22 டிசம்பர் 2024

SANTHOME INTERNATIONAL (ICSE) SCHOOL, SATHYAMANGALAM - 638402

        ஈரோடுமாவட்டம்,

சத்தியமங்கலம்,

செண்பகப்புதூரில்  

சாந்தோம் இன்டர்நேசனல்(ICSE) பள்ளி ஆண்டுவிழா 2024-25 








  

         ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ,சாந்தோம் இன்டர்நேசனல் (ICSE) பள்ளியில் 10 ஆவது ஆண்டு விழா 21-12-2024 சனிக்கிழமை மாலை5.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் Rev.Fr.ஜோஸ்குட்டி தலைமையில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் 

சத்தியமங்கலம் காவல்துணைக் கண்காணிப்பாளர் திரு.M.சரவணன்,  சத்தியமங்கலம் நகர்மன்றத் தலைவர் திருமதி ஜானகிராமசாமி, 

தனியார் பள்ளிகளுக்கான ஈரோடுமாவட்டக் கல்வி அலுவலர்.திரு.R.கேசவகுமார்,  Rev.Fr.ஜொமான் அய்யன்கனல்,   Rev.Fr.ஸோஜன் அய்க்கரக்குனேல்.  ஆகிய சான்றோர்கள் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

ஈரோடு மாவட்டக்கல்வி அலுவலர் திரு. ஆர்.கேசவக்குமார் அவர்கள் உரையில் கல்வியும் கலையும் கலந்து கற்பிப்பதே கல்விநிலையங்கள் என்பதற்கு உதாரணமாக சத்தியில்  "சாந்தோம் பள்ளி" சிறந்துவிளங்குவதாகவும், மாணவர்களுக்கு ஒழுக்கமே முதல் அவசியம் என்றும் மாணவர்களின் முன்னேற்றத்தில்  பெற்றோருக்கும் முக்கிய பங்கு இருப்பதாக  குறிப்பிட்டார். 

சத்தியமங்கலம் காவல்துணைக்கண்காணிப்பாளர் திரு.எம்.சரவணன் அவர்கள்  மாணவர்கள் தம் வாழ்க்கையில் பெற்றோருக்கு பெருமைதேடித்தர வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார்.

' ஒழுக்கம் விழுப்பம் தரலான்' குறளை மேற்கோள்காட்டி ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒழுக்கமே உயர்வுதரும் என்பதையும், 'கேடில்விழுச்செல்வம் கல்வி' என்ற குறளின்படி கற்றகல்வியே அழிவில்லாத சிறந்தசெல்வம் என்பதையும், 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி' திருக்குறளை மேற்கோள்காட்டி தந்தையை உலகமே புகழ்ந்துபோற்றும்வகையில் மாணவர்கள் சாதனையாளர்களாக ஒழுக்கத்தில் சிறந்தும் கல்வியில் சிறந்தும் வாழ்ந்துகாட்டவேண்டும். நம்மைகாக்க சாலைவிதிகளை மதித்து தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டவேண்டும் என்று வலியுறுத்தினார். போதைப்பொருட்களின் தீங்குகளை எடுத்துரைத்து போதையில்லாத வாழ்வே நமக்கு சிறந்த வாழ்வினைத்தரும் எனவும் சிறப்புரையாற்றினார்.

சத்திநகர்மன்றத் தலைவர் உரையில்  சாந்தோம் ICSE பள்ளிதான் இரண்டாவதாக செயல்படுகிறது என்றார். மாணவர்கள் சதுரங்க  உலகச்சாம்பியன் குகேஸ்  போன்று  சாதனைகள் புரிந்து சாந்தோம் பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமைத் தேடித்தர வேண்டும் என்றார். ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட  முக்கியப் பிரமுகர்கள் பலரும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பெற்றோர்களும் சமூகமும் மாணவர் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கவேண்டும்என உரையாற்றினர்.

ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட சிறப்புவிருந்தினர்கள் 

அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும்,தனித்திறன்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் என   மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும்,பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கி வாழ்த்தினர்.

