவர்களை ஈரோடு மாவட்டச் செயலாளர் திருமதி தி.பவளசங்கரி பொன்னாடை அணிவித்தும்,கோபி பிகேஆர் மகளிர் கல்லூரித் தலைவர் பூங்கொத்து வழங்கியும் ,வேளாளர் மகளிர் கல்லூரிப் பொறுப்பாளர்கள்,மற்றும் தமிழியக்கம் அரியப்பம்பாளையம் செ.பரமேஸ்வரன் ஆகியோர் வரவேற்று மரியாதை செய்தனர்.
ஈரோடு இரயில்நிலையத்தில் தமிழியக்கம் ஈரோடு மாவட்டச்செயலாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்ற காட்சி..
விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஐயா அவர்களுடன் பரமேஸ்வரன்.
தமிழியக்கம் பொதுச்செயலாளர் கவியருவி அப்துல்காதர் அறிமுக உரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக