25 பிப்ரவரி 2024

தமிழ்த்துறைப் பேராசிரியர் ,முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D., (நூல் வெளியீட்டு நிகழ்வில்)

                                   மதிப்பிற்குரிய ஐயா              முனைவர்.இரா.கா.மாணிக்கம் M.A.,M.Phil.,Ph.D.,  அவர்கள் 

                     தோற்றம்; 17.01.1943      மறைவு; 25.02.2024          


மதிப்பிற்குரிய முனைவர் மறைந்த .இரா.கா.மாணிக்கம் ஐயா அவர்கள்,
2023 ஜூலை மாதம் 14 முதல் 19வரைசத்தியமங்கலம் ஸ்ரீசுந்தர் மஹால்திருமண மண்டப அரங்கில் நடைபெற்ற புத்தகத் திருவிழாதொடக்கநாள் 14-07-2023 அன்று சந்தன நகரம் சத்தியமங்கலம் வரலாறு - நூல் வெளியீட்டு  நிகழ்வில் சிறப்புரையாற்றிய தருணம்.

           சந்தனநகரம் சத்தியமங்கலம் வரலாறு- நூல் வெளியீடு.....

சத்தியமங்கலம் நகர்மன்றத்தலைவர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,ஊராட்சி ஒன்றியப் பெருங்குழு தலைவர்,சத்தியமங்கலம் ரோட்டரிசங்கத் தலைவர்,காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் ,உட்பட பல்வேறு சமூகநல அமைப்புகள் இணைந்து வெளியிட்ட தருணம்.மேடையில் நூலாசிரியர்,முனைவர்.மறைந்த இரா.கா.மாணிக்கம் ஐயா அவர்களும்......

மதிப்பிற்குரிய மேன்மக்கள் சூழ, முனைவர் இரா.கா.மாணிக்கம் ஐயா அவர்கள்......

மறைந்த முனைவர். இரா.கா.மாணிக்கம் ஐயா அவர்களுக்கு விதைகள் வாசகர் வட்டம் சார்பாக காமதேனு கலை அறிவியல் கல்லூரிநிறுவனர் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி மகிழ்ந்த தருணம்...

    என்றும் சத்தியமங்கலம் மக்கள் நினைவில்...

                           சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் நாற்பது ஆண்டுகாலம்  கல்லூரி முதல்வராகவும்,தமிழ்ப்பேராசிரியராகவும்  பணியாற்றி தம்முடைய கற்பித்தல் அறிவால்  25 நூல்களுக்கு மேல் எழுதி  தமிழ்த்தொண்டாற்றிய தமிழ்ப்பெருந்தகை மாணிக்கம் ஐயா அவர்கள்

   ’உலக வரலாறு அறிவதற்குமுன் தன் உள்ளூர் வரலாறு அறிவதே அறிவுக்கு  விதையாகும்’       என்ற முற்போக்கு சிந்தனையுடன்,

 நம்ம  சத்தியமங்கலம் வரலாறு பற்றியும் எழுதுவதற்காக  தமிழகமெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள்,புத்தக பதிப்பகங்கள்

 (இந்தப்பதிவில் அடிப்பகுதியில்  பதிவு செய்யப்பட்டுள்ளது காண்க) 

               என  பல ஆண்டுகள் தேடியலைந்து கடுமையாக உழைத்து தரவுகளைப்  பதிவுசெய்து 170 பக்கங்களில்  

                      ”சந்தனநகரம் சத்தியமங்கலம் வரலாறு ”

           என்ற தலைப்பில் நூலாக எழுதி  கடந்த 2023ஆம் ஆண்டு சத்தியமங்கலம்   ஸ்ரீசுந்தர்மஹாலில் நடைபெற்ற  சத்தியமங்கலம் 6ஆவது புத்தகத்திருவிழாவில்   விதைகள் வாசகர் வட்டம் சார்பாக வெளியிட வாய்ப்பளித்து பெருமைப்படுத்திய தமிழ்ப்பெருந்தகை முனைவர்.இரா.கா.மாணிக்கம் ஐயா அவர்கள்  கடந்த 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்திய துயரச் செய்தி நம்மை மீளாத்துயரில் மூழ்கடித்து வேதனையுறச்செய்துவிட்டது.  பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி என்ற நிலையான நிகழ்வுக்கேற்ப  இன்று நம்மை விட்டு பிரிந்து சென்ற ஐயா அவர்களின் ஆத்மா நிரந்தரமாக ஓய்வெடுக்கட்டும்.. என தமிழ்வணக்கத்தினை தெரிவித்து ஆறுதலடைவோம்....








சந்தனநகரம் சத்தியமங்கலம் வரலாறு  நூல் எழுதுவதற்கு நூலாசிரியர் அவர்கள் பயன்படுத்திய நூல்கள் விபரம்......







இவை தவிர சத்தியமங்கலம் பற்றிய விபரங்களறிந்த சமூக அக்கறையாளர்களிடமும் விபரங்கள் சேகரித்து பதிவுசெய்து பெருமைசேர்த்துள்ளார் நூலாசிரியர் மாணிக்கம் ஐயா அவர்கள்.....

என்றும் நன்றியுடன்,
சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம்,



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...