தொடர்ந்து மாணவக்குழந்தைகளின்  நடனம் உட்பட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.பெற்றோர்களும் முக்கியபிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக 

பள்ளியின் முதல்வர் SR மெர்லின் சகோதரி அவர்கள் நன்றி கூறினார்.















தமிழியக்கம் ஈரோடு மாவட்டத்தில் அறிமுக விழா-20-12-2024


                                             ஈரோடுமாநகரில்

                         தமிழியக்கம் அறிமுகவிழா...

        தமிழியக்கம் மற்றும் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) தமிழ்த்துறையும் இணைந்து வழங்கும்

தமிழியக்கம் அறிமுகவிழா,

உள்ளாட்சிப் பொறுப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும்விழா நடைபெற்றது.

               கஸ்தூரிபா கலையரங்கத்தில்    20-12-2024 வெள்ளிக்கிழமை     

                     மதியம் 2.00 மணிக்கு விஐடி பல்கலைக்கழக நிறுவுநர் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் ஐயா அவர்கள் தலைமையில் தொடங்கிய தமிழியக்கம் அறிமுகவிழாவில் கல்லூரியின் தலைவர்  திரு.சி.ஜெயக்குமார் மற்றும் கல்லூரியின் செயலாளர் திரு.செ.து.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் முனைவர் செ.கு.ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.தமிழியக்கம் மாநிலச் செயலாளர் திரு.மு.சுகுமார் தொடக்கவுரையாற்றினார்.தமிழியக்கம் பொதுச்செயலாளர் கவியருவி அப்துல்காதர்  அறிமுகவுரை வழங்கினார்.தமிழியக்கம் அமைப்புச் செயலாளர் முனைவர் கு.வணங்காமுடி , துணை அமைப்புச் செயலாளர் திரு.மு.சிதம்பரபாரதி, கோவைமண்டலச் செயலாளர்  மருத்துவர் அனுப், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆர்.நிர்மலாதேவி ஆகிய தமிழ்ச்சான்றோர்கள் வாழ்த்துரை வழங்கினர்.தமிழியக்கம் ஈரோடுமாவட்டச் செயலாளர் திருமதி தி.பவளசங்கரி நன்றியுரை வழங்கினார். தமிழியக்க இணைச் செயலாளர்  முனைவர் அர.ஜோதிமணி நிகழ்ச்சி நெறியாள்கை வழங்கினார்.ஈரோடு மாவட்டத்திலிருந்து வருகைபுரிந்த  ஏராளமான தமிழியக்கப்  பொறுப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.முன்னதாக ஈரோடு இரயில்நிலையத்தில் தமிழியக்க நிறுவனத் தலைவர் கல்விக்கோ. வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் ஐயா அவர்களை ஈரோடு மாவட்டச் செயலாளர் திருமதி தி.பவளசங்கரி பொன்னாடை அணிவித்தும்,கோபி பிகேஆர் மகளிர் கல்லூரித் தலைவர் பூங்கொத்து வழங்கியும் ,வேளாளர் மகளிர் கல்லூரிப் பொறுப்பாளர்கள்,மற்றும்  தமிழியக்கம் அரியப்பம்பாளையம்  செ.பரமேஸ்வரன் ஆகியோர் வரவேற்று மரியாதை  செய்தனர்.





ஈரோடு இரயில்நிலையத்தில் தமிழியக்கம் ஈரோடு மாவட்டச்செயலாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்ற காட்சி..

விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஐயா அவர்களுடன் பரமேஸ்வரன்.






கோவை மண்டலச் செயலாளர் மருத்துவர் அனுப் அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்ற காட்சி.

விஐடி வேந்தர்,தமிழியக்கத்தின் தலைவர் முனைவர்,கோ.விசுவநாதன் ஐயா அவர்கள் தலைமையேற்று உரையாற்றியநிகழ்வு...




 தமிழியக்கம் பொதுச்செயலாளர் கவியருவி அப்துல்காதர் அறிமுக உரை


 உள்ளாட்சிப் பொறுப்பாளர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு....

அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர் பரமேஸ்வரன் கூட்ட அரங்கில்...

ஈரோடு மாவட்ட உள்ளாட்சிப்பொறுப்பாளர்கள் குழுவாக இணைந்த புகைப்படம்...




