13 மே 2024

பணிநிறைவு பாராட்டுவிழா -2023 இன்றுடன் ஓராண்டு நிறைவு 🙏

                                


                                 ஓராண்டு நிறைவுபெற்றது.....

                        பணிநிறைவு பாராட்டுவிழா -🙏



                               கடந்த  14 MAY 2023 ஆம் ஆண்டு இதே நாளில்  TNSTC தாளவாடிகிளை  ஓட்டுநர் C.பரமேஸ்வரன் பணிநிறைவு பாராட்டு விழா...

                   தாளவாடிகிளையின் மேலாளர்திரு. வினோத்குமார்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.     முன்னாள் கிளைமேலாளர் திரு. தென்னவன் அவர்கள் மற்றும்  விதைகள் வாசகர் வட்ட தலைவர் எழுத்தாளர்.யாழினி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியின் தொடக்கமாக....

எழுத்தாளர்.யாழினி ஆறுமுகம் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.   தொடர்ந்து 

                                                                    வாழ்த்துரை ; 


                                                                   

                      சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் திரு.KCP இளங்கோ அவர்கள்,

       


                                  சேலம் தோழா FM 90.0MHz  வானொலி நிலைய இயக்குநர் திரு.R.V.முத்துசாமி அவர்கள், 

             


                  கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் திரு. READ கருப்புசாமி அவர்கள், 

       



  தாளவாடி TRED அமைப்பு Rtn.வியானி அவர்கள், 

     


             தாளவாடி விவசாயிகள் சங்கப் பொறுப்பாளரும்,சமூக ஆர்வலருமான  திரு.கண்ணையன் அவர்கள், 

               


    அரிமா.K.லோகநாதன் (லோகு ஹெவிடிரைவிங் ஸ்கூல்) அவர்கள்,


 சமூக ஆர்வலர்.தோழர் ஸ்டாலின் சிவக்குமார் அவர்கள்,

            சுடர் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் தோழர் நடராஜன் அவர்கள்,

         மற்றும் செய்தியாளர்கள் 


                மாவட்டக் கல்வி அலுவலகம் சார்பாக திரு.மாதேஷ் அவர்கள்,

  


            அரசு மேனிலைப்பள்ளி ஆசிரியர் திரு.ஆறுமுகம் EMR அவர்கள், 



                   பத்திரிக்கையாளர்கள் சார்பாக  தினத்தந்தி ரிப்போர்ட்டர் திரு. வேலுச்சாமி அவர்கள், 

                        கவிதை வாசித்த 

          முன்னாள் கிளை மேலாளர்.திரு.தென்னவன் அவர்கள்,  

       


                      தமிழ்ச்செம்மல் எழுத்தாளர்.முத்துரத்தினம் அவர்கள், 



                                  சமூக ஆர்வலர்.திரு.AJஜப்பார் அவர்கள்,  

                          சமூக ஆர்வலர் திரு.V.பாலமுருகன் அவர்கள்,  

    


 மேட்டூர் அனல்மின்நிலைய அலுவலர் திரு.சங்கரேஸ்வரன் அவர்கள்,  

     


        தாளவாடிகிளை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக திரு.V.செல்வராஜூ அவர்கள், 




       த.நா.போ.க.ஓய்வு பெற்றோர் நல  அமைப்பின் சார்பாக திரு.A.P.ராஜூ அவர்கள்,  மற்றும் ஈரோடு மண்டலத் தலைவர் திரு.மாரப்பன் அவர்கள், உட்பட சான்றோர்மேன்மக்கள் பலரும்  பணிநிறைவு பாராட்டுவிழாவினை  எங்களது மணிவிழாவாக  வாழ்த்துரை வழங்கினர். 

               திரு.V.பாலமுருகன் தாளவாடி  மற்றும் P.பிரதிப்குமார் நாகரணை ஆகியோர் புகைப்படங்கள் எடுத்து உதவினர்.



                        சத்தியமங்கலம்   Rtn தாமோதரன் அவர்கள், 

                    தாளவாடி கிளையின் அனைத்து பிரிவுகளின் போ.வ.அலுவலகப் பணியாளர்கள்,அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள்,அனைத்து பிரிவுகளின்  போக்குவரத்துத்  தொழிலாளர்கள் ,  



  விதைகள் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள், 

Rtn.சுந்தரம் அவர்கள்,      தருமராஜ் உட்பட பத்திரிக்கை செய்தியாளர்கள்,எழுத்தாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள்,   பவானிசாகர் ஓட்டுநர் பயிற்சிமையம் ஓட்டுநர் பயிற்றுநர் மற்றும் பொறுப்பாளர்,    கரட்டூர் இளந்தளிர் நண்பர்கள் குழுவினர்,உட்பட உறவினர்களும் ,நண்பர்களும்  உள்ளிட்ட  மதிப்பிற்குரிய நன்மக்கள் சுமார் 400 பெருந்தகையினர் வருகை புரிந்து பொன்னாடைகளும்  பொதுஅறிவுப் புத்தகங்களும் (60 புத்தகங்கள்), பரிசுப்பொருட்களும்  வழங்கி வாழ்த்தி  சிறப்பித்தனர். 




                  விழா நிறைவாக விதைகள் வாசகர் வட்டத்தின் பொருளாளர் Er.R. வினோத்ராஜேந்திரன் நன்றியுரை வழங்கி   நிறைவு செய்தார்.



                          விழாநிகழ்ச்சியினை  தமிழாசிரியை திருமதி. மணிமேகலை பன்னீர்செல்வம் அவர்கள் தொகுத்துவழங்கினார். 




          ஈரோடு பாரதி புத்தகாலயா இளங்கோ அவர்கள் புத்தகக்காட்சி நடத்தி சிறப்புசெய்தார். 



 (எனது பொருளாதாரச் சூழல் காரணமாக) அழைப்பிலிருந்து பலரை  தவறவிட்டிருப்பினும் ஆசிரியர் திரு.இளையராசா அவர்கள் உட்பட பலரும் அதனை  தவறாக கருதாமல் அலைபேசிவாயிலாகத் தொடர்புகொண்டு  வாழ்த்தி கௌரவித்தனர்.

     அனைவரின் ஒருமித்த வாழ்த்துக்கள்  ஓராண்டு கடந்து 14-5-2024 இன்றும் எங்க குடும்பத்தையே ஆரோக்கியமாகவும் மனநிறைவாகவும் வைத்துள்ளது. வாழ்த்திய அனைவருக்கும் பணிவான வணக்கத்தினை சமர்ப்பித்து நன்றியினை காணிக்கையாக்குகிறோம்.




இப்படிக்கு,

அன்பின் மகிழ்வில் நன்றியுடன்,

TNSTC ஓட்டுநர் C.பரமேஸ்வரன் PR NO:

 J 09222 குடும்பத்தார்,

சத்தியமங்கலம்.🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...