30 மே 2024

இரட்டைக்கிளவி

 



 இரட்டைக்கிளவி

கலகல காட்சியில்
திமு திமுவென மழலைகள்
சுறுசுறுப்பாக  ஓடுவதேன்!
சுளீர் சுளீரெனும் வெயிலில்
மளமளவெனப் பொறுக்குவதென்ன!

வளவளவெனப் பேசாது
துறு துறுவெனப் போட்டியை
கடகடவென முடித்தால்
கொட்டு கொட்டென்று பரிசுகள்
பொல பொலவென விழுமே.

 7-12-2017

இரட்டைக்  கிளவி

கடகடவென ஓடும் ஓட்ட வாழ்வில்
சடசடவென முறியும் இல்லற அமைதி
வெடவெடவென நடுங்கும் உறவு நெருக்கம்
தடதடவென ஆடும் நேசம் பாசம்;.

படபடக்கும் மனதால் தினம் தினம்
தொடவிடாது நகரும் எரிச்சல் சினம்.
சிடுசிடுத்து வெடி வெடித்துக்; குளப்பும்
கடுகடுப்பான சொற் குமிழ்; வளையங்கள்

எங்கு பார்த்தாலும் மழைக் காளான்களாய்ப்
பொங்கி வெடிக்கும் நவீன இணைகள்.
பங்கு கொண்டு சமரசம்  செய்யவியலாத்
தொங்கு பாலமான புரிந்துணர்வுக் கனதி.

நான்கு தசாப்தங்களிற்கும் மேலான என்
தேன் கூட்டு வாழ்வில் பொறுக்கிய இந்த
நான்கு தர இரண்டு (8) பட வரிகள்
வான் குருவியின் கூடாக உருப்பெற்றதிங்கு.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொளப்பலூர் வருகை 14-09-2025

 அனைவருக்கும் வணக்கம்.  கொங்குத்தன்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.... 3ஆம் ஆண்டு கொளப்பலூர் புத்தகத்திருவிழா 13-09-2025 ...