16 டிசம்பர் 2024

என் பார்வையில் பவானி ஆறு..

   கட்டுரைத்தலைப்பு ;      என் பார்வையில் பவானி ஆறு


முன்னுரை; 

               நாம் ஆரோக்கியமாக வாழ காற்று,தண்ணீர்,உணவு இம்மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும். பொது அறிவு வளர்த்து  புது உலகைப் படைக்க, தமிழ் இலக்கியங்களையும்,வாழ்க்கை வரலாறுகளையும் ,அறிவியல் கண்டுபிடிப்புகளையும் வாசிக்கிறோம்.ஆனால் நம்தேவைகளைப்பெருக்கி வெளியேற்றப்படும் விசக்கழிவுகளை பவானி ஆற்றில் கலந்து மாசுபடுத்தி இயற்கையைச் சீரழிக்கிறோம். நம் ஜீவநதியான பவானி ஆறு நொய்யல்நதிபோல,கூவம்நதிபோல மாசடைந்துவருவதைக்கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.

பொருள்;

               நீலகிரி உயிர்ச்சூழல்மண்டலமான மேற்குத்தொடர்ச்சிமலையை  இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாக யுனெஸ்கோ  அறிவித்துள்ளது.இந்தமலையில்தான் நம் பவானி ஆறு உற்பத்தி ஆகி மூலிகைத்தாவரங்கள் நிறைந்த சோலைவனங்களுக்குள் புகுந்து மருத்துவக்குணம் பெற்று பரிசுத்தமான ஆறாக பெருகி சுமார் ஐம்பதுஇலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உயிர்வளமாக விளங்கி வருகின்றது.அதேவேளை நமது தேவைகளைப்பெருக்கியதாலும்,போதிய விழிப்புணர்வு இல்லாதகாரணத்தாலும்,விழிப்புணர்வு இருந்தும் கண்டுகொள்ளாதகாரணத்தாலும் நம் பவானி ஆறு மாசுபட்டு கழிவுநீராக ஓடுகிறது.அதனை நாமும் குடிநீராகப் பயன்படுத்திவருகிறோம்.

காரணம்;

                 தேக்கம்பட்டியில் கலந்துவிடப்படும் காகித ஆலையின் இரசாயனக்கழிவுகள் தொடங்கி சத்தியமங்கலம்வரை பதினைந்துக்கும் அதிகமான தொழிற்சாலைகளின் இரசாயனக் கழிவுநீர் ஆற்றில் கலப்பதாலும், பெருகிவரும் குடியிருப்புகளின் கழிப்பிடக்கழிவுகளும்,சமையலறைக்கழிவுகளும், மோட்டார்வாகனங்களின் பணிமனைக்  கழிவுகளும்,  மருத்துவமனைகளின் கழிவுகளும், நவீன விவசாயத்திற்குப் பயன்படுத்தும் இரசாயன உரங்களின் எச்சங்களும்,களைக்கொல்லிகளின் எச்சங்களும்,பூச்சிவிரட்டிகள்,பூச்சிக்கொல்லி மருந்துகள்,களைக்கொல்லிகள் ஆகியவற்றின் எச்சங்களும் பூமியில் படிந்து மழைக்காலங்களில் கரைந்து ஆற்றில் கலப்பதாலும் பவானி ஆறு மாசடைந்து வருகிறது.

விளைவுகள்;

                நம் பவானி ஆறு பல்லுயிர் வளமைபெற்று நமக்கும்,விவசாயத்திற்கும்,கால்நடைகளுக்கும்,ஆற்றுநீரில் வாழும் உயிரினங்களுக்கும் பலநூறு ஆண்டுகளாக சுத்தமான தண்ணீரை வழங்கி வந்த‍து.அதேநேரத்தில்நமது நாகரீக வளர்ச்சியால் உருவாகும் அனைத்து அசுத்தங்களையும் ஆற்றில் கலந்து அரைநூற்றாண்டுக்குள் அதாவது ஐம்பது ஆண்டுக்குள் மாசுபடுத்திவிட்டோம்.கழிப்பிடங்களின் மலக்கழிவுகளையும் செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தும் வாகனங்களில் எடுத்துச்செல்லப்படும்  மலக்கழிவுகளையும் ஆற்றில் நேரடியாக‍க்கலந்து வருகிறோம்.இதனால் மனித மலத்தில் மட்டும் உருவாகும் (FECAL COLIFORM)  பீக்கல்கோலிபாரம் என்னும் நுண்ணுயிரி 100 மில்லி தண்ணீரில் 310 MNP (Most Probable Number) அளவில் அதிகரித்து குடிக்கவே தகுதியில்லாத தண்ணீராக கழிவுநீராக மாறிவிட்டது. இதனால் ம‍ர்ம‍க்காய்ச்சல்,தோல்வியாதி,கண்நோய்கள்,உணவுக்குழாய்நோய்கள்,நரம்புநோய்கள், புற்றுநோய்,சளி,இருமல் என புதுப்புது நோய்களை அனுபவித்து வேதனைப்படுகிறோம்.

தீர்வுகள்;

                முதலில் தனிமனித ஒழுக்கம் மிக முக்கியம். பண்டிகைகாலங்களில் உருவாகும் கழிவுகளான பூமாலைகள் மற்றும் பூஜைப்பொருட்களையும்,ஆற்றில் வீசுவதைத்தவிர்க்கவேண்டும்.கோழிக்கறிக்கழிவுகளையும்,மீன்கடைகளின் கழிவுகளையும்,மருத்துமனைகளின் கழிவுகளையும் ஆற்றில் வீசுவதைத்தவிர்க்கவேண்டும். மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகளும்,சுகாதாரவிதிமுறைகளும்,குடியிருப்பு விதிமுறைகளும் பற்றிய அறிக்கைகளைப்பரப்ப வேண்டும். புத்தக‍த்திருவிழா,கோவில்திருவிழா,சுற்றுலாத்தலங்கள்,ஆன்மீகத்தலங்கள்,பேருந்துநிலையங்கள்,நூலகங்கள்,கல்விநிலையங்கள்,தினசரிச்சந்தைகள்,மருத்துவமனைகள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் பவானி ஆறு மாசடைதலினால்  மனிதகுலத்துக்கு ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வும் பவானி ஆறு பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வும் கொடுத்து  மாசடையச்செய்வதைத்தடுக்கவேண்டும். ஆற்றின் ஓரப்பகுதியில் உள்ள தரிசுநிலங்களில்  சூழலியலாளர்கள்,தன்னார்வலர்களின் உதவியுடன் நிறைய மரங்களை வளர்த்து  பசுமையை மீட்டெடுத்து அதிக மழை பெற வேண்டும்.ஆறுகளில் மண் எடுப்பதைத்தடுக்கவேண்டும்.தொழிற்சாலைகள்,சாயப்பட்டறைகள்,குடியிருப்புகள் ஆகியவற்றின் கழிவுநீரை சுத்தப்படுத்தி  மறுசுழற்சி பயன்பாடுகளுக்கு அதாவது வேறுபயன்பாடுகளுக்கு பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மலக்கழிவுகளையும்,மக்கும்குப்பைகளையும் கம்போஸ்ட் செய்து விவசாய நிலங்களுக்கு உரமாக ப்பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடக்கழிவுகளையும், மருத்துவக்கழிவுகளையும்,பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளையும் சாலை அமைக்கும் மூலப்பொருட்களோடு கலந்து பயன்படுத்தவேண்டும்.இதற்காக நெடுஞ்சாலைத்துறையுடன் ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சிகள் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்போட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

முடிவுரை; 

              மாணவர்களாகிய நாம் ஆசிரியர்களின் உதவியோடும்,பெற்றோர்களின் துணையோடும், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்போடும் பவானி ஆறு பாதுகாப்புக்குழு அமைத்து நாமும் விழிப்புணர்வு கொள்வதுடன் மக்களுக்கும் பரப்புரை செய்ய வேண்டும்.அரசாங்கத்தை மட்டுமே குறைகூறாமல் ஆட்சித்துறை,நீதித்துறை,வருவாய்த்துறை,காவல்துறை உட்பட அனைவருக்கும் பாதிப்பு என்பதை வலியுறுத்தி மனிதசமூகமாக ஒன்றுபட்டு உணவுத‍ந்து உயிர்தந்த பவானி ந்தியை நம்மால் நாசமடைவதைப்பட்டியலிட்டு தவிர்ப்போமேயானால் அரசியல் பாகுபாடின்றி ஒன்றிணைந்து  முயற்சித்தோமானால் மாசடைந்த பவானி ஆற்றை ஜீவ‍நதியாக மீட்டெடுக்கலாம் .

நாம் வாழும் ஒரே பூமியைக் காக்க,நமது சந்த‍தியினரைக் காக்க,இனியாவது நம் ஜீவந‍தியான பவானி ஆற்றைக்காப்போம்.

மாணவர் பெயர்; **************************

வகுப்பு                     *****************************

பள்ளியின் பெயர்********************

ஊர்                           ********************

வழிகாட்டுநர்; *********************************

உறவுமுறை ;அப்பா,

களப்பணியிடங்கள்;

ஆற்றுப்பாலம்,குடிநீரேற்றப்பகுதி, சாக்கடைக்கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்குமிடங்கள்.

இணைப்பு; புகைப்படங்கள்,துண்டறிக்கைகள்,

கையொப்பம்**********************

நாள் **********************

நேரம் ********************

 











ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

             தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி

                                          ஈரோடு மாவட்டம்

                         தொடக்கவிழா படங்கள்- 15-12-2024

                                       தமிழியக்கம்,பெயர்ப் பலகை 
உறுதிமொழி;
             சாதி,மதம்,அரசியல் வேறுபாடு இல்லாமல் தமிழ்காத்து தமிழராய் வாழ்வோம்.
 பலமொழி கற்றிருந்தாலும் தமிழுக்கு உயர்தனிச் சிறப்பிடம் தருவோம் என உறுதி ஏற்கிறேன்.

நோக்கம்; 
                      தமிழ் காத்த தமிழராய் வாழ்வது...

 
                தமிழியக்கம்,கோவை மண்டலம் செயலாளர் 
                மருத்துவர் P.J.அனூப் அவர்கள், 
                           பெயர்ப்பலகை திறந்து வைத்தல்.


           தமிழியக்கம்,கோவை மண்டலச் செயலாளர் 
        மருத்துவர் P.J.அனூப் அவர்கள்,  பெயர்ப்பலகை திறப்பு 
                         ரிப்பன் வெட்டுதல்
         தமிழியக்கம்,ஈரோடு மாவட்டச் செயலாளர் 
       கவிஞர்.பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்கள் 
      குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தல்.


தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர்.செ.பரமேஸ்வரன் (சிபிசாரதி) தொடக்கவிழா வரவேற்பும் அறிமுக உரையும் வழங்கினார்.


முதன்மை விருந்தினர் மருத்துவர் பி.ஜே.அனூப் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்பவர்,
இணைச்செயலாளர்.ரிப்போர்ட்டர் வேலு என்கின்ற ந.வேலுசாமி அவர்கள் 

ஈரோடு மாவட்டச் செயலாளர் கவிஞர்.பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்பவர்,
  ஆன்மீக அணி ஒருங்கிணைப்பாளர் மா. புவனேஸ்வரன் அவர்களின் இல்லத்துணைவியார் ஜெயலட்சுமி .


                             தமிழியக்கம்,கோவைமண்டலச் செயலாளர் 
                            மருத்துவர் பி.ஜே. அனூப் அவர்கள் சிறப்புரை.

                  தமிழியக்கம்,ஈரோடுமாவட்டச் செயலாளர் 
     கவிஞர்.பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்கள் சிறப்புரை.


தொடக்கவிழாவின் தலைமை வகித்த எழுத்தாளர்.கவிதா ஈஸ்வரன் அவர்களுக்கு மாணவ உறுப்பினர் மகிழினி அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.
சிறப்புவிருந்தினர்.தமிழ்ச்செம்மல்,சிறுவர் இலக்கிய எழுத்தாளர்,உழவுக்கவிஞர் உமையவன் ராமசாமி அவர்களுக்கு 
செயற்குழு உறுப்பினர் மற்றும் ஆலோசகர்.
ஆசிரியர் EMR அ.ஆறுமுகம் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.


         சிறப்புவிருந்தினர்.தமிழ்ச்செம்மல்,சிறுவர் இலக்கிய எழுத்தாளர்,உழவுக்கவிஞர் உமையவன் ராமசாமி அவர்கள் வாழ்த்துரை.

எழுத்தாளர் பௌசியா இக்பால் தொல்லியல் ஆய்வாளர் அவர்களுக்கு 
நம்மகோபிதமிழ்ச்சங்கம்.பா.ராஜி ஐஸ்வர்யா அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.


எழுத்தாளர் பௌசியா இக்பால் தொல்லியல் ஆய்வாளர் அவர்கள் தமிழர் வரலாற்றுரை.

வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை யோகா தவமையம் சத்தியமங்கலமையத்தின் துணைப்பேராசிரியர் Skyயோகா.கா.அறிவழகன் அவர்களுக்கு பொருளாளர்.கு.சுரேஷ்குமார் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.

வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை யோகா தவமையம் சத்தியமங்கலமையத்தின் துணைப்பேராசிரியர் Skyயோகா.கா.அறிவழகன் அவர்கள் 'மனதைவளமாக்கும் பயிற்சி' பற்றி விளக்கவுரை.



                 தமிழியக்கம்,கோவை மண்டலம் செயலாளர் 
                                மருத்துவர் அனூப் அவர்கள், 
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி 90.4MHz
நிலைய மேலாளர் லேனா சங்கர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.

எழுத்தாளர் கௌரிகாமாட்சி அவர்களுக்கு சத்தியமங்கலம் ரோட்டரிகிளப் தாமோதரன்.மோ.அவர்கள் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.

கொளப்பலூர் கிளைநூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர்,இலக்கிய ஆர்வலர்,சூழலியலாளர், தேனீ A.பார்த்திபன் அவர்களுக்கு துணைச்செயலாளர்.ரா.நாகராஜன் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.

அரசுப்பள்ளியின் தலைமையாசிரியர் குப்புசாமி அவர்களுக்கு  சத்தியமங்கலம்,விதைகள்வாசகர் வட்டம் 
கவிஞர்.செ.கார்த்திக் பொன்னாடை அணிவித்து சிறப்புசெய்தல்.

தமிழியக்கம் கோவைமண்டலச் செயலாளர் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆகிய தமிழ்ச்சான்றோர் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கத்தின் செயற்குழு மற்றும் ஆலோசகர்.அரிமா கு. லோகநாதன் அவர்களின் சமூகப்பணியைப் பாராட்டி  பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல் .

சிறப்புவிருந்தினர்களாக வருகைபுரிந்த தமிழ்ச்சான்றோர்கள் அனைவரும் இணைந்து  தமிழியக்கம்,அரியப்பம்பாளையத்தின் செயலாளர் செ.பரமேஸ்வரன் (சிபிசாரதி) அவர்களது தமிழ்ப்பணி சிறக்கட்டும் என பொன்னாடை அணிவித்து வாழ்த்துதல்.



  கோவைமண்டலச் செயலாளர் மருத்துவர் பி.ஜே. அனூப் அவர்கள் மற்றும் ஈரோடு மாவட்டச்செயலாளர்,மற்றும் மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் V.இலக்கியன் உட்பட
 தமிழியக்கத்தின் தமிழ்ச்சான்றோர்கள் முன்னிலையில், 
 தமிழியக்கம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சி தொடக்கவிழாவில்  மாணவக்குழந்தை மகிழினி அவர்கள் மாணவ உறுப்பினர் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து ஆயுட்கால சந்தா பத்து ரூபாய் செலுத்தி தமிழியக்கத்தில் இணைந்த நிகழ்வு.

       தமிழியக்கம்,அரியப்பம்பேரூராட்சியின் இணைச்செயலாளர் மற்றும் பண்ணாரி ரூரல் பவுண்டேசன் செயற்குழு உறுப்பினர்,ரிப்போர்ட்டர் வேலு (எ) ந.வேலுசாமி அனைவருக்கும் நன்றிகூறுதல்.
        






முